பேஸ்புக்கில் ஆபாசமான வார்த்தை ஆபாச ரசிகருக்கு பூஜா காட்டமான அறிவுரை
நடிகை பூஜா தற்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். இந்த நிலையில் அவரது பேஸ்புக்கில் யாரோ ஒரு ரசிகர் அவரை ஆபாசமான
வார்த்தைகளால் வர்ணித்துள்ளார். இதில் கடுப்பான பூஜா அந்த ரசிகருக்கு தனது பேஸ்புக்கிலேயே காட்டமான அறிவுரை வழங்கியிருக்கிறார். அது வருமாறு:
என்னை ஆபாசமாக வர்ணித்த உன்னை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். நாட்டில் நிறைய கற்பழிப்பு குற்றங்கள் நடக்கிறது. நீயும் அப்படி ஒரு குற்றவாளி ஆகிவிடக்கூடாது என்று கடவுளிடம் பிரார்த்திக்கிறேன். உன் கெட்ட செயல்களை நிறுத்திக் கொள்ள நீ நல்லவனாக மாற நிறைய அவகாசம் இருக்கிறது. நீயும் ஒரு பெண்ணிடமிருந்து தான் வந்திருக்கிறாய். உன் தாயும், சகோதரியும் பெண்தான் என்பதை மறந்து விடாதே. அவர்கள் மதிக்கிற மாதிரி நடந்து கொள். உன் மனைவி மதிக்கிற மாதிரி நடந்து கொள். உனக்கு பெண் குழந்தை பிறந்தால் பெண்களை சுற்றும் ஓநாய்களிடமிருந்து அவளைக் காப்பாற்ற வேண்டிய கடமையில் நீ இருப்பாய். இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு நல்லவனாக நடந்து கொள். இவ்வாறு பூஜா எழுதியிருக்கிறார்
எமி ஜாக்சன் உருவபொம்மை எரித்த 22 பேர் கைது
நடிகை எமி ஜாக்சன் இங்கிலாந்தை சேர்ந்தவர். அக்மார்க் ஆங்கில பொண்ணு. மதராசபட்டினம் படத்தில் ஆங்கில பெண்ணாகவே நடித்தார்
. வெள்ளைக்கார பெண்ணாக இருந்தாலும் கொஞ்சம் இந்திய சாயலில் இருக்கவே ஷங்கரின் ஐ படத்தில் நடித்தார். அதன் பிறகு இந்திப் படங்களில் நடித்தார். இப்போது தமிழ் படங்களில் பிசியாக இருக்கிறார். ரஜினியின் எந்திரன் 2வில் அவர்தான் ஹீரோயின்.
விலங்குகளை பாதுகாக்கும் பீட்டா அமைப்பின் தூதராக உள்ள எமி ஜாக்சன், ஜல்லிக்கட்டு, விலங்குகளை கொடுமைப்படுத்தும் விளையாட்டு அதற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்று கருத்து சொல்லியிருந்தார். இதற்கு ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. நடிக்க வந்தவர் நடித்து சம்பாதித்துவிட்டு போக வேண்டும். எங்கள் நாட்டு கலாச்சாரத்திற்குள் மூக்கை நுழைக்ககூடாது என்று விமர்சனம் செய்தனர்.
இந்த நிலையில் நேற்று தமிழர் முன்னேற்ற படை என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள், தலைவர் வீரலட்சுமி தலைமையில் சுமார் 50 பேர் நடிகர் சங்க வளாகம் முன்பு கூடினர். அவர்கள் எமி ஜாக்சனுக்கு எதிராக கோஷம் எழுப்பி அவரது உருவ பொம்மையை எரித்தனர். பின்னர் திடீரென சிம்புக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். நடிகர் சங்கம் சிம்புவுக்கு உதவில்லை என்று கோஷமிட்டனர். அனுமதியில்லாமல் இந்த போராட்டம் நடத்தப்பட்டதால் விரைந்து வந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி 22 பேரை கைது செய்தனர்.
பெண்கள் தற்காப்புக்காக பெப்பர் ஸ்பிரே, சேஃப்டி பின் வைத்துக் கொள்ளவேண்டும்: நமீதா அறிவுரை
பிரபல இயக்குனர் பி.வாசுவின் மகன் சக்திவேல் நாயகனான நடித்துள்ள புதிய படம் ‘தற்காப்பு’. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை மலேசியாவில் பிரம்மாண்டமாக நடத்திஉள்ளனர்.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நமீதா பேசும்போது, தற்காப்பு என்பது தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்வது. தற்காப்பு ஆண்களை விட பெண்களுக்கு இன்றைய சூழலில் மிக அவசியம்.
நான் மாடலிங்கில் நுழையும்போது ‘நீங்க பெரிய பிசினஸ்மேனோட பொண்ணு. ஏன் இந்த ஃபீல்டுக்குள்ளலாம் வர்றே?’ என்ற ரீதியில் கேள்விகள் வந்தன. அவர்களுக்கு நான் சொன்ன பதில் ‘நமீதா என்பது என்னுடைய பெயர். அந்த பெயர் தெரிவதற்காக நான் ஏதாவது செய்ய வேண்டும்.
என்னதான் அப்பாவாக இருந்தாலும் அவர் வேறு நான் வேறு தான்’. இப்படி விட்டுக்கொடுக்காமல் போராடியதால் தான் மிஸ்.யுனிவர்ஸில் மூன்றாவது இடம் அளவுக்கு முன்னேற முடிந்தது. இதுபோல இன்றைய பெண்கள் தங்கள் பெயர் தனித்து தெரிய வேண்டும் என்று தங்களுக்கு பிடித்த துறையில் சாதிக்க முயல வேண்டும்.
என்னுடைய சிறு வயதில் பேருந்துகளில் பயணிக்கும்போது என்னிடம் கூட சில ஆண்கள் தவறாக நடக்க முயற்சிப்பார்கள். அவர்களை விரட்ட நான் பயன்படுத்திய ஆயுதம் சேஃப்டி பின். அது எப்போதுமே என்னுடன் இருக்கும்.
கொஞ்சம் வளர்ந்த உடன் பெப்பர் ஸ்ப்ரே பயன்படுத்த ஆரம்பித்தேன். சேஃப்டி பின், பெப்பர் ஸ்ப்ரே இரண்டுமே பெண்கள் அவசியம் கையில் வைத்துக்கொள்ள வேண்டியவை. நமக்கான தற்காப்பு ஆயுதங்கள் அவை என்று கூறினார்.
கல்பனா சாவ்லா வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிப்பது பற்றி மவுனம் சாதிக்கும் பிரியங்கா சோப்ரா
பிரபல குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவான திரைப்படத்தில் நடித்த பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா விண்வெளி பயணத்தின்போது விபத்தில் பலியான கல்பனா சாவ்லாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தயாரிக்கப்படவுள்ள புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகின.
அமெரிக்க தொலைக்காட்சி தொடரான ‘குவான்ட்டிகோ’வில் தோன்றி அங்கும் பிரியங்கா சோப்ரா பிரபலமாகி வருகிறார்.
இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட 44 மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, உலகம் முழுவதும் இந்த தொடர்நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில், கல்பனா சாவ்லாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தயாரிக்கப்படவுள்ள படத்தில் நடிப்பதுபற்றி இன்னும் வெளிப்படையாக எதுவும் அறிவிக்காமல் உள்ளார்.
இதுதொடர்பாக, நிருபர்களின் கேள்விக்கும் மழுப்பலாகவே பதில் அளித்துள்ள அவர், தற்போது சிறந்த கதையம்சங்களுடன் கூடிய நிறைய படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன.
இவற்றில் பலவற்றை தேர்வு செய்யும் எண்ணம் எனக்குள்ள போதிலும், அவை எல்லாவற்றிலும் நடிப்பதற்கான நேரம் என்னிடம் இல்லை.
தற்போது கைவசம் ஆறு படங்கள் உள்ளன. அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்குமாக பறந்துகொண்டிருக்கும் நிலையில் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள படங்களில் எதில் முதலில் நடிப்பது என்பதை தீர்மானிக்கவே சிரமமாக உள்ளது என பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.
இந்தியாவை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லா, 1997-ம் ஆண்டு முதன்முதலாக விண்வெளிக்கு சென்றார்.
அமெரிக்க விண்வெளி ஓடமான கொலம்பியாவில் விண்வெளிக்கு சென்று ஆய்வுகளை செய்துவிட்டு திரும்புகையில் கடந்த 2003-ம் ஆண்டு ஏற்பட்ட கோர விபத்தில் கல்பனா சாவ்லா உள்பட ஏழுபேர் பலியானது நினைவிருக்கலாம்.
நிக்கி கல்ராணிக்கு கை விரலில் காயம்
டார்லிங்’, ‘யாகாவராயினும் நாகாக்க’ உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் நிக்கி கல்ராணி. இவர் மலையாளம், கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இவர் தற்போது விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக எழில் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் நிக்கி கல்ராணி போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். போலீஸ் வேடத்தில் நடிப்பதால் நிக்கி கல்ராணி இப்படத்தில் சண்டைக் காட்சியில் எல்லாம் நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் படமாக்கப்பட்ட கராத்தே சண்டைக் காட்சியில் நிக்கி கல்ராணி டூப் இல்லாமல் அவரே நடித்ததாக கூறப்படுகிறது.
அப்போது, சண்டை போடும்போது நிக்கி கல்ராணியின் கை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதையடுத்து, படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு, நிக்கி கல்ராணியை உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர். தற்போது நிக்கி கல்ராணி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
நிக்கி கல்ராணி தற்போது ‘கோ 2’, ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது