சினிமா செய்தித் துளிகள் இவர்கள் ஆபாசத்திற்கு யார் தடை விதிப்பது ?

21 Dec,2015
 

 இவர்கள் ஆபாசத்திற்கு யார் தடை விதிப்பது ?


  
.
தமிழ்த் திரையுலகத்தையும் சர்ச்சையும் பிரிக்க முடியாது போல, அடுத்தடுத்து சர்ச்சைகளாக தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. 'பீப் சாங்' பற்றி

ஆரம்பமான சர்ச்சை, அப்படியே 'அறிவிருக்கிறதா' என்று கேட்ட இளையராஜா பக்கமும் திரும்பியுள்ளது. இன்று எமி ஜாக்சன் பக்கம் அடுத்த எதிர்ப்புக் கணைகள் ஆரம்பமாகிவிட்டது. ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டுமென திரைப்பட நடிகர் நடிகைகள், விளையாட்டு வீரர்கள் அடங்கிய குழு 'பீட்டா' விலங்குகள் நல அமைப்பு சார்பாக ஒரு பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்கிறது.

இதில் 'தங்கமகன், கெத்து, 2.O' படங்களின் நாயகியான எமி ஜாக்சனும் தூதுவராக இருக்கிறார். மற்றும் ஹிந்தி நடிகைகளான வித்யா பாலன், சோனாக்ஷி சின்ஹா, ஜாக்குலின் பெர்ணான்டஸ், பிபாஷா பாசு, ரவீணா டாண்டன், ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட நடிகைகளும் ஜான் ஆபிராகம், வித்யுத் ஜம்வால், கபில் சர்மா, ஆதித்ய ஷெட்டி, சோனு சூத் உள்ளிட்ட நடிகர்களும், விராட் கோலி, ஷிகர் தவான் ஆகிய கிரிக்கெட் வீரர்களும் முன்னெடுத்தச் செல்கிறார்கள்.

தமிழ்ப் படங்களில் அதிகமாக நடித்து வரும் நாயகியான எமி ஜாக்சன் தமிழ்க் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வீர விளையாட்டான ஜல்லிக் கட்டை எதிர்ப்பது குறித்தும், அதைத் தடை செய்ய வேண்டும் என பிரச்சாரம் மேற்கொள்வதைக் குறித்தும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான அமைப்புகள் கொதித்துப் போயுள்ளன.

தமிழர் கலாச்சாரங்களில் ஒன்றான ஜல்லிக்கட்டு குறித்து இங்கு படங்களில் நடிக்க வந்த ஆங்கிலேயே நடிகையான எமி ஜாக்சன் பேசக் கூடாது என்றும் அவர்கள் சொல்கிறார்கள். கூகுள் பக்கங்களில் எமி ஜாக்சன் என்று தேடினால் அவரின் அதிகமான ஆபாசப் புகைப்படங்கள்தான் வருகிறது.

திரைப்படங்களிலும் அவர் எல்லை மீறிதான் நடித்துக் கொண்டு வருகிறார். இன்று வரும் 'தங்க மகன்' படத்தில் கூட தனுஷுடன் உதட்டோடு உதடு வைத்து முத்தக் காட்சி ஒன்றிலும் நடித்துள்ளார். அதன் வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பரவி வருகிறது.

இப்படிப்பட்டவர்களின் ஆபாசமான செயல்களுக்கு யார் தடை விதிப்பது என்றும் அவர்கள் கேட்கிறார்கள். இன்னும் பல தமிழ் அமைப்புகளும் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் எமி ஜாக்சன் கொடுக்கும் ஆதரவிற்காக போராட்டங்களை நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்கள்.





விஜய் சேதுபதி நடிக்கும் ‘தர்மதுரை’ படத்தில் நான்கு ஹீரோயின்கள்!




 
விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘நானும் ரௌடிதான்’. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். விக்னேஷ் சிவன் இயக்கிய இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.இப்படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதி ‘தர்மதுரை’ என்னும் படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகள் நடிக்க இருக்கிறார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது நான்கு கதாநாயகிகள் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘நானும் ரௌடிதான்’. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். விக்னேஷ் சிவன் இயக்கிய இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.இப்படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதி ‘தர்மதுரை’ என்னும் படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகள் நடிக்க இருக்கிறார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது நான்கு கதாநாயகிகள் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    

இதில் முதல் கதாநாயகியாக தமன்னா, இரண்டாவதாக ‘மேகா’ படத்தில் நடித்த சிருஷ்டி டாங்கேவை தேர்வு செய்திருந்தனர். அடுத்தபடியாக மூன்றாவது கதாநாயகியை தேடிவந்த நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷும், நெடுஞ்சாலை படத்தில் நடித்த ஷிவதா நாயரும் தேர்வு செய்திருக்கிறார்கள். மொத்தம் நான்கு ஹீரோயின்களை கொண்டு ‘தர்மதுரை’ உருவாகவுள்ளது. இப்படத்தை ஸ்டுடியோ 9 சார்பாக சுரேஷ் தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இயக்குனர் சீனு ராமசாமி இப்படம் மூலம் விஜய் சேதுபதியுடன் மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறார்.
 


 
ஆபாச பாடல்களை சமூகத்தில் திணிக்க வேண்டாம் நல்ல பாடல்களைத் தரவேண்டும்: - சினேகா வேண்டுகோள்


 
ஆபாச பாடல்களை சமூகத்தில் திணிக்க வேண்டாம் என்றும், சமுதாயத்துக்கு நல்ல பாடல்களை கொடுக்க வேண்டும் என்றும் நடிகை சினேகா கேட்டுக்கொண்டார். கோவையில் தனியார் ஜவுளி நிறுவன நிகழ்ச்சிக்கு வருகை தந்த நடிகை சினேகா செய்தியாளார்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பீப் பாடல் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், சர்ச்சைக்குரிய பீப் பாடலை இன்னும் கேட்கவில்லை என்றும் பாடலை கேட்காமல் அதைப்பற்றி விமர்சனம் செய்வது சரியில்லை என்றும் தெரிவித்தார். பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பாடல்கள் தொடர்ந்து வருவதை குறிப்பிட்டு பேசிய சினேகா, இதை ஒரு தரப்பினர் விரும்புவதாகவும், இதை எல்லாம் நாம் கேள்வி எழுப்ப முடியாது என்றும் தெரிவித்தார்.
ஆபாச பாடல்களை சமூகத்தில் திணிக்க வேண்டாம் என்றும், சமுதாயத்துக்கு நல்ல பாடல்களை கொடுக்க வேண்டும் என்றும் நடிகை சினேகா கேட்டுக்கொண்டார். கோவையில் தனியார் ஜவுளி நிறுவன நிகழ்ச்சிக்கு வருகை தந்த நடிகை சினேகா செய்தியாளார்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பீப் பாடல் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், சர்ச்சைக்குரிய பீப் பாடலை இன்னும் கேட்கவில்லை என்றும் பாடலை கேட்காமல் அதைப்பற்றி விமர்சனம் செய்வது சரியில்லை என்றும் தெரிவித்தார். பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பாடல்கள் தொடர்ந்து வருவதை குறிப்பிட்டு பேசிய சினேகா, இதை ஒரு தரப்பினர் விரும்புவதாகவும், இதை எல்லாம் நாம் கேள்வி எழுப்ப முடியாது என்றும் தெரிவித்தார்.
    

மேலும், படைப்பாளிகள் சமுதாயத்துக்கு நல்ல பாடலை கொடுக்க வேண்டும் என்றும், பீப் பாடல் போன்றவற்றை திணிக்க வேண்டாம் என்றும, நடிகை சினேகா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 


 ‘வயதான நடிகர்களுக்கு இளம் கதாநாயகிகள் தேவையா?’ கோபத்தில் அனுஷ்கா சர்மா...



 


அழகான நடிகை அனுஷ்கா சர்மா கோபத்தில் கொதிக்கிறார். திரையுலகில் நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் இடையே பெரும் பாகுபாடு காட்டப்படுகிறது, பெண்கள் வெறும் அழகுப் பொம்மைகளாகத்தான் நடத்தப்படுகின்றனர் என்பது அனுஷ்காவின் ஆத்திரத்துக்குக் காரணம்.

‘‘சினிமாவில் பெண்கள் மிகவும் அழகாக இருக்க வேண்டும். நாயகனை ஈர்க்கக்கூடிய அளவுக்கு அவர்கள் தேவதை போன்று தோன்ற வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர்கள் மட்டும் தங்கள் வயது தாண்டியும் ஹீரோவாகவே நடித்துக்கொண்டிருக்க, ஹீரோயின் மட்டும் இளம்பெண்ணாகவே இருக்க வேண்டும் என்பது என்ன நியாயம்? இதில் ஒரு பாலியல் சார்ந்த பார்வை இருக்கிறது. நடிகைகள் தங்களின் சில அங்கங்களைக் காட்டுவது, அழகாக நடனமாடுவது தவிர நமது சினிமாக்களில் அவர்களுக்கு என்ன இடம் இருக்கிறது? இதுபோன்ற படங்களை பெரிய நடிகர்கள் ஆதரிப்பதுதான் இம்மாதிரியான படங்கள் வெளியாகக் காரணம்’’  என்று சீறித் தள்ளுகிறார், அனுஷ்கா.

தனது பெற்றோர், தனக்கும், தன்னுடைய சகோதரன் கர்னேஷுக்கும் இடையே  எந்தப்  பாகுபாடும்     காட்டியதில்லை என்று சொல்லும் அனுஷ்கா, திரையுலகில் நுழைந்தபோது அந்த வேறுபாட்டை உணர்ந்ததாகக் கூறுகிறார்.

‘‘தைரியமுள்ள பெண்ணை சினிமா உலகில் யாருக்கும் பிடிப்பதில்லை. இந்தியாவில் எல்லோரது ரசனையும் சாதாரணமாக உள்ளதால்தான் இங்கே பலரால் நட்சத்திரங்களாக இருக்க முடிகிறது. அந்தவகையில் அவர்களெல்லாம்  அதிர்ஷ்டசாலிகள் என்று என் சக திரை நண்பர் ஒருவரிடம் ஒருமுறை கூறினேன். அது உண்மை’’ என்கிறார் அனுஷ்கா கிண்டலாக.

திரையுலகில் நாம் நமக்குத் தகுதியானதைக் கேட்டாலே திமிர் பிடித்தவர்களாக பெயர் சூட்டப்படுகிறோம் என்றும் அனுஷ்கா சொல்கிறார்.

‘‘நடிகைகளான நாங்கள் ஒன்றும் முட்டாள்களோ, ஒன்றும் தெரியாதவர்களோ அல்ல. எங்களுக்கும் மனம் இருக்கிறது, அறிவு இருக்கிறது. நாங்கள் கூறும் ஆலோசனைக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.’’

ஒரு படத்தில் ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறது என்றாலே அதை ஹீரோக்கள் ஏற்க மறுக்கிறார்கள் என்று கூறும் அனுஷ்கா, சம்பள விஷயத்திலும் பெரும் ஏற்றத்தாழ்வு இருக்கிறது என்கிறார்.

‘‘அதென்னவோ ஆண்களுக்குத்தான் அதிக செலவு இருக்கிறது, அவர்கள்தான் ஒரு குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பது போல, பெண்கள் எல்லாம் மற்றவர்கள் சம்பாத்தியத்தில்தான் வாழ்கிறார்கள் என்பதைப் போல சம்பள விஷயமும் இருக்கிறது.

இப்போதெல்லாம் படங்கள் 100 கோடி வசூலைக் குவிக்க வேண்டும் என்று நிறைய நெருக்கடி கொடுக்கப்படுகிறது. அது, இந்தி திரைப்பட உலகையே கெடுத்து வைத்திருக்கிறது. நடிகர்களும் புதிதாக ‘ரிஸ்க்’ எடுக்கத் தயங்குகிறார்கள். நடிகைகளிடம் பெரிதாக எதுவும் எதிர்பார்க்கப்படுவதில்லை என்பதால் அவர்கள் ‘ரிஸ்க்’ எடுப்பது எளிது’’ என்று பதில் சொல்கிறார், அனுஷ்கா.

கடைசியாக, இவரையும், கிரிக்கெட் வீரர் விராட் கோலியையும் விரட்டி வரும் கிசுகிசுக்கள் பற்றிக் கேட்டால்,

‘‘நானும் விராட்டும் நெருக்கமான உறவில் இருக்கிறோம். விராட் கிரிக்கெட் ஆடுவதை நான் பார்க்க வேண்டும் என்று அவர் விரும்பு கிறார், அவர் ஆடுவதை நானும் பார்க்க விரும்புகிறேன். அவ்வளவுதான். இதில் மற்றவர்கள் சொல்வதைப் பற்றியெல்லாம் நாங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்? அவர் சரியாக ஆடவில்லை என்றால், அதற்குக் காரணம் நான்தான் என்று கூறுவதெல்லாம் எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை!’’ –வெடித்து முடிக்கிறார், அனுஷ்கா சர்மா.


கல்லூரி மாணவியாக நடிப்பதற்காக திரிஷா, உடல் எடையை குறைத்தார்!
          



கதாபாத்திரங்களுக்காக உடல் எடையை கூட்டி குறைப்பதற்கு, பிள்ளையார் சுழி போட்டவர், 'நடிகர் திலகம்' சிவாஜிகணேசன். இதற்கு உதாரணமாக அவர் நடித்த பல படங்களை கூறலாம். அவருக்கு அடுத்தபடியாக,
கதாபாத்திரங்களுக்கு ஏற்ப உடல் எடையை கூட்டி குறைத்து ரசிகர்களை கவர்ந்தவர், கமல்ஹாசன்.

இவர்கள் வழியில் அஜித், விக்ரம், சூர்யா, ஜெயம் ரவி, விஷால், பரத், அதர்வா போன்ற கதாநாயகர்களும் கதாபாத்திரங்களுக்கு தகுந்தபடி தங்களின் உடல் எடையை கூட்டி குறைத்து பல படங்களில் நடித்தார்கள்.

கதாநாயகர்களைப் போல் இப்போது கதாநாயகிகளும் படத்துக்காக தங்களின் உடல் எடையை கூட்டி குறைக்க தொடங்கி இருக்கிறார்கள். 'இஞ்சி இடுப்பழகி' படத்தில் குண்டு பெண் வேடத்தில் நடிப்பதற்காக, அனுஷ்கா தனது உடல் எடையை அதிகரித்துக் கொண்டார். அடுத்த படத்தில் நடிப்பதற்காக அவர் தனது குண்டு உடலை மெலிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்.

திரிஷா இப்போது, 'நாயகி' என்ற திகில் படத்தில் நடித்து வருகிறார். இதில், அவருக்கு 2 வேடங்கள். அதில், 20 வயது கல்லூரி மாணவி வேடமும் ஒன்று.

மாணவியாக நடிப்பதற்காக, திரிஷா தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். இதுவரை அவர் 4 கிலோ எடை குறைத்து இருக்கிறார்.

திரிஷா, 30 வயதை கடந்து விட்டார். என்றாலும் அவர் ஒல்லியாக இருப்பதால் இளமையாகவே காணப்படுகிறார். அவர் மேலும் மெலிந்து இருப்பதால் இளமையும், அழகும் கூடியிருப்பதாக, 'நாயகி' படக்குழுவினர் கூறுகிறார்கள்.




Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies