சினிமா செய்தித் துளிகள் எமிஜாக்சனை புகழும் ஆன்ட்ரியா

08 Dec,2015
 

ஹேட்ஸ்டோரி 3 - மூன்றுநாளில் ரூ.26.77 கோடி வசூல்

ஹேட் ஸ்டாரி படங்களின் வரிசையில் மூன்றாம் பாகமாக வெளிவந்துள்ள படம் தான் ஹேட் ஸ்டோரி-3. விஷால் பாண்டியா இயக்கத்தில் வெளிவந்துள்ள இப்படம் மூன்று நாளில் ரூ.26.77 கோடி வசூலித்திருக்கிறது. முதல்நாளில் ரூ.9.72 கோடியும், இரண்டாம் நாளில் ரூ.8.05 கோடியும், மூன்றாம் நாளில் ரூ.9 கோடியும் வசூலித்திருக்கிறது. முதல்வார முடிவில் இப்படம் ரூ.35 கோடி வசூலை எட்டும் என்றும், தற்போதை படத்திற்கான முதலை எடுத்துவிட்டதாகவும், தொடர்ந்து வசூல் நன்றாக இருப்பதாக விநியோகஸ்தர்கள் வட்டாரம் தெரிவிக்கிறது. இந்தியாவில் மட்டும் இப்படம் சுமார் 2600 தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது குறிப்பிடத்தக்கது.




சென்னை மக்களின் துயர் துடைக்க தொடர்ந்து உதவும் தெலுங்கு நடிகர்கள்
ஹைதராபாத்: சென்னை மக்களின் துயரைத் துடைக்க தெலுங்கு நடிகர்கள் தங்களால் முடிந்த உதவிகளைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

கன மழையால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு தெலுங்கு நடிகர்கள் ஒன்றிணைந்து பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். முதல் கட்டமாக தங்களால் இயன்ற தொகையை மக்களுக்கு அளிக்க முன்வந்தனர்.

அடுத்தபடியாக மற்றவர்களிடம் இணைந்து பொருட்களைத் திரட்டி டிரக்குகள் மூலம் சென்னை மற்றும் கடலூர் மக்களுக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து பிரபல இளம் தெலுங்கு நடிகர்கள் 10 பேர் நேற்று பிரபல மால்களுக்குச் சென்று உண்டியல் ஏந்தி மக்களிடம் பணம் வசூல் செய்தனர்.

மேலும் ராமாநாயுடு அறக்கட்டளை சார்பில் மக்கள் தங்களால் முடிந்த தொகையினை அனுப்பி வைக்கலாம் என்றும் அந்தத் தொகையை தாங்கள் மழையால் பாதிக்கப்பட்ட மக்களிடம் சேர்ப்பதாகவும் அறிவித்தனர்.

தெலுங்கு நடிகர்களின் இந்த அறிவிப்பிற்கு ஆந்திர, தெலுங்கானா மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதைத்தவிர இன்று இரவு மேலும் 3 டிரக்குகளில் மக்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களை நடிகர் ராணா டகுபதி அனுப்பி வைக்கவிருக்கிறார்.

Fully with you guys @dhanushkraja next 3 trucks also leaving tonight! Will send your teams the details soon!! https://t.co/XIqMknTJ2q

— Rana Daggubati (@RanaDaggubati) December 7, 2015
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் " இன்று இரவு சென்னைக்கு மேலும் 3 டிரக்குகளில் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைக்கிறோம்.

நடிகர் தனுஷ் உங்களது தன்னார்வலர்கள் குறித்த விவரங்களை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்" என்று சற்று முன்னர் ராணா டகுபதி தெரிவித்திருக்கிறார்.

மொத்தத்தில் தெலுங்கு நடிகர்கள் மழையால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு தொடர்ந்து உதவிகள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.



கீர்த்தி சுரேஷுடன் போட்டி போடும் அனிஷா அம்ரோஸ்

பிக்சல் ட்ரீம்ஸ் இந்தியா எனும் பட நிறுவனம் நிவின் பாலி - நஸ்ரியா இணைந்து நடித்த நேரம் படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை வாங்கியுள்ளது. தயாரிப்பாளர் சுதாகர் இப்படத்தை 123 என்ற பெயரில் பிக்சல் ட்ரீம்ஸ் இந்தியா நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கவும் முன்வந்துள்ளார். அனில் கன்னெகன்டி இயக்கவிருக்கும் இப்படத்தில் நாயகனக சுதீப் கிஷாண் நடிக்கவுள்ளார். தற்போது இப்படத்தில் நடிக்கும் நாயகிக்கான தேர்வு நடைபெற்று வருகின்றது. இது என்ன மாயம் படத்தில் நடித்த நடிகை கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் நாயகியாக நடிப்பதாகக் கூறப்பட்டது.

அனிஷா அம்ரோஸ் இப்படத்தில் நாயகியாக நடிக்க தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார். இதனால் அனிஷாவிற்கும், கீர்த்தி சுரேஷிற்கும் இடையே கடும் போட்டி உருவாகியுள்ளது. கீர்த்தி சுரேஷ் நடிகர் ராமிற்கு ஜோடியாக நடித்துள்ள நேனு சைலஜா திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ளது. பவர் ஸ்டார் பவன் கல்யாணின் கோபாலா கோபாலா படத்தில் நடித்த அனிஷா சர்தார் படத்தில் நாயகியாக நடிக்கக் கூடும் என கூறப்பட்டது. ஆனால் அந்த வாய்ப்பு அனிஷாவின் கை நழுவிப் போனது. அனிஷா கீர்த்தி சுரேஷுடன் போட்டியில் வென்று 123 பட வாய்ப்பை கைப்பற்றுவாரா என்பது விரைவில் தெரிந்துவிடும்.



ஹாலிவுட் ஸ்டார் வின் டீசல் உடன் நடிக்கும் தீபிகா!


பாலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகா படுகோனே. இவர் நடித்த அனேக படங்கள் 100 கோடி பாக்ஸ் ஆபிசில் இணைந்துள்ளது. சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான தமாஷா படமும் நல்ல வசூலை கொடுத்துள்ளது. இதுநாள் வரை பாலிவுட் படங்களில் நடித்து இந்திய ரசிகர்களுக்கு மட்டுமே பரீட்சையமாக இருந்த தீபிகா விரைவில் உலகளவில் பரீட்சையமாக போகிறார். ஆமாம், தீபிகா விரைவில் ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதுவும் ஹாலிவுட்டின் ஆக்ஷ்ன் ஸ்டார் வின் டீசல் உடன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது,

சமீபத்தில் தமாஷா படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சியை முடித்த கையோடு அமெரிக்க பறந்த தீபிகா அங்கு ஹாலிவுட் நடிகர் வின் டீசலை சந்தித்து இருக்கிறார். விரைவில் வின் டீசல் நடிக்கும் புதிய படமொன்றில் தீபிகா நடிக்க இருப்பதாகவும், அதுதொடர்பாக பேச்சுவார்த்தைக்காக தீபிகா வின் டீசலை சென்று சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் வின் டீசல் உடன் அவர் எடுத்து கொண்ட போட்டோவையும் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறார் தீபிகா.

விரைவில் தீபிகாவை ஹாலிவுட் படத்தில் எதிர்பார்க்கலாம்.





 எமிஜாக்சனை புகழும் ஆன்ட்ரியா
‘மதராச பட்டினம்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி பதித்தவர் எமி ஜாக்சன். தற்போது விஜய் நடிக்கும் ‘தெறி’, தனுசுடன் ‘தங்கமகன்’ ஆகிய படங்களில் நடித்து வரும் எமிஜாக்சன், அடுத்து ரஜினியின் ‘எந்திரன்–2’ படத்திலும் ரஜினி ஜோடியாக நடிக்க இருக்கிறார். 

ஏற்கனவே இயக்குனர் ஷங்கரின் ‘ஐ’ படத்தில் நடித்த எமிஜாக்சன் 2–வது முறையாக ஷங்கர் படத்தில் நடிக்க இருக்கிறார். தெறி, தங்கமகன் படங்களில் எமிஜாக்சனும் இணைந்து நடித்து வரும் சமந்தா அவரது நெருங்கிய தோழியாகிவிட்டார். இப்போது தங்க மகன் படத்தில் நடித்துள்ள எமிஜாக்சனுக்கு டப்பிங் பேசும் ஆன்ட்ரியாவும் அவரை புகழ்ந்துள்ளார். 

எமிஜாக்சனுக்கு டப்பிங் கொடுக்கும் முன்பு அவரது பேச்சு மற்றும் நடவடிக்கை குறித்து அறிந்து கொள்வதற்காக எமிஜாக்சனுடன் ஆன்ட்ரியா பழங்கினார். இதுகுறித்து கூறிய அவர்... குரல் பொருத்தம் மற்றும் பேசும் விதம்பற்றி அறிவதற்காக எமியுடன் பேசினேன். அப்போது அவர் மிகவும் நட்புடன் பழகினார். இதில் அவர் எனது நெருங்கிய தோழியாகிவிட்டார். 

இதனால் அவரது குரலுடன் பொருந்தும் வகையில் ‘டப்பிங்’ பேசி இருக்கிறேன். அவரது நடவடிக்கைகளை நேரில் அறிந்தால்தான் டப்பிங் பேச எளிமையாக இருந்தது. அவர் பழகும் விதம் என்னை மிகவும் கவர்ந்து விட்டது” என்றார்.



Share this:

Danmark

Thailand

Malaysia

Dubai

Bali

Srilanka

Dubai

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies