ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் அடுத்த படத்தில் அஜித்?
மதராச பட்டினம், மாற்றான், வை ராஜா வை, அவன் இவன், இரும்பு குதிரை, தெனாலிராமன், தனி ஒருவன் ஆகிய படங்களை தயாரித்த ஏ.ஜி.எஸ். நிறுவனம் அடுத்து ஆர்யாவை வைத்து கே.வி.ஆனந்த் டைரக்ஷனில் ஒரு படம் தயாரிக்க இருப்பதாக கூறப்பட்டது. இதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றன.
அந்த படம் பேச்சுவார்த்தையுடன் நின்று போனது. ஏ.ஜி.எஸ். நிறுவனம் அடுத்து 'வீரம்,' 'வேதாளம்' படங்களின் டைரக்டர் சிவா இயக்க, அஜித் நடிக்கும் புதிய படத்தை தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது!
மெருபு இது தெறியின் தெலுங்கு பெயர்
விஜய்யின் ஜில்லா, கத்தி படங்களை தெலுங்கில் ரீமேக் செய்யலாம் என்ற எண்ணத்தில், இப்படங்களை தெலுங்கில் டப் செய்து வெளியிடவில்லை.
விஜய்யின் ஜில்லா, கத்தி படங்களை தெலுங்கில் ரீமேக் செய்யலாம் என்ற எண்ணத்தில், இப்படங்களை தெலுங்கில் டப் செய்து வெளியிடவில்லை.
இவ்விரு படங்களைப் பார்த்த தெலுங்கு நடிகர்கள் யாரும், ரீமேக்கில் நடிக்க முன்வரவில்லை.
பொறுத்துப் பார்த்து, பல மாதங்களுக்குப் பிறகு ஜில்லாவை தெலுங்கில் டப் செய்து வெளியிட்டனர். இந்தமுறை உஷாராக, தெறி படத்தை, அப்படம் வெளியாகும் போதே தெலுங்கில் டப் செய்து வெளியிட முடிவு செய்துள்ளனர். தெலுங்கு தெறி - க்கு, மெருபு என பெயர் வைத்துள்ளனர். தெறியில் விஜய்யுடன் ஏமி ஜாக்சன், சமந்தா, இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர்.
மில்லியன் ஆல்பங்கள் விற்பனை: அடிலியின் புதிய சாதனை!
பாப் பாடகி அடிலியின் “25” என்ற ஆல்பம் ஒரு வாரத்தில் 3.38 மில்லியன்கள் விற்பனையாகி அமெரிக்காவின் புதிய சாதனை படைத்துள்ளது. டெய்லர் ஸ்விப்டின் “1989” ஆல்பம் ஒரு வருடம் நிகழ்த்திய சாதனையை ஒரு வாரத்தில் முறியடித்துள்ளார் அடிலி. நீல்சன் மியூசிக் நிறுவனம் 1991 முதல் அதிக விற்பனையாகும் ஆல்பம் பட்டியலை சேகரித்து வந்துள்ளது. அதில் முதல்முறையாக ஒரு வாரத்தில் 3 மில்லியன்களுக்கும் மேல் விற்று சாதனை படைத்தது அடிலியின் 25 ஆல்பம் தான் என்று நீல்சன் நிறுவனம் கூறியுள்ளது.
லட்சுமி மேனனுக்கு அப்ப வில்லன்... இப்ப ஹீரோ....
கொம்பன் படத்திற்கு பிறகு படிப்பிற்காக, நடிப்புக்கு கொஞ்சம் லீவு விட்ட லட்சுமி மேனன், அஜீத் நடித்த வேதாளம் படத்தின் மூலம் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்.
இதனைத் தொடர்ந்து, ஜெயம் ரவி நடிக்கும் மிருதன், அறிமுக இயக்குனர் முத்துக்குமார் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் படத்தில் ஒப்பந்தமாகி தனது மார்கெட்டை நிலை நிறுத்திக் கொண்டார்.
இந்நிலையில், சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் தர்மதுரை படத்தில் கதாநாயகியாக நடிக்க லட்சுமி மேனன் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிகின்றன.
ஆக.... சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் லட்சுமி மேனனுக்கு வில்லனாக நடித்த விஜய்சேதுபதி தற்போது ஹீரோவாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
ஸ்ரீதேவி வாழ்க்கையை கணவரே அழித்துவிட்டாரா? ராம் கோபால் வர்மாவின் புது சர்ச்சை!
ராம் கோபால் வர்மாவின் படங்களைப் போன்றே அவரின் கருத்துக்களும் சர்ச்சை மிகுந்ததாக இருக்கும். மனதில் பட்டதை எதுவென்றும் பாராமல் பட்டென போட்டு உடைத்து விடுவார். இதனால் மற்றவர்கள் மனது எவ்வளவு வேதனை படும் என்பதை இவர் அறிந்திருக்க மாட்டார்.
இப்போது சுயசரிதை ஒன்றை எழுதுகிறாராம். அப்படின்னா கேட்கனுமா? என்னஸ எல்லாத்தையும் எழுத தொடங்கிவிட்டார். அதில் நடிகை ஸ்ரீதேவி பற்றியும் குறிப்பிட்டுள்ளார். ராம் கோபால் வர்மா இயக்கிய நான்கு படங்களில் ஸ்ரீதேவி நடித்துள்ளார் என்பது இங்கே கவனித்தக்கது.
ஸ்ரீதேவி பற்றி அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவதுஸ “ஸ்ரீதேவியின் திறமையை அவரது கணவர் போனி கபூர் அழித்து விட்டார். எனவே அவரது கணவரை நான் மன்னிக்கவே மாட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அது அவங்க பிரச்சினைஸ உங்களுக்கு என்ன என்று? வர்மாவிடம் கேட்க தோனுதா உங்களுக்கு
கருத்து வேறுபாட்டால் பிரிந்தாலும் கணவரை பாராட்டும் நடிகை..!
மலையாள சினிமாவில் கதாநாயகி என்கிற லெவலை தாண்டி மிக முக்கியமான நடிகையாக கடந்த இரண்டு வருடங்களில் உருவாகியிருப்பவர் நடிகை சிருந்தா. '1983' படத்தில் தனது கணவன் நிவின்பாலி வீட்டில் மாட்டியிருக்கும் சச்சின் படத்தை காட்டி, “இது யாரு சேட்டா” என கிரிக்கெட் வெறியரான நிவின்பாலியின் இதயத்தில் குண்டுபோட்டு, அந்த காமெடி மூலமாகத்தான் சீக்கிரமே பாப்புலரானார். சமீபத்தில் வெளியான அமர் அக்பர் ஆண்டனி படத்தில் கூட திருமணமான நான்கு நாட்களிலேயே கணவன் ஓடிவிட, அதன்பின் தனக்கு பிறக்கும் குழந்தையுடன் பிருத்விராஜின் வீட்டில் தங்கிவிடுவார்.
விஷயம் என்னவென்றால் நிஜத்திலும் தனது கணவரை பிரிந்து தனது மகனுடன் தனித்தே வாழுகிறார் சிருந்தா ஆஷப். இத்தனைக்கும் காதல் திருமணம் செய்துகொண்டவர் தான். பிரிவுக்கு என்ன காரணம் என்றால், “அது கல்லூரி படிக்கும்போது ஏற்படும் இனக்கவர்ச்சியினால் 19 வயதில் உருவான காதல், இருந்தாலும் எங்கள் வீட்டின் சம்மதத்துடன் தான் ஆஷப்பை மணந்தேன். ஒரு வருடத்திலேயே எங்கள் இருவரின் கருத்தும் உலகமும் வெவ்வேறு என புரிந்தது. டீசன்ட்டாக பிரிந்துவிட்டோம்” என்று சொல்கிற சிருந்தா, இன்னும் ஆஷப்பிடம் இருந்து முறைப்படி டைவர்ஸ் வாங்கவில்லையாம். மேலும் ஆஷப் மீது அவருக்கு எந்த வருத்தமும் இல்லையென்பதுடன் இன்னும் பிரிந்துபோன கணவர் மீது மரியாதையும் வைத்திருக்கிறாராம் சிருந்தா.