பிள்ளையுடன் வெளியேற விரும்பும் அமீர்கான் மனைவி:நாட்டுக்காக பிள்ளையை தரும் தியாகியின் மனைவி
துடில்லி : ”இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லை” என்று கூறி பிள்ளையுடன் நாட்டை விட்டு வௌியேற நினைக்கிறார் இந்தி நடிகர் அமீர்கான் மனைவி. ஆனால், பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் ராணுவ அதிகாரியை இழந்த அவரது மனைவி, ‘நாட்டை பாதுகாக்கும் பணியில் தன் பிள்ளைகளை அனுப்ப தயாராக இருக்கிறார்.
முதலில் ஷாருக்கான், இப்போது அமீர்கான் என இந்தி நடிர்களின் அடுத்தடுத்த சர்ச்சை கருத்தால் நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
டில்லியில் நடந்த நிகழ்சசியில் நடிகர் அமீர் கான் பேசும்போது, இந்தியாவில் பாதுகாப்பு இல்லை. பிரபலங்கள் தாங்கள் பெற்றிருந்த விருதுகளை திருப்பித்தருவதன் மூலம், தங்களது எதிர்ப்பை தெரிவிக்கின்றனர். இதில் எந்தவொரு தவறுமில்லை.
நாட்டில் உள்ள அனைவருக்கும் போராட உரிமை உள்ளது. பிரபலங்கள், தங்களுக்கு உரிய முறையில் விருதுகளை திருப்பித்தந்து அகிம்சை முறையில் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கின்றனர் என்றார்.
அதோடு விட்டாரா அவர்? ”சில நாட்களுக்கு முன்னர் கூட என் மனைவி கிரண் என்னிடம் வந்து, நாம் வேண்டுமென்றால் வேறு நாட்டிற்கு சென்று விடுவோமா? குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது என்று கிரண் கூறியுள்ளார். கிரண் பயப்படுவதிலும் உண்மை இல்லாமல் இல்லை” என்றும் கூறியிருந்தார்.
அமீர் கானின் இந்த கருத்திற்கு பல்வேறு தரப்புகளிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்தியா தான், அமீர் கானை. உச்சநட்சத்திரமாக மாற்றியது. இவர் இந்தியாவை விட்டு வெ ளியறே வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு வந்திருக்கவே கூடாது.
தன்னை தைரியசாலி என்று கூறிக்கொள்ளும் அமீர் கான், கோழை போல் தப்பித்து ஓடலாமா என்று கேள்விக்கணைகள் அமீர் கான் மீது தொடர்ந்து பாய்ந்த வண்ணம் உள்ளன.
இந்தி நடிகர் அனுபம்கெர் கூறும்போது, ”எந்த நாட்டுக்கு செல்ல வேண்டும் என உங்கள் மனைவியிடம் கேளுங்கள் அமீர். இந்த நாடு தான் உங்களை அமீர்கானாக ஆக்கியது என்பதை மறந்து விடாதீர்கள்” என்று கண்டித்துள்ளார்.
படத்தை பார்க்காதீங்க: இதற்கிடையே அமீர்கானுக்கு எதிராக சமூக தளங்களில் மேலும் பலர் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். அடுத்த மாதம் 18ம் தேதி ஷாருக்கான் நடித்த ‘தில்வாலே’ என்ற இந்திப்படம் வௌியாகிறது. நாட்டுப்பற்றுள்ள யாரும் இப்படத்தை பார்க்க வேண்டாம் என்ற கருத்து வேகமாக பரவி வருகிறது.
சிலர், ”இந்திய ரசிகர்கள் படங்களைப் பார்த்ததால் தான் அமீர்கான் பல விருதுகளை பெற்றார். அவ்விருதுகளை அவர் திருப்பி அளிப்பாரா” என கேட்டுள்ளனர்.
சிலர், ”மும்பை மீது தாக்குதல் நடந்தபோதும், குண்டுகள் வெடித்தபோதும் உங்கள் மனைவிக்கு பயமாக இல்லையா. அப்போதே நாட்டை விட்டு வௌியேற தோன்றவில்லையா’ என கேட்டுள்ளனர்.
மேலும் சிலர், ”மும்பையில் ஒரு பயங்கரவாதி துாக்கிலிடப்பட்டபோது பலர் வௌிப்படையாக ஊர்வலமாக சென்றனர்; பேட்டி கொடுத்தனர். அப்போது பயம் ஏற்படவில்லையா அமீர்கான்” என கருத்து வௌியிட்டுள்ளனர்.
இதுபோல் ஏராளமான கருத்துகள் வைரலாக பரவி வருகின்றன.
இவர்கள் தவிர பல்வேறு பாஜ தலைவர்களும் அமீர்கானுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
காங்., ஆதரவு: இப்பிரச்னையில் காங்., கட்சி வழக்கம்போல், அமீர்கானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
ஷாருக்கான் சர்ச்சை: சில நாட்களுக்கு முன் இன்னொரு இந்தி நடிகரான ஷாருக்கான், ‘நாட்டில் சகிப்புத்தன்மை இல்லை. அறிஞர்கள் விருதுகளை திருப்பித் தருவது சரிதான்” எனக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். அப்போதும் அவருக்கு ஏராளமானோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
விஸ்வரூபம் பட பிரச்னையின் போது, நடிகர் கமல்ஹாசனும், நாட்டை விட்டு வெ ளியேற உள்ளதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
சந்தோஷ் மகாதிக் மனைவியின் தியாகம்: இதற்கிடையே சென்ற வாரம் காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இந்திய ராணுவ கர்னல் சந்தோஷ் மகாதிக் இறந்தார். அவரது இறுதிச் சடங்கின்போது பேசிய அவரது மனைவி, ”எனது பிள்ளைகளையும் ராணுவத்தில் சேர்த்து, நாட்டின் பாதுகாப்பில் ஈடுபடுத்துவேன்” என கூறியிருந்தார்.
ஒரு நடிகரின் மனைவி, குழந்தையுடன் நாட்டை விட்டு வெளியேறுவது பற்றி பேசும் அதே நேரத்தில் ஒரு ராணுவ தியாகியின் மனைவி நாட்டின் பாதுகாப்புக்காக பிள்ளைகளை தர தயாராக இருக்கிறார்.