சினிமா செய்தித் துளிகள் விக்டர் ஆக மாறினாரா விக்னேஷ் சிவன்?

23 Nov,2015
 

விக்ரம், நயன்தாரா ஜோடியுடன் இணையும் நித்யா மேனன்!

ரஜினி, விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு, ஆர்யா, விஷால், ஜெயம் ரவிஸ. இந்த லிஸ்ட் ரொம்ப பெருசா இருக்கும்.. சரி விடுங்கஸ இந்த ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து அந்தந்த படங்களுக்கு அழகு சேர்த்தவர் அம்மணி நயன்தாரா. ஆனால் கமல்ஹாசன் மற்றும் விக்ரம் ஆகியோருடன் மட்டும் இணையாமல் இருந்தார்.

கமல்ஹாசனுடன் எந்தவிதமான பிரச்சினை இல்லையென்றாலும் அவருடன் ஜோடியாக நயன்தாரா நடிக்கவில்லை. விக்ரமுடன் இணைவதில் இருந்த பிரச்சினைகள் தற்போது தீர்க்கப்பட்டு முதன்முறையாக இணைந்து நடிக்கிறார்.

‘மர்ம மனிதன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ‘புலி’ படத் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷிபு தயாரிக்கிறார். இப்படத்தில் தற்போது நித்யா மேனனும் இணைந்துள்ளார். இவர் ஏற்கும் வேடத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் பிந்துமாதவி என்பது குறிப்பிடத்தக்கது. ‘அரிமா நம்பி’ புகழ் ஆனந்த் சங்கர் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.



வதந்திகளை மறுக்கும் பிரம்மோற்சவம் படக்குழு


ஸ்ரீமந்துடு படத்தின் சூப்பர் ஹிட் வெற்றியைத் தொடர்ந்து டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு, பிரம்மோற்சவம் எனும் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். அண்மையில் இப்படத்தின் கதை மாற்றக் கோரி படப்பிடிப்பை மகேஷ் பாபு நிறுத்தியதாக தகவல்கள் வெளிவந்தன. இத்தகவலை படக்குழுவினர் மறுத்துள்ளனர். இயக்குனர் ஸ்ரீகாந்த் அடல்லா இயக்கும் பிரம்மோற்சவம் படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் நிறைவு பெற்று விட்டதாகவும் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஹைதரபாத்தில் வரும் நவம்பர் 28 ஆம் தேதி துவங்கவிருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் டிசம்பர் 8 ஆம் தேதி வரை ஐதராபத்தில் தொடரும் படப்பிடிப்பு மறுநாள் அதாவது டிசம்பர் 9 ஆம் தேதி ஊட்டியில் நடைபெறும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் மகேஷ் பாபு இப்படத்தின் கதையில் மாற்றம் செய்ய இயக்குனரிடம் கேட்டதாக வெளியானவை வதந்திகளே என்றும் அவற்றில் உண்மை இல்லை என்றும் படக்குழுவினர் கூறியுள்ளனர். பிவிபி நிறுவனம் தயாரிக்கும் பிரம்மோற்சவம் படத்தில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக சமந்தா,காஜல் அகர்வால், பிரணிதா அகிய மூன்று நாயகிகள் நடிக்கின்றனர்.



ஸ்ரீசாந்தின் புதிய தெலுங்கு காதலி..!

கிரிக்கெட் வீரராக இந்தியா முழுக்க உள்ள ரசிகர்களுக்கு ஸ்ரீசாந்த் நன்கு அறிமுகமானவர்.. அந்தவகையில் மலையாளத்தில் அறிமுகமாகும் அவரது படம், மற்ற மூன்று தென்னிந்திய மொழிகளிலும் ஒரேநேரத்தில் தயாராகவுள்ளது. ஸ்ரீசாந்த்துக்கு ஏற்றவாறு கிரிக்கெட்டை மையப்படுத்தி இந்தப்படத்தின் கதையை பிரகாஷ் என்பவர் எழுத, சனா யோதிரெட்டி என்பவர் இயக்குகிறார். இப்போது இந்தப்படத்தின் கதாநாயகியாக தெலுங்கு நடிகையான ஷான்வி ஸ்ரீவத்சவாவை ஒப்பந்தம் செய்துள்ளார்களாம்.

இவர் ஏற்கனவே தெலுங்கில் 'அட்டா' மற்றும் 'ரௌடி' ஆகிய படங்களில் நடித்தவர்.. அறிமுக நடிகர் தான் என்றாலும் பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துடன் நடிக்க கசக்குமா என்ன..? அதனால் உடனே ஒகே சொல்லிவிட்டாராம். படத்தில் கிரிக்கெட் வீரராகவே நடிக்கும் ஸ்ரீசாந்தை விரட்டி விரட்டி காதலித்து அவரை சிக்கலில் மாட்டிவிடும் கேரக்டராம் இவருக்கு.. இவர் தவிர தனது மகனுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் தாயாகவும், அவனை ஒரு கிரிக்கெட் வீரனாக மாற்றும் கோச்சாகவும் மிகவும் சக்திவாய்ந்த மாடர்ன் அம்மா கேரக்டரில் ஸ்ரீசாந்துக்கு அம்மாவாக நடிக்கிறாராம் ரம்யா கிருஷ்ணன்.




சாவு குத்தாட்டம் போட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்!
அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறியப்படும் நடிகையானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து பண்ணையாரும் பத்மினியும், ரம்மி, திருடன் போலீஸ் போன்ற படங்களில் நடித்தவர், மணிகண்டன் இயக்கத்தில் வெளிவந்த ''காக்க முட்டை'' படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக குப்பத்து அம்மாவாக நடித்து புகழ்பெற்றார். தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இதில் விரைவில் வெளியாக இருக்கும் த்ரில்லர் படம் ''ஹலோ நான் பேய் பேசுறேன்''. சுந்தர்.சி தயாரிப்பில், பாஸ்கர் இயக்கும் இப்படத்தில் ஐஸ்வர்யாவுடன் வைபவ், ஓவியா உள்ளிட்டோரும் முக்கிய ரோலில் நடிக்கின்றனர்.

இந்தப்படத்தில் ஐஸ்வர்யா தான் பேயாக நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தில் இடம்பெரும் ஒரு பாடலுக்கு சாவு குத்தாட்டம் போட்டிருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா. சிவராஜ் குமார் இப்பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். காக்கா முட்டை படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்தவர், இப்படி இந்தப்படத்தில் கெட்ட ஆட்டம் போட்டுள்ளாரே என்று அனைவரும் ஆச்சர்யமாக பார்க்கின்றனர். மேலும் இந்தப்பாடல் ரசிகர்களை ஆட வைக்கும் என்று படக்குழு நம்புகிறது.



கொந்தளிக்கும் ரசிகர்கள்; சிக்கும் சிவகார்த்திகேயன்??

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சூரி, கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ’ரஜினி முருகன்’. இமான் இசையமைத்துள்ள இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பாக லிங்குசாமி தயாரித்துள்ளார்.

தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட கடன் பிரச்சினையல் படம் தாமதமானது. ஒருவழியாக பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு இப்படம் டிச. 4ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்புகள் வந்தன. இப்படத்தின் தமிழக உரிமையை பெற்றிருக்கும் வேந்தர் மூவிஸ் வெளியீட்டிற்கான ஏற்பாடுகளை செய்து வந்தது.

இந்நிலையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஒரு தயாரிப்பு நிறுவனம் பெரும் தொகையை கொடுத்து ‘ரஜினிமுருகன்’ பிரச்சினையை தீர்க்க முன்வந்தது.

ஆனால் லிங்குசாமியின் கடன் பிரச்சினை மகா பெரிய “உத்தமவில்லங்கங்கள்” நிறைந்திருப்பதால் அதுவும் பின்வாங்கிவிட்டதாம். எனவே டிசம்பர் 4ஆம் தேதி ரஜினிமுருகன் வெளியாவது சந்தேகமே என்ற தகவல்கள் தற்போது வந்துள்ளன.

பாக்யராஜ் கண்ணன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்கவிருப்பதாக ஸ்ருதிஹாசனே தெரிவித்துள்ளாராம். பிசி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

சில மாதங்களுக்கு முன்பு ஸ்ருதி பற்றி தவறாகப் பேசியதால் கமல் ரசிகர்களால் சிவகார்த்திகேயன் தாக்கப்பட்டார் எனத் தகவல் பரவியது. சினிமாவில் எது வேணாலும் நடக்கலாம் என்பார்கள். இதுவும் நடந்துவிட்டதே என ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது கோலிவுட்.

ஆம். தற்போது அதே ஸ்ருதியுடன் சிவா ஜோடி சேரவிருக்கிறார் என்று ஸ்ருதியே தெரிவித்துள்ளார்.

ஸ்ருதி மீது கொந்தளிப்பில் இருக்கும் சிவகார்த்திகேயன் ரசிகர்களின் கோபத்தை தணிக்கப்போவது யார் என்பதுதான் கேள்விக்குறி?

இந்த அதிர்ச்சியை, சிவகார்த்திகேயனுக்கு வீ ஆர் வித் யூ ப்ரோன்னு நின்னவங்களெல்லாம் தாங்கிக்கத்தான் வேணும்போல.




விக்டர் ஆக மாறினாரா விக்னேஷ் சிவன்?
சிம்பு, பிரபுதேவாவைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வரும் நயன்தாரா, அவரையே விரைவில் கல்யாணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. அதன் காரணமாகவே விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா பிஎம்டபிள்யூ கார் வாங்கிக் கொடுத்தார் என்று கிசுகிசுக்கள் வந்த வண்ணம் உள்ளது. முன்பெல்லாம் சென்னை வரும்போது நட்சத்திர ஹோட்டலில் தங்கி வந்தவர் இப்போது விக்னேஷ் சிவனின் பெசன்ட்நகரில் வீட்டில்தான் தங்குகிறார் என்கிறார்கள்.

நயன்தாரா விக்னேஷ் சிவன் காதல் கதையில் லேட்டஸ்ட் தகவல்ஸ

விரைவில் விக்னேஷ் சிவனுக்கு கழுத்தை நீட்ட முடிவு செய்துவிட்டார் நயன்தாரா என்பதுதான். அடிப்படையில் கிருஸ்தவப்பெண்ணான நயன்தாரா, பிரபுதேவாவை காதலித்தபோது அவருக்காக இந்து மதத்துக்கு மாறினார். பிரபுதேவா உடனான காதல் முறிந்த பிறகு மீண்டும் தாய் மதத்துக்கே திரும்பிவிட்டார். போப்பை சந்தித்து ஆசி பெறுவதற்காக அண்மையில் ரோம் சென்றபோது விக்னேஷ் சிவனையும் அழைத்துச் சென்றார். நயன்தாரா உடன் ரோம் சென்ற விக்னேஷ் சிவன் அங்கேயே கிருஸ்தவ மதத்துக்கு மாறியதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

நயன்தாராவின் விருப்பத்தின்படி கிருஸ்தவ மதத்துக்கு மாற விக்னேஷ் சிவன், சம்மதம் தெரிவித்ததும் விக்டர் என்ற பெயரையும் நயன்தாரா தேர்வு செய்திருக்கிறார். விக்னேஷ்சிவனை அவரது நண்பர்கள் விக்கி என்றே அழைத்து வருகின்றனர். விக்டர் என்று பெயரை மாற்றிக் கொண்டாலும் கூட அந்தப்பெயரின் சுருக்கமாகவும் விக்கி என்று அழைக்கலாம் என்பதற்காகவே விக்னேஷ் சிவனை விக்டர் ஆக்கி இருக்கிறார் நயன்தாரா.



தனுஷ் பட வசனத்தை படமாக்கும் ஜீ.வீ.பிரகாஷ்
பேஸ்புக் தொடங்கி வாட்ஸ்அப் வரை இன்றைய இளம் தலைமுறையினரிடையே மிக பிரபலமான டயலாக் "கடவுள் இருக்கான் குமாரு..".

தனுஷின் புதுபேட்டை படத்தில் வரும் வசனம். இப்போது இந்த தலைப்பை வைத்து படமே எடுக்க போகிறார்கள்.

SMS புகழ் இயக்குனர் ராஜேஷ், ஜீ.வீ.பிரகாஷ் இணையும் படத்திற்குதான் இந்த தலைப்பை வைத்துள்ளனர்.

இப்போது புரூஸ்லீ படத்தில் நடித்து வரும் ஜீ.வீ அடுத்த வருட தொடக்கத்தில் 'கடவுள் இருக்கான் குமாரு' படத்தில் இணையவுள்ளார்.

இந்த படத்தில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், இதில் சந்தானம் இல்லை என்பதுதான். ராஜேஷ் இதுவரை இயக்கியுள்ள அணைத்து படங்களிலும் சந்தானம் தான் காமெடியனாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies