நயன்தாராவின் திடீர் கோபம்!
சினிமாவில் நடிக்க வந்து சில ஆண்டுகளில் இருந்தே காதல் கிசுகிசுக்களில் சிக்கி வருபவர் நயன்தாரா. அப்படி அவரை சிம்பு,
பிரபுதேவாவுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்ட காதல் செய்திகள் பின்னர் உண்மையாகி விட்டன. ஆனால் அவரது காதலில் என்ன குறைபாடோ தெரியவில்லை உடனுக்குடன் நோ டீலில் முடிந்து விடுகிறது. மேலும், வல்லவன் படத்தில் நடித்தபோது காதலித்த சிம்புவுடன் தற்போது மீண்டும் இது நம்ம ஆளு படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. அதேசமயம், பிரபுதேவாவின் பெயரை யாராவது உச்சரித்தாலே அவரது முகம் வாடிப்போய் விடுகிறது.
இந்த நிலையில், தற்போது மூன்றாவதாக நானும் ரவுடிதான் பட இயக்குனர் விக்னேஷ்சிவனுடன் காதல் கிசுகிசுவில் சிக்கியிருக்கிறார் நயன்தாரா. இது அந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தபோதில் இருந்தே மீடியாக்களில் பரபரப்பாக பரவிக்கொண்டு வருகிறது. அதையடுத்து, அப்படத்தின் பிரஸ்மீட்டில் மேடையில் பேசிய பார்த்திபன் உள்ளிட்ட சிலரும் எரியுற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றிய கதையாய், விக்னேஷ்சிவனை மேடையில் வைத்துக்கொண்டே அவர்களின் காதலை உறுதிப்படுத்தும் வகையில் பேசினார்கள்.
ஆனால், இப்படி அவர்கள் பேசியது நயன்தாராவின காதுக்கு சென்றபோது ரொம்பவே டென்சனாகி விட்டாராம். காரணம், பத்திரிகைகளில் விக்னேஷ்சிவனுடன் தன்னை இணைத்து செய்தி வெளியானபோது அதை பொருட்படுத்தாத நயன்தாராவினால் அவர்கள் மேடை போட்டு பேசியதை தாங்கிக்கொள்ள முடியவில்லையாம். அதனால் சம்பந்தப்பட்ட சிலரை தொடர்பு கொண்டு, என்னைப் பற்றி செய்தி பரப்பி விட்டு, மீடியாக்களுக்கு தீனி போடும் வேலையை இத்தோடு விட்டுவிடுங்கள் என்று எச்சரித்தாராம். இதனால் விளையாட்டாக பேசப்போய் இப்படி நடிகையின் கோபத்துக்கு ஆளாகி விட்டோமே என்று அவர்கள் பீல் பண்ணிக்கொண்டிருக்கிறார்களாம்.
பெயர்க் கவலையில் ஸ்ருதிஹாசன்
ஒரு சில பெயர்களை தமிழில் எழுதுவதற்கும், உச்சரிப்பதற்கும், ஆங்கிலத்தில் எழுதுவதற்கும், உச்சரிப்பதற்கும் வித்தியாசம்
உள்ளது. அதிலும் சில பெயர்களை ஆங்கிலத்தில் எழுதுவதற்கு பலரும் பல எழுத்துக்களைப் பயன்படுத்துவார்கள். அப்படி ஒரு கவலையில் ஸ்ருதிஹாசன் உள்ளார். அவருடைய பெயரை ஆங்கிலத்தில் எழுதும் போது பலரும் பலவிதமாக எழுதுவதைக் குறித்து ஸ்ருதிஹாசனே வெறுப்பாகிவிட்டார் போலிருக்கிறது. 'என் பெயரை அனைவரும் சரியாக எழுதுவார்கள் என நினைக்கிறேன். என் பெயர் ஷ்ருதிஹாசன். ஷிரிதி, ஸ்ட்ருதி, சுருதி, சுரூதி, ஹாசன், ஸ்ருதி ஹுசைன் எல்லாம் கிடையாது,” என கொஞ்சம் வெறுப்புடனே ஒரு பதிவைப் போட்டிருக்கிறார்.
தமிழில் எழுதுபவர்கள் ஸ்ருதிஹாசன், ஷ்ருதிஹாசன் என்றுதான் எழுதுகிறார்கள். ஆனால், ஆங்கிலத்தில் எழுதுபவர்கள்தான் எப்படி எப்படியோ எழுதுகிறார்கள். ஆங்கிலத்தில் தன் பெயரை எழுதுபவர்களைப் பற்றிச் சொல்லிவிட்டார் ஸ்ருதி. தமிழில் ஸ்ருதிஹாசனா இல்லை ஷ்ருதிஹாசனா எப்படி எழுத வேண்டும் என்று அதையும் சொல்லிவிடுங்கள் ஸ்ருதிஹாசன் என்கிற ஷ்ருதிஹாசன்.
எளிமையாக இருக்கவே எனக்கு பிடிக்கும்! தமன்னா
தமன்னாவுக்கு ‘பாகுபலி’ படம் பெயர் வாங்கி கொடுத்தது. அதன் இரண்டாம் பாகத்தில் தற்போது நடித்துக்கொண்டு இருக்கிறார். இந்தி படமொன்றில் நடிக்கவும் வாய்ப்பு வந்துள்ளது. ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனது நடை உடை ஸ்டைல் மற்றும் கவர்ச்சியையும் வெளிப்படுத்தி வருகிறார். தனக்கு பிடித்த விஷயங்கள் பற்றி தமன்னா அளித்த பேட்டி வருமாறு:- சினிமாவில் நான் உயர்ந்தது அதிர்ஷ்டம். எளிமையாக இருக்கவே எனக்கு பிடிக்கும். ஆடைகளையும் அப்படியே தேர்வு செய்கிறேன். சினிமாவில் உடுத்தும் ஆடைகளை, டைரக்டர்களும் ஆடை அலங்கார நிபுணர்களும் முடிவு செய்கிறார்கள். நிஜ வாழ்க்கையில் நடிகைபோல் ஆடைகள் உடுத்த மாட்டேன். எளிமையாகவும் அதே நேரம் ஸ்டைலாகவும் இருக்கும் ஆடைகளை அணிவேன்.

லிப்லாக் முத்தக்காட்சிக்கு ஓகே சொல்லும் ராகுல் ப்ரீத் சிங்!
தடையறத்தாக்க, என்னமோ ஏதோ, புத்தகம் படங்களில் நடித்தவர் ராகுல் ப்ரீத் சிங். இந்த படங்களில் கவர்ச்சி தேவதையாக வலம் வந்தார்
அவர். என்றாலும் படங்கள் எதிர்பார்த்த வெற்றி பெறாததால் பின்னர் அவருக்கு தமிழில் படவாய்ப்புகள் இல்லை. ராசியில்லாத நடிகை என்று ஓரங்கட்டினர். அதனால் ஏற்கனவே சில தெலுங்கு படங்களில் நடித்திருந்த ராகுல் ப்ரீத்சிங், அதையடுத்து ஆந்திராவில் முகாமிட்டு தெலுங்கு படங்களுக்காக தீவிர வேட்டை நடத்தினார்.
விளைவு, அங்கு அரை டஜன் படங்களில் வரிசையாக கமிட்டானார். அப்படி பல படங்கள் கிடைக்க காரணமாக இருந்தது அவர் ஒரு படத்தில் லிப் லாக் முத்தக்காட்சியில் நடித்து ஆந்திராவிலுள்ள இளவட்ட ரசிகர்களை சூடேத்தி விட்டதுதானாம். அதனால் அதையடுத்தும் பல படங்களில் உதட்டு முத்தக்காட்சியில் நடித்த ராகுல் ப்ரீத்சிங், தான் நடித்துள்ள இரண்டு இந்தி படங்களிலும் முத்தக்காட்சியில் நடித்திருக்கிறாராம். அதனால் இப்போது தெலுங்கு, இந்தியில் முத்தக்காட்சியில் துணிச்சலாக நடிக்கக்கூடிய நடிகை என்பதற்காகவே அவரை புக் பண்ணி வருகிறார்களாம்.
இந்நிலையில், தமிழைப் பொறுத்தவரை, ஆரம்பத்தில் அடக்கிவாசித்த ராகுல்ப்ரீத்சிங், சமீபத்தில் சென்னை வந்து சில கமர்சியல் டைரக்டர்களுடன் மீட்டிங் நடத்தியுள்ளார். அப்போது, தெலுங்கு படங்களுக்கு துளியும் குறையாக கிளாமராக நடிக்க தயாராக இருக்கிறேன் என்று சொன்னவர், கதைக்கு அவசியப்பட்டால் உதட்டு முத்தக்காட்சியில் நடிக்கவும் நான் தயார். அந்த விசயத்தில் எந்த கண்டிசனும் என்னிடம் இல்லை என பேசியுள்ளாராம். அதனால் விரைவில் சில முன்னணி ஹீரோக்களின் படங்களில் ராகுல் ப்ரீத் சிங் நடிப்பார் என்று தெரிகிறது.