விதவிதமான வேடங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டும் திரிஷா!
ஒரே பாணியில் நடித்து அலுத்துப் போனதால், விதவிதமான வேடங்களில் நடிப்பதில் திரிஷா ஆர்வம் காட்டி வருகிறார். ‘தூங்காவனம்’ படத்தில் திரிஷா அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் நடித்தார். கமலுடன் திரிஷா மோதும் சண்டை காட்சி அவருக்கு வித்தியாசமான அனுபவமாக அமைந்தது.இதில் கமல் திரிஷாவின் கையை முறுக்கி பின்புறமாக மடக்கி முறிப்பது போல தெரியும். திரிஷாவும் கடுமையாக வலிப்பது போன்று முகபாவம் காட்டுவார். சண்டை முடிந்ததும் திரிஷாவின் உடலில் பல காயங்கள் ஏற்பட்டது போன்ற காட்டுவார்கள். முறிந்த கைக்கு கட்டுப்போட்டுக் கொண்டு வருவார்.

இந்த காட்சியில் நடித்தது குறித்து திரிஷா கூறும்போது, ‘முதலில் சண்டைக் காட்சியில் நடிக்க வேண்டும் என்றதும் மிகவும் பயந்தேன். ஆனால் கமல் சார் எனக்கு தைரியம் கொடுத்தார். அந்த சண்டை காட்சி இரண்டே நாளில் படமாக்கப்பட்டுள்ளது.நான் முதன் முதலில் நடித்த சண்டைகாட்சியில் எனக்கு சிறிய காயம் கூட ஏற்படவில்லை. அந்த அளவுக்கு கமல் சார் அந்த காட்சியில் நடித்தார். இந்த படத்தில் நடித்த பிறகு தொடர்ந்து சண்டை காட்சிகளில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்து இருக்கிறது’ என்றார்.

முதல் காதல் எப்போதும் மனதில் நிற்கும். நயன்தாரா
நயன்தாரா, பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். அவரது பத்து வருடத்துக்கு மேலான சினிமா வாழ்க்கையில் நிறைய நடிகர்களுடன் இணைத்து பேசப்பட்டார்.இரண்டு நடிகர்களை வெளிப்படையாக காதலித்து தோல்வியை சந்தித்தார். இப்போது டைரக்டர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இந்த நிலையில் தனது முதல் காதல் அனுபவம் பற்றி நயன்தாரா மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது:- ‘ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர்களின் முதல் காதல் எப்போதும் மனதில் நிற்கும். எந்த வயதிலும் அந்த காதல் வரலாம். வாழ்நாள் முழுவதும் அந்த காதலை மறக்கமாட்டார்கள். எனக்கும் சிறு வயதில் அப்படி ஒரு காதல் அனுபவம் ஏற்பட்டது. அப்போது நான் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன். அந்த பள்ளிக்கூடம் ஆண்களும், பெண்களும் சேர்ந்து படிக்கக் கூடியது.

நான் பையன்கள், பெண்கள் எல்லோரிடமும் சகஜமாக பழகுவேன். இதனால் எனக்கு நிறைய நண்பர்கள் இருந்தனர். ஒரு பையனைத் தவிர அனைவரும் என்னுடன் நட்போடு பழகினார்கள். நான் வகுப்புக்கு செல்லும்போதெல்லாம் எனது இருக்கை முன் உள்ள மேஜையில் ஒரு காதல் கடிதமும், ரோஜாப்பூவும் இருக்கும். முதல் நாள் அதை பார்த்து பதற்றமாக இருந்தது. தோழியிடம் சொன்னேன். பெரிதுபடுத்தாதே விட்டுவிடு என்றாள். அதோடு நிற்கவில்லை. மறுநாளும் அதேபோல் ரோஜாவும் காதல் கடிதமும் மேஜையில் இருந்தது. ஒவ்வொரு நாளும் இது தொடர்ந்தது. இதனால் பயந்து போனேன். வீட்டில் எனது அம்மா, அப்பாவிடம் இதனை சொன்னேன். அவர்கள் பள்ளிக்கு வந்து முதல்வரிடம் புகார் செய்தார்கள். அவர் விசாரணை நடத்தி ஏழாம் வகுப்பில் படிக்கும் மாணவன் ஒருவன்தான் தினமும் காதல் கடிதமும் ரோஜாப்பூவும் வைத்தவன் என்று கண்டுபிடித்தார். அவனை கடுமையாக திட்டி கண்டித்தார். அதன்பிறகு அவன் என் வழிக்கே வரவில்லை. என்னைப் பார்க்கும் போதெல்லாம் முகத்தை திருப்பிக்கொண்டு போய்விடுவான். அந்த வயதில் அவனுக்கு காதல் பற்றி என்ன தெரியும். அதை இப்போது நினைத்தாலும் எனக்கு வியப்பாக இருக்கிறது. அதை என்னால் மறக்கவே முடியாது’’.இவ்வாறு நயன்தாரா கூறினார்.

பயங்கரமான பேய் படம் ஒன்றில் நடிக்கும் நடிகர் பரத்!
தமிழ் சினிமாவில் தற்போது பேய் சீசன் களைகட்டுவது மட்டுமல்லாமல், தயாரிப்பாளர்களின் கல்லாக்களையும் நிரப்பி வருகிறது. இதனால், முன்னணி நடிகர்கள் பலரும் பேய் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.லாரன்ஸ், சூர்யா, ஸ்ரீகாந்த், நயன்தாரா என பலரும் தற்போது பேய் படங்களில் நடித்து மேலும் பிரபலமாகியுள்ளனர். இவர்களைத் தொடர்ந்து நடிகர் பரத்தும் பயங்கரமான பேய் படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இப்படத்தை ஸ்ரீகாந்த்-ராய்லட்சுமி நடிப்பில் உருவாகி வரும் ‘சவுகார் பேட்டை’ படத்தை இயக்கியுள்ள வடிவுடையான் இயக்குகிறார். படத்திற்கு ‘பொட்டு’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தில் பரத்துக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஒருவரை நடிக்க வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.இப்படத்தின் மூலம் நடிகை ஜெயசித்ராவின் மகன் அம்ரீஷ் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். சரவணன், கருணாஸ், சுமன், சிங்கம் புலி, ஊர்வசி ஆகியோரும் நடிக்கும் இப்படத்தை ஷாலோம் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஜான் மேக்ஸ் மற்றும் ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.இப்படத்தின் படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்கவிருக்கிறார்கள். மெடிக்கல் காலேஜ் பின்னணியில் ஒரு பேய்க் கதையை திரைக்கதையாக அமைத்து இயக்கவுள்ளார் வடிவுடையான்.

நடிகர் மம்முட்டியுடன் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா!
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நயன்தாரா. இந்த வருடத்தில் மட்டும் இவருடைய நடிப்பில் 5 படங்கள் வெளிவந்துள்ளது. 5 படங்களும் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 10 வருடங்களாக சினிமாவில் நிலைத்து நிற்கும் நயன்தாரா, இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தனது பிறந்தநாளை, நயன்தாரா மம்முட்டியுடன் மலையாளத்தில் நடித்து வரும் ‘புதிய நியாமம்’ படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். மம்முட்டி உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் நயன்தாராவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறினர். ‘புதிய நியாமம்’ படத்தை ஏ.கே.சஜன் இயக்கி வருகிறார். இந்த வருடத்தில் இந்த படம் வெளியாகும் என தெரிகிறது. இதுமட்டுமில்லாமல், நயன்தாரா தமிழில் நடித்த ‘இது நம்ம ஆளு’, ‘திருநாள்’, ‘கஸ்மோரா’ ஆகிய படங்களும் ரீலீசுக்கு தயாராகி வருகிறது. அடுத்தடுத்து இப்படங்கள் வெளியாகவுள்ளன.

சிம்ரனை அடிக்க தயங்கிய இனியா!
சிம்ரன், இனியா, நிகிஷா ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கரையோரம்’. இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் இனியா, நிகிஷா, படத்தின் இயக்குனர் ஜே.கே.எஸ் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். இப்படம் குறித்து இயக்குனர் கூறும்போது, ‘கரையோரம்’ படம் பேய் படம் என்று கூறிவருகிறார்கள். ஆனால், இது பேய் படம் அல்ல. இது ஒரு க்ரைம் திரில்லர் படம். படத்தில் பத்து நிமிடத்திற்கு ஒரு முறை திரில் இருக்கும். தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது. வருகிற 27ம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்’ என்றார்.இனியா கூறும்போது, ‘இந்த படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறேன். கிளைமாக்ஸில் என்னுடைய கதாபாத்திரத்தில் திருப்பம் அமைத்திருக்கிறார்கள். சீனியர் நடிகர் சிம்ரனுடன் நடித்தது சிறந்த அனுபவமாக இருந்தது. கிளைமாக்ஸில் எனக்கும் சிம்ரனுக்கும் சண்டைக் காட்சி இருக்கிறது. இந்த சண்டைக் காட்சியில் சிம்ரனை அடிக்க மிகவும் தயங்கினேன். ஆனால், சிம்ரன் என் தயக்கத்தை போக்கி நடிக்க வைத்தார். கேமராவிற்குப் பின் சிம்ரன் வேறுமாதிரியாகவும், கேமராவிற்கு முன் அனுபவம் வாய்ந்த நடிகையாகவும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.‘கரையோரம்’ படம் மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது. மூன்று மாநிலத்திலும் எனக்கு நல்ல பெயர் சொல்லும் படமாக இப்படம் அமையும். இப்படத்தை தவிர மலையாளப் படத்திலும் நடித்து வருகிறேன்’ என்றார்.