சிறிலங்காவில் தரையிறக்கும் ஆபாச புயல்!
இந்தியாவின் புகழ்பெற்ற ஆபாசபட நடிகையான சன்னி லியோன் சிறிலங்கா செல்லவுள்ளார்.
சிறிலங்காவிலுள்ள கெசினோ வலையமைப்பினரின் அழைப்பின் பேரில், சன்னி லியோன் அங்கு செல்லவுள்ளார்.
கரன்ஜித் கௌர் வொஹ்ரா எனும் இயற்பெயருடைய இவர், சன்னி லியோன் எனும் பெயருடன் கவர்ச்சி நடிகையாக வலம் வருகிறார்.
இந்திய பஞ்சாபி பெற்றோர்களுக்கு பிறந்த இவர், கனடாவின் ஒன்டாரியோவில் பிறந்து அங்கேயே வளர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனுஷ்காவை தவறாக வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய காமெடி நடிகர்
அடிக்கடி ஹீரோயின்களை இரட்டை அர்த்தத்தில் வர்ணித்து சிக்கலில் சிக்குவது தெலுங்கு காமெடி நடிகர் அலிக்கு புதிதல்ல. இப்படித்தான் சுமாவை ஒரு முறை வர்ணித்ததால், அலியை சுமா கண்டித்ததாகச் சொல்லப்பட்டது. S/Oசத்திய மூர்த்தி படத்தின் வெற்றிக்கொண்டாட்டத்தில் சமந்தாவை ஏதோ சொல்ல அவர் நேரடியாகவே கவுன்ட்டர் கொடுத்து எச்சரித்தார்.
இப்படி அடிக்கடி நாயகிகள் மட்டுமல்ல ஹீரோக்கள், சக நடிகர்கள் என பொது இடத்தில் ஏதேனும் ரெட்டை அர்த்தங்களில் கருத்துகளைச் சொல்லி மாட்டிக்கொள்வது அலியின் வேலை. இப்போது இவர் வர்ணிப்பில் சிக்கிய நடிகை அனுஷ்கா.
இஞ்சி இடுப்பழகி படத்தின் தெலுங்கு வெர்ஷனான சைஸ் ஸீரோ படத்தின் இசை வெளியீட்டில் தான் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
அதில் அலி பேசுகையில் ‘ பில்லா’ (பிரபாஸ் நடிப்பில் தெலுங்கில் வெளியான பில்லா) படத்திலிருந்தே நான் அனுஷ்காவின் கால்களுக்கு ரசிகன் எனக் கூற பலரும் சிரித்துவிட்டனர். எனினும் சம்மந்தப்பட்ட அனுஷ்காவிற்கும், மற்ற நடிகர்களுக்கு இது அதிர்ச்சியாக அமைந்துள்ளது. அலி எப்போதுதான் இப்படி மற்ற நடிகர் நடிகையரைப் பற்றி ரெட்டை அர்த்தத்தில் கருத்துகள் கூறுவதை விடப்போகிறாரோ என பலரும் புலம்பி வருகின்றனர்.
அர்ச்சனா கவியின் நிச்சயதார்த்தம் இனிதே நடந்தது..!
இப்போது மற்ற நடிகைகளைப்போல மலையாள நடிகை அர்ச்சனா கவிக்கும் திருமண ஆசை துளிர்விட்டு, இன்று திருமண நிச்சயதார்த்தம் வரை வந்துள்ளது.. வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான 'அரவான்' படத்தில் தன்சிகா தவிர இன்னொரு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடித்தாரே அவர்தான் இந்த அர்ச்சனா கவி. மாப்பிள்ளை வேறு யாருமில்லை.. மேடைக்கச்சேரிகள் நடத்துபவரும், சின்னத்திரையில் ஸ்டேன்ட் அப் காமெடியனுமான அபீஸ் மேத்யூ என்பவரைத்தான் இவர் திருமணம் செய்துகொள்ள போகிறார்...
இருவரும் சிறுவயது முதற்கொண்டே நண்பர்கள் என்பதால், இரண்டு வீடுகளிலும் பச்சைக்கொடி காட்டிவிட்டனர். ஆரம்பத்தில் அர்ச்சனா கவி காதலை ஒத்துக்கொள்ளவில்லையாம்.. பின்னர் போகப்போக அபீஸ் மேத்யூவின் விடாமுயற்சி கண்டு படக்கென காதலில் விழுந்துவிட்டாராம். அபீஸ் மேத்யூ ஒரு இசையமைப்பாளரும் கூட. ஆனாலும் திருமணம் நடக்க இருப்பது அடுத்த வருடம் தானாம். திரையுலகில் தங்களது மார்க்கெட் டல்லாவதை உணர்ந்ததும் அசின், இப்போது அர்ச்சனா கவி என தொடர்ந்து மலையாள நடிகைகள் தங்களது திருமணத்திற்கு தயாராவது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் படத்தின் பர்ஸ்ட் காப்பிக்கு இவ்வளவு தொகையா?
வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘தங்கமகன்’ படம் டிசம்பர் 18ஆம் திரைக்கு வருகிறது. மேலும் பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படமும் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இது அடுத்த வருடம் வெளியாகவுள்ளது.
இதனைத் தொடர்ந்து ‘எதிர்நீச்ச’ல் இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கும் புதிய படத்தில் நடிக்கத் தயாராகிவிட்டார் தனுஷ். இதில் தனுஷின் தந்தையாக நடிகர் விஜய்யின் தந்தை எஸ். ஏ. சந்திரசேகர் நடிக்கிறார்.
இதில் தனுஷ் இரட்டை வேடமேற்பதால் ஒருவருக்கு த்ரிஷாவும், மற்றொருவருக்கு அஜித்தின் மச்சினி ஷாம்லியும் ஜோடியாக நடிக்கின்றனர். (ஒரு கேரக்டர் இருந்தாலே இரண்டு ஜோடி இருக்கும்.. அப்புறம் இது இல்லாமலா?) மேலும் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரான நடிகர் சதீஷும் இப்படத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் காப்பிக்கு ரூ. 35 கோடி மதிப்பில் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனர் மதனுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாம். இது தனுஷ் படங்களின் வரலாற்றிலேயே பெரும் தொகை என கூறப்படுகிறது.
போயே போச்சுஸ. மெட்ராஸ் நாயகியின் ‘மிஸ் இந்தியா’ கனவு
கேத்ரீன் தெரசா என்ற பெயரைக் கேட்டால் என்னவோ அவர் மும்பை அல்லது டெல்லி என வட மாநிலத்திருந்து வந்தவர் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.
கார்த்தி ஜோடியாக மெட்ராஸ் படத்தில் அறிமுகமான இந்த குல்கந்து வந்தது அண்டை மாநிலமான கேரளாவில் இருந்துதான். கேரளாவில் உள்ள கோட்டயத்தில் தான் நான் பிறந்தேன். ஆனால் துபாயில் வளர்ந்தேன். என்னுடைய 14 வயதில் பேஷன் டிசைனிங் நண்பர்களுக்கு உதவி செய்வதற்காக மாடலாக போஸ் கொடுத்தேன்.
அது அப்படியே மாடலிங் உலகத்துக்குள் என்னை அழைத்து சென்று விட்டது. நிறைய விளம்பரப் படங்களில் நடித்தேன். அப்படியே சினிமாவுக்குள்ளும் நுழைந்து இப்போது மலையாளம், கன்னடம், தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து, நான்கு வருடத்திற்குள் 12 படங்களை முடித்து விட்டேன். என்று சொல்லும் கேத்ரீனாவுக்கு ஒரு ஒரு ஆசை மட்டும் நிறைவேறாமலே போய் விட்டதாம்.
‘என்னுடைய பகல்.. இரவு.. கனவுகள் எல்லாமே ‘மிஸ் இந்தியா’ டைட்டிலை வெல்வதாகத்தான் இருந்தது. ஆனால், அழகி போட்டியில் கலந்து கொள்வதற்கு முன்பாகவே நடிகையாகி விட்டேன். ‘மிஸ் இந்தியா’ பட்டத்துடன் ராம்ப் வாக் செய்யாதது என மனதுக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது. ஒன்றை இழந்தால் தானே இன்னொன்றை பெற முடியும் என்பது போல நான் மிஸ் இந்தியா அழகியாகா விட்டாலும் நடிகையானதில் சந்தோஷத்தோடு தான் இருக்கிறேன் என்கிறார்.
ஆசைப்பட்டது கிடைக்கலேன்னா கிடைச்சதை வைத்து சந்தோஷப்பட்டுக்க வேண்டியது தான்!