கத்தி ரீமேக்கில் நடிக்கக்கூடாது?: சிரஞ்சீவிக்கு கடிதம் எழுதிய கிராம மக்கள்
விஜய்-சமந்தா நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளிவந்த படம் ‘கத்தி’. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். லைக்கா நிறுவனம் படத்தை வெளியிட்டது. இப்படம் குறும்பட இயக்குனர் ராஜசேகர் இயக்கிய ‘தாகபூமி’ என்ற குறும்படத்தின் கதை என்று கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, படம் வெளிவருவதற்கு பெரிய இடைஞ்சலும் இருந்தது.
தற்போது, இந்த பிரச்சினை மறுபடியும் கிளம்பியுள்ளது. அதாவது, ‘கத்தி’ படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதன் ரீமேக்கில் நடிகர் சிரஞ்சீவி நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், தஞ்சாவூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள திருக்காட்டுப்பள்ளி, இளங்காடு, விண்ணமங்கலம், கள்ள பெரம்பூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் கையெழுத்திட்டு சிரஞ்சீவிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும், அதில், அவர் ‘கத்தி’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கக்கூடாது என கோரியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு காரணம், மேலே கூறியுள்ளபடி ராஜசேகர் இயக்கிய ‘தாகபூமி’ என்ற குறும்படத்தின் கதைதான் ‘கத்தி’. எனவே, தாங்கள் அதில் நடிக்கக்கூடாது என்று கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
கத்தி ரீமேக்கில் நடிக்கக்கூடாது?: சிரஞ்சீவிக்கு கடிதம் எழுதிய கிராம மக்கள்
ஒரு வாரத்தில் 57 கோடி வசூலித்த அனுஷ்காவின் ருத்ரமாதேவி.
அனுஷ்கா, அல்லு அர்ஜுன், ராணா நடித்து ருத்ரமாதேவி படம் தெலுங்கில் வெற்றி நடை போடுகிறது.இப்படத்தின் தெலுங்குப் பதிப்பு கடந்த 9 ஆம் திகதி வெளியாகியது. ஒரு வார காலத்தில் இப்படம் 57 கோடி ரூபாவை வசூலித்துள்ளது. இப்படத்தின் தமிழ் பதிப்பு கடந்த 16 வெள்ளிக்கிழமை வெளியாகியமை வெளியாகி தமிழ் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.ஆகையால் இந்த படம் 100 கோடி கிளப்பில் இணையும் என எதிர்பார்க் கப்படுகிறது.

நம்பர் 1 இடத்தில் தல அஜித் தான்.
அடுத்தடுத்து வெளியான தனது இரண்டு ஆல்பங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்த உற்சாகத்திலிருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத்ரவிச்சந்திரன். தனுஷ் தயாரிப்பில், விஜய்சேதுபதி – நயன்தாரா இணைந்து நடித்திருக்கும் ‘நானும் ரௌடிதான்’ படத்தின் பாடல்கள் இரண்டு வாரத்திற்கு முன்பு ‘சிங்கிள் ட்ராக்’காக ஒவ்வொரு பாடலாக வெளியிடப்பட்டது.அதனைத் தொடர்ந்து அஜித்துடன் முதல்முறையாக அனிருத் இணைந்திருக்கும் ‘வேதாளம்’ படத்தின் பாடல்கள் கடந்த வாரம் ரிலீஸ் செய்யப்பட்டன. யூத்களுக்கு மிகவும் பிடித்த ஆல்பமாக ‘நானும் ரௌடிதான்’ பாடல்களும், தல ரசிகர்களை ஆட்டம் போட வைத்திருக்கும் ஆல்பமாக ‘வேதாளம்’ படத்தின் பாடல்களும் தற்போது பெரும்பாலான எஃப்.எம்.களிலும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

அதேபோல் ஐ ட்யூன்ஸில் தரவிறக்கம் செய்யப்படும் ‘டாப் 10’ தமிழ் ஆல்பங்களில் அஜித்தின் வேதாளம் முதலிடத்திலும், விஜய்சேதுபதியின் ‘நானும் ரௌடிதான்’ இரண்டாவது இடத்தையும் பிடித்திருக்கிறது. தனித்தனி பாடல்களைப் பொறுத்தவரை வேதாளம் படத்தின் ‘ஆலுமா டோலுமாஸ’ முதலிடத்திலும், நானும் ரௌடிதான் படத்தின் ‘நீயும் நானும்ஸ’ பாடல் 2வது இடத்திலும் உள்ளது. டாப் 10 பாடல்கள் பட்டியலில் அனிருத்தின் இசையமைப்பில் உருவாகியிருக்கும் வேதாளம், நானும் ரௌடிதான் படப் பாடல்களே 9 இடங்களை கைப்பற்றியிருக்கின்றன.இந்திய அளவில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் உருவாகியிருக்கும் ‘தமாஷா’ ஆல்பம் முதலிடத்திலும், வேதாளம், நானும் ரௌடிதான் 2வது மற்றும் 3வது இடங்களிலும் இடம்பிடித்திருக்கின்றன.
ஸ்ருதிஹாசனின் கனவு நனவானது!
சினிமாவில் நடிக்க வரும் எல்லோருக்குமே ஏதாவது ஒரு கனவு இருக்கும். அதாவது, இந்த மாதிரி ஒரு கேரக்டரில் நடிக்க
வேண்டும். இந்த டைரக்டரின் படத்தில் நடிக்க வேண்டும். இந்த நடிகருடன் டூயட் பாட வேண்டும் என்று ஏதாவது ஒரு கனவில் இருப்பார்கள். அது சிலருக்கு கைகூடும். ஆனால் பலருக்கு நிறைவேறாது. அந்த வகையில், ஸ்ருதிஹாசனுக்கு சினிமாவில் நடிகையானதில் இருந்தே ஒரு கனவு மனதளவில் இருந்திருக்கிறது. அது அஜீத்துடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்பதாம்.
ஆனால் அதற்காக அவர் தனிப்பட்ட முறையில் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதேசமயம், தமிழ் சினிமாவில் நாம் முன்னணி நடிகையாக வளர்ந்தால்தான் அஜீத் போன்ற நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்றுதான், இந்தி, தெலுங்கு படங்களின் எண்ணிக்கையை குறைத்து விட்டு தமிழுக்கு கூடுதல் கவனம் செலுத்தியிருக்கிறார். அப்படி பூஜை படத்தில் நடித்துவந்தபோது விஜய்யுடன் புலி பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
அதன்பிறகுதான் இனிமேல் அஜீத் படத்திற்கான முயற்சியை எடுக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தாராம் ஸ்ருதிஹாசன். ஆனால் அந்த நேரம் பார்த்து பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக டைரக்டர் சிவாவே அவரை தொடர்பு கொண்டு வேதாளம் படத்திற்கு புக் பண்ணியிருக்கிறார். இதனால் மிகப்பெரிய சந்தோசமடைந்திருக்கிறார் ஸ்ருதி. அதையடுத்து வேதாளம் படத்தில இதுவரையில்லாத அளவுக்கு உற்சாகமாக நடித்து முடித்திருப்பவர், அஜீத்துடன் நடிக்க வேண்டும் என்ற எனது கனவு நனவாகி விட்டது. அந்த வகையில், வேதாளம் எனக்கு ரொம்ப ஸ்பெசல் படம். இந்த படத்தில் அஜீத்துடன் பணியாற்றிய அனுபவங்களை ஒருபோதும் மறக்க முடியாது என்று வேதாளம் யூனிட் நபர்களிடம் கூறிவிட்டு விடைபெற்றிருக்கிறார் ஸ்ருதி
ஆக்சனுக்கு தயாராகும் சமந்தா!
விஜய்யுடன் நடித்த கத்தி படத்திற்கு பிறகு ஒரே நேரத்தில் பத்து எண்றதுக்குள்ள, தங்கமகன், 24 ஆகிய படங்களுக்கு கால்சீட்
கொடுத்து நடித்து வந்தார் சமந்தா. இதில் பத்து எண்றதுக்குள்ள படம் தற்போது வெளியாகி விட்ட நிலையில், அவர் நடித்து வந்த தங்க மகன், 24 ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது டப்பிங் பணிகள் நடக்கிறது. இதற்கிடையே அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திலும் நடித்து வந்தார். ஆனால் இப்போது அப்படத்தில் சமந்தா சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி முடித்து விட்டார் அட்லி.
இந்நிலையில், தங்க மகன், 24 ஆகிய படங்களின் டப்பிங்கில் இறங்கியுள்ள சமந்தா, தமிழ், தெலுங்கில் தயாராகும் பிரமோற்சவம் மற்றும் ஒரு தெலுங்கு படத்தில் அடுத்தபடியாக நடிக்க உள்ளார். இந்த படங்களில் நடிக்கும்போது தனுஷின் வடசென்னையிலும் நடிப்பார் என்று தெரிகிறது. இதற்கிடையே சில தெலுங்கு, தமிழ்ப்பட டைரக்டர்கள் சமந்தாவிடம் கதை சொல்ல டயம் கேட்டு அவரை நச்சரித்துக்கொண்டிருக்கிறார்களாம்
ஆக, ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் சமந்தா, இன்னொரு பக்கம் கதை கேட்பதையும் முடுக்கி விட்டிருப்பதால் ரொம்ப பிசியாக இருக்கிறார். மேலும், பத்து எண்றதுக்குள்ள படத்தில் டபுள் ரோலில் நடித்துள்ள சமந்தா, ஒரு காட்சியில் விக்ரமுடன் ஆக்சன் காட்சியிலும் நடித்திருப்பதைத் தொடர்ந்து, அடுத்தபடியாக இன்னும் அதிரடியான ஆக்சன் கதைகளில் நடிக்கவும் தான் தயாராக இருப்பதாக கதை சொல்ல வரும் டைரக்டர்களிடம் கூறி வருகிறார்