சேலை கட்டியே கோடிக்கணக்காக உழைக்கும் நடிகை!
கோலிவுட்டில் சேலை உடுத்தும் நடிகைகள் மிக குறைவு. சில வருடங்களுக்கு முன் முன்னணி ஹீரோயினாக இருந்த சிம்ரன் பெரும்பாலும் சேலை உடுத்துவதையே வழக்கமாக கொண்டிருந்தார். பொது நிகழ்ச்சிகளுக்கு வரும்போது தவறாமல் சேலை உடுத்துவார். அதன்பிறகு வந்த நடிகைகள் மாடர்ன் உடையிலேயே தோற்றம் அளிக்கின்றனர். கோலிவுட்டிலேயே இப்படியென்றால் பாலிவுட்டில் கேட்க வேண்டுமா? ஆனாலும் எப்போதாவது ஒருமுறை தீபிகா படுகோன் சேலை உடுத்தி வருவதை பேஷனாக வைத்திருக்கிறார். மற்றபடி மாடர்ன் டிரஸ்தான் பிரதானமாக அணிகிறார். சேலை உடுத்தும் நடிகை என்றால் வித்யாபாலன் மட்டுமே நினைவுக்கு வருவார். பாரம்பரியம், கலாச்சாரம் என்று பார்த்து உடை கலாச்சாரத்தை மறக்காமல் இருக்கும் வித்யாவுக்கு தற்போது பெரிய சம்பாத்தியத்தை தேடித் தந்திருக்கிறது. சேலை தயாரிப்பு நிறுவனம் ஒன்று தங்கள் பிராண்ட் சேலைகளுக்கு மாடலாக இருக்க வித்யாவிடம் பேசி வருகிறது. ஒரு வருடத்துக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பொறுப்பை ஏற்றுக்கொண்டால் அதற்கு சம்பளமாக ரூ.13 கோடி தர தயாராக இருக்கிறதாம்.

ஜெயம்ரவி கண்ணீருக்கு கிடைத்தப் பரிசு தனிஒருவன்.
படம் வெளியாகி முதல் மூன்று நாட்களே அப்படத்தின் வசூலை நிர்ணயிக்கும் என்று சொல்வார்கள். அதன் பிறகு ஒரு வாரம் படம் திரையரங்குகளில் ஓடினாலே வெற்றிதான். ஆனால் தனிஒருவருவன் படம் 50வது நாளாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.மோகன்ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்திருக்கும் படமே தனிஒருவன். இப்படம் இன்றோடு 50வது நாளை எட்டியிருக்கிறது. அதுவும் தமிழகத்தில் 93 தியேட்டர்களில் இன்றும் திரையிடப்படுகிறது.

இயக்குநர் மோகன்ராஜா, தனது ட்விட்டரில், “ என்னுடைய டீமுக்கும், படத்தில் நடித்த என்னுடைய இரண்டு சூப்பர் ஸ்டார்களுக்கும், ரசிகர்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஓர் படம் வெற்றிபெற நல்லக் கதை தான் முக்கியம்” என்று தெரிவித்துள்ளார்.தனிஒருவன் நன்றி விழாவில் மோகன் ராஜாவும், ஜெயம்ரவியும் மேடையிலேயே அழுதனர். அப்போதே படத்திற்கான அவரின் உண்மையான உழைத்து தெரிந்தது. அந்த உழைப்பிற்கான பரிசு தான் தனிஒருவன் வசூல் என்கிறார்கள் ரசிககோடிகள்! நல்ல கதை என்றுமே பாராட்டும், வெற்றியும் பெறும் என்பதற்கு தனிஒருவன் ஓர் சான்று!
தனுஷ் தயாரித்துள்ள 'நானும் ரவுடிதான்' படத்தில் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடித்து இருக்கிறார். இவருக்கு நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சி நடந்தது.
இயக்குனர் விக்னேஷ் சிவன் பலமுறை இந்த கதையை என்னிடம் கூறினார். அதில் மாற்றங்கள் செய்து என்னை கதாநாயகனாக நடிக்க வைத்து விட்டார். நயன்தாராவுடன் இந்த படத்தில் ஜோடியாக நடித்து இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படத்தை தயாரித்துள்ள தனுஷ் சார் எனக்கு வாய்ப்பு அளித்ததற்கு நன்றி. அனிருத்தின் இசை சிறப்பாக உள்ளது. விக்னேஷ் சிவன் என்னுடைய நெருங்கிய நண்பர்.
நான் முன்பு புதுப்பேட்டையில் இருந்தபோது தனுஷ்சார், செல்வாசார் ஆகியோருடன் கிரிக்கெட் ஆடி இருக்கிறேன் என்றார். நிகழ்ச்சியில் நடிகர்கள் பார்த்திபன், மன்சூர்அலிகான், ஆர்.கே.பாலாஜி ஆகியோர் பேசும்போது, "நானும் ரவுடிதான்" படம் சிறப்பாக வந்துள்ளது.
அனைவரும் தியேட்டரில் சென்று பார்க்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். இசை அமைப்பாளர் அனிருத், "இந்த படத்துக்கு இயக்குனர் விக்னேஷ் சிவனின் பாடல் வரிகள் மிகப்பெரிய பலம். நாங்கள் அனைவரும் முழு உழைப்பையும் இந்த படத்துக்காக கொடுத்திருக்கிறோம்" என்றார்.
இயக்குனர் விக்னேஷ் சிவன், "அனைவரும் ரசிக்கும் வகையில் 'நானும் ரவுடிதான்' படம் உருவாகி இருக்கிறது. ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் நன்றி" என்று கூறினார்.
இன்றைய நாட்களில் குழந்தை வளர்ப்பு பற்றி பெற்றோருக்கு தெரியவில்லை: சூர்யா
'பசங்க–2' படத்தில் சூர்யா முக்கிய வேடத்தில் நடித்து தயாரித்துள்ள இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கி உள்ளார். அமலாபால், பிந்துமாதவி, வித்யா, குழந்தை நட்சத்திரங்கள் கவின், நயனா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
இதில் சூர்யா பேசும்போது,"பசங்க–2" படத்தை தயாரித்து நடித்து இருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. இதில் நடித்துள்ள குழந்தைகளும் மற்றவர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். பலமுறை பாண்டிராஜ் சொன்ன பிறகு படமாக்க முடிவு செய்தோம். இது குழந்தைகளை வைத்து எடுத்துள்ள அருமையான படம். இந்த காலத்தில் குழந்தைகளை வளர்ப்பது எப்படி என்பது பெற்றோருக்கு தெரியாத விஷயமாக இருக்கிறது. இந்த படம் அதுபற்றி தெளிவாக சொல்கிறது.
இந்த படத்தில் நான் மிகவும் ஒன்றி நடித்தேன். குறிப்பிட்ட நாட்களை விட அதிக நாள் கால்ஷீட் கொடுத்தேன். இந்த படத்தை சிறப்பாக எடுத்துக்கொடுத்த பாண்டிராஜுக்கும் உழைத்து அனைவருக்கும் நன்றி’ என்றார்.
கார்த்தி பேசுகையில், 'குழந்தைகளை மையமாக வைத்து உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெறும்' என்று கூறினார்.
அமலாபால் பேசும்போது, 'இந்த படத்தில் என்னை நடிக்கும்படி பாண்டிராஜ் கேட்டபோது, என் கணவர் இயக்குனர் விஜய் அதை ஏற்க யோசித்தார். கதை எனக்கு பிடித்திருந்தது. குழந்தைகள் படம் என்பதால் நடித்தேன்' என்றார்.
இயக்குனர் பாண்டிராஜ் பேசும்போது, "இவ்வளவு நாள் நான் இயக்கிய படங்கள் ஆவின்பால் என்றால் இந்த படம் தாய் பால். நான் இதில் சொல்லும் நல்ல விஷயங்கள் மக்களிடம் போய் சேர வேண்டும் என்பதற்காகவே சூர்யாவை இதில் நடிக்கும்படி கேட்டுக்கொண்டேன். அவரும் அதை நிறைவேற்றி இருக்கிறார்" என்று கூறினார்.