பேய் வேடத்தில் சுப்ரமணியபுரம் ஸ்வாதி!
சசிகுமார் இயக்கி நடித்த சுப்ரமணியபுரம் படத்தில் நடித்தவர் ஸ்வாதி. அதன்பிறகு சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார்
நாயகனாக நடித்த போராளி படத்தில் நடித்தவர், இதற்குதானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் சிட்டி கேர்ளாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் தனது முதல் பட நாயகனான ஜெய்யுடன் வடகறி படத்தில் நடித்தார். இந்நிலையில், தற்போது யாக்கை, திரி, அமளி துமளி, திரிபுரா ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ஸ்வாதி.
இதில் திரிபுரா என்ற படம் தெலுங்கில் தயாராகியுள்ளது. ஆனால் தமிழில் திரிபுரசுந்தரி என்ற பெயரில் வெளியாகிறது. பேய் கதையில் உருவாகும் இந்த படத்தில் அதிரடியான நடிகையாக உருவெடுத்துள்ளாராம் ஸ்வாதி. அதோடு இதுவரை ஹீரோக்களை நம்பி களமிறங்கி வந்த அவர், இந்த படத்தில் லீடு ரோலில் நடித்திருக்கிறார். சமீபகாலமாக நயன்தாரா, த்ரிஷா என்று பல நடிகைகள் பேய் கதைகளில் நடித்து வருவதைப் பார்த்து தனது ரூட்டையும் மாற்றியுள்ள ஸ்வாதி, அந்த படம் வெற்றி பெற்றால் அதன்பிறகு தனக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளுக்கே முதலிடம் கொடுப்பாராம்.
நேரடியாக வாக்களிக்க வந்த ஒரே முன்னணி நடிகை அஞ்சலி மட்டுமே
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் நேற்று பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்று முடிவடைந்தது. இந்தத்
தேர்தலில் அஜித் உள்ளிட்ட ஒரு சிலரைத் தவிர மற்ற அனைத்து முன்னணி நடிகர்களும் நேரடியாக வந்து வாக்களித்துவிட்டுச் சென்றனர். பல சீனியர் நடிகர்கள், வயது முதிர்ந்த நடிகர்கள் உள்ளிட்ட பலர் வந்து வாக்களித்த போது அஜித் போன்றோர் இந்தத் தேர்தலில் வாக்களிக்காமல் வேண்டுமென்றே புறக்கணித்து விட்டதாக சிலர் குற்றம் சாட்டுகிறார்கள்.
அதே சமயம் த்ரிஷா, சமந்தா, நயன்தாரா, காஜல் அகர்வால், தமன்னா, ஹன்சிகா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் நேற்றைய தேர்தலில் நேரடியாக வந்து வாக்களிக்கவில்லை. அவர்களில் யார் தபாலில் வாக்களித்தார்கள், அல்லது அனைவருமே நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாகத்தான் இருக்கிறார்களா என்பது இனிமேல்தான் தெரிய வரும். சென்னையிலே வசிக்கும் பல இளம் நடிகைகள் கூட வாக்களிக்க வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில வருடங்களாகவே அடிக்கடி காணாமல் போய்விடும் முன்னணி நடிகைகளில் ஒருவரான அஞ்சலி நேற்று நேரடியாக வாக்களிக்க வந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். சினேகா, நமீதா, சந்தியா உள்ளிட்ட மேலும் சில நடிகைகள் மட்டுமே நேற்று நேரடியாக வந்து வாக்களித்தனர். 80களில் அறிமுகமான பல நடிகைகளும், கே.ஆர்.விஜயா, எம்.என்.ராஜம், வெண்ணிற ஆடை நிர்மலா போன்ற மூத்த நடிகைகளும் நேரில் வந்தே வாக்களித்தனர். தங்களுக்கென ஏதாவது பிரச்சனை வந்தால் மட்டுமே நடிகர் சங்கத்தை அணுகுவது என்பதை மட்டுமே இன்றைய இளம் நடிகைகள் சிலர் குறிக்கோளாக வைத்துள்ளனர். அவர்கள் இனியாவது மாறுவார்கள் என எதிர்பார்க்கலாம் என சங்கத்தில் அதிக ஈடுபாடு கொண்ட நடிகர் ஒருவர் நம்மிடம் தெரிவித்தார்
தனுஷை வியக்க வைத்த கீர்த்தி சுரேஷ்
பிரபுசாலமன் தனுஷை வைத்து இயக்கி வரும் பெயரிடப்படாத படத்தில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் அந்த படத்தை ரொம்ப பெரிய
அளவில் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக தனது நட்பு வட்டாரங்களில் கூறி வருகிறார். இப்படத்தில், ஒரு நடிகையின் டச்சப் பெண்ணாகத்தான் அவர் நடித்துள்ளார். ஆனால் அவர்தான் நடிகை என்று நினைத்து காதல்வயப்பட்ட விடுவாராம் டீ பாயான தனுஷ்.
ஒருகட்டத்தில் உண்மை தெரிய வரும்போது காதல் என்னவாகிறது என்கிற ரீதியில் அப்படத்தின் கதை செல்கிறதாம். அந்த வகையில், தனது முகத்தில் பலவிதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தி தேசிய விருது நடிகரான தனுஷையே பல இடங்களில் வியக்க வைத்திருக்கிறாராம் கீர்த்தி சுரேஷ். அதோடு டைரக்டர் பிரபுசாலமனும் கீர்த்தியின் நடிப்பை பல சமயங்களில் பாராட்டியிருக்கிறாராம்.
அந்த வகையில், பிரபுசாலமன் படங்களில் நடித்த அமலாபால், லட்சுமிமேனன், கயல் ஆனந்தி போன்ற நடிகைகளுக்கு சினிமாவில் ஒரு நல்ல என்ட்ரி கிடைத்ததால், இந்த படத்திற்கு பிறகு தன்மீது பர்பாமென்ஸ் நடிகை என்கிற முத்திரை விழுந்து நம்மை பெரிய இடத்துக்கு கொண்டு செல்லும் என்று எதிர்பார்ப்பதாக கூறும் கீர்த்தி சுரேஷ், இனிமேல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதை களுக்கு முதலிடம் கொடுக்கயிருப்பதாகவும் கூறுகிறார்.
ஸ்ருதிஹாசனின் நம்பிக்கைக்குரிய இயக்குனர்!
சூர்யாவை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ஏழாம் அறிவு படத்தில் இன்னொரு ஹீரோ போன்ற வேடத்தில் நடித்தவர்
ஸ்ருதிஹாசன். அப்படி தமிழில் நாயகியாக ஸ்ருதி நடித்த முதல் படத்திலேயே அவருக்கு பெரிய ஓப்பனிங்கை கொடுத்தவர் முருகதாஸ். பின்னர் அவர் இயக்கத்தில் ஸ்ருதியை நடிக்க அழைத்தபோது அவர் வேறு இந்தி படங்களில் பிசியாக இருந்ததால் நடிக்கவில்லை.
ஆனால் இப்போது அகிரா படத்தை இந்தியில் இயக்கி வரும் ஏ.ஆர்.முருகதாஸ் அந்த படத்திற்கு பிறகு தமிழ், தெலுங்கில் மகேஷ்பாபுவை வைத்து இயக்கும் படத்தில் மீண்டும் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார் ஸ்ருதிஹாசன். இந்த படத்திற்காக அவர் ஸ்ருதியை தொடர்பு கொண்டு பேசியபோது, படத்தின் நாயகன், கதை பற்றி எதுவும் கேட்கவில்லையாம். முருகதாஸ் இயக்கும் படம் என்றதுமே கால்சீட் கொடுத்து விட்டாராம். அந்த அளவுக்கு முருகதாஸ் மீது பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறாராம் ஸ்ருதிஹாசன்.
அதேபோல், முருகதாசும், தெலுங்கு படங்களில் கதாநாயகியை டம்மியாக பயன்படுத்துவது போல் இல்லாமல் தனது புதிய படத்திலும் ஸ்ருதியை ஒரு வித்தியாசமான கதாநாயகியாகத்தான் வெளிப்படுத்துகிறாராம். இந்த கேரக்டர் பற்றி கேட்டால் அவர் நிஜமாலுமே இன்ப அதிர்ச்சி அடைவார் என்கிறது முருகதாஸ் வட்டாரம்.
நான் யாருக்கும் போட்டியில்லை! - ராகுல் ப்ரீத்சிங்
தமிழில், தடையற தாக்க, என்னமோ ஏதோ , புத்தகம் படங்களை பெரிதாக எதிர்பார்த்த ராகுல் ப்ரீத் சிங்கிற்கு இப்போது
தெலுங்கில் ராம்சரணுடன் நடித்து வெளியாகியுள்ள புருஸ்லீ படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்திருக்கிறதாம். அதனால் நேரடி தமிழ் படத்தில் கிடைக்காத பெயர் ஒரு தெலுங்கு படம் மூலம் தமிழில் கிடைத்ததை நினைத்து சந்தோசத்தில் இருக்கும் ராகுல் ப்ரீத் சிங், தான் எதிர்பார்க்கிற சில முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் கலந்து நடிக்க தயாராகி விட்டார்.
அவரிடத்தில் தெலுங்கில் உங்களால் சமந்தாவுக்கு பின்னடைவு என்கிறார்களே? என்று கேட்டால், அப்படியெல்லாம் இல்லை. அவர் என்னைவிட பெரிய நடிகை. அதோடு நான் ரசிக்கிற சில நடிகைகளில் சமந்தாவும் ஒருவர். மேலும், சினிமாவில் நான் யாரையும் போட்டியாக நினைக்கவுமில்லை. இனிமேல் நினைக்கவும் மாட்டேன். காரணம், யார் யாருக்கு என்னை கிடைக்க வேண்டுமோ அது கிடைக்கும். நமக்கு கிடைக்க இருப்பதை யாராலும் தட்டிப்பறிக்க முடியாது. அதேபோல் மற்றவர்களுக்கான வாய்ப்பை நான் பறிக்கவும் முடியாது. அதனால் எனக்கு கிடைக்கிற வாய்ப்புகளில் நான் நடித்துக்கொண்டிருக்கிறேன் என்று கூறும் ராகுல் ப்ரீத் சிங், தெலுங்கு ரசிகர்களை போன்று தமிழ் ரசிகர்களை என்னை கொண்டாட வேண்டும் என்பதுதான் எனது தற்போதைய ஆசையே. அதற்கான வாய்ப்புகளைத்தான் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்கிறார்.