பிரிட்டனில் முதலிடம் பிடித்த விஜய்யின் புலி!
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியாகியுள்ள புலி படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே வெளியானது. ஆனால் அப்படத்தை இப்போது வரை அவரது ரசிகர்கள் கொண்டாடி வந்தபோதும், பொதுமக்கள் மத்தியில் படம் சரியில்லை என்றொரு
செய்தி வேகமாக பரவியது. இதையடுத்து விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில், புலி குடும்பத்துடன் கண்டுகளிக்க வேண்டிய நல்ல படம் என்று செய்தி பரப்பினர். ஆக இரண்டுவிதமான கருத்துக்களுக்கிடையே இப்போதுவரை புலி வெற்றிகரமாகவே ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், இதுவரை விஜய் படங்கள் இல்லாத அளவுக்கு இந்த புலி வெளிநாடுகளிலும் அதிகப்படியான தியேட்டர்களில் திரையிடப்பட்டது. இங்கிலாந்து, ஜப்பான், பிரிட்டன் உள்பட பல நாடுகளில் விக்ரம் நடிப்பில் வெளியான ஐ படத்திற்கு இணையாக அதிகபட்ச தியேட்டர்களில் திரையிட்டனர். அதில் சில நாடுகளில் எதிர்பார்த்தபடி வசூல் இல்லை என்றபோதும், பிரிட்டனில் பெரிய அளவில் வசூலித்துள்ளதாம் புலி.
அதாவது, பிரிட்டனில் திரையிட்ட நாளில் இருந்தே குடும்பம் குடும்பமாக புலி படத்தை பார்த்து ரசித்து வருகிறார்களாம். அதனால் அங்கு எதிர்பாராத வெற்றி பெற்று ஒரே வாரத்தில் 1.65 கோடி வசூலித்துள்ளதாம் புலி. இன்னமும் தியேட்டர்களில் கூட்டம் குறையவில்லையாம். ஆக, இதற்கு முன்பு பிரிட்டனில் வெளியான தமிழ் படங்களின் வெற்றியை முறியடித்து அங்கு அதிகமாக வசூல் செய்த முதல் தமிழ் படமாகியிருக்கிறது விஜய்யின் புலி.
காஜலை ஓரங்கட்டிய சமந்தா!
விஜய்யுடன் நடித்த ஜில்லாவுக்கு பிறகு அதிரடியாக சம்பளத்தை உயர்த்தி படங்களே இல்லாத நிலைக்கு தள்ளப்பட்ட காஜல் அகர்வால், பின்னர் சம்பளத்தை கணிசமான அளவு குறைத்து மாரி, பாயும் புலி போன்ற படங்களை கைப்பற்றினார். ஆனால்
அந்த இரண்டு படங்களுமே அவருக்கு பெரிதாக பெயர் வாங்கிக்கொடுக்கவில்லை. அதோடு படங்களும் வசூலில் மந்தமாகி விட்டதால், வெற்றிப்பட நாயகி என்கிற பட்டியலில் இருந்து காஜலை நீக்கி விட்டனர் தயாரிப்பாளர்கள்.
இந்த நிலையிலும் தற்போது விக்ரமின் மர்ம மனிதன் மற்றும் பிரமோற்சவம் என ஏற்கனவே கமிட்டான சில படங்களில் நடித்து வருகிறார் காஜல்அகர்வால். இதற்கடுத்து தமிழ், தெலுங்கில் ஒரு நிலையான இடத்தை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்று திரைக்குப்பின்னால் படுதீவிரம் காட்டினார். ஆனால், இவரது அபிமானிகளின் படங்கள்கூட சமந்தா பக்கம் திரும்பி விட்டன. இதனால் கடும் அதிர்ச்சியில் இருக்கிறார் காஜல்.
மேலும், தென்னிந்திய சினிமாவில் தான் நடித்த படங்களும் சமீபகாலமாக வெற்றி பெறாததோடு போட்டி நடிகைகளின் ஆதிக்கம் அதிகரித்து விட்டதால், தாய்மொழியான இந்தியில் முன்பை விட கூடுதல் கவனத்தை திருப்பியிருக்கிறாராம் காஜல்அகர்வால்.
ராய் லட்சுமியின் அசின் செண்டிமென்ட்!
அரண்மனை படத்தை அடுத்து ஸ்ரீகாந்துடன் நடித்து வரும் செளகார் பேட்டை படத்தை பெரிதாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த ராய் லட்சுமி, அந்த படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே அடுத்தடுத்து சில தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் கமிட்டானார்.
குறிப்பாக, சினிமாவில் நடிக்க வந்ததில் இருந்தே இந்தி சினிமாவில் கோலேச்ச வேண்டும் என்பதுதான் ராய் லட்சுமியின் பெருங்கனவாக இருந்தது வந்தது. அதனால் இந்தியில் அகிரா, ஜூலி-2 என்ற இரண்டு படங்களும் ஒரேநேரத்தில் கமிட்டானபோது உற்சாகமாகி விட்டார். அதோடு, இந்தியில் ஏ.ஆர்.முருகதாஸ் அசினுக்கு கொடுத்த என்ட்ரி போன்று அவர் தனக்கு அகிரா படத்தில் கொடுத்துள்ள பாலிவுட் என்ட்ரியும் தன்னை அங்கு பிரபல நடிகையாக்கி விடும் என்று எதிர்பார்க்கிறார் ராய் லட்சுமி.
அதனால், கைவசம் தமிழ், தெலுங்கு படங்கள் இருந்தபோதும் அவற்றை பெரிதாக நினைக்காமல், மும்பையில் முகாமிட்டுள்ளார் ராய்லட்சுமி. அதோடு, ஜூலி-2 என்ற இந்தி படத்தில் பாலிவுட் கவர்ச்சி புயல்களுக்கு இணையான கவர்ச்சியை வெளிப்படுத்தும் அவர், ஒரு காட்சியில் நீச்சல் உடையணிந்தும் கலக்குகிறாராம். அதனால் இந்த படம் தனக்கு இந்தி சினிமாவில் எனக்கு பெரிய இடத்தை பிடித்துத்தரப்போவது நிச்சயம் என்று கூறிவரும் ராய்லட்சுமி, மும்பையில் இருந்தபடியே புதிய படங்களை கைப்பற்றும் முயற்சிகளையும் முடுக்கி விட்டிருக்கிறார்.
கடவுள் அருளால் எனக்கு நல்ல படங்கள் அமைகின்றன: அனுஷ்கா பேட்டி
அனுஷ்கா நடித்த ‘பாகுபலி’ படம் சமீபத்தில் வெளியானது. இதன் இரண்டாம் பாகத்தில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார். அடுத்து ‘ருத்ரமாதேவி’ என்ற படம் வெளிவர இருக்கிறது. இதில், ராணி கதாபாத்திரத்தில் வருகிறார். தொடர்ந்து சரித்திர கதையம்சம் உள்ள படங்களில் நடிப்பது குறித்து அனுஷ்கா ஐதாராபாத்தில் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
‘அருந்ததி’ படத்தில் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. அதுபோல், ‘பாகுபலி’ படமும் பெயர் வாங்கிக்கொடுத்தது. தொடர்ந்து ‘ருத்ரமாதேவி’ படம் வெளிவர இருக்கிறது. ‘ருத்ரமாதேவி’ படத்தில் ரொம்ப சிரமப்பட்டு நடித்தேன். 2ண வருடமாக இதன் படப்பிடிப்பு நடந்தது. கத்திச்சண்டை, குதிரை சவாரி பயிற்சிகள் பெற்று, இதில் நடித்தது புதிய அனுபவமாக இருந்தது.
‘மேக்கப்’ போட மட்டும் 2ண மணி நேரமானது. யானையின் மேல் பல மணிநேரம் உட்காரவைத்து படப்பிடிப்பு நடத்தினர். அப்போது வெயில் கொளுத்தும். அதை தாங்கிக்கொண்டு நடித்தேன். எனக்கு புகை ஆகாது. ஆனாலும், சுற்றிலும் ஊதுவத்திகளை கொளுத்திவைத்து படப்பிடிப்பு நடத்தினார்கள். அந்த புகையில் சளி பிடித்தது. காய்ச்சல் வந்தது. காலை 6 மணிக்கு படப்பிடிப்புக்கு போவேன். நள்ளிரவு வரை படிப்பிடிப்பை நடத்துவார்கள். ரொம்ப சிரமப்பட்டு நடித்து முடித்தேன். ‘அருந்ததி’ போல் இந்த படமும் நன்றாக வந்துள்ளது. ஏழுமலையான் அருளால் எனக்கு தொடர்ந்து நல்ல படங்கள் அமைகின்றன”.
இவ்வாறு அவர் கூறினார்.
பாலிவுட் நடிகையின் அரை நிர்வாண போஸால் பரபரப்பு
பாலிவுட் நடிகர் அமீர்கானின் மனைவியின் உறவினர் பெண் ஆன இவர், மும்பையில் தங்கி, இந்தி படங்களில் நடித்து வருகிறார். அமிதாப்பச்சன், இர்பான்கானுடன் இவர் நடித்துள்ள படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது.
இந்த நிலையில் அதிதிராவ் ஹைதரி ஒரு பத்திரிகையின் அட்டை படத்துக்கு அரை நிர்வாண போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். மேலாடை அணியாமல் குப்புறப்படுத்துக் கொண்டு போஸ் கொடுத்து இருக்கிறார்.
இவர் ஏற்கனவே, ஒரு பத்திரிகைக்கு ‘டூபீஸ்’ நீச்சல் உடை அணிந்து போஸ் கொடுத்து இருந்தார். இப்போது ஒருபடி மேலே சென்று மேலாடையை துறந்து போய் கொடுத்து இருக்கிறார்.
அதிதிராவ் ஹைதரி பரபரப்பை ஏற்படுத்த வேண்டும். அனைவரும் தன்னைப் பற்றி பேச வேண்டும் என்பதற்காகவே, பத்திரிகைகளுக்கு இது போன்று போஸ் கொடுக்கிறார். படங்களில் தனது மார்க்கெட்டை அதிகப்படுத்தும் முயற்சியில் இதுவும் ஒன்று என்று பாலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
பெண்கள் மது அருந்துவது அவரவர் சொந்த விருப்பம்: ராகுல் பிரீத் சிங்
‘தடையற தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ’ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ராகுல் பிரீத் சிங். இவர், தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகியுள்ள ‘புரூஸ்லீ 2’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
‘புரூஸ்லீ 2’ படத்தின் தமிழ் பதிப்புக்கான பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில், டைரக்டர்கள் கவுதம் வாசுதேவ் மேனன், விஷ்ணுவர்தன், ராகவா லாரன்ஸ், மோகன் ராஜா, சீனு வைட்லா, தயாரிப்பாளர்கள் ஞானவேல் ராஜா, ஆர்.பி.சவுத்ரி, காட்ரகட்ட பிரசாத், பத்ரகாளி பிரசாத், எடிட்டர் மோகன், வெங்கட்ராவ், ஏ.ஆர்.கே.ராஜராஜன், படத்தின் கதாநாயகி ராகுல் பிரீத் சிங் ஆகியோர் கலந்துகொண்டனர். பின்னர் ராகுல் பிரீத் சிங், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
“தமிழ் படங்களில் ஏற்கனவே நடித்துள்ளேன். தற்போது கொஞ்சம் இடைவெளி விழுந்துள்ளது. மீண்டும் தமிழில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். ‘புரூஸ்லீ 2’ படம் தமிழ், தெலுங்கில் வெளிவருவது மகிழ்ச்சி அளிக்கிறது. தெலுங்கு படஉலகில் நான் முதல் இடத்தை பிடித்துவிட்டதாக பேசுகிறார்கள். இது மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லா துறைகளிலும் போட்டி உள்ளது. அதுபோல், சினிமாவிலும் நடிகைகளுக்குள் போட்டி இருப்பது சகஜம்தான். தமிழில் விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட கதாநாயகர்களுடன் ஜோடியாக நடிக்க ஆசை உள்ளது.
பேய் படங்கள் இப்போது நன்றாக ஓடுகின்றன. நிறைய கதாநாயகிகள் பேய் வேடங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். எனக்கும் பேய் படத்தில் நடிக்க ஆசை உள்ளது. நான் மது அருந்துவதுபோல் ஒரு படத்தில் நடித்தேன். ஆனால், எனக்கு நிஜத்தில் குடிப்பழக்கம் கிடையாது. பெண்கள் மது அருந்துவது சரியா, தவறா? என்று என்னிடம் கேட்கின்றனர்.
ஆண்களுக்கு, பெண்கள் சமமானவர்கள். எதிலும் ஒரு எல்லை இருக்கவேண்டும். கட்டுப்பாடுகளை மீறுவது சிக்கலை ஏற்படுத்தும். ஆண்கள் குடித்துவிட்டு ரோட்டில் கலாட்டா செய்வது தவறு. பொதுமக்கள் திட்டுவார்கள். எனவே, எல்லாமே அளவோடு இருந்தால், தவறு இல்லை. “பெண்கள் மது அருந்துவது, அவரவர் சொந்த விருப்பம்”.
இவ்வாறு அவர் கூறினார்.