ஜெயம்ரவிக்கு கல்யாணம் ஆகிவிட்டது வருத்ததில் லக்ஷ்மி மேனன்.
லக்ஷ்மி மேனன் இப்போது அஜித்யின் வேதாளம் படத்தில் அஜித்தின் தங்கையாக நடித்து வருகின்றார் தமிழ் சினிமால இளம் வயதிலே நாயகி ஆன பெருமை இவருக்கும் உண்டு .தொடர்ந்து வெற்றி படங்கள் தமிழ் மட்டும் இல்லாமல் மலையாளம் இப்படி அதே சமயம் இந்த சின்ன வயதிலே இவரை பற்றி வராத கிசுகிசு இல்லை இவருக்கும் விஷாலுக்கும் காதல் கல்யாணம் என்று எல்லாம் , ஆனால் இப்ப கதை வேறமாதிரி போகுது. பள்ளிக்க்கு சென்று படிக்க வேண்டிய வயதில் கதாநாயகர்களுடன் டூயட் பாடி நடித்த லட்சுமி மேனன் இனிமேல் அப்படி நடிக்க மாட்டேன் என்று சபதம் எடுக்காத குறையாக படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.இந்நிலையில் சமீபத்தில் அவர் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,‘சினிமாவில் மட்டும் இல்லை. நிஜத்திலும் நிறைய பேரைக் காதலித்திருக்கேன். எட்டு பேரைக் காதலித்திருக்கேன். ஆனால், எதுவுமே ரெண்டு மாதத்துக்கு மேல இருந்தது இல்லை. அதுக்குள்ள எனக்கு போர் அடிக்கும். நானே பிரேக்-அப் பண்ணிடுவேன். ‘ஜிகர்தண்டா’ படத்தில் சித்தார்த் என்னிடம் படத்திற்கு சம்பந்தம் இல்லாமல் மற்ற விஷயங்கள் பேசும்போது, அப்படியே பறக்கிற மாதிரி இருக்கும். ஜெயம் ரவியையும் அவ்வளவு பிடிக்கும். ஆனால், என் பேட் லக். இரண்டு பேருக்கும் கல்யாணம் ஆகிடுச்சு என்றாராம் சோகமாக.
லக்ஷ்மி மேனன் இப்போது அஜித்யின் வேதாளம் படத்தில் அஜித்தின் தங்கையாக நடித்து வருகின்றார் தமிழ் சினிமால இளம் வயதிலே நாயகி ஆன பெருமை இவருக்கும் உண்டு .தொடர்ந்து வெற்றி படங்கள் தமிழ் மட்டும் இல்லாமல் மலையாளம் இப்படி அதே சமயம் இந்த சின்ன வயதிலே இவரை பற்றி வராத கிசுகிசு இல்லை இவருக்கும் விஷாலுக்கும் காதல் கல்யாணம் என்று எல்லாம் , ஆனால் இப்ப கதை வேறமாதிரி போகுது. பள்ளிக்க்கு சென்று படிக்க வேண்டிய வயதில் கதாநாயகர்களுடன் டூயட் பாடி நடித்த லட்சுமி மேனன் இனிமேல் அப்படி நடிக்க மாட்டேன் என்று சபதம் எடுக்காத குறையாக படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.இந்நிலையில் சமீபத்தில் அவர் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,‘சினிமாவில் மட்டும் இல்லை. நிஜத்திலும் நிறைய பேரைக் காதலித்திருக்கேன். எட்டு பேரைக் காதலித்திருக்கேன். ஆனால், எதுவுமே ரெண்டு மாதத்துக்கு மேல இருந்தது இல்லை. அதுக்குள்ள எனக்கு போர் அடிக்கும். நானே பிரேக்-அப் பண்ணிடுவேன். ‘ஜிகர்தண்டா’ படத்தில் சித்தார்த் என்னிடம் படத்திற்கு சம்பந்தம் இல்லாமல் மற்ற விஷயங்கள் பேசும்போது, அப்படியே பறக்கிற மாதிரி இருக்கும். ஜெயம் ரவியையும் அவ்வளவு பிடிக்கும். ஆனால், என் பேட் லக். இரண்டு பேருக்கும் கல்யாணம் ஆகிடுச்சு என்றாராம் சோகமாக.
அஜித் பிரியாணியை மறுத்த ஸ்ருதி
அஜித் நடிகர் மட்டுமல்ல சிறந்த சமையல்கலை வல்லுனரும் கூட என்பது நாட்டு மக்கள் அனைவரும் அறிந்த செய்திதான்.
தானே விதம்விதமாக பிரியாணி சமைப்பதோடு, அதை தன் படங்களில் பணிபுரிபவர்களுக்கு விருந்து கொடுப்பார். அஜித் சமைத்த பிரியாணியை விஜய் உட்பட பலர் சுவைத்துள்ளனர். தற்போது வேதாளம் படத்தில் நடித்து வரும் அஜித், தன்னுடன் நடித்து வரும் கலைஞர்களுக்கு பிரியாணி விருந்து கொடுக்க விரும்பி, யார் எல்லாம் பிரியாணி சாப்பிட ஆர்வம் காட்டுகிறார்கள் என்று கேட்டிருக்கிறார்.
வேதாளம் படக்குழுவினர் அனைவரும் அஜித்தின் பிரியாணியை சாப்பிட ஆர்வம் காட்ட, படத்தின் நாயகியான ஸ்ருதிஹாசன் மட்டும் தனக்கு பிரியாணி வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம். தான் பிராமணப்பெண்ணாக இருந்தாலும் நான்வெஜ் எல்லாம் சாப்பிடுவேன்.. ஆனால் இப்போது டயட்டில் இருக்கிறேன். அதனால் பிரியாணி வேண்டாம் என்று ஸ்ருதிஹாசன் சொல்லி இருக்கிறார்.
அவர் சொன்னதைக் கேட்ட அஜித் கொஞ்சம் கூட வருத்தப்படவில்லையாம். மற்ற அனைவருக்கும் பிரியாணி விருந்து வைப்பதாக தெரிவித்துள்ளார். அஜித்தின் பிரியாணியை வேண்டாம் என்று சொன்ன ஸ்ருதிஹாசன், நல்லவேளை மீகாமன் படத்தில் ஆர்யா உடன் நடிக்கவில்லை.அந்தப்படத்தில் நடிக்க முதலில் ஒப்புக்கொண்ட ஸ்ருதிஹாசன் பிறகு நடிக்க மறுத்துவிட்டார். ஒருவேளை நடித்திருந்தால் நிச்சயமாக பிரியாணி கொடுத்திருப்பார்.
சினிமாவில் இருந்து விலக மாட்டேன்: ஐஸ்வர்யாராய்
பாலிவுட் கனவு நாயகி ஐஸ்வர்யாராய் 5 ஆண்டு இடைவெளிக்கு பிறகு நடித்த 'ஜாஸ்பா' திரைப்படம் இன்று ரிலீஸ் ஆனது. இந்த இடைவெளி குறித்து ஐஸ்வர்யாராயிடம் கேட்ட போது....
கடந்த 5 ஆண்டுகளாக படங்களில் நடிக்கவில்லை என்றாலும், இடைப்பட்ட காலத்தில் விளம்பரபடம், திரை உலகம் தொடர்பான பொது நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் பங்கு பெற்றேன். நான் ஒரு போதும் சினிமாவை விட்டு விலகவில்லை. விலகவும் மாட்டேன். நான் 6 மாத கர்ப்பிணியாக இருந்த போது கூட நடித்தேன்.
நான் சோம்பலாக இருந்தது இல்லை. எப்போதும் ஏதாவது ஒரு வேலையில் பிசியாக இருப்பேன். நான் ஒரு குழந்தைக்கு தாய். எனவே சொந்த வாழ்க்கையிலும் சினிமாவிலும் சமமாக பயணிக்கிறேன். என் மகள் பிறந்த பிறகு விளம்பர படங்களில் நடித்த போது என் மகளையும் உடன் அழைத்து செல்வேன். இப்போது சினிமா சூட்டிங்குக்கு போகும்போது மகள் ஆராத்யாவிடம் வேலைக்கு போவதாக சொல்லிவிட்டு செல்கிறேன்.
கடந்த 5 ஆண்டுகளில் நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் தாய்மை என்ற பெருமையை என் குழந்தை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக அனுபவித்தேன். நான் கேட்ட பல கதைகளில் 'ஜாஸ்பா' நன்றாக பிடித்து இருந்தது. வித்தியாசமாக இருந்தது. எனவே நடிக்க ஒப்புக்கொண்டேன்.
குற்றவாளிகள் சிலர் ஒரு குழந்தையை கடத்தி வைத்துக் கொண்டு வேறு சில குற்றவாளிகளை விடுவிக்க சொல்வது கதை. நான் வக்கீலாக நடிக்கிறேன். நான் ஒரு குழந்தைக்கு அம்மா. எனவே இந்த படம் சுலபமாக இருந்தது. முன்பு நான் நடித்ததற்கும் இந்த படத்தில் நடித்ததற்கும் எந்தவித வேறுபாடும் இல்லை.
மீண்டும் சினிமாவில் நடிக்க வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். இப்போது இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் என்னை தேடி வருகிறார்கள். ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். இது எனக்கு கிடைத்த பெருமை. எனது அனுபவத்தை பாடமாக எடுத்துக் கொள்வதால்தான் இந்த வெற்றி கிடைத்திருக்கிறது.
விஜய்யின் புலியை விரட்டிய அனுஷ்காவின் ராணி ருத்ரமாதேவி!
பாகுபலி படத்திற்காக பிரபாஸ் இரண்டரை ஆண்டுகள் தனது கடின உழைப்பை கொடுத்தது போன்று ராணி ருத்ரமாதேவி
படத்திற்காக அனுஷ்காவும் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கடினமாக உழைத்திருக்கிறார். வாள் சண்டை, கத்தி சண்டை, குதிரை ஏற்றம் என வியர்வை சிந்தி மட்டுமின்றி ரத்தம் சிந்தியும் நடித்துள்ளார். அந்தவகையில், அனுஷ்காவைப் பார்த்து இந்திய திரையுலகில் உள்ள பிரபல நடிகர் நடிகைகள் அனைவரும் வியப்பில் உள்ளனர்.
அதோடு, அந்த படத்திற்காக 3 கிலோ தங்கை நகைகளை தனது உடம்பில் அணிந்து கொண்டு நடித்தார் அனுஷ்கா. அரசர் காலத்து காஸ்டியும் அணிந்து கொண்டு அந்த நகைகளை அணிந்தபடி வாள் ஏந்தி அவர் சண்டை செய்திருக்கிறார். தனது உடம்பில் அணிந்துள்ள நடிகைகள் உடன் நடிப்பவர்களின் உடம்பில் கீறி காயப்படுத்தி விடக்கூடாது என்பதையும் கவனத்தில் கொண்டு நடித்துள்ளார் அனுஷ்கா.
இப்படி அனுஷ்காவின் கடின உழைப்பின் பலனாக உருவான ராணி ருத்ரம்மா தேவி படம் இன்று ஆந்திராவில் பரபரப்பாக வெளியாகிறது. இதுவரை அனுஷ்கா படங்கள் இல்லாத அளவுக்கு அதிகப்படியான தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. ஆனால் இந்த படத்திற்கும் பாகுபலிக்கு இணையான வரவேற்பு இருப்பதால், கடந்த 3-ந்தேதி முதல் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் திரையிடப்பட்ட விஜய்யின் புலி படத்தை பல முக்கிய தியேட்டர்களில் இருந்து எடுத்து விட்டு ராணி ருத்ரம்மா தேவி படத்தை திரையிடுகிறார்களாம். இதனால் புலி படத்தை ஆந்திராவில் திரையிடும் உரிமையை வாங்கியவர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்களாம்.
அனிருத்துக்கு கிடைக்கும் 'ஸ்டார் வேல்யூ'
2011ம் ஆண்டு வெளிவந்த '3' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இந்த நான்கு ஆண்டுகளில் அவர்
இசையமைத்து 10 படங்கள் மட்டுமே வெளிவந்துள்ளன. அதில் மூன்று தனுஷ் படங்கள், மூன்று சிவகார்த்திகேயன் படங்கள், ஒரு விஜய் படம், ஒரு ஆர்யா படம். இவையில்லாமல் 'டேவிட், வணக்கம் சென்னை' ஆகிய படங்களும் அந்தப் பட்டியலில் அடங்கும். பத்து படங்களுக்குள்ளாகவே தமிழ்த் திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான விஜய் நடித்த 'கத்தி' படத்திற்கு இசையமைப்பாளராகவிட்டார்.
இப்போது மற்றொரு முன்னணி ஹீரோவான அஜித் நடிக்கும் 'வேதாளம்' படத்திற்கு இசையமைத்து வருகிறார். நேற்று வெளியான இந்தப் படத்தின் டீசர் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அனிருத்தின் டீசருக்கான இசையும் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. குறுகிய காலத்தில் தமிழின் இரண்டு முன்னணி ஹீரோக்களுக்கு அனிருத் இசையமைத்து அவருக்கான ஸ்டார் வேல்யூவை அதிகரித்துக் கொண்டுள்ளார்.
விரைவில் வெளிவர இருக்கும் 'நானும் ரௌடிதான்' படப் பாடல்களும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. அடுத்து 'வேதாளம், நானும் ரௌடிதான், வேலையில்லா பட்டதாரி 2, ஆகோ,' ஆகிய படங்கள் அடுத்தடுத்து வர உள்ளன. சிவகார்த்திகேயனின் புதிய படத்திற்கும் அனிருத் இசையமைக்கப் போகிறார். 'அரிமா நம்பி' படத்திற்குப் பிறகு ஆனந்த் சங்கர் விக்ரமை வைத்து இயக்கப் போகும் படத்திற்கும் அனிருத் தான் இசை. அதோடு தெலுங்கில் த்ரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில் நிதின், சமந்தா நடிக்கும் 'அ ஆ' படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாகப் போகிறார். இந்தப் படத்திற்காக அனிருத்திற்கு மிகப் பெரிய சம்பளம் பேசப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆக, அனிருத்தின் இசை உலகத்தில் அடை மழை பெய்யப் போகிறது