சினிமா செய்தித் துளிகள் மீண்டும் பழைய தோற்றத்திற்குத் திரும்பிய அனுஷ்கா

07 Oct,2015
 


மீண்டும் பழைய தோற்றத்திற்குத் திரும்பிய அனுஷ்கா




கமல்ஹாசன், விக்ரம் வரிசையில் நடிப்புக்காகத் தங்களது உடலையும், தோற்றத்தையும், இளைத்துக் கொண்டும், வருத்திக்

கொண்டும் வேறு எந்த நடிகரும் நடித்ததில்லை. நடிப்புதானே என்று கூட நினைக்காமல் கதாபாத்திரங்களுக்காக தங்களை மாற்றிக் கொள்ள அவர்களிருவரும் முன் வருவதாலேயே அவர்கள் மீது ரசிகர்களுக்கு தனி அபிமானம் இருக்கிறது. அந்த அபிமானத்தை முதல் முறையாக ஒரு நடிகை பெற்றிருக்கிறார் என்றால் அது அனுஷ்கா மட்டுமே. தன்னுடன் நடிக்கும் நடிகைகளே மனம் திறந்து பாராட்டும் அளவிற்கு தனது தோற்றத்தை 'இஞ்சி இடுப்பழகி' படத்திற்காக மிகவும் குண்டானவராக மாற்றியிருந்தார்.

உணவுக் கட்டுப்பாடு எதுவுமில்லாமல் 20 கிலோவிற்கும் மேல் தன்னுடைய உடலை அவர் ஏற்றியிருந்தார். 'பாகுபலி' படம் வெளிவந்த சமயத்தில் அந்தப் படத்தின் வெற்றியைப் பகிர்ந்து கொள்வதற்காக படக்குழுவினருடனான கொண்டாட்டத்தில் அனுஷ்காவின் தோற்றத்தைப் பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். குறுகிய காலத்திலேயே அவ்வளவு குண்டானவராக மாறியிருந்தார். ஒரு பெண் உடலை ஏற்றுவதும், இறக்குவதும் அவ்வளவு சாதாரண விஷயமல்ல. ஆனால், அனுஷ்கா அதைத் துணிச்சலாக செய்திருந்தார்.

இப்போது மீண்டும் தன்னுடைய பழைய தோற்றத்திலும், அழகிலும் திரும்பியிருக்கிறார் அனுஷ்கா. சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற 'ருத்ரமாதேவி' பத்திரிகையாளர் சந்திப்பில் அனுஷ்காவைப் பார்த்தவர்கள் மீண்டும் அதே ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார்கள். அனுஷ்காவின் நடிப்பின் மீதான இந்த ஈடுபாடு திரையுலகத்தில் பலரையும் வியக்க வைத்துள்ளது

பேயாக நடிக்கும் விசாகா சிங்



  
‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியானவர் விசாகா சிங். இப்படம் பெரிய அளவில் வெற்றியடைந்தாலும், இவருக்கு அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இப்படத்திற்கு இவர் நடித்திருக்கும ஒரே படமான ‘வாலிபராஜா’ படம் தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இந்நிலையில், மேலும் ஒரு படத்தில் விசாகா சிங் பிசியாக நடித்து வருகிறார்.

மணிசர்மா என்ற புதுமுக இயக்குனர் இயக்கும் ‘பயம் ஒரு பயணம்’ என்ற படத்தில்தான் விசாகா சிங் நடித்து வருகிறார். திகில் கலந்த பேய் படமாக உருவாகி வரும் இப்படம் பெண்களை மையப்படுத்தி உருவாகி வருகிறது. இவருடன் மீனாட்சி தீட்சித்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதாநாயகனாக பரத் ரெட்டி நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு மூணாறில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் விசாகா சிங் பேயாக நடிக்கிறாராம். இதுகுறித்து இயக்குனர் கூறும்போது, ‘பயம் ஒரு பயணம்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. இன்னும் சில காட்சிகள் மட்டும் படமாக்கப்படவுள்ளது. இப்படத்தில் விசாகா பேயாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதையும் மூணாறில் படமாக்கியுள்ளோம் என்றார்.

 

 ஜி.வி.பிரகாசுக்கு கைவிரித்த ஹன்சிகா!


டார்லிங், த்ரிஷா இல்லன்னா நயன்தாரா என தொடர்ச்சியாக இரண்டு ஹிட் படங்களை கொடுத்தாகி விட்டது என்பதால்,

அடுத்தபடியாகவும் சிக்சர், பவுண்டரிகளை விளாசித்தள்ள வேண்டும் என்று செம கெத்தில் இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார். அதன் காரணமாக முன்பெல்லாம் கதை கேட்கும்போது ஒரு முத்தக்காட்சியை டைரக்டர்கள் சொன்னால்கூட இந்த மாதிரியெல்லாம் காட்சி தேவையா என்று சொல்லி வெட்கப்படுவாராம். அப்படி சொன்ன ஜி.வி.பிரகாஷ் த்ரிஷா இல்லன்னா நயன்தாராவில் பின்னி பெடலெடுத்திருப்பதைப் பார்த்து இப்போது இன்னும் அதிரடியான கதைகளுடன் அவரை மீட் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள் இயக்குனர்கள். அதனால் புல் மூடில் அமர்ந்து கதை கேட்டு வருகிறார் ஜி.வி.பிரகாஷ்.

 

மேலும், தனது புரூஸ்லி படத்தில் நடிப்பதற்கு நயன்தாராவை அணுகியபோது அவர் நடிக்க மறுத்ததால் பின்னர் ஹன்சிகாவை அணுகினார். ஆனால் எடுத்த எடுப்பிலேயே முடியாது என்று சொன்னால் தவறாக நினைப்பார்கள் என்று சில நாட்கள் இழுத்தடித்த ஹன்சிகாவும், திடீரென்று ஒருநாள் போன் செய்து கால்சீட் இல்லை என்றொரு வழக்கமான காரணத்தை சொல்லி கைவிரித்து விட்டாராம். இதனால் ஹன்சிகாவை மலைபோல் நம்பிக்கொண்டிருந்த ஜி.வி.பிரகாஷ் அதிர்ச்சியடைந்து விட்டாராம். என்றாலும், ஏற்கனவே நயன்தாரா அதிர்ச்சி கொடுத்திருந்ததால் இது அவருக்கு பெரிய ஏமாற்றமாக இல்லையாம். இதையடுத்து வேறு சில மேல்தட்டு ஹீரோயின்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள ஜி.வி.பிரகாஷ், மற்ற மொழிகளில் பிரபலமான நடிகைகளை தமிழுக்கு கொண்டு வரும் இன்னொரு முயற்சியிலும் இறங்கியிருக்கிறாராம்.


 ஸ்ருதிஹாசனின் கட் அண்ட் ரைட் பதில்..!





ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் புதிய படத்துக்கு வேதாளம் என்ற தலைப்பு

அறிவிக்கப்பட்டதும் அஜித் ரசிகர்களே சற்று அதிர்ச்சியடைந்தனர். தலைப்பைப் பார்த்தால் நம்ம தல நடிக்கிறது பேய்ப்படம் மாதிரி இருக்கே... கலக்கமும் அடைந்தனர். வேதாளம் பேய்ப்படம் இல்லை என்றும்... ப்ளாஷ்பேக்கில் வரும் மொட்டைத்தலை அஜித்தின் பெயர் வேதாளம் என்பதால் படத்துக்கும் அந்தப்பெயரே வைக்கப்பட்டது என்று தெரிந்ததும் சற்றே நிம்மதி அடைந்தனர்.

இந்நிலையில் புலி படத்தில் வேதாளம்தான் வில்லன். படம் முழுக்க வேதாளத்துக்கு எதிராக வசனங்கள் வேறு. வேதாளம் படத்தின் நாயகியான ஸ்ருதிஹாசன்தான் புலி படத்தின் நாயகியும். புலி படத்தில் வேதாளம் என்ற விஷயம் இருப்பதை முன்கூட்டியே வேதாளம் பட இயக்குநர் அல்லது தயாரிப்பாளரிடம் சொல்லி இருந்தால் அஜித் படத்துக்கு வேதாளம் என்ற தலைப்பை வைத்திருக்க மாட்டார்கள்.

இந்த விஷயத்தை ஸ்ருதிஹாசன் ஏன் சொல்லவில்லையாம்? இது பற்றி ஸ்ருதிஹாசனிடம் கேட்டபோது, புலி படத்தில் வேதாளம் என்ற விஷயம் இருப்பதும், வேதாள தேசம் என்று இருப்பதும், விஜய்யே வேதாளமாக நடிக்கிறார் என்பதும் எனக்கு தெரியும். இதை எல்லாம் நான் எதற்காக அஜித் படம் சம்மந்தப்பட்டவர்களிடம் போய் சொல்ல வேண்டும்? அது என் வேலையில்லை. என்று கட் அண்ட் ரைட்டாக பதில் சொல்லி இருக்கிறார்



 திரையுலகில் இரண்டு திடீர் திருப்பங்கள்




தமிழ்த் திரையுலகத்தைப் பொறுத்தவரை மட்டுமல்ல எந்த ஒரு திரையுலகிலும் ஒரு படம் வெளிவரும் வரை அதில் நடக்கும்

எவற்றையும் உறுதியாகச் சொல்ல முடியாது. படத்தின் விவாதத்தின் போது இடம் பெறும் நட்சத்திரங்கள், படம் ஆரம்பமாகும் போது இருக்க மாட்டார்கள். படம் ஆரம்பமான பிறகு இருக்கும் நட்சத்திரங்கள் சமயங்களில் படப்பிடிப்பு அடுத்த கட்டத்தை அடைவதற்குள் இருக்க மாட்டார்கள். அப்படியே படப்பிடிப்பில் முழுவதுமாக இருந்தாலும் படத்தொகுப்பில் நீளம் காரணமாக காணாமல் போய்விடுவார்கள். இது போன்ற மோசமான அனுபவங்கள் பல நட்சத்திரங்களுக்கு இருந்திருக்கும்.

கடந்த சில நாட்களில் திரையுலகத்தில் இரண்டு திடீர் திருப்பங்கள் ஏற்பட்டுள்ளதாகப் பேசப்படுகிறது. மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், கார்த்தி, நித்யா மேனன், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கப் போவதாக நீண்ட நாட்களாகவே செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. இப்போது அந்தப் படத்திலிருந்து துல்கர் சல்மான் விலகிவிட்டார் என்கிறார்கள். பிரதாப் போத்தன் இயக்கத்தில் மலையாளப் படம் ஒன்றில் நடிக்க துல்கர் சம்மதம் தெரிவித்து விட்டதால் மணிரத்னம் படத்தில் நடிக்க மாட்டார் என்ற தகவல் பரவியுள்ளது. மணிரத்னம் படத்தைப் பொறுத்தவரையில் அவரே வாயைத் திறந்து சொன்னால்தான் அவர் படம் பற்றி நம்ப முடியும்.

அடுத்து 'அஞ்சான்' லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிக்க 'சண்டக்கோழி' படத்தின் இரண்டாம் பாகம் தயாராகப் போவதாக 'ரஜினி முருகன்' பத்திரிகையாளர் சந்திப்பில் லிங்குசாமியே அறிவித்தார். ஆனால், இப்போதைக்கு அதுவும் நடக்க வாய்ப்பில்லை என்கிறார்கள். 'சண்டக்கோழி 2' கதை தனக்குப் பிடித்திருந்தால் மட்டுமே நடிப்பேன் என விஷால் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். 'பாயும் புலி' படமும் விஷாலை ஏமாற்றிவிட்ட நிலையில் அடுத்து அவர் கவனமாகவே செயல்பட உள்ளார் என்கிறார்கள்.

 

மேலே சொன்ன இந்த இரண்டு திடீர் திருப்பங்கள்தான் இப்போதைக்கு கோலிவுட்டில் ஹாட் டாபிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது




Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies