'டிவிட்' அடித்த வித்யாபாலன்
''சமூக வலைத்தளங்களில் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வதற்காக சில விஷயங்கள்தான் இருக்கின்றன. ஆனால் பலரும் பகிர்ந்து கொள்வதைப் பார்த்தால் வரைமுறை இல்லாமல் போய்விட்டதை உணர்ந்துகொள்ள முடிகிறது. குளிக்க சென்றால் கூட டுவிட்டரில் தெரிவித்து விட்டுதான் செல்கின்றனர். மற்றவர்களுக்கு தெரிவிக்காமல் எதையும் செய்யக்கூடாது என்பது ஒரு மனோவியாதியாக மாறிவிட்டது. குறிப்பாக அதிகபடியான பெண்கள் தான் இப்படி நடந்து கொள்கின்றனர். பயணுள்ள தகவல்களை மட்டும் பகிர்ந்து கொள்ளுங்கள்" என்கிறார் வித்யாபாலன்.
100கிலோ வெயிட் போட்ட பிரபாஸ்!
ராஜமவுலி இயக்கிய பாகுபலி என்ற ஒரே படத்தில் மூன்று ஆண்டுகளாக நடித்தவர் பிரபாஸ். அந்த படத்துக்காக 65 கிலோ
எடையில் இருந்த தனது உடல்கட்டை 80 கிலோவாக அதிகப்படுத்தி நடித்தார் பிரபாஸ். அதோடு அப்படத்துக்காக போடப்பட்டிருந்த செட்டில் பல நாட்களாக இரவு பகலாக தங்கியிருந்தும் நடித்திருக்கிறார் அவர்.
அந்தவகையில், 5 படங்களில் நடிக்க வேண்டிய நேரத்தில் பாகுபலி என்ற ஒரேயொரு படத்தில் மட்டும் நடித்த பிரபாசுக்கு அந்த படம் ஐந்து படங்க ளுக்கான வெற்றியையும் சேர்த்து கொடுத்து விட்டது. அதோடு இந்தியா முழுக்க அவர் பரிட்சயமான நடிகராகி விட்டார். அதனால் இப்போது பிரபாஸின் வியாபார வட்டமும் விரிவடைந்து விட்டதாம். அதனால் பாகுபலி-2வை இன்னும் பிரமாண்டமான பட்ஜெட்டில் தயாரிக்கிறார்களாம்.
இந்த நிலையில், பாகுபலி-2வில் நடிக்க தயாராகி விட்ட பிரபாஸ் அடுத்த பாகத்துக்காக தனது உடல்கட்டை இன்னும் கம்பீரமாக மாற்றிக்கொண்டிருக்கிறாராம். அதோடு இன்னும் 20 கிலோ வெயிட் போட்டு 100 கிலோ உடல்கட்டுக்கு மாறியுள்ளாராம். இதற்காக கடந்த 2 மாதங்களாக தனது வீட்டிலேயே ஒரு அதிநவீன ஜிம்னாஸ்டிக் ரெடி பண்ணி ஒரு நாளைக்கு 6 மணி நேரத்திற்கும் மேலாக தீவிர உடற்பயிற்சி செய்து வருகிறாராம் பிரபாஸ்.
நடிகர் சங்கத்தில் ஒற்றுமை ஏற்படுத்த ரஜினி, கமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ரோஜா வேண்டுகோள்
நமது தென்னிந்திய நடிகர் சங்கம் பாரம்பரியமிக்கது. மற்ற மொழிகளில் தனித்தனி சங்கம் தொடங்கிவிட்ட போதும் நாம்தான்
தென்னிந்திய நடிகர் சங்கம் என்று வைத்து அனைவரையும் அரவணைத்துச் செல்கிறோம். தற்போது நடைபெற இருக்கும் நடிகர் சங்கத் தேர்தலில் இரண்டு அணிகளாக பிளவுபட்டு பல்வேறு கருத்து வேறுபாடு செய்திகள் பத்திரிக்கையில் வந்த வண்ணம் இருக்கிறது.
இது நீடித்தால் எல்லா நடிகர்களுக்குமே இழுக்கு ஏற்படும். சரத்குமார் தலைமையில் அனுபவம் பெற்றவர்கள், விஷால் அணியில் இளைஞர்கள் இருவருமே சங்கத்தின் நலனுக்காத்தான் பாடுபடுகிறார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. பல்லாண்டு கால அனுபவம் வாய்ந்தவர்களை இளைஞர்கள் சிறுமைப்படுத்துவதோ, அனுபவஸ்தர்கள் இளைஞர்களை உதாசீனபடுத்துவதோ ஏற்ககூடியதல்ல. இருதரப்பிலுமே நியாமான கருத்துக்கள் இருக்கிறது. யாருக்கும் தவறான நோக்கம் இல்லை. அப்படி இருக்கும்போது நாம் ஏன் பிரிந்து நிற்க வேண்டும். இணைந்து செயல்படும் சாத்தியகூறுகள் பற்றி ஆராயலாமே?
இதுபோன்ற சூழ்நிலைகள் உருவாவது புதிதில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு இயக்குனர்கள் சங்கத்தில் இதுபோன்ற பிர்ச்சினை ஏற்பட்டபோது பாரதிராஜா, என் கணவர் ஆர்.கே.செல்வமணி பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார் போன்றவர்கள் முன்முயற்சி எடுத்து சிக்கலை தீர்த்து வைத்தார்கள். அதேபோன்று தற்போது மூத்த கலைஞர்களான ரஜினியும், கமலும் இணைந்து அதுபோன்ற ஒரு முயற்சி எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ரோஜா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்
கல்லூரிக்கு செல்லும் ஸ்ரீதிவ்யா!
வருத்தப்படாத வாலிபர் சங்கம், பென்சில், ஜீவா உள்ளிட்ட படங்களில் பள்ளி மாணவியாக நடித்தார் ஸ்ரீதிவ்யா. அதையடுத்து
இப்போது அதர்வாவுடன் நடித்துள்ள ஈட்டி படத்தில் கல்லூரி மாணவியாக நடித்திருக்கிறாராம். அந்த வகையில், நான் இப்போது மெச்சூரிட்டியான நடிகையாகி விட்டேன். அதோடு, நிஜவாழ்க்கையில் கல்லூரிக்கு செல்லாத எனக்கு இந்த படத்தில் நடித்தது நல்லதொரு அனுபவமாகவே அமைந்தது என்கிறார் அவர்.
மேலும் ஸ்ரீதிவ்யா கூறுகையில், சிவகார்த்திகேயனுடன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் பெரிய ஹிட்டாக அமைந்தது போன்று காக்கி சட்டை படத்தையும் எதிர்பார்த்தேன். ஆனால் அந்த படம் வசூல்ரீதியாக ஹிட்டடித்தது என்றாலும், நான் நினைத்தபடி எனக்கு புதிய படங்கள் கமிட்டாகவில்லை. அது சற்று அதிர்ச்சியாகவே இருந்தது. என்றாலும், இப்போது இந்த ஈட்டி படம் எனக்கு வெற்றிப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன்.
அதற்கடுத்து அர்ஜூன் திவ்யா மற்றும் கார்த்திக், வீர தீர சூரன், காஷ்மோரா ஆகிய படங்களிலும் நடிக்கிறேன். இந்த படங்களில் கதாபாத்திரத்திற்கேற்ப மிதமான கிளாமராகவும் நடிக்கிறேன். தற்போதைய இளவட்ட ரசிகர்களின் ரசனையை மனதில் கொண்டு இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன் என்று கூறும் ஸ்ரீதிவ்யாவுக்கு, அடுத்தபடியாக அதிரடியான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையும் உள்ளதாம்.
சமந்தா தனியாக இருக்கிறாரா?
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தாவின் வீட்டிலும் வருமான வரித் துறையினர் அதிரடி சோதனை
நடத்தினர். சென்னை, பல்லாவரத்தில் உள்ள நடிகை சமந்தாவின் வீட்டில் சோதனை நடந்த போது அதைப் பற்றி செய்தி சேகரிக்கச் சென்ற தொலைக்காட்சி ஒன்றின் கேமராவை சமந்தாவின் சகோதரர் தள்ளி விட்டதும், அடித்ததுமான சம்பவம் நடந்தது. கடந்த இரண்டு நாட்களாக அந்த வீடியோ காட்சிகள் வேகமாகப் பரவி செய்தியாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, அந்த சம்பவத்தையடுத்துப் பேசிய சமந்தாவின் தந்தை, “நாங்கள் இங்கு எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறோம். இங்கு சமந்தா எப்போதாவதுதான் வருவார். அவருடைய சம்பாதியத்தில் நாங்கள் எதையும் அனுபவிப்பதில்லை. அவர் இங்கு வந்து நீண்ட நாட்களாகிவிட்டது. இந்தப் பிரச்சனையில் எங்களை இழுக்காதீர்கள்,” எனப் பேசினார்.
சமந்தா அவருடைய பெற்றோரைப் பார்க்க அடிக்கடி வருவதில்லை என்றால், அவர் ஷுட்டிங் செல்லும் நாட்களைத் தவிர மற்ற நாட்களில் பெற்றோருடன் இருப்பதில்லையா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. சமந்தாவிற்கு பல்லாவரம் வீடு தவிர சென்னையின் முக்கியப் பகுதி ஒன்றில் மற்றொரு வீடும், ஹைதராபாத்தில் இன்னொரு வீடும் இருப்பதாகச் சொல்கிறார்கள். சமந்தாவின் தந்தை அளித்த பேட்டி திரையுலகத்தினரிடமும், மீடியாக்களிடமும் கொஞ்சம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோருடன் இல்லாமல் சமந்தா தனியாக வசிக்கிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது பற்றிய விளக்கத்தை சமந்தா அளித்தால்தான் அவர் தந்தை பேசியதற்கான அர்த்தம் சரியாக விளங்கும்