ரஜினி மகளாக நடிப்பது நான் செய்த பாக்கியம்: தன்ஷிகா
ரஜினியின் கபாலி படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. சென்னை ஸ்டூடியோக்களிலும், சென்னை விமான நிலையம் ஆகியவற்றில் ஏற்கனவே படப்பிடிப்பு நடந்துள்ளது. தற்போது ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள செட்டிநாடு அரண்மனையில் ரஜினி பங்கேற்கும் காட்சிகள் படமாகி வருகின்றன.
ரஞ்சித் இயக்கத்தில் ராதிகா ஆப்தே நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் ரஜினியின் மகளாக தன்ஷிகா நடித்து வருகிறார். பேராண்மை, மாஞ்சாவேலு, அரவான், பரதேசி உள்பட பல படங்களில் நடித்திருந்தாலும் கதாநாயகி ஆகும் வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை.
ஆனால் ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று பிரபல ஹீரோயின்களே ஏங்கும்போது தன்ஷிகாவுக்கு ரஜினி படத்தில் அவரது மகளாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதுகுறித்து உள்ளம் நெகிழ தன்ஷிகா கூறுகிறார்...
ரஜினிசார் படத்தில் ஒரு சீனில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என்று நான் ஏங்கியது உண்டு. இப்போது அவரது மகளாக அவருடன் இணைந்து நடிப்பது நான் பெற்ற பாக்கியம். இதை விட பெருமை வேறு எதுவும் இல்லை.
இந்த படத்தில் எனது முடி அலங்காரம் வித்தியாசமாக உள்ளது. இதற்கு ஏற்றபடி முடியை குறைத்து இருக்கிறேன். கபாலி படத்தில் என்னை புதிய கோணத்தில் ரசிகர்கள் காணலாம்.
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் போர்க்களத்தில் ஒரு பூ படம் திரையிடப்பட்டது
ஜெனீவாவில் நேற்று நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில், ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற தமிழ்ப்படம் திரையிடப்பட்டது. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஊடக பிரிவைச் சேர்ந்த இசைப்பிரியா என்ற இளம்பெண், இறுதிக்கட்ட போரின் போது இலங்கை ராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டதை அடிப்படையாக கொண்ட கதை அம்சத்துடன் உருவாக்கப்பட்ட இந்த படத்தை டைரக்டர் கணேசன் இயக்கி உள்ளார். இந்த படத்துக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கால்பந்து: முதல் ஆட்டத்துக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன - தொடக்க விழாவில் ஐஸ்வர்யாராய் நடனம்
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் சென்னையில் நாளை நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-அட்லெடிகோ டீ கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்துக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன. தொடக்க விழாவில் இந்தி நடிகை ஐஸ்வர்யாராய் நடனமாடுகிறார்.
8 அணிகள் இடையிலான 2-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து திருவிழா நாளை (3-ந்தேதி) முதல் டிசம்பர் 20-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது.
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் கோலாகல தொடக்க விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நாளை (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு ஆரம்பமாகிறது. இதில் இந்தி நடிகைகள் ஐஸ்வர்யாராய், அலியா பாத் ஆகியோரின் கண்கவர் நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.
இந்த விழாவில் ஐ.எஸ்.எல். சேர்மன் நீட்டா அம்பானி, இந்தி நட்சத்திரம் அமிதாப்பச்சன், நடிகர் ரஜினிகாந்த், சென்னையின் எப்.சி. அணியின் இணை உரிமையாளரும், இந்தி நடிகருமான அபிஷேக்பச்சன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள்.
தொடக்க விழா நிகழ்ச்சிகள் முடிந்ததும் அதே ஸ்டேடியத்தில் இரவு 7 மணிக்கு நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-நடப்பு சாம்பியன் அட்லெடிகோ டீ கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டியை காண ரசிகர்கள் மத்தியில் அதிக ஆர்வம் நிலவுவதால் டிக்கெட் கிடைப்பது அரிதாகி இருக்கிறது. சென்னையில் நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்துக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் நேற்று விற்று தீர்ந்து விட்டது. சுமார் 35 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக ஐ.எஸ்.எல். நிர்வாக தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாற்றுத் திறனாளியாக நயன்.
தமிழ் சினிமாவில் யாராலும் அசைக்க முடியாத இடத்தை பிடித்துவிட்டவர் நயன்தாரா. தொடர் வெற்றிகள், எந்த ஹீரோயினுக்கும் கிடைக்காத சம்பளம் என்று கோடிகளில் கொடி கட்டிப் பறக்கும் நயன்தாராவிற்கு சோகமான ஒரு பக்கமும் உண்டு. அவர் நடிக்கும் படங்களெல்லாம் ஹிட் என்பது போல, அவர் நடிக்கும் ஒவ்வொரு படத்திற்கும் வதந்திகள் வெளியாகி அவரை கஷ்டப்படுத்துகின்றன. நானும் ரௌடி தான் திரைப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் காதல் என திரையுலகத்திலேயே பேசப்பட்டது தான் சோகம்.
தமிழ் சினிமாவில் யாராலும் அசைக்க முடியாத இடத்தை பிடித்துவிட்டவர் நயன்தாரா. தொடர் வெற்றிகள், எந்த ஹீரோயினுக்கும் கிடைக்காத சம்பளம் என்று கோடிகளில் கொடி கட்டிப் பறக்கும் நயன்தாராவிற்கு சோகமான ஒரு பக்கமும் உண்டு. அவர் நடிக்கும் படங்களெல்லாம் ஹிட் என்பது போல, அவர் நடிக்கும் ஒவ்வொரு படத்திற்கும் வதந்திகள் வெளியாகி அவரை கஷ்டப்படுத்துகின்றன. நானும் ரௌடி தான் திரைப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் காதல் என திரையுலகத்திலேயே பேசப்பட்டது தான் சோகம்.
எல்லா பிரச்சனைகளையும் கடந்து தனது வேலையில் கவனம் செலுத்தி வரும் நயன்தாராவைப் பற்றி பிரபல பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியொன்றில் மனம் திறந்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன். அவர் கூறியிருப்பதாவது...நயன்தாரா மாதிரியான நடிகையை பார்ப்பது மிகவும் கஷ்டம். தன்னைப் பற்றிய கிசுகிசு வந்தால் உட்கார்ந்து கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் நடிகைகளுக்கு மத்தியில், இவர் வித்தியாசமானவர். அவற்றையெல்லாம் தூக்கிபோட்டுவிட்டு ஷூட்டிங்கிற்கு ரெடி ஆவார். நானும் ரௌடிதான் திரைப்படத்தில் நயன்தாரா காது கேட்காத, வாய் பேச முடியாத பெண்ணாக நடித்திருக்கிறார். பார்த்திபன் வில்லன் கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்த விஷயங்கள் வெளிவராமல் எங்களைப் பற்றிய வதந்திகள் தான் பேஸ்புக், வாட்ஸப் என அதிகம் பகிரப்பட்டிருக்கிறது. இதுவும் ஒருவிதத்தில் நல்லது தான்” என்று கூறியிருக்கிறார்.மாற்றுத் திறனாளியாக முழுக்க முழுக்க லிப்-ரீடிங், கை அசைவுகள் மூலம் பேசி நடித்திருக்கும் நயன்தாராவை திரையில் காண டிசம்பர் வரை ரசிகர்கள் காத்திருக்க வேண்டும்.
நிருபர்களை தாக்கிய சமந்தாவின் குடும்பம் – ஒய் திஸ் கொலவெறிஸ?
நேற்று நடந்த வருமானவரிச் சோதனையில் சமந்தாவும் தப்பவில்லை. எங்களுடையது மிகவும் பின்தங்கிய குடும்பம்.
சின்ன வயதில் நிறைய கஷ்டப்பட்டிருக்கிறேன். இன்று என்னிடம் இவ்வளவு பணம் உள்ளது என்று நம்பவே முடியவில்லை என சில தினங்கள் முன்பு சமந்தா கூறியிருந்தார்.
நம்ப முடியாத அளவுக்கு பணம் இருக்கிறதா என்று அவரது வீட்டையும் சோதனைப் போட்டனர் வருமான வரித்துறையினர். அந்த நேரம் செய்தி சேகரிக்க நிருபர்கள் சமந்தா வீட்டிற்கு சென்றனர்.
அவர்களை தடுத்த சமந்தாவின் தாயார், நிருபர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நேரத்தில், அங்குவந்த சமந்தாவின் அண்ணன் நிருபர்களை தாக்க ஆரம்பித்தார். அதனால் சில நிமிடங்கள் அங்கு பரபரப்பு நிலவியது.
ஊடகங்கள் நடிகைகளை புகழும்போதும், அவர்களை பேட்டியெடுத்து ஒளிபரப்பும்போதும் சைலண்டாக இருக்கும் அவர்கள், ஒரு பிரச்சனையின் போது அதனை ஒளிபரப்ப முயன்றால் அடிக்க வருகிறார்கள்.
பிரபலங்களேஸ பிரபலங்களின்; குடும்பத்தவரேஸ ஒய் திஸ் கொலவெறிஸ?