பகல் கனவு காண பிடிக்காது: சுருதிஹாசன்
உங்களுக்கு பிடித்தமான வேடம் எப்படி இருக்க வேண்டும் என்று கனவு காண்பீர்களா? என்று சுருதிஹாசனிடம் கேட்ட போது அவர் அளித்த பதில்–
சிலர் விழித்துக்கொண்டே தூங்குகிறார்கள். அது வேண்டும் இது வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அது பற்றி கனவு காண்கிறார்கள். எனக்கு இது போல் பகல் கனவு காண பிடிக்காது.
வாழ்க்கையில் விழித்துக் கொண்டிருக்க வேண்டும். கிடைக்கும் நல்ல வாய்ப்பை பயன்படுத்த வேண்டும் என்பதுதான் எனது ஆசை. கிடைத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்ய முயற்சி செய்கிறேன். கதைக்கு ஏற்ற பாத்திரங்கள் உருவாக்கப்படுகின்றன.
எனக்கு இந்த பாத்திரம் தான் வேண்டும் என்று கனவு காண்பது இல்லை. இன்று அற்புதமான பாத்திரம் என்று கனவு கண்டால், நாளை அது சாதாரணமாகி விடலாம். எனவே எது கிடைக்கிறதோ அதையே சிறந்ததாக கருதுகிறேன். என்னை நம்பி கொடுக்கும் பாத்திரங்களை பிரதிபலிக்க வேண்டும் என்பதில் முழு அக்கறை காட்டுகிறேன்.
இதனால்தான் தொடர்ந்து வெற்றி பெற முடிகிறது. அடுத்து நடிக்கும் படங்களிலும் எனக்கு பொருத்தமான வேடங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இதில் முழு கவனம் செலுத்துவேன். இல்லாததைப் பற்றி கவலைப்படமாட்டேன்.
திருமணம் செய்யமாட்டேன்: நடிகை பூர்ணா பேட்டி
கேரளாவை சேர்ந்தவர் நடிகை பூர்ணா. தமிழில் பரத் ஜோடியாக ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ‘கந்தகோட்டை, துரோகி, ஆடுபுலி, வித்தகன், தகராறு’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
தெலுங்கு, மலையாளம் படங்களிலும் நடித்துள்ளார். பூர்ணா தெலுங்கு ஒளிப்பதிவாளரை காதலிப்பதாகவும், விரைவில் அவரை திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்றும் கிசுகிசுக்கள் கிளம்பின. இதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
“என்னுடைய சினிமா வாழ்க்கை நன்றாக போய்க்கொண்டு இருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் நிறைய படங்களில் நடித்துள்ளேன். தற்போது 4 படங்கள் கைவசம் உள்ளன. நான் காதலிப்பதாக செய்திகள் பரவி உள்ளன. அதில் உண்மை இல்லை.
யாரையும் காதலிக்கவில்லை. திருமணத்துக்கு தற்போது நான் தயாராகிவிட்டேன். விரைவில் என் திருமணம் நடக்கும். ஆனால் அது காதல் திருமணமாக இருக்காது. பெற்றோர் எனக்கு பொருத்தமான வரன் பார்த்து வருகிறார்கள். அவர்கள் தேர்வு செய்யும் மாப்பிள்ளையை மணப்பேன்”.
இவ்வாறு பூர்ணா கூறினார்.
ஐதராபாத் பிரியாணியை ஓரங்கட்டும் த்ரிஷா!
தற்போது அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார் த்ரிஷா. இதில் அரண்மனை-2, போகி, நாயகி போன்ற படங்களில்
லீடு ரோலில் நடிக்கிறார். அந்த வகையில், த்ரிஷாவுக்கான மவுசு இன்னும் குறையாமல் அப்படியே இருக்கிறது. அதனால், இந்த படங்களில் நடிக்கும் மற்ற நடிகைகள் திரிஷாவுக்கு டைரக்டர்கள் கொடுக்கிற முக்கியத்துவத்தைப் பார்த்து நொந்து போயிருக்கிறார்கள். மேலும், இந்த மார்க்கெட்டை அப்படியே கெட்டியாக பிடித்துக்கொள்ள நினைக்கும் த்ரிஷா, தற்போது தனக்கு 32 வயதான போதும் அந்த முதிர்ச்சி முகத்தில் தெரியாத அளவுக்கு இளமையை பராமரித்து வருகிறாராம். அதன்காரணமாக, முன்பு மாதிரி யாராவது நட்பு அடிப்படையில் பார்ட்டிகளுக்கு அழைத்தால் அவர் பிடிகொடுப்பதே இல்லையாம். இரவு 10 மணி ஆகி விட்டால் பெட்ரூம் சென்று நிம்மதியாக தூங்கி விடுகிறாராம்.
அதிகாலை எழுந்து சிறிய அளவிலான உடற்பயிற்சி செய்யும் த்ரிஷா, வாக்கிங், யோகா போன்ற பயிற்சிகளையும் செய்கிறாராம். அதோடு, உணவு விசயத்தில் கடுமையான டயட்ஸ் கடைபிடிக்கிறாராம். குறிப்பாக, படப்பிடிப்பு தளங்களில் தரும் உணவுகளை தவிர்க்கும் த்ரிஷா, தனக்கென வீட்டில் இருந்து உணவுகளை வரவைத்தே சாப்பிடுகிறாராம். அதேசமயம் அவுட்டோர்களுக்கு செல்லும் போது, பழவகைகள், சப்பாத்தி உள்ளிட்ட டயட்ஸ் மருத்துவர் சொல்லும் உணவுகளை மட்டுமே எடுத்துக்கொள்கிறாராம். முக்கியமாக, ஐதராபாத் செல்லும் நாட்களில் அங்குள்ள பிரியாணியை புல் கட்டு கட்டி வந்த த்ரிஷா, இப்போது அவற்றை கண்டால் கண்களை இறுக மூடிக்கொள்கிறாராம்
நயன்தாராவுக்கு இணையான நடிகை தேடும் ஜி.வி.பிரகாஷ்!
ஜாடிக்கேத்த மூடியாக இருந்தால்தான் ஜோடி பொருத்தமும் அம்சமாக இருக்கும். ஆனால், டீன்ஏஜ் பையன்
போன்றிருக்கும் ஜி.வி.பிரகாஷோ, தன்னை விட மெச்சூரிட்டியான நடிகைகளுடன் நடிப்பதில் ஆர்வமாக இருந்து வருகிறார். தனது முதல் படத்தில் நிக்கி கல்ராணியுடன் நடித்தவர், அதற்கடுத்து நடித்து வெளியாகவுள்ள த்ரிஷா இல்லன்னா நயன்தாராவில் ஆனந்தி-மனீஷாவுடன் நடித்துள்ளார். இந்த இரண்டு நடிகைகளுமே அவருக்கேற்ற ஜாடிக்கேத்த மூடிகள்தான்.
ஆனால், அடுத்தபடியாக தான் நடிக்கும் புரூஸ்லி, கெட்ட பையன்டா இந்த கார்த்திக் ஆகிய படங்களில் முன்னணி ஹீரோயின்களுடன் நடிக்க ஆசைப்படுகிறார் அவர். சீனியர் நடிகையான நயன்தாராவுடன் நடிக்க ஆசைப்பட்டார். ஆனால் அதற்கான பேச்சுவார்த்தை நடந்து, சம்பள பிரச்னையில் அது முடிந்து போனது. அதையடுத்து இப்போது த்ரிஷா இல்லன்னா நயன்தாரா போன்று நயன்தாரா இல்லன்னா அவருக்கு இணையான இன்னொரு நடிகை வேண்டும் என்கிறாராம் ஜி.வி.பிரகாஷ். அதனால் அடுத்தபடியாக தமன்னா, ஹன்சிகா போன்ற சில மேல்தட்டு நடிகைகளிடம் பேச்சுவார்த்தை முடுக்கி விடப்பட்டுள்ளதாம்
வெற்றிகரமாக 9 வது “திருமண ஆண்டில்” அடியெடுத்து வைத்த “சூர்யா – ஜோதிகா”
நடிகர் சூர்யா – ஜோதிகா நட்சத்திர தம்பதியினர் வெற்றிகரமாக இன்று தங்களது 9 வது திருமண ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கின்றனர்.
கடந்த 2006 ம் ஆண்டில் பெற்றோர் சம்மதத்துடன் நடிகை ஜோதிகாவை கரம்பிடித்தார் சூர்யா, தற்போது இந்தத் தம்பதியினருக்கு தியா மற்றும் தேவ் என 2 குழந்தைகள் உள்ளனர். இன்று திருமண நாளைக் கொண்டாடும் சூர்யா – ஜோதிகா தம்பதியினருக்கு காலையில் இருந்தே வாழ்த்துக்கள் குவிந்து கொண்டுள்ளன.
பூவெல்லாம் கேட்டுப் பார்
பூவெல்லாம் கேட்டுப் பார் திரைப்படத்தில் முதன்முறையாக இணைந்து நடித்த சூர்யா – ஜோதிகா பின்னர் உயிரிலே கலந்தது, காக்க காக்க, மாயாவி, பேரழகன் மற்றும் சில்லுன்னு ஒரு காதல் ஆகிய படங்களில் இணைந்து நடித்தனர்.
காக்க காக்க
காக்க காக்க திரைப்படத்தில் இணைந்து நடித்தபோது இருவருக்கிடையே காதல் மலர்ந்தது, இதனை இருவருமே தொடர்ந்து மறுத்து வந்தனர். பல பத்திரிக்கைகளில் செய்திகள் மற்றும் கிசுகிசுக்கள் வந்தபோதும் இருவரும் தங்களுக்கிடையே எதுவும் இல்லை என்றே கூறினார்.
2006 ல்
பின்னர் இருவரின் வீட்டிலும் திருமண ஏற்பாடுகள் தொடங்க கடைசியில் ஜோதிகா முதன்முறையாக தங்கள் காதல் குறித்து ஊடகங்கள் முன்னிலையில் மனந்திறந்து கூறினார். 2006 ல் சூர்யா ஜோதிகா தம்பதியினருக்கு விமரிசையான முறையில் திருமணம் நடந்தது.
2 குழந்தைகள்
இவர்கள் காதல் வாழ்க்கைக்கு அடையாளமாக தியா, தேவ் என்று 2 குழந்தைகள் உள்ளனர், திருமணத்திற்குப் பின்பு சுமார் 8 வருடங்கள் கழித்து 36 வயதினிலே படத்தின் மூலம் மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார் ஜோதிகா.
9 வது வருடம்
சூர்யா – ஜோதிகா தம்பதியினர் இன்று வெற்றிகரமாக தங்களது 9 வது திருமண ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கின்றனர். ரசிகர்கள் பலரும் தம்பதியினருக்கு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.