நயன்தாரா திருமணத்தில் கலந்துகொள்வேன்: ஆர்யா
ஆர்யா, கிருஷ்ணா, தீபா சன்னதி, சுவாதி நடிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் யு.டி.வி. நிறுவனம் தயாரித்துள்ள படம் - யட்சன். இந்தப் படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் நடிகர் ஆர்யா பேசியதாவது:
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் 5 படங்களில் நடித்துள்ளேன். இருவருக்கும் இடையே உள்ள நட்புதான் அதற்கு காரணம். ஆனால், படப்பிடிப்பின்போது என்னுடைய நண்பன் என்பதுபோல அவர் நடந்துகொள்ள மாட்டார். ஒரு இயக்குநராகவே இருப்பார். ‘பட்டியல்’ படத்தின் முதல்நாள் படப்பிடிப்பில், ஒரு பெரிய பாலத்தில் இருந்து ஆற்றில் குதிக்கச் சொன்னார். நான் தயங்கினேன். உடனே, ‘நான் குதித்துக் காட்டட்டுமா?’ என்று விஷ்ணுவர்தன் கேட்டார். எதுவாக இருந்தாலும் அவர் செய்துகாட்டுவார். நானே செய்துகாட்டுகிறேன் என்பார். எனவே அடுத்த நிமிடம் நானே குதித்து விட்டேன்.
உங்களுக்குப் பெண் பார்க்கிறார்களா?
அந்தக் கஷ்டத்தை என் பெற்றோர்களுக்குத் தரமாட்டேன். காதல் திருமணம்தான் செய்து கொள்வேன். எனக்கு மனைவியாக வரப்போகிறவர் நடிகையாக இருப்பாரா அல்லது வேறு ஒரு பெண்ணா என்பதை முடிவு செய்யவில்லை.
பரந்த மனதுடன், ‘எங்கிருந்தாலும் வாழ்க’ என்று நயன்தாராவுக்கு வாழ்த்து கூறியிருக்கிறீர்களே?
இப்போதும் சொல்கிறேன். அவர் எங்கிருந்தாலும் வாழ்க. அவருடைய திருமணத்தில் நான் நிச்சயமாக கலந்து கொள்வேன்.
லட்சுமிமேனனின் அதிரடி மாற்றம்!
கும்கி நடிகையான லட்சுமிமேனன், கணுக்கால் கவர்ச்சியைகூட காட்டமாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தவர். அப்படிப்பட்டவரையே
விஷாலின் நான் சிகப்பு மனிதன் படத்தில் லிப்லாக் காட்சியில் நடிக்க வைத்து விட்டனர். அதனால் அந்த சம்பவத்திற்கு பிறகு லட்சுமிமேனனின் நடவடிக்கையில் ஏகப்பட்ட மாற்றங்கள். நான் எப்படி நடிக்க வேண்டும் என்பதை கதையும், காட்சிகளும்தான் முடிவு செய்ய வேண்டும். அதற்கேற்ப என்னை முழுசாக மாற்றிக்கொண்டு நடிப்பேன் என்று ஓப்பன் ஸ்டேட்மென்ட் கொடுத்தார்.
அதேசமயம், கெளதம் கார்த்தியுடன் அவர் நடித்த சிப்பாய் படம் கிடப்பில் கிடப்பதை அடுத்து, இனிமேல் வளர்ந்து வரும் ஹீரோக்களுடன் நடிப்பதில்லை என்ற ஒரு புதிய கண்டிசன் போட்டார் லட்சுமிமேனன். அந்த வகையில், வேறு சில இளவட்ட நடிகர்களுடன் நடிக்க வந்த வாய்ப்புகளை திருப்பி அனுப்பி விட்ட நடிகை, இப்போது நான் வளர்ந்த நடிகையாகி விட்டேன். அதனால் வளர்ந்த நடிகர்களுடன் மட்டுமே இனிமேல் நடிப்பேன் என்றும் கூறி வருகிறார்.
அதன்காரணமாக, கொம்பனுக்குப்பிறகு அஜித்தின் தங்கையாக நடிப்பவர், ஜெயம்ரவி நடிக்கும் மிருதன் படத்திலும் நடித்து வருகிறார் லட்சுமிமேனன். இந்த படங்களில் நெருக்கமான காட்சிகள் என்று வருகிறபோது, டைரக்டர்களின் விருப்பம்தான் லட்சமிமேனனின் முடிவாக இருக்கிறதாம். எந்த காட்சியிலும் அவர் கரெக்சன் சொல்வதில்லையாம். டைரக்டர்கள் என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே செய்து வருகிறாராம். அந்த வகையில், சமீபகாலமாக டைரக்டர்களின் நடிகையாக மாறிக்கொண்டு வருகிறாராம் லட்சுமிமேனன்
நடிகைகள் ஏன் வயதை மறைக்கிறார்கள்? வித்யா பாலன் விளக்கம்
என் வயது 36. இதை நான் பெருமையுடன் கூறிக்கொள்கிறேன் என்கிறார் நடிகை வித்யா பாலன்.
ஆனால் நடிகைகள் வயதைச் சொல்வதில் மிகவும் தயக்கம் காட்டுவது ஏன்? பதிலளிக்கிறார் வித்யா பாலன்:
நடிகைகள் மட்டுமல்ல பொதுவாக பெண்கள் வயதைச் சொல்லத் தயங்குகிறார்கள். இளமை மீது பற்றுள்ள சமூகம் இது. அதனால் எப்போதும் இளமையாக இருக்கவேண்டிய நிலைமை பெண்களுக்கு அதிகமாக உள்ளது. ஆனால் என் வயது 36 என்பதைப் பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன். வயது என்பது எண்ணிக்கை மட்டுமே. அதற்கு நாம் முக்கியத்துவம் தரக்கூடாது என்றார்
கிண்டலால் நொந்து போன அனுஷ்கா!
ஆர்யா ஜோடியாக ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தில் நடித்து வரும் அனுஷ்கா அதற்காகவே ஏகப்பட்ட வெயிட் போட்டு குண்டுப் பெண்ணாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் அப்படத்தின் போஸ்டர்களையும், ஸ்டில்களையும் பார்த்தவர்கள் அனுஷ்காவைப் பார்த்து மிரண்டு போனதோடு ‘அக்கா ஆயிட்டார் அனுஷ்கா’ என்றெல்லாம் கிண்டல் செய்தனர். ஆனால் அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் தன் வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார் அனுஷ்கா.
இந்நிலையில் தன்னுடைய உழைப்பை பாராட்டாமல் உருவத்தை வைத்து கமெண்ட் அடிக்க ஆரம்பித்திருப்பது அவருக்கு வருத்தத்தை கொடுக்கிறதாம். ‘அனுஷ்கா எடையை எல்லாம் கூட்டவில்லை. செயற்கையான ‘பேட்’ வைத்து படத்தில் அவரை குண்டாக காட்டியிருக்கிறார்கள்’ என்கிற கமெண்ட் அவரை வருத்தப்பட வைக்கிறதாம். ‘இப்படத்துக்காக நான் 20 கிலோ கூடுதல் எடை போட்டது உண்மைதான். அதுக்காக நான் நிறைய உணவுகளை சாப்பிட்டேன் என்று விளக்கம் கொடுத்திருக்கிறார் அனுஷ்கா.
குழந்தைக்கு தாய் ஆக மாட்டேன்..!
நயன்தாரா-ஆரி நடித்து, அஸ்வின் சரவணன் டைரக்ஷனில், பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள படம், மாயா. இது, திகில் நிறைந்த பேய் படம். இந்த படத்தை பற்றிய அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைரக்டர் அஸ்வின் சரவணன் பேசினார். அப்போது அவர் பேசியதாவது - ‘‘நடிகர் சூர்யாவின் தம்பி (சித்தி மகன்) பிரபு உள்பட 5 நண்பர்கள் சேர்ந்து பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார்கள். அவர்களை சந்தித்து நான் சொன்ன ஒரே கதை, ‘மாயா.’ இது, நிறைய உழைப்பு தேவைப்படுகிற கதை. திரைக்கதையை சொல்லும் விதத்தில் வித்தியாசம் இருக்கும். இந்த கதையை நயன்தாராவிடம் சொன்னதுமே உடனே நடிக்க சம்மதித்தார்.
நயன்தாரா-ஆரி நடித்து, அஸ்வின் சரவணன் டைரக்ஷனில், பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள படம், மாயா. இது, திகில் நிறைந்த பேய் படம். இந்த படத்தை பற்றிய அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைரக்டர் அஸ்வின் சரவணன் பேசினார். அப்போது அவர் பேசியதாவது - ‘‘நடிகர் சூர்யாவின் தம்பி (சித்தி மகன்) பிரபு உள்பட 5 நண்பர்கள் சேர்ந்து பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார்கள். அவர்களை சந்தித்து நான் சொன்ன ஒரே கதை, ‘மாயா.’ இது, நிறைய உழைப்பு தேவைப்படுகிற கதை. திரைக்கதையை சொல்லும் விதத்தில் வித்தியாசம் இருக்கும். இந்த கதையை நயன்தாராவிடம் சொன்னதுமே உடனே நடிக்க சம்மதித்தார்.
‘‘படத்தில், நீங்கள் ஒரு குழந்தைக்கு தாயாக நடிக்க வேண்டும்’’ என்று கொஞ்சம் தயக்கத்துடன் சொன்னேன். ‘‘நான் ஏற்கனவே ஒரு தெலுங்கு படத்தில், 2 குழந்தைகளுக்கு தாயாக நடித்து இருக்கிறேன். நீங்கள் பார்க்கவில்லையா?’’ என்று கேட்டதுடன், எந்தவித தயக்கமும் இல்லாமல், ‘மாயா’ படத்தில் நடித்தார். ஒரு வருடமாக படப்பிடிப்பு நடந்தது. பெரும்பகுதி காட்சிகள் அடர்ந்த காடுகளில் படமாக்கப்பட்டன. நயன்தாரா முழுமையான ஒத்துழைப்பு கொடுத்தார்.
வழக்கமான நயன்தாராவை இந்த படத்தில் பார்க்க முடியாது. வேறு ஒரு நயன்தாரா தெரிவார். படத்தில், ஆரி ஒரு ஓவியராக வருவார். இது, ஒரு அழுத்தமான திரைக்கதை. பேய்க்கு பயப்படாதவர்கள் கூட, படத்தைப் பார்த்து பயப்படுவார்கள்.’’ இவ்வாறு டைரக்டர் அஸ்வின் சரவணன் கூறினார். நிகழ்ச்சியில் நடிகர்கள் ஆரி, மைம்கோபி, பட அதிபர் பிரபு, இசையமைப்பாளர் ரோன் ஈதன் யோஹன், படத்தொகுப்பாளர் டி.எஸ்.சுரேஷ், கலை இயக்குனர் ராமலிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.