அரை நிர்வான புகைப்படத்தை சமுகவலை தளத்தில் போட்ட பிரபல நடிகரின் மகள்
தமிழில் அரண்ய காண்டம் படம் முலம் பிரபலமானவர் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப். தற்போது இவர் விக்ரமுடன் 10 என்றதுக்குள்ள படத்தில் நடித்து வருகிறார்.
இவரின் மகளான கிருஷ்ணா ஷெராப் சமீபத்தில் செய்த ஒரு காரியத்தால் இணைத்தளமே அதிர்ந்தது. அவருடைய சமுகவலை தளத்தில் மேலாடை இல்லாமல் அரை நிர்வான கோலத்தில் இருக்கும் ஒரு புகைப்படத்தை போட்டார், அது மட்டுமில்லாமல் இன்ஸ்டாகிராம் தளத்தில் வெளியிட்டார்.
சிறிது நேரத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் காட்டுதீ அந்த புகைப்படம் பரவ பாலிவுட் திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உங்களது தந்தை ஒரு சிறந்த நடிகர் என்று பெயர் எடுத்தவருக்கு இப்படி ஒரு களங்கத்தை ஏற்படுத்தலாமா என்று ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
இது ஒருபுறமிருக்க கிருஷ்ணா ஷெராப்புக்கு நடிப்பு ஆசை வந்துவிட்டதால் தான் இப்படி செய்கிறார் என்று இன்னொரு தரப்பு சொல்கிறது.
குழப்பத்தை ஏற்படுத்திய ஷாமிலிகள்
ஷாலினியின் தங்கையும், நடிகையுமான ஷாமிலி நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வருகிறார். துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ் இரண்டு வேடத்தில் நடிக்கும் படத்தில் ஒரு தனுஷுக்கு ஜோடியாக ஷாமிலி நடிக்கிறார்.
விக்ரம் பிரபுவின் வீர சிவாஜி படத்திலும் நாயகி ஷாமிலி தான். இந்நிலையில் இவர் குறித்து செய்திகள் இணையத்தில் பரவி வருகிறது. அதில் தான் குழப்பமே. அஞ்சலி பாப்பாவாக நடித்த இந்த ஷாமிலிக்கு பதில் இன்னொரு ஷாமிலினியின் புகைப்படங்களை பலரும் பயன்படுத்தி வருகிறார்கள்.
ஷாமிலி அகர்வால் என்ற இன்னொரு நடிகை ஹைதரபாத்தின் மாடல், மற்றும் தெலுங்கு நடிகை. இவரது சாயலும், அஞ்சலி பட ஷாமிலியும் ஓரளவு ஒத்திருப்பதே குழப்பத்திற்கு காரணம் எனலாம். பலரும் ஷாமிலி என ஷாமிலி அகர்வாலின் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள். உண்மையில் புகைப்படத்தில வலது பக்கம் இருப்பவர் ஷாமிலி அகர்வால் . இடது பக்கம் கருப்பு நிற உடையில் இருப்பவரே பேபியாக கலக்கிய அஜித் மைத்துனி ஷாமிலி.
பெற்றோர்கள் சம்மதத்துடன் ‘‘காதல் திருமணம் செய்து கொள்வேன்’’ நடிகர் ஆர்யா பேட்டி
சென்னை,
‘‘பெற்றோர்கள் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொள்வேன்’’ என்று நடிகர் ஆர்யா கூறினார்.
‘யட்சன்’
ஆர்யா, கிருஷ்ணா, தீபாசன்னதி, சுவாதி ஆகியோர் நடித்து, விஷ்ணுவர்தன் டைரக்ஷனில், யு.டி.வி. நிறுவனம் தயாரித்து வெளிவர இருக்கும் படம், ‘யட்சன்.’ இந்த படத்தை பற்றி நிருபர்களுக்கு ஆர்யா பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு ஆர்யா அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- விஷ்ணுவர்தன் டைரக்ஷனில் தொடர்ந்து 5 படங்களில் நடித்து இருக்கிறீர்களே, அந்த அனுபவம் பற்றி கூற முடியுமா?
பதில்:- விஷ்ணுவர்தனுக்கும், எனக்கும் இடையே உள்ள நட்புதான் அதற்கு காரணம். ஆனால், படப்பிடிப்பின்போது நண்பன் என்பதை அவர் காட்டிக்கொள்ள மாட்டார். ஒரு டைரக்டராக நடந்து கொள்வார். ‘பட்டியல்’ படத்தின் முதல்நாள் படப்பிடிப்பில், என்னை ஒரு பெரிய பாலத்தில் இருந்து ஆற்றில் குதிக்க சொன்னார். நான் தயங்கினேன். உடனே, ‘‘நான் குதித்துக் காட்டட்டுமா?’’ என்று விஷ்ணுவர்தன் கேட்டார். அடுத்த நிமிடம் நானே குதித்து விட்டேன்.
காதல் காட்சி
கேள்வி:- நெருக்கமான காதல் காட்சிகளிலும் விஷ்ணுவர்தனே நடித்துக்காட்டுவாரா?
பதில் (சிரித்தபடி):- எப்படி கண்டுபிடித்தீர்கள்? காதல் காட்சிகளில், அவர் நடித்துக்காட்டியபின்தான் என்னை நடிக்க வைப்பார்.
கேள்வி:- இந்த பட கதாநாயகி தீபாசன்னதிக்கு உங்கள் வீட்டில் பிரியாணி விருந்து கொடுத்து விட்டீர்களா?
பதில்:- இன்னும் அவர் பிரியாணி விருந்து சாப்பிடவில்லை. படப்பிடிப்பின்போது அவரை பேச வைத்ததே பெரிய விஷயம். இவருக்கு நேர் எதிரானவர், சுவாதி. வாயாடி. இரண்டு பேருக்கும் இடையே சண்டை மூட்டி விட்டு வேடிக்கை பார்க்க முயற்சி செய்தோம். நடக்கவில்லை. இருவருமே தோழிகளாகி விட்டார்கள்.
காதல் திருமணம்
கேள்வி:- வீட்டில், உங்களுக்கு பெண் பார்ப்பதாக பேச்சு வந்ததே?
பதில்:- அந்த கஷ்டத்தை நான் என் பெற்றோர்களுக்கு கொடுக்க மாட்டேன். காதல் திருமணம்தான் செய்து கொள்வேன். அதற்கு என் பெற்றோர்களும் சம்மதிப்பார்கள். எனக்கு மணமகளாக வரப்போகிறவர் நடிகையாக இருப்பாரா அல்லது வேறு ஒரு பெண்ணா? என்பதை முடிவு செய்யவில்லை.
கேள்வி:- நயன்தாராவுக்கு பரந்த மனதுடன், ‘‘எங்கிருந்தாலும் வாழ்க’’ என்று சொல்லியிருக்கிறீர்களே?
பதில்:- இப்போதும் சொல்கிறேன். அவர் எங்கிருந்தாலும் வாழ்க. அவருடைய திருமணத்தில் நான் நிச்சயமாக கலந்து கொள்வேன்.’’
இவ்வாறு ஆர்யா கூறினார்.
சமந்தா ராகுல் ப்ரீத் சிங் இடையே கவர்ச்சி சண்டை.. பற்றி எரியும் தெலுங்கு திரையுலகம்
அருண் விஜய் நடித்த ’தடையற தாக்க’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ராகுல் ப்ரீத் சிங். அதன் பிறகு ’என்னமோ ஏதோ’ படத்தில் கெளதம் கார்த்திக் ஜோடியாக நடித்தார். இவர் தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழ்கிறார்.
தற்போது இவருக்கும் நடிகை சமந்தாவிற்கும் இடையே ஒரே சண்டை சச்சரவாக இருக்கிறது என்று தெலுங்கு திரையுலகம் கூறுகிறது. காரணம் சமந்தாவிற்கு வரும் வாய்ப்பை எல்லாம் கவர்ச்சியில் தாராளம் காட்டி தன் பக்கம் இழுத்து விடுகிறாராம் ராகுல் ப்ரீத் சிங். ஏற்கனவே ஒரு சில முன்னணி நடிகர்களின் படங்களை சமந்தா எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில், அந்த இயக்குநர்களிடம் சென்று கதைக்கு தேவையென்றால் கவர்ச்சியாக நடிக்கிறேன் என்று கூறி அவர்களை தன் பக்கம் இழுத்துவிட்டாராம் ராகுல் ப்ரீத் சிங்.. இதனால் சமந்தா எதிர்பார்த்த படங்கள் எல்லாம் கை நழுவி போனதாம்.
அதோடு ராகுல் ப்ரீத் சிங் அளித்த ஒரு பேட்டியில், “முதலிடத்தில் இருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் சமந்தாவைக் நான் காலி பண்ணியே தீருவேன்,” என்று கூறியிருந்தார். இது தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆரம்பக்காலத்தில் தெலுங்கு திரை உலகின் முடிசூடா ராணியாக இருந்த சமந்தாவுக்கு தமிழ் திரை உலகிலும் முன்னணி நடிகையாக வேண்டும் என்ற ஆசை வந்தது.
அதனால் தமிழ் படங்களில் கவனம் செலுத்தி தெலுங்கில் சொதப்பத் தொடங்கினார். விளைவு, சமந்தா நடித்த படம் அக்கட தேசத்தில் ஊத்தும் நிலைமை ஏற்பட்டது. தற்போது சமந்தா தமிழில் தொடர்ந்து நடித்தாலும் அவரின் மார்க்கெட் ஒன்றும் பெரிதாக இல்லை. தெலுங்கு திரையுலகிலும் அவர் நிலைமை சரியில்லை. இந்த சூழலில் டோலிவுட்டின் பெரிய ஹீரோக்களின் பட வாய்ப்பை பெற சமந்தா, ராகுல் ப்ரீத் சிங் இடையே ஒரே கவர்ச்சி சண்டை நடந்து வருவதாக தெலுங்கு திரையுலகில் கூறப்படுகிறது.
நயன்தாராவின் புதிய காதலரை வெளுத்து வாங்கிய தனுஷ்.. ஆறுதல் சொன்ன நயன்
விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிவரும் படம் ’நானும் ரெளடிதான்’. தனுஷ் தயாரிப்பில் உருவாகிவரும் இப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் பார்த்திபன், ராதிகா, பாலாஜி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துவருகின்றனர். இப்படத்திற்கு தனுஷுன் ஆஸ்தான இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தில் நடிக்கும் போது தான் நயன்தாராவுக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது என்று கிசுகிசுக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது இப்படத்திற்கான ஷூட்டிங்கை முடிக்காமல் விக்னேஷ் இழுத்தடித்து வருகிறாராம். காரணம் ஷூட்டிங்கை முடிந்துவிட்டால் எங்கே நயன்தாரவை சந்திப்பது..? தனியாக சந்தித்தால் மீடியா கண்டுப்பிடித்து விடுவார்கள் என்று ‘நானும் ரெளடிதான்’ படப்பிடிப்பை ஜவ்வாக இழுத்து வருகிறாராம் விக்னேஷ் சிவன்.
இதனால் படத்தின் தயாரிப்பாளரான தனுஷ், தெரியாம கோர்த்துவிட்டுடமே என்று கடுப்பில் உள்ளாராம்.. இவரை மேலும் கடுப்படிக்கும் விதமாக போன வாரம் இன்னொரு நிகழ்வும் நடந்துள்ளதாம். அது என்னவென்றால் சமீபத்தில் தனுஷை பார்க்க சென்ற விக்னேஷ் சிவன் தனுஷிடம், இன்னும் ஷூட்டிங் முடியல. ஐந்து நாள் இருக்கு என்றாராம்.
உடனே தனுஷ் “யோவ்ஸ நீ லவ் பண்ணுறதுக்கு நானா கிடைச்சேன்? முதல்ல ஐம்பது நாள்ல இந்த படத்தை முடிச்சுர்றதா நீதானே சொன்னே? அப்புறம் 78 நாள் படம் பிடிச்சுருக்கே. அதுவும் போதாம இப்ப வந்து இன்னும் ஐந்து நாள் கொடுன்னு கேட்கிறஸ நான் இனிமேல் பத்து பைசா கூட செலவு பண்ண மாட்டேன். படத்தை முடிச்சு கொடுக்கறது உன் பொறுப்பு” என்று கோபப்பட்டு இருக்கிறார்.
இந்த விஷயம் நயன்தாரா காதுக்கு செல்ல அவர் விக்னேஷ் சிவனிடம் “அவர்கள் அப்படிதான். நீ வலைப்படாதே” என்று ஆறுதலளித்தாராம். அதோடு‘கடைசி ஐந்து நாட்கள் ஷுட்டிங் முடிக்க ஆகும் செலவை நானே தர்றேன்’ என்றாராம். சொன்னபடியே அவர் பணத்தில் தான் ஷுட்டிங்கும் முடிந்திருப்பதாக கூறுகின்றனர்.