அரசியல்வாதியாக நடிக்கும் தனுஷ்?
தனுஷ் தற்போது பிரபு சாலமன் படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படம் முடிந்த கையோடு, துரை.செந்தில்குமார் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். பொலிட்டிக்கல் திரில்லராக உருவாகவிருக்கும் இதில், தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.
அண்ணன், தம்பியாக நடிக்கும் தனுஷ், இதில் ஒரு கதாபாத்திரத்தில் அரசியல்வாதியாக நடிப்பதாக கூறப்படுகிறது. அண்ணன் அரசியல்வாதியாகவும், தம்பி எதைப்பற்றியும் கவலைப்படாத லோக்கல் ரவுடியாகவும் நடிக்கப் போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இதில் தம்பி கதாபாத்திரத்தில் நடிக்கும் தனுஷுக்கு ஜோடியாக ஷாமிலி ஒப்பந்தமாகியுள்ளார். அண்ணன் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க லட்சுமிமேனனை அணுகியுள்ளனர். ஆனால், அவர் இதுவரை எந்த பதிலும் கூறவில்லை.
இப்படத்தின் படப்பிடிப்பை இந்த மாதத்தில் தொடங்க முடிவு செய்துள்ளார். டிசம்பர் மாத இறுதியில் படப்பிடிப்பு முடித்துவிடவும் முடிவு செய்துள்ளனர். இதுதவிர, வெற்றிமாறன் இயக்கும் ‘வடசென்னை’ படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் தனுஷ்.
தொடர்ந்து வில்லனாக நடிக்க விரும்பவில்லை: அரவிந்த்சாமி
தனி ஒருவன் படத்தில் அமைதியான அழகிய வில்லனாக நடித்து இருக்கும் அரவிந்த் சாமிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ரசிகர்களும் இவரது நடிப்பை புகழ்ந்து வருகிறார்கள். மாறுபட்ட கோணத்தில் இயக்கியுள்ள ராஜா, சிறப்பாக காட்சிகளை பதிவு செய்துள்ள ஒளிப்பதிவாளர் ராம்ஜி ஆகியோருக்கும் இது முக்கிய படமாக அமைந்துள்ளது.
இந்த படத்தில் வில்லனாக நடித்தது குறித்து அரவிந்த் சாமியிடம் கேட்ட போது... மாறுபட்ட வேடங்களில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசை. தனி ஒருவன் படத்தில் வில்லன் வேடம் என்றாலும் வித்தியாசமான, எனக்கு பிடித்தமான வேடம் என்பதால் நடிக்கஒப்புக் கொண்டேன். நான் நினைத்ததுபோலவே ‘தனிஒருவன்’ படம் நன்றாக வந்திருக்கிறது.
எனது நடிப்பும் சிறப்பாக அமைந்திருக்கிறது. ஹீரோ – வில்லன் என்பதைவிட கதை ரசிக்கும்படி இருக்கவேண்டும். அது போன்ற கதை என்பதால் இதில் நடித்தேன் இந்த படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. கதையை இயக்குனர் ராஜா என்னிடம் சொல்லும் போதே இது நன்றாக வரும் என்று நினைத்தேன். அது நடத்திருக்கிறது.
இந்த படத்தில் நான் நடித்திருக்கும் வேடத்துக்கும் என் குணத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இந்த படம் எனக்கு புதிய அனுபவம். தனி ஒருவன் படம் வெளியான பிறகு பாராட்டுகள் ஏராளமாக வருகிறது. எனது நடிப்பை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடையும் போது எனக்கு மன நிறைவு ஏற்பட்டிருக்கிறது. என்றாலும் தொடர்ந்து வில்லன் வேடத்தில் நடிக்க விருப்பம் இல்லை.
அடுத்து வேறு முயற்சி எடுப்பேன். என் மீது மக்கள் வைத்திருக்கும் அன்பை இப்போது புரிந்து கொண்டிருக்கிறேன். எனக்கு சொந்த நிறுவனம் உள்ளது. எனது ஐ.டி. கம்பெனியில் 5 ஆயிரம் பேர் வேலை பார்க்கிறார்கள். இந்தியா முழுவதும் இதன் கிளைகள் உள்ளன. இதை நன்றாக நடத்த வேண்டும். நடிப்பும் எனக்கு ஒரு தொழில். என்னால் முடிந்த வரை இரண்டிலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று முயற்சி எடுக்கிறேன்.
கம்பெனியை கவனித்துக் கொண்டு நேரம் கிடைக்கும்போது கதை கேட்பேன். நானும் ஒரு கதை தயாரித்து வைத்திருக்கிறேன். படம் இயக்க வேண்டும் என்ற ஆசையும் உண்டு. இதற்கு கொஞ்சநாள் ஆகும். தனி ஒருவன் படத்துக்கு பிறகு இந்தியில் ‘டியர்டாட்’ என்ற படத்தில் நடித்து இருக்கிறேன். பொருத்தமான கதை அமையும் போது அடுத்த படத்தில் நடிப்பேன் அதற்கு வித்தியாசமான கதை அமைய வேண்டும்.
புதிய படத்தில் நடிக்க ஜோதிகா ஒப்பந்தம்
முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகா, திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிக்காமல் இருந்தார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு மலையாள ரீமேக்கான ‘36 வயதினிலே’ என்ற படம் மூலம் ரீஎன்ட்ரீ கொடுத்தார். நடிகைக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தில் ஜோதிகாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடித்தாலும் முன்பு இருந்த அதே துறுதுறு நடிப்பால் ரசிகர்களை மிகவும் கவர்ந்தார்.
இப்படத்தின் வெற்றியையடுத்து நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்று கூறிய ஜோதிகா, தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் நிறைய விளம்பரங்களில் நடிக்கவும் ஜோதிகாவுக்கு வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. தற்போது ஒரு விளம்பரத்தில் நடிப்பதற்காக மும்பையில் முகாமிட்டிருக்கிறார்.
மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்துவதால் தன் குடும்பத்தை எந்த விதத்திலும் பாதிக்காது என்று
ஜோதிகா கூறியிருக்கிறார்
.
60 வயது பெண்ணாக நடிக்கும் வேதிகா
‘பரதேசி’, ‘காவியத்தலைவன்’ ஆகிய படங்களில் நடித்த வேதிகா, தற்போது பிரபுதேவா தயாரிக்க இருக்கும் ‘வினோதன்’ படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் வேதிகா, மறைந்த பிரபல நடிகர் ஐசரி வேலனின் பேரன் வருணுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். இப்படத்தை விக்டர் ஜெயராஜ் இயக்கவுள்ளார். வருணுக்கு ஜோடியாக பல முன்னணி நடிகைகளை தேடி வந்தனர். கடைசியாக வேதிகாவை தேர்வு செய்தனர்.
புது படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் பிரபுதேவா தயாரிப்பில் நடிப்பதன் மூலம் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கும் வேதிகா, இப்படத்தில் இரண்டு விதமான கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கிறாராம். ஒன்று பள்ளி மாணவியாகவும் மற்றொன்று 60 வயது பெண்ணாகவும் நடிக்க இருக்கிறாராம்.
இதற்கு முன் ‘இந்தியன்’ படத்தில் நடிகை சுகன்யா இளம் வயது பெண்ணாகவும், 60 வயது பெண்ணாகவும் நடித்திருந்தார். இதில் சுகன்யாவின் நடிப்பு பேசப்பட்டது. இதுபோன்று வேதிகா நடிக்கவுள்ள கதாபாத்திரமும் பேசப்படுமாம்.
சைக்கலாஜிக்கல் ரொமான்டிக் திரில்லராக உருவாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க இருக்கிறது.
செங்கல்பட்டிலும் பாயும்புலி வெளியானது எப்படி?