இவளோ பெரிய பாம்பு - அலறியடித்த ஸ்ரீ பிரியங்கா
கங்காரு, வந்தாமலை படங்களில் நடித்தவர் ஸ்ரீ பிரியங்கா. இவர் தற்போது சாரல் என்றொரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மணி இயக்குகிறார். மைனா, அட்டகத்தி போன்று இந்த படத்தின் பெரும்பகுதி கதையும் பஸ்சுக்குள்தான் நடக்கிறதாம். அதோடு இயற்கை எழில் மிகுந்த பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு பாடல் காட்சியை மார்த்தாண்டம் அடுத்துள்ள முக்கடல் மலைப்பகுதியில் படமாக்கியுள்ளனர். இதற்காக நாகர்கோயிலை அடுத்த மார்த்தாண்டம் பகுதிக்கு சென்று அங்கிருந்து முக்கடல் மலைப்பகுதிக்கு ஒரு ஜீப்பில் சென்றார்களாம்.
செங்குத்தாக மலைஉச்சியை நோக்கி ஜீப் சென்றபோது உள்ளே இருந்த ஹீரோ அசார், ஹீரோயின் ஸ்ரீபிரியங்கா உள்பட யூனிட் நபர்கள் அனைவரும் உயிரை கையில் பிடித்துக்கொண்டுதான் ஜீப்பிற்குள் அமர்ந்திருந்தார்களாம். அந்த ஜீப் 8 கிலோ மீட்டர் தூரத்தை 2 மணி நேரத்திற்கு பிறகு கடந்து மலை உச்சியை அடைந்ததாம். தன் பிறகு மலை உச்சியில் உள்ள நீர்நிலைகள் உள்ள இடங்களில் பாடல் காட்சியை படமாக்கியுள்ளனர். அதோடு அந்த உயரத்திலும் கிரேனில் ஏறி அந்த காட்சியை படமாக்கியிருக்கிறார்கள். அப்படி படப்பிடிப்பை 6 மணி வரை நடத்தி விட்டு, மலை உச்சியில் இருந்து கீழே இறங்கினார்களாம்.
அப்போது அந்த சிறிய பாதையில் ஜீப் மெதுவாக வந்து கொண்டிருக்க அவ்வப்போது பெரிய பாம்புகளும் சாலையை கடந்து சென்றிருக்கின்றன. அதைப்பார்த்து பயத்தில் அலறிவிட்டாராம் பிரியங்கா. ஒருவழியாக இரவு 8 மணி அளவில் ஜீப் மலையை விட்டு கீழே இறங்கியபோது, இனிமேல் இந்த மாதிரி மலை உச்சிக்கு சென்று எந்த படத்திலும் நான் நடிக்க மாட்டேன். உயிரை பணயம் வைத்து நடித்து சம்பாதிக்க வேண்டிய அவசியமே இல்லை என்று டைரக்டரைப்பார்த்து சொன்னாராம் பிரியங்கா.
'தாரைத்தப்பட்டை'யில் வெளுத்துக் கட்டும் வரலட்சுமி
சிம்பு நடித்த போடாபோடி படத்தில் பாலே டான்சராக நடித்தவர் வரலட்சுமி. அதன்பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த மதகஜராஜா படத்தில் அஞ்சலியுடன் இணைந்து இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்தார். ஆனால் அந்த படம் திரைக்கு வரவில்லை. இந்த நிலையில்தான், பாலாவின் தாரைத் தப்பட்டை படத்திற்காக கமிட்டானார் வரலட்சுமி. இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக கரகாட்டக்காரியாக நடித்துள்ளார் அவர். இந்த படவாய்ப்பு வரலட்சுமிக்கு கிடைக்க முக்கிய காரணம் அவரது பாலே நடனம்தான்.
நடனத்தில் அவர் தேர்ச்சி பெற்றவராக இருந்ததால்தான் அவரால் கரகாட்டத்தை எளிதில் பயிற்சி எடுத்துக்கொள்ள முடியும் என்று அவரை புக் பண்ணினார் பாலா. அதோடு, சசிகுமார்-வரலட்சுமி இருவருக்குமே பல மாதங்களாக அவர் கரகாட்ட பயிற்சி கொடுத்த பின்னர்தான் நடிக்க வைத்தார். அதோடு, வரலட்சுமியை இரண்டுவிதமான கோணங்களில் படத்தில் காட்டுகிறாராம் பாலா.
அந்த வகையில், அவர் கரகாட்டக்கரியாக இருக்கும்போது ஸ்லிம்மாகவும், அதன்பிறகு உடல் எடையை அதிகப்படுத்தியும் இரண்டுவிதமாக நடித்திருக்கிறார். அந்த வகையில், இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் பெருத்து, இடை சிறுத்து என இரண்டுவிதமான கெட்டப்பில் அனுஷ்கா நடித்திருப்பது போன்று இந்த படத்தின் கதைக்கேற்ப வரலட்சுமியும் எடை குறைத்து, அதிகப்படுத்தி என நடித்திருக்கிறார். அதோடு முதல் இரண்டு படங்களிலும் கவர்ச்சிகரமான கதாநாயகியாக நடித்த வரலட்சுமியை இந்த படத்தில் அழுத்தமான காட்சிகளிலும் நடிக்க வைத்திருக்கிறாராம் பாலா. அதனால், தாரைத்தப்பட்டை வரலட்சுமி பக்கா பர்பாமென்ஸ் நாயகியாக வெளிப்படுத்தும் என்கிறார்கள்.
என் நெடுநாள் கனவை நிறைவேற்றப் போவது வினோதன் தான் : வேதிகா
‘பரதேசி’, ‘காவியத்தலைவன்’ ஆகிய படங்களில் நடித்த வேதிகா, தற்போது பிரபுதேவா தயாரிக்க இருக்கும் ‘வினோதன்’ படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் வேதிகா, மறைந்த பிரபல நடிகர் ஐசரி வேலனின் பேரன் வருணுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். இப்படத்தை விக்டர் ஜெயராஜ் இயக்கவுள்ளார். வருணுக்கு ஜோடியாக பல முன்னணி நடிகைகளை தேடி வந்தனர். கடைசியாக வேதிகாவை தேர்வு செய்தனர்.
இப்படத்தில் நடிப்பது குறித்து வேதிகா கூறும்போது, ‘இயக்குனர் விக்டர் என்னிடம் கதை சொல்ல அணுகும் போது, பிரபுதேவாவுடைய நிறுவனம் சார்பில் தயாரிக்கும் படம் என்றவுடன் மிகவும் உற்சாகமானேன். கதையை கேட்டவுடன் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. அவ்வளவு நேர்த்தியான, செதுக்கப்பட்ட கதை.
'பரதேசி', 'காவியத் தலைவன்' ஆகிய படங்களின் கதாபாத்திரத்தை போலவே வித்தியாசமான, மிகவும் சவாலான கதாபாத்திரம் தான் இந்தப் படத்திலும் இருக்கிறது. 'வினோதன்' மனோதத்துவத்தின் பின்னணியில் உருவாகும் ஒரு திரில்லர் கதை ஆகும். இயக்குனர் விக்டர் தன்னுடைய கதாபாத்திரம் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் குறித்து ஒரு ஆய்வே செய்து வைத்து இருக்கிறார். அதன் அடிப்படையில் அவர் எனக்கும், கதாநாயகன் வருணுக்கும் நடிப்பு பயிற்சி வகுப்பு எடுக்க உள்ளார். இந்த வகுப்பு வளர்ந்து வரும் என்னை போன்ற நடிகர் -நடிகையருக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாகும்.
'வினோதன்' மூலம் என்னுடைய நெடுநாள் கனவு நிறைவேற உள்ளது. நான் சிறு வயதில் இருந்தே பிரபுதேவாவுடைய தீவிர ரசிகை. இப்பொழுது ஒரு நடிகையாக அவருடைய தயாரிப்பில் நடிக்கப்போவதை எண்ணி மிகவும் சந்தோஷப்படுகிறேன். அவருடைய இயக்கத்திலும், அவருக்கு இணையாகவும் நடிக்கும் நாட்கள் வெகுதொலைவில் இல்லை என்பது மட்டும் நிச்சயம்’ என்றார்.
இதற்கு நயன்தாரா சரிப்பட்டுவருவாரா..!
நயன்தாரா தான் தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நாயகி. இவர் எப்போதும் முன்னணி நடிகர்களின் படங்களில் மட்டும் தான் நடிப்பார்.இந்நிலையில் அறிமுக இயக்குனர் பிரஷாந்த் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புருஸ்லீ படத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.இதற்கு நயன்தாரா சம்மதிப்பாரா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
ஸ்ருதிஹாசன் ஆசையில் மண்ணை போட்ட காஜல் அகர்வால்
தமிழை விட தெலுங்கில் முன்னணி நடிகைகளுக்கிடையே பெரும் போட்டி நடந்து வருகிறது. அதிலும் குறிப்பாக சமந்தா, காஜல் அகர்வால், ஸ்ருதிஹாசன் இந்த மூன்று பேர்களுக்கிடையே தான் போட்டி பயங்கரமாக உள்ளது.
இன்றைக்கும் ஸ்ருதிஹாசன் கையில் எக்கச்சக்க படங்கள் உள்ளன. அப்படி இருந்தும் புதுப்பட வாய்ப்புகளை வேட்டையாடுவதை நிறுத்தவில்லை. காரணம் எந்தப்பட வாய்ப்பும் தன்னை விட்டுப் போய் விடக்கூடாது என்கிற ஆசை தான். அப்படி கவனமாக இருந்தும் அவர் நடிக்க வேண்டிய ஒரு படம் காஜல் அகர்வாலுக்கு போயிருக்கிறது.
தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் ரிலீசான ‘கப்பர் சிங்’ படத்தில் ஸ்ருதிஹாசன் தான் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். படம் அங்கு மிகப்பெரிய ஹிட். இதனால் பவன் கல்யாணின் அடுத்த பட வாய்ப்பும் தனக்குத்தான் வரும் என்கிற எதிர்பார்ப்பில் இருந்தார் ஸ்ருதி.
ஆனால் இப்போது செமக் கடுப்பில் இருக்கிறார் ஸ்ருதி. பவன் கல்யாணின் புதுப்படத்தை காஜல் அகர்வால் தட்டிப் பறித்து விட்டார் என்பது தான் அவரது கடுப்புக்குக் காரணம். ஆனால் பவன் கல்யாண் – காஜல் அகர்வால் காம்பினேஷன் புதுசா இருக்கும் என்பதாலேயே அவரை கதாநாயகியாக்கியிருக்கிறோம் என்கிறது அப்படத்தின் இயக்குநர் வட்டாரம்.