திரிஷாவிடம் ஒரேயொருமுறை கதை சொல்லி ஓகே வாங்கிய அறிமுக இயக்குனர்
திரிஷா நடிப்பில் உருவாகவிருக்கும் ‘நாயகி’ படத்தை இயக்கவிருப்பவர் இயக்குனர் கோவி. இவர், தெலுங்கில் வெளிவந்த ‘கிக் 1’, ‘கிக் 2’ ஆகிய வெற்றிப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர். தமிழுக்கு இந்த படத்தின் மூலம் அறிமுகமாகியிருக்கிறார்.
இப்படத்தின் கதையை திரிஷாவிடம் ஒரேயொரு முறை மட்டுமே சொல்லி ஓகே வாங்கியிருக்கிறார் கோவி. தன்னுடைய முதல் படத்திலேயே தமிழின் முன்னணி நடிகையாக வலம்வரும் திரிஷா நடிப்பது தனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை தருவதாக கோவி தெரிவித்துள்ளார்.
இப்படத்தில் நாயகிக்குத்தான் முக்கியத்துவம் என்றாலும், கதாநாயகனாக கணேஷ் வெங்கட்ராமனும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். மேலும், கோவை சரளா, மனோபாலா, செண்ட்ராயன் என காமெடி பட்டாளமும் இப்படத்தில் உண்டு.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளிவந்து அனைவரையும் மிரட்டியுள்ளது. திரிஷா தற்போது அரண்மனை 2 என்ற பேய் படத்தில் நடித்து வருகிறார். அதேபோன்று, இப்படமும் திகில் நிறைந்த காமெடி படமாக உருவாகவிருக்கிறது.
சாந்தனு திருமணத்தில் தாலிகட்டும் வரை கூடவே இருந்து வாழ்த்திய விஜய்
இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ்-பூர்ணிமா தம்பதியின் மகன் சாந்தனு. இவர் ‘சக்கரக்கட்டி’, ‘அம்மாவின் கைபேசி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் டி.வி. தொகுப்பாளினி கீர்த்திக்கும் திருமணம் செய்துவைக்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவீட்டாரும் சேர்ந்த நிச்சயதார்த்தம் செய்தனர்.
இந்நிலையில், இவர்களது திருமணம் இன்று சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இஸ்கான் கோவிலில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் இருவரது குடும்பத்தாரும், தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
நடிகர் விஜய், இவ்விழாவிற்கு காலையிலேயே வருகை தந்து, தாலி கட்டும் வரை கூடவே இருந்து மணமக்களை ஆசீர்வதித்துவிட்டு சென்றார். மேலும், சரத்குமார், ராதிகா சரத்குமார், பிரபு, ராதாரவி, மணிரத்னம், சுஹாசினி, குஷ்பூ, விஷால், தெலுங்கு நடிகர் வெங்கடேஷ், இயக்குனர்கள் தரணி, ஹரி, காமெடி நடிகர் சூரி, கார்த்தி, ஜோதிகா, ரேவதி, சுகன்யா, நகுல், சங்கர் கணேஷ், ஆர்.சுந்தர்ராஜன், விக்ராந்த் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை ஆசீர்வதித்தனர்.
திருமணத்திற்கு வருகை தந்த அனைவரையும் இயக்குனர் பாக்யராஜின் சிஷ்யர்களான இயக்குனர்கள் பார்த்திபன்-பாண்டியராஜன் இருவரும் வாசலில் நின்று வரவேற்றனர்.
அஜித் பட நாயகியுடன் ஜோடி சேரும் அசோக் செல்வன்
அஜித் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘என்னை அறிந்தால்’. இதில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா மற்றும் அனுஷ்கா நடித்திருந்தார்கள். இவர்களை தவிர மற்றொரு நாயகியாக பார்வதி நாயர் நடித்திருந்தார். இவர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இந்த படத்தில் பார்வதி நாயரின் நடிப்பு அனைவராலும் கவரப்பட்டது. பார்வதி நாயர் அருண் விஜய்யுடன் இணைந்து வில்லத்தனத்தில் மிரட்டியிருந்தார். இப்படத்தை தொடர்ந்து பார்வதி நாயருக்கு பல்வேறு பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது.
தற்போது இவர் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். இவர்கள் நடிக்க இருக்கும் படத்திற்கு ‘பிறை தேடிய நாட்கள்’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது. ரொமண்டிக் கதையாக உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்க இருக்கிறது.
ஸ்ருதியின் நெருங்கிய தோழியான பூஜாகுமார்
கோலிவுட்டில் தற்போதைய இளைய தலைமுறை நடிகர், நடிகைகள் பொறாமையின்றி தங்களுக்குள் நட்பாக பழகிக் கொள்வது சினிமாவில் நல்ல விஷயம்தான்.
இந்த வரிசையில் தற்போது கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசனும், நடிகை பூஜாகுமாரும் கோலிவுட்டில் நல்ல தோழிகளாக வலம் வருகிறார்கள். மும்பையில் குடியேறிவிட்ட ஸ்ருதிஹாசனுக்கு, இப்போது நெருங்கிய தோழி யார் என்றால் பூஜாகுமார்தானாம். மும்பையில் இருவரும், அடிக்கடி ஷாப்பிங் செல்வது, ஹோட்டல்களுக்கு செல்வது என ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார்களாம்.
பூஜாகுமார், கமல் நடிப்பில் வெளிவந்த ‘விஸ்வரூபம்’, ‘உத்தமவில்லன்’ ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தனது அப்பாவுடன் படத்தில் நடித்தபோதே பூஜாகுமாரும், ஸ்ருதிஹாசனும் நெருங்கிய தோழிகளாகிவிட்டதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் சென்னையில்கூட இருவரும் ஒன்றாக பப்பில் நுழைந்து ஜாலியாக பொழுதை கழித்ததாகவும் கூறப்பட்டது. பூஜாகுமார் நடிப்பில் தற்போது ‘விஸ்வரூபம் 2’ படம் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.
மெட்ரோ ரெயிலில் சினிமா படப்பிடிப்பு - ஒரு மணி நேரத்திற்கு ரூ.4 லட்சம் கட்டணம்
மெட்ரோ ரெயிலில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு ரூ.4 லட்சம் என வாடகை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 2 வழித்தடங்களில் நடைபெற்று வரும் மெட்ரோ ரெயில் திட்ட பணிகளில், முதற்கட்டமாக கோயம்பேடு - ஆலந்தூர் இடையே ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. 10 கிலோ மீட்டர் இடைவெளியில் மட்டுமே தற்போது மெட்ரோ ரெயில் இயக்கப்படுவதால், எதிர்பார்த்த அளவு பயணிகளிடம் வரவேற்பு கிடைக்கவில்லை.
இந்த நிலையில், மெட்ரோ ரெயிலில் சினிமா படப்பிடிப்பு நடத்த தமிழ் திரை துறையினர் ஆர்வத்துடன் இருந்தனர். முதலில் மெட்ரோ ரெயில்களில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி கிடையாது என்று கூறப்பட்டது. ஆனால், டெல்லி மற்றும் மும்பையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரெயில்களில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
எனவே, அதனை கருத்தில் கொண்டு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகளும் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்க முடிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து, டெல்லி மற்றும் மும்பை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.
பொதுவாக, ரெயில்களில் நாள் வாடகைக்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், மெட்ரோ ரெயில்களில் ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவு என்று கட்டணம் நிர்ணயிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.
அதற்கான கட்டணம் தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ ரெயிலில் சினிமா படப்பிடிப்புக்கு ரூ.4 லட்சம் என்று வாடகை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், நெரிசல் மிகுந்த நேரங்களில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது. காலை நேரத்திலும், நெரிசல் இல்லாத நேரங்களில் மட்டுமே மெட்ரோ ரெயிலில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
அதிக நேரத்திற்கு மெட்ரோ ரெயிலை சினிமா படப்பிடிப்புக்காக வாடகைக்கு கேட்கும்போது, தனி ரெயிலையே ஒதுக்கிக்கொடுக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.