டி.ராஜேந்தருக்கு நன்றி சொன்ன உதயநிதி: முடிவுக்கு வந்ததா வாலு சர்ச்சை?வாலு படத்துக்குத் திரையரங்குகள் கிடைக்காமல் உதயநிதி தடுக்கிறார் என்பது போன்ற கருத்துகள் சிம்பு ரசிகர்களால் சொல்லப்பட்டது. அதையொட்டி உதயநிதி மீது கடுமையான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. இதனால் கடுங்கோபமடைந்த உதயநிதி, கடுமையான வார்த்தைகளைச் சொல்லி அந்தக்குற்றச்சாட்டை முற்றாக மறுத்திருந்தார்.இந்நிலையில் இன்று வாலு படவெளியீடு சம்பந்தமாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்த, டி.ராஜேந்தரிடம் இதுபற்றிக்கேட்டபோது, இதில் நான் யாரையும் குற்றம் சொல்லமாட்டேன், அதிகப்படங்களை வெளியிடுகிற விநியோகஸ்தருக்கு அதிகமான திரையரங்குகள் கிடைப்பது இயல்பானதுதான் என்று சொல்லியிருந்தார்.அவர் இவ்வாறு சொன்ன விசயம் தெரிந்த உதயநிதி, தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், நான் எப்போதும் டி.ஆர் சாரை மதிப்பவன், உண்மையைத் தெளிவுபடுத்தியதற்காக அவருக்கு நன்றி என்று சொல்லியிருக்கிறார்.சமுகவலைதளங்களில் மட்டுமே இந்தவிசயம் பகிரப்படுகிறதா? அப்பது அதைத்தாண்டி தனிப்பட்ட முறையில் யாராவது பேசி சமாதானம் ஏற்பட்டதா? என்று தெரியவில்லை. எப்படியோ இந்தச்சிக்கல் இதோடு முடிவுக்கு வந்தது நல்லவிசயம்தான்.என் படத்துக்கு காளி டைட்டில் வேண்டாம் ரஜினி பிடிவாதம்ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பது உறுதியான உடனே, யாரெல்லாம் ரஜினியோடு நடிக்கவிருக்கிறார்கள் என்பது தான் கோலிவுட்டில் பேச்சாக இருந்தது. ஆனால், பெரிய நடிகைகள், நாயகர்கள் யாருமே இல்லாமல் ஒரு புதிய அணியாக ரஞ்சித் ஒப்பந்தம் செய்திருக்கிறார்.ரஜினிக்கு ஜோடியாக ராதிகா ஆப்தே ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இளம் வயது ரஜினிக்கு ஜோடியாக ராதிகா ஆப்தே நடிக்கும் காட்சிகள் அனைத்துமே சென்னையில் படமாக்கப்பட இருக்கிறது. சென்னையில் 10% படப்பிடிப்பும், மீதமுள்ள அனைத்து காட்சிகளும் மலேசியாவில் படமாக்கப்பட இருக்கிறது.வயதான தாதா வேடத்தில் நடிக்கவிருக்கும் ரஜினியின் நண்பர் மகனாக நடிக்க கலையரசன் ஒப்பந்தமாகி இருக்கிறார். மேலும், நாசர் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இப்படத்தில் முக்கியமான ரஜினிக்கு மகள் வேடத்தில், ‘பரதேசி’ மற்றும் ‘அரவான்’ உள்ளிட்ட படங்களின் மூலம் அறியப்பட்ட தன்ஷிகா நடிக்க இருக்கிறார்.ஆகஸ்ட் முதல் வாரத்தில் படப்பிடிப்பு துவங்க திட்டமிட்டு நடிகர்களிடம் தேதிகளும் வாங்கியிருந்தார்கள். ஆனால் மலேசியா விசா விவகாரங்கள் மற்றும் நடிகர்களின் ஒப்பந்தம் முடியாததால் படப்பிடிப்பு தள்ளிப் போனது. இதனால் ஆகஸ்ட் முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை.மேலும், பிரகாஷ்ராஜிடம் தேதிகள் தள்ளி கேட்டபோது, என்னிடம் இல்லை.. நீங்கள் கேட்கும் தேதிகள் வேறு படத்துக்கு ஒதுக்கி விட்டேன் என்று தெரிவித்திருக்கிறார். இதனால், பிரகாஷ்ராஜ் இப்படத்தில் இருந்து விலகும் சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. ஆனால், ரஞ்சித் முக்கிய பாத்திரம் என்பதால், பிரகாஷ்ராஜ் தேதிகள் கிடைக்கும் நாளில் படப்பிடிப்பை மாற்றி வைத்திருக்கிறார். இதனால் தான் செப்டம்பட் 18ம் தேதி படப்பிடிப்பு தொடங்கப்பட இருக்கிறது என்கிறது படக்குழு.இப்படத்தின் தலைப்பு ‘காளி’ என பலரும் செய்திகளை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். இச்செய்தி குறித்து படக்குழுவினரிடம் விசாரித்த போது, “இயக்குநர் ரஞ்சித், ரஜினி சாரை சந்தித்து கதை விவாதம் நடைபெற்ற போது, ‘காளி’ என்று தலைப்பு வைக்கலாம் என பேச்சுவார்த்தை எழுந்தது உண்மை தான்.ஆனால் ரஜினி சார், “இந்தத் தலைப்பை வைத்தே ஆக வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், திரையுலகில் கொஞ்சம் விசாரித்துவிட்டு வையுங்கள்” என்று சொல்லிவிட்டார். ரஜினி சார் ஏன் இப்படி சொன்னார் என்று ரஞ்சித் விசாரித்த போது அத்தலைப்பின் மீது விவகாரங்கள் தெரிந்து தற்போது என்ன தலைப்பு வைக்கலாம் என்று ஆலோசனை நடத்தி வருகிறார்கள்” என்று தெரிவித்தார்கள். மேலும், கார்த்தி நடிப்பில் வெளியான ‘மெட்ராஸ்’ படத்துக்கு ரஞ்சித் முதலில் வைத்த தலைப்பு ‘காளி’ தான் என்பது நினைவுக் கூறத்தக்கது.‘காளி’ தலைப்பு விவகாரங்கள் குறித்து திரையுலகில் விசாரித்த போது, “ரஜினி நடித்த பழைய படமான ‘காளி’ படப்பிடிப்பில் தான் தீவிபத்து ஏற்பட்டு 5 பேர் பலியானார்கள். மேலும், ‘நரசிம்மா’ என்று பெயர் வைத்து படம் வெளியாகும் முன்பே இயக்குநர் மரணமடைந்துவிட்டார். ஆகையால் ‘காளி’, ‘நரசிம்மா’ போன்ற பெயர்களை எல்லாம் வைக்க தற்போது இயக்குநர்கள் தயங்கி வருகிறார்கள்” என்றார்கள்.செப்டம்பர் இரண்டாம் வாரத்தில் யாரெல்லாம் ரஜினியோடு நடிக்க இருக்கிறார்கள், படத்தின் தலைப்பு என்ன என்பதை எல்லாம் அறிவித்துவிட்டு படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு இருக்கிறது படக்குழு.தாமிரபரணி பானுவுக்குக் விரைவில் டும் டும் :காதலரை கரம் பிடிக்கிறாராம் !ஹரி இயக்கத்தில் உருவான ‘தாமிரபரணி’ படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்து தமிழ்த் திரையுலகுக்கு வந்தவர் பானு (முக்தா). தொடக்கத்தில் பெரிய அளவுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.அப்படி நடக்கவில்லையென்றாலும், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என 30 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். அவருக்குத் திருமணம் நடக்கவிருக்கிறது. மலையாள சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக விளங்கும் ரிமி டோமியின் சகோதரர் ரிங்கு டோமியை மணக்கவிருக்கிறார். இது ஒரு காதல் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.இவர்களது திருமண நிச்சயதார்த்தம் வருகிற 23-ஆம் தேதி கேரளா, கொச்சியில் நடக்கவிருக்கிறது. இதனை தொடர்ந்து இம்மாதம் 30 ஆம் திகதி திருமணம் நடைபெறவிருக்கிறது.ஆகஸ்ட் 14 அன்று வெளியாகவிருக்கும் ஆர்யாவின் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ மற்றும் பாபி சிம்ஹாவின் ‘பாம்பு சட்டை’ ஆகிய படங்களில் பானு நடித்துள்ளார். இவைதவிர சகுந்தலாவின் காதலன் என்கிற படத்திலும் நடித்திருக்கிறார். நிறைய கலைநிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக்கொண்டிருக்கிறாராம்.திருமணத்திற்குப் பிறகு நடிப்பீர்களா? என்று கேட்டதற்கு, கண்டிப்பாக என் நடிப்பு தொடரும் என்று அழுத்தந்திருத்தமாகச் சொல்கிறார். வாழ்த்துகள் பானு.செக்ஸ் விஷயத்தில் ஏடாகூடமான இனவெறியர்: டைட்டானிக் ஹீரோவை திட்டும் பத்திரிக்கை உரிமையாளர்இனவெறியர்வழக்கில் தோல்வி அடைந்த பத்திரிக்கையின் உரிமையாளர் பிரெட்ரிக் ட்ரஸ்கோலஸ்கி கூறுகையில், கேப்ரியோ செக்ஸ் விஷயத்தில் ஏடாகூடமானவர், அவர் இனவெறி பிடித்தவர். அதனால் தான் வழக்கு தொடர்ந்தார் என்றார்.கருப்பினத்தவர்கேப்ரியோ ஆரிய இன பெண்கள் போன்று உள்ளவர்களுடன் மட்டுமே உறவாடுவார். அப்படி இருக்கையில் அவர் கருப்பினத்தைச் சேர்ந்த ரிஹானாவின் குழந்தைக்கு தந்தை என்று நாங்கள் செய்தி வெளியிட்டதை தான் அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றார் பிரெட்ரிக்.எதிர்பார்த்தோம்இந்த வழக்கில் எங்களுக்கு தோல்வி ஏற்படும் என்று எதிர்பார்த்தோம். பிரான்ஸில் எந்த பத்திரிக்கை பிரபலமானவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி செய்தி வெளியிட்டாலும் உடனே பத்திரிக்கையை தான் கண்டிப்பார்கள் என்று பிரெட்ரிக் கூறினார்.கவிஞர் வைரமுத்துவின் கடிதத்தால் நெகிழ்ந்த ராஜமௌலிஇந்தியளவில் வரவேற்பையும், வசூலையும் அள்ளிக் குவித்து வரும் படம் ‘பாகுபலி’. ராஜமெளலி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.இப் படம் சமீபத்தில் இந்திய சினிமாவின் பல சாதனைகள் புரிந்து வருகிறது வசூலில் இந்தியாவின் வசூல் சாதனை படங்களில் மூன்றாவது இடத்தில் உள்ளது விரைவில் அது இரண்டாவது அதாவது PK சாதனையை முறியடிக்கும் என்று எதிர் பார்கிறார்கள், வாழ்த்துகளும் குவிந்து கொண்டுஇருக்கும் நேரத்தில் இரண்டாம் பாகத்தின் வியாபாரமும் இப்பவே சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது .இப்படத்தை பாராட்டி கவிஞர் வைரமுத்து, இயக்குநர் ராஜமெளலிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அக்கடிதத்தில் வைரமுத்து கூறியிருப்பது:“‘பாகுபலி’ பார்த்தேன். அந்தத் திகைப்பிலிருந்து இன்னும் நான் விடுபடவில்லை. படத்தின் காட்சிப் படிமங்கள் என் நெற்றிக்குச் சில செண்டிமீட்டர் தூரத்தில் பட்டாம் பூச்சிகளாய்ப் படபடத்துக் கொண்டேயிருக்கின்றன.இது செல்லுலாய்டில் எழுதப்பட்ட இன்னொரு இதிகாசமா? கவிதையின் விஸ்வரூபமா? காட்சிகளின் திருவிழாவா? என்றே வியக்கத் தோன்றுகிறது.‘பாகுபலி’யின் முதல் பார்வையாளர் நீங்கள் தான். உலகத்தின் கண்கள் பார்ப்பதற்கு முன்பு உங்கள் உள்ளத்தின் கண்களால் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டீர்கள்.ஆனால் அப்படிப் பார்க்கப்பட்டதில் ஒரு மில்லிகிராமும் குறையாமல் அதைக் கலைப்படுத்திய உங்கள் உழைப்பு – தொழில் நுட்பத்திறன் – கலை ஆளுமை – உங்கள் வலி – துடிப்பு – தவம் – எல்லாவற்றையும் என்னால் புரிந்துகொள்ள முடிவதால் வியந்து நிற்கிறேன்.ரஜினியைச் சீண்டும் மகேஷ்பாபு : கொதித்து போயுள்ள ரசிகர்கள்மகேஷ்பாபு நடித்து தெலுங்கில் வெளியாகியிருக்கும் படம் ஸ்ரீமந்துடு. செல்வந்தன் என்ற பெயரில் தமிழ்நாட்டிலும் ரிலீஸாகி ஓடிக்கொண்டிருக்கிறது.ஸ்ருதிஹாசன், சம்பத், ஜகபதிபாபு, சுகன்யா உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடிப்பில் தேவி ஸ்ரீபிரசாத் இசையில் கோரட்டல சிவா இயக்கியிருக்கியிருக்கும் இப்படத்தை மகேஷ்பாபுவே தயாரித்திருக்கிறார்.கடந்த படங்களின் தோல்வியினால் நிச்சயம் ஹிட் கொடுத்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் மகேஷ்பாபு, படம் வெளியாகும் இறுதி நேரத்தில் தெலுங்கு மட்டுமின்றி தமிழிலும் டப் செய்து வெளியிட திட்டமிட்டார். அதற்கான புரோமோஷனும் சென்னையில் நடைபெற்றது.தமிழில் வெளியான செல்வந்தன் படத்தின் டைட்டிலில் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு என்று போட்டிருக்கிறார்கள். இதனால் ரஜினி ரசிகர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.தெலுங்குப் படத்தில் சூப்பர் ஸ்டார் என்று பட்டத்துடன் வெளியிடுவதில் எந்த தவறுமில்லை. ஆனால் தமிழில் டப் செய்து வெளியிடும் போது சூப்பர் ஸ்டார் பட்டத்தை எப்படிப் போடலாம் என்று ரஜினி ரசிகர்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். தமிழில் சூப்பர்ஸ்டார் ரஜினி மட்டும் தான். வேறு யாருமில்லை என்று ரஜினிரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். சினிமா என்பதே நம்பவைக்கப்படும் ஒரு தொழில்நுட்ப பொய்தான். அந்த நம்பகத்தனமையை ஒரு இயக்குநர் தான் உருவாக்குகிறார். அருவியும், பனியும் முகத்தில் வந்து முட்டுகின்றன. உடலும் உயிரும் நனைகின்றன.பட்டாம்பூச்சிகளால் சூழப்பட்ட கனவுப்பெண் பட்டாம்பூச்சிகள் பறந்து போவது போல் கலைந்து போனாள் என்று முடித்திருப்பதில் ராஜமெளலிக்குள் இருக்கும் ஒரு கவிஞனைப் பார்த்தேன்.வழிந்தோடும் தாமரைப்பூ சிற்பத்தின் கைகளுக்குள் சிக்கிக் கொள்ளும் காட்சிப்படிமத்தில் ஒரு ஓவியனின் உத்தியைப் பார்த்தேன்.‘பாகுபலி’யின் வருகை தந்த மகிழ்ச்சியை மக்கள், இசைக்கலைஞர்கள், நடனமணிகள் மூலம் காட்டியதோடு ஒரு யானையின் கண்ணிலும் பிரதிபலிக்கச் செய்ததில் ஒரு படைப்பாளியின் முழுமை பார்த்தேன்.கட்டப்பா உறையைத் தொட பாகுபலி வாளை உருவ வெட்டப்பட்ட முண்டம் தொடர்ந்து ஓடும் காட்சியில் கம்பனின் கற்பனை கண்டேன்.லண்டனில் வழிதெரியாமல் திண்டாடிய ஹீரோயின்தமிழில் ‘என்னமோ ஏதோ’, ‘தடையற தாக்க’ படங்களில் நடித்திருக்கும் ரகுல் பிரீத் சிங், தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.சமீபத்தில் ஜூனியர் என்டிஆருடன் ஜோடியாக நடிக்கும் தெலுங்கு பட படப்பிடிப்புக்காக லண்டன் சென்றார். ஒரு காட்சியில் தனியாக அவரே காரை ஓட்டிச் சென்று சில கி.மீட்டர் சென்றதும் யூ டயர்ன் போட்டு திரும்ப வேண்டிய காட்சி படமாக்கப்பட்டது. தனியாக அவர் மட்டும் காரில் அமர்ந்திருந்தார். காருக்குள்ளேயே கேமரா பொருத்தப்பட்டது. இயக்குனர் டேக் சொன்னதும் காரை ஓட்டினார். சிறிது தூரம் சென்றபிறகு குறிப்பிட்ட தெருவை மறந்து வேறுபாதையில் சென்றுவிட்டார். கண்ணைகட்டி காட்டில் விட்டதுபோல் தவித்த ரகுல் செல்போனையும் லொகேஷனிலேயே மறந்திருந்தார். கையில் கொடுக்கப்பட்டிருந்த வாக்கி டாக்கியும் சிக்னல் இல்லாமல் பேச முடியவில்லை. பயத்தில் அழுதேவிட்டார். சிறிது தூரம் சென்றபிறகு வாக்கி டாக்கிக்கு சிக்னல் கிடைத்தது. பட குழுவினருக்கு தொடர்பு கொண்டு தான் இருக்கும் இடத்தை சொல்ல அவர்கள் வந்து அவரை அழைத்துச் சென்றனர். இது மறக்க முடியாத சம்பவமாக அமைந்துவிட்டாக ரகுல் கூறினார்.யுத்தகளக் காட்சிகளை இத்தனை போர்த்தந்திரங்களோடும், பிரம்மாண்டத்தோடும் இதற்குமுன் யாரும் படைத்ததில்லை. நவீன தொழில் நுட்பத்தின் அனைத்துக் கூறுகளையும் ஒரு சொட்டு ஒழுகவிடாமல் பயன்படுத்தியிருக்கிறீர்கள்.இந்திய சினிமாவின் உலக விலாசமாய் உங்கள் பெயர் நாளை பொறிக்கப்படும். உங்களைப் பார்த்துப் பெருமைப்படுகிறேன். உலகத்தோடு போட்டிபோட இதோ எங்களில் ஒருவன் வந்துவிட்டான் என்று என் உதடுகள் முணுமுணுக்கின்றன.வாழ்த்துக்கள் ராஜமெளலி” என்று குறிப்பிட்டிருந்தார் வைரமுத்து.வைரமுத்து கடிதத்தை இயக்குநர் ராஜமெளலி தனது ட்விட்டர் தளத்தில் பகிர்ந்து “‘பாகுபலி’ படத்துக்காக பல பாராட்டுகள் கிடைத்துள்ளன. ஆனால் கவிஞர் வைரமுத்துவிடமிருந்து வந்துள்ள இந்த பாராட்டு என்ன உலுக்கிவிட்டது. இதை பாராட்டாக எடுத்துக்கொள்ள எனக்கு தைரியமில்லை. இதை அந்த சாதனையாளரின் ஆசிர்வாதமாக மட்டுமே என்னால் எடுத்துக் கொள்ள முடியும். ஒரு சிறந்த ஆசான் தனது மாணவக்கு தரும் ஆசிர்வாதமாக எடுத்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்திருக்கிறார்.