கார்த்திக்கு அப்பாவாக நடிக்கும் விக்ரம்!
கெவின் ஓ கார்னர் இயக்கத்தில், ஹாலிவுட்டில் வௌியான படம் ''வாரியர்''. இப்படம் தற்போது இந்தியில், ''பிரதர்ஸ்'' என்ற பெயரில்
ரீ-மேக் செய்யப்பட்டுள்ளது. அக்ஷ்ய் குமார், சித்தார்த் மல்கோத்ரா, ஜாக்கி ஷெரப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கரண் மல்கோத்ரா இயக்கியுள்ளார். இப்படம் இந்தவாரம் ஆகஸ்ட் 14ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்நிலையில் இதே படத்தை விரைவில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரீ-மேக் செய்யும் எண்ணத்தில் உள்ளனர்.
அப்படி உருவாகும் பட்சத்தில், இதில் விக்ரம், சூர்யா, கார்த்தி ஆகியோரை தமிழிலும், ராம் சரண் தேஜா, ராணா டகுபதி, பிரபாஸ் ஆகியோரை தெலுங்கிலும் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மூவரிடமும் பேசி வருகின்றனர்.
இதுகுறித்து மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அதிகாரி மிர்ச்சந்தினி கூறியுள்ளதாவது, பிரதர்ஸ் படத்தை விக்ரம், சூர்யா, கார்த்தி, ராம்சரண் தேஜா, ராணா, பிரபாஸ் ஆகியோர் பாருங்கள். பின்னாளில் இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் ரீ-மேக் செய்யலாம் என்று கூறியுள்ளார்.
ஒருவேளை, விக்ரம், சூர்யா, கார்த்தி ஆகியோர் ஓகே செய்யும் பட்சத்தில் விக்ரம் ஜாக்கி ஷெரப் ரோலிலும், சூர்யா-கார்த்தி இருவரும் அக்ஷ்ய் மற்றும் சித்தார்த் ரோலில் நடிப்பார்கள் என தெரிகிறது. அதாவது சூர்யா-கார்த்தி இருவருக்கும் அப்பாவாக விக்ரம் நடிப்பார் என்று கூறப்படுகிறது.
ரஜினியின் மகளாக நடிக்கும் தன்ஷிகா
கலைப்புலி தாணு தயாரிப்பில், ரஜினிகாந்தை வைத்து பா.ரஞ்சித் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் முதல் வாரம்
மலேசியாவில் துவங்கவிருப்பதாக அதிகாரபூர்வமான தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ராதிகா ஆப்தே நடிப்பதாக வந்த செய்தியும் அண்மையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவே ராதிகா ஆப்தேவுக்கு அட்வான்ஸ் கொடுத்த தகவலை மீடியாக்களிடம் பகிர்ந்து கொண்டிருந்தார். ரஜினி, ராதிகா ஆப்தே தவிர மெட்ராஸ் கலையரசன், அட்டகத்தி தினேஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள். பாடல்களை கபிலன், உமாதேவி, கானா பாலா ஆகியோர் எழுதுகின்றனர். சந்தோஷ்நாராயணன் இசையமைக்கிறார் என்ற தகவல் கூட ஏற்கெனவே வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் ரஜினியின் மகளாக தன்ஷிகா நடிக்கிறார் என்ற புதிய தகவல் இப்போது வெளியாகியுள்ளது. ரஜினிக்கு மகள் என்றாலும் அட்டகத்தி தினேஷுக்கு ஜோடி என்றும் தன்ஷிகாவின் வேடம் பற்றி தகவல் கசிகிறது
புலி படம் பார்க்க ஆவலுடன் காத்திருக்கும் நந்திதா!
தமிழில் நந்திதா நடித்ததில் அட்டகத்தி, எதிர்நீச்சல், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி என நான்கு படங்கள்
தொடர்ந்து ஹிட்டடித்தன. ஆனால் ஓரிரு ஹிட் படங்களில் நடித்த நடிகைகளே அதையடுத்து மேல்தட்டு ஹீரோக்களுடன் டூயட் பாடி வரும் நிலையில், நந்திதாவுக்கு மட்டும் அது எட்டாக்கனியாகவே இருந்து வந்தது.
அதனால், விஜயசேதுபதி, விஷ்ணு என்று நடித்து வந்தவர், இப்போது காமெடி நடிகர் கருணாகரனுக்கு ஜோடியாக உப்புக்கருவாடு படத்தில் நடிக்கிறார். இதனால் இப்படியே தனது மார்க்கெட் மெல்ல மெல்ல சரிந்து விடுமோ என்று அவர் பயந்து கொண்டிருந்த நேரத்தில்தான் விஜய்யின் புலி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அதனால், என்ன கேரக்டர், எத்தனை நாள் கால்சீட், என்ன சம்பளம் என்று எதைப்பற்றியும் கேட்காமல், எப்போது படப்பிடிப்புக்கு வர வேண்டும் என்று மட்டுமே கேட்ட நந்திதா, அவர்கள் சொன்ன நாளில் புலி ஸ்பாட்டுக்கு ஓடோடிச்சென்றார். போன் பிறகுதான் ஒரு பாடல் காட்சியில் சித்திரக்குள்ளனாக நடிக்கும் விஜய்க்கு ஜோடியாக சித்திரக்குள்ளியாக நடிக்க வேண்டும் என்கிற தகவல் தெரிந்திருக்கிறது.
ஆனபோதும், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா என இரண்டு மெகா நடிகைகள் இருக்கும் படத்தில் தன்னை ஏதேனும் சிறிய கேரக்டர்களுக்காகத்தான் அழைத்திருப்பார்கள் என்று நினைத்து சென்ற நந்திதா, விஜய்யுடனேயே நடிக்க வேண்டும் என்ற மகிழ்ச்சியே போதுமானதாக இருக்க, சில நாட்கள் மட்டுமே நடித்து விட்டு திரும்பியிருக்கிறார்.
அதோடு, தான் நடித்த காட்சிகளை இதுவரை அவர் பார்க்கவில்லையாம். அதனால் விஜய் ரசிகர்கள் எப்படி புலியை ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறார்களோ அதேபோன்று இப்போது நந்திதாவும் புலியின் ரிலீசுக்காக காத்துக்கொண்டிருக்கிறாராம்
காஜல்அகர்வாலின் தங்கையான ஐஸ்வர்யா தத்தா
விஷாலுக்கு ஜோடியாக காஜல்அகர்வால் நடித்துள்ள படம் பாயும்புலி. சுசீந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தில் சமுத்திரகனி, சூரி,
ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்டவர்களும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கதைப்படி இந்த படத்தில் காஜல்அகர்வாலின் தங்கை வேடத்தில் ஐஸ்வர்யா தத்தாவும் நடித்திருக்கிறாராம். அதனால் அவர்களுக்கிடையே சென்டிமென்ட் காட்சிகளும் நிறைய உள்ளதாம்.
விளைவு, அப்படத்தில் நடித்து வந்தபோதும் ஸ்பாட்டில் நிஜ அக்காள் - தங்கை போலவே பழகி வந்த மேற்படி நடிகைகள் இருவரும் இப்போதும் அவ்வப்போது சந்தித்து பாசத்தை கொட்டுகிறார்களாம். அதோடு, காஜல்அகர்வாலை சிஸ்டர் என்றே அழைக்கிறாராம் ஐஸ்வர்யா தத்தா. அதில் உருகிப்போன காஜல்அகர்வால், எனக்கு ஏற்கனவே நிஷா அகர்வால் என்றொரு தங்கை இருக்கிறார். இப்போது நீ இன்னொரு தங்கையாகி விட்டாய் என்றாராம்.
அதையடுத்து, மும்பை பெண்ணான காஜலும், பெங்காலி பெண்ணான ஐஸ்வர்யா தத்தாவும், தங்களது அன்றாட வாழ்வில் நடக்கும் நல்லது கெட்டது என அனைத்து விசயங்களையுமே வாட்ஸ்அப் மூலம் பகிர்ந்து கொண்டு வருகிறார்களாம். இதையடுத்து காஜலின் அருமை பெருமைகளை தனது பெற்றோரிடம் ஐஸ்வர்யா தத்தா சொன்னதை அடுத்து, கண்டிப்பாக அவரை ஒருமுறை தங்களது வீட்டிற்கு அழைத்து வரவேண்டும் என்று கூறியிருக்கிறார்களாம். இந்த தகவலை ஐஸ்வர்யா தத்தா, காஜல்அகர்வாலிடம் சொன்னபோது, கண்டிப்பாக ஏதாவது படப்பிடிப்புகளுக்காக பெங்காலுக்கு வரும்போது வருகிறேன் என்று உறுதி அளித்துள்ளாராம்
சினேகாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது
நடிகர் பிரசன்னாவும், நடிகை சினேகாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். இவர்களது காதலுக்கு இருவரது பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்து மிகவும் கோலாகலமாக நடந்தது.
திருமணத்திற்கு பிறகு சினேகா, சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இருப்பினும், ஒரு சில படங்களில் நடித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 1 வருடங்களாகவே சினேகா, எந்தவித படப்பிடிப்பிலும் சினி விழாக்களிலும் கலந்துகொள்ளவில்லை. அவர் கர்ப்பமாக இருப்பதால் அவர் எந்த நிகழ்ச்சிக்கும் வருவதில்லை என்று கூறப்பட்டது.
இந்நிலையில், பிரசன்னா-சினேகா தம்பதியருக்கு நேற்று இரவு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை நடிகர் பிரசன்னா தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். பிரசவத்திற்கு பிறகு தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.
குழந்தை பிறந்ததால், நடிகர் பிரசன்னாவும், சினேகாவும் மகிழ்ச்சியில் உள்ளனர். அவர்களது உறவினர்களும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.