அசர வைக்கும் அனுஷ்கா
'பாகுபலி' என்ற சரித்திரப் படத்தை சினிமாவை வழக்கமாகப் பார்க்கும் பலரும் ஏறக்குறைய பார்த்துவிட்டிருப்பார்கள். தெலுங்கு
நட்சத்திரங்கள் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த ஒரு சரித்திரப் படத்திற்கு இந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்தது ஆச்சரியமான ஒன்றுதான். இத்துடன் சரித்திர சீசன் முடிந்து விடப் போவதில்லை. அடுத்த மாதம் 4ம் தேதி அனுஷ்கா, மகாராணியாக நடித்துள்ள 'ருத்ரமாதேவி' திரைப்படம் வரப் போகிறது. அதற்கடுத்து ஸ்ரீதேவியும் மகாராணியாக நடித்துள்ள 'புலி' படம் வரப் போகிறது. ஆக, இரண்டு சரித்திரப்படங்களை அடுத்தடுத்து நமது ரசிகர்கள் பார்த்து ரசிக்க உள்ளார்கள்.
சில மணி நேரங்களுக்கு முன்பு 'ருத்ரமாதேவி' படத்தின் முக்கிய புகைப்படம் ஒன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அந்தப் புகைப்படத்தில் ஒரு கையில் வாளையும், மற்றொரு கையில் கேடயத்தைவும் வைத்துக் கொண்டு அனுஷ்கா கொடுத்துள்ள 'போஸ்' அசர வைத்துள்ளது. தென்னிந்தியத் திரையுலகில் முப்பது வயதைக் கடந்தாலும் உயரத்திலும், தோற்றத்திலும், அழகிலும் செதுக்கி வைத்த சிலை போல இருப்பவர் அனுஷ்கா என்று பலரும் கூறி வருகிறார்கள். அவருடைய தோற்றத்திற்கேற்ப 'ருத்ரமாதேவி' படம் அமையும் என்பதற்கு இந்தப் புகைப்படமே ஒரு சாட்
லாரன்ஸுக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலுக்கு 2 கோடி சம்பளம்
ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் முனி. இப்படத்தின் இரண்டாம் பாகமாக வெளியான 'காஞ்சனா'
படமும் மிகப்பெரிய வெற்றியடைந்தது. காஞ்சனாவின் தொடர்ச்சியாக சில மாதங்களுக்கு முன் வெளியான காஞ்சனா-2 படமோ 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. காஞ்சனா-2 படத்தின் அபார வெற்றியைத் தொடர்ந்து அடுத்து 'மொட்ட சிவா கெட்ட சிவா', 'நாகா' என இரண்டு படங்களை இயக்கி, நடிக்க உள்ளார் ராகவா லாரன்ஸ்.
இந்த இரண்டு படங்களையும் வேந்தர் மூவீஸ் நிறுவனம் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கிறது. 'காஞ்சனா' படத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக லட்சுமி ராய் நடித்திருந்தார். 'காஞ்சனா-2'வில் டாப்சி, நித்யா மேனன் என இரண்டு கதாநாயகிகள் நடித்திருந்தார்கள்.
ராகவா லாரன்ஸ் அடுத்து இயக்கி நடிக்கும் 'மொட்டை சிவா கெட்ட சிவா' படத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். வேந்தர் மூவிஸ் தயாரித்துள்ள பாயும்புலி படத்துக்கு ஒன்றரை கோடி சம்பளம் வாங்கிய காஜல் அகர்வால் இந்தப்படத்துக்கு 2 கோடி சம்பளம் வாங்கி உள்ளார். ராகவா லாரன்ஸ் இயக்கப் போகும் இன்னொரு படமான 'நாகா'வில் முன்னணி கதாநாயகி நடிக்கிறார். அவரது பெயரை விரைவில் அறிவிப்பார்களாம்
மகேஷ் பாபுவுடன் முத்தக்காட்சியில் நடித்த ஸ்ருதிஹாசன்
டோலிவுட்டின் பிரின்சஸ் மகேஷ் பாபுவுடன் முதன்முறையாக ஜோடி சேர்ந்து ஸ்ருதிஹாசன் நடித்துள்ள ஸ்ரீமந்துடு படம் வரும்
வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) பிரம்மாண்டமான திரையிடலுக்கு தயாராகி வருகின்றது. மைத்திரி மூவீஸ் நிறுவனத்துடன் மகேஷ் பாபு இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை இயக்குநர் கொரடலா சிவா இயக்கியுள்ளார். இப்படத்தில் மகேஷ் பாபுவுடன் ஸ்ருதிஹாசன் முத்தக்காட்சியில் நடித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சி ஒன்றின் வீடியோ வெளிவந்து இச்சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரில் மகேஷ் பாபுவும் ஸ்ருதிஹாசன் நெருங்கி வருவது போன்று வெளியாகியுள்ள அந்த வீடியோவில் முத்தக்காட்சி இடம் பெறும் என ரசிகர்கள் கூறுகின்றனர். இதற்கான விடையை ஸ்ரீமந்துடு படம் வெளிவந்த பின்னர் தான் அறிய முடியும். பாலிவுட்,டோலிவுட், கோலிவுட் என கவர்ச்சி வரையறை வகுத்துள்ள ஸ்ருதிஹாசன் மகேஷ் பாபுவுடன் முத்தக்காட்சியில் நடித்துள்ளாரா என அறிய டோலிவுட் ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.
ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக ஜோதிகா.
சூர்யாவைத் திருமணம் செய்து கொண்ட பிறகு நடிப்பிலிருந்து விலகிய ஜோதிகா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு ''36 வயதினிலே''
படத்தில் நடித்தார். அந்தப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜோதிகா மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த இருக்கிறார். ஆனால், கதாநாயகியாக மட்டுமே நடிப்பேன் என்ற கண்டிஷனுடன் தான் கதை கேட்டு வருகிறார். பல கதைகள் கேட்டும் பிடிக்கவில்லை என்று சொன்ன ஜோதிகா, அண்மையில் ஒரு கதையைக் கேட்டார். கதை ஓகே என்று சொன்னதோடு அடுத்தடுத்து இரண்டு சந்திப்புகளும் நடந்துள்ளன.அப்படத்துக்கு ஜோதிகா மிகப்பெரிய சம்பளம் கேட்டிருக்கிறார். அதற்கு அப்படத்தின் ஹீரோ கம் டைரக்டர் தயங்கி வருகிறார்.
அவர் வேறு யாருமல்ல... ராகவா லாரன்ஸ் தான். 'காஞ்சனா 2' படத்தின் வெற்றிக்குப் பின்னர் வேந்தர் மூவிஸு'க்காக 'மொட்ட சிவா கெட்ட சிவா', 'நாகா' என இரண்டு படங்களையும் இயக்கி, நடிக்கிறார் ராகவா லாரன்ஸ். இவற்றில் நாகா படத்தில் கதாநாயகியாக நடிக்கத்தான் ஜோதிகாவை அணுகினார் ராகவா லாரன்ஸ் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஜோதிகா நடித்தால் படத்தின் ரேன்ஜ் எகிறிவிடும் என்பதால் அப்படத்துக்கு தன்னுடைய சம்பளம் மற்றும் படத்தின் பட்ஜெட்டைக்கூட தயாரிப்பாளரிடம் சொல்லாமல் இருக்கிறாராம்
இந்நிலையில் நல்ல நாள் என்பதால் நேற்று படத்தின் தொடக்கவிழாவை நடத்தினார்கள். ஆனால் ஜோதிகாவின் சம்பளப்பேச்சுவார்த்தை முடியாததினால் நாகா படத்தின் கதாநாயகி பெயரை அறிவிக்கவில்லை.
உன்னால் முடியும் தம்பி' படத்தின் தழுவல்தான் மகேஷ் பாபு படம்
தெலுங்குத் திரையுலகின் பல முன்னணி இயக்குனர்கள் பழைய தமிழ்ப் படங்களை வாங்கிப் பார்த்து அதை அப்படியே இந்தக்
காலத்திற்கேற்ப மாற்றியமைத்து புதிய படங்களாகக் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். வெற்றி பெற்ற பல தெலுங்குத் திரைப்படங்களைக் கூர்ந்து கவனித்தால் அவை எந்த தமிழ்ப் படத்திலிருந்து சுடப்பட்ட கதையாக இருக்கும் என்பதை தீவிர சினிமா காதலர்கள் கண்டுபிடித்து விடலாம். அவ்வளவு ஏன் ? ராஜமௌலி இயக்கி 500 கோடி ரூபாயைக் கடந்த ஓடிக் கொண்டிருக்கும் 'பாகுபலி' படத்தின் மையம் கூட எம்ஜிஆர் நடித்த 'அடிமைப் பெண்' படம்தானே?. இப்படி தெலுங்கில் பல தமிழ்ப் படங்களைக் காப்பிடியத்து படமாக எடுப்பது பல வருடங்களாகவே நடந்து கொண்டிருக்கும் ஒன்றுதான்.
இப்போது தெலுங்கில் பழைய தெலுங்குப் படங்களையே காப்பியடித்து படங்களை எடுக்கிறார்கள் என சிலர் குற்றம் சாட்டி வருகிறார்கள். மகேஷ்பாபு, ஸ்ருதிஹாசன் நடித்து விரைவில் வெளிவர உள்ள 'ஸ்ரீமந்துடு' படம் சிரஞ்சீவி, ஷோபனா, ஜெமினி கணேசன் ஆகியோர் நடிக்க பாலசந்தர் இயக்கி 1988ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி வெளிவந்த 'ருத்ரவீணா' என்ற தெலுங்குப்படத்தின் அப்பட்டமான தழுவல் என சிலர் குற்றம் சாட்டுகிறார்கள்.
'ருத்ரவீணா' படத்திற்கு அப்போது சிறந்த தேசிய ஒருமைப்பாட்டுக்கான சிறந்த படம் என்ற விருதும், படத்திற்கு இசையமைத்த இளையராஜாவுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதும், எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு சிறந்த பின்னணிப் பாடகருக்குமான தேசிய விருதும் கிடைத்தன. அந்தப் படம் அதன் பின் கமல்ஹாசன், சீதா, ஜெமினிகணேசன் ஆகியோர் நடிக்க 'உன்னால் முடியும் தம்பி' என்ற பெயரில் ரீமேக் ஆகி அதே வருடம் ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி வெளிவந்தது.
இன்னும் சில நாட்களில் 'ஸ்ரீமந்துடு' அந்தப் படத்தின் காப்பிதானா என்பது முழுமையாகத் தெரிந்துவிடும். பணம் கொடுத்து உரிமை வாங்கி இப்படத்தைத் தயாரித்துள்ளார்களா, அல்லது அப்படியே கதையைச் சுட்டு விட்டார்களா என குற்றம் சாட்டுபவர்கள் கேள்வியும் எழுப்புகிறார்கள்.
அஞ்சலியை வெறுப்பேற்றிய அபிமானிகள்!
சகலகலா வல்லவன் படத்தில் அஞ்சலியின் உருவம் பப்ளிமாஸ் போன்று இருந்ததால் அவருக்கு வேண்டப்பட்ட சில அபிமானிகள்,
இதென்ன சொர்ணாக்கா மாதிரி இருக்கு என்று வாட்ஸ் அப்பில் அவரை கிண்டல் செய்தார்களாம். அது அஞ்சலியை பெருங்கோபத்துக்கு ஆளாக்கி விட்டதாம்.
அதையடுத்து, அந்த படத்திற்காக நான் குறைந்தபட்சம் 8 கிலோவாவது எடை அதிகப்படுத்த வேண்டும் என்று அப்பட டைரக்டர் சுராஜ்தான் கேட்டுக்கொண்டார். அதனால்தான் அப்படம் முடிகிற வரைக்கும் அதையே அப்படியே மெயின்டெய்ன் பண்ணினேன். கதைக்காக என்னை முழுமையாக மாற்றிக்கொண்டது தவறா? என்று அவர்களுக்கு உடனடியாக அவசர செய்தி அனுப்பி ஆப் பண்ணியிருக்கிறார் அஞ்சலி.
அதோடு, சகலகலா வல்லவனின் பார்த்து வேறு அஞ்சலி. ஆனால் இப்போது இறைவியில் நடித்து வரும் அஞ்சலியைப் பாருங்கள், இவள்தான் இப்போதைய ஒரிஜினல் அஞ்சலி என்று சொல்லி இறைவி படத்துக்காக எடையை குறைத்து ஸ்லிம்மாக தான் எடுத்துக்கொண்ட போட்டோக்களை அனுப்பி விட்டு அவர்களை ஆச்சர்யப்படுத்தி விட்டாராம் அஞ்சலி.