கேரள குத்து விளக்கையும் விரட்டும் பேய்!
குத்து விளக்கு லட்சுமி மேனனுக்கு, நடிப்பின் மீது வெறுப்பு வந்து விட்டதாக, சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.
ஆனால், அதை மறுத்த லட்சுமி மேனன், கிராமத்து வேடங்களில் நடிக்க விருப்பமில்லை என்று தான் கூறினேன்; மற்றபடி, கிளாமரான வேடங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளேன் என்றார். சற்று இடைவெளிக்கு பின், தற்போது மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடிக்கவுள்ளார் அவர்.
அவர் நினைத்தது போல், கவர்ச்சி வேடம் கிடைக்கவில்லை; பேய் வேடம் தான் கிடைத்து உள்ளது. ஆனாலும், மனதை தேற்றிக் கொண்டு, பேயாக நடிப்பதற்காக ஊட்டிக்கு சென்றுள்ளார் லட்சுமி மேனன்.
மோடி அப்படி பண்ணச் சொல்ல அனுஷ்கா இப்படி பண்ணி விட்டாரே!!!
இஞ்சி இடுப்பழகி படத்திற்காக யோகா குருவான அனுஷ்கா யோகா செய்வதை நிறுத்தி வைத்துள்ளார். அனுஷ்கா யோகா குருவாக இருக்கையில் தான் திரையுலகினர் கண்ணில்பட்டு நடிகையானார்.
அவர் தினமும் யோகா செய்வதுடன் சக நடிகர், நடிகைகளுக்கும் யோகாசனங்களை கற்றுக் கொடுத்து வருகிறார். இந்நிலையில் அனுஷ்கா யோகா செய்வதை நிறுத்தி வைத்துள்ளார்.
சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. தினமும் யோகா செய்யுங்கள் அது உடலுக்கும், மனதிற்கும் நல்லது என்று பிரதமர் நரேந்திர மோடி நேரம் கிடைக்கும்போது எல்லாம் மக்களை வலியுறுத்தி வருகிறார்.
மோடி அனைவரையும் யோகா செய்யுமாறு வலியுறுத்தி வரும் நேரத்தில் அனுஷ்கா யோகாவை கைவிட்டுள்ளார். அவர் யோகா செய்யாமல் இருப்பதற்கு காரணம் உள்ளது.
இஞ்சி இடுப்பழகி படத்தில் அனுஷ்கா குண்டு பெண்ணாகவும், ஒல்லிக்குச்சியாகவும் வருகிறார். முதலில் குண்டுபெண் அனுஷ்காவின் கதாபாத்திரத்தை படமாக்கி வருகின்றனர். இந்த படத்திற்காகத் தான் அனுஷ்கா யோகா செய்வதை நிறுத்தி வைத்துள்ளார்.
உடல் எடையை அதிகரிக்க அனுஷ்கா டயட், யோகாவை மறந்து கண்டமேனிக்கு சாப்பிட்டார். விளைவு குண்டாக ஆகிவிட்டார். குண்டு அனுஷ்காவை பார்த்த ரசிகர்களே ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்துவிட்டனர்.
குண்டு கதாபாத்திரத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டதும் ஜிம்முக்கு சென்றும், யோகா செய்தும், உணவு கட்டுப்பாட்டை மேற்கொண்டும் அனுஷ்கா ஒல்லிக்குச்சியாக மாற உள்ளார்.
நான் நடித்ததற்கு சம்பளமாக, பணமாக அல்லாமல் நகையாக கொடுத்திடுங்க!!! – தப்பிக்க முயற்சிக்கும் திரிஷா
சினிமா நடிகர், நடிகைகள் திரைப்படங்களில் நடித்து சம்பாதிப்பதுடன், விளம்பரப் படங்கள், கடை திறப்பு, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பு போன்றவற்றின் மூலமாகவும் சம்பாதித்து வருகிறார்கள்.
ஒரு காலத்தில், மக்களுக்கு அவ்வளவாக அறிமுகம் இல்லாத நடிகர்கள் விளம்பரப் படங்களில் நடித்து வந்தார்கள்.
ஆனால், தற்போது முன்னணி நடிகர்களும், நடிகைகளும் விளம்பரங்களில் நடிக்க பெரிதும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். காரணம் குறைந்த நாட்கள் வேலை, அதிக சம்பளம் என்பதால் தான்.
ஒரு படம் வெற்றி பெற்றுவிட்டால் போதும், அந்த படத்தில் நடித்த நடிகரோ அல்லது நடிகையோ தியாகராய நகரில் உள்ள பெரிய ஆடை கடையின் சுவற்றில் பளிச்சிடுவதுடன், அந்த கடை குறித்த விளம்பரப் படத்தில் ஆடி, பாட ஆரம்பித்து விடுகிறார்கள்.
அந்த வகையில், தற்போது விளம்பரப் படங்களில் திரிஷாவும் அதிகமாக தலை காட்ட தொடங்கிவிட்டார்.
சோப்பு, ஐஸ் க்ரீம் என்று ஆரம்பித்து, தற்போது சென்னையின் முன்னணி நகை கடை ஒன்றுக்கும் விளம்பரத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள திரிஷா, விளம்பரப் படங்களின் மூலம் வரும் வருவாயை கணக்கு காட்டாமல் தப்பிப்பதற்காக புது ரூட்டு ஒன்றை போட்டுள்ளார்.
அதாவது, நகை கடை விளம்பரங்களில் தான் நடித்ததற்கு சம்பளமாக, பணமாக அல்லாமல் நகையாக கொடுத்திடுங்க, என்று கேட்டுள்ளார்.
இன்று சென்னையில் நடைபெற்ற என்.ஏ.சி நகைக் கடையின், புது ரக தங்க நகைகள் அறிமுக விழாவில் கலந்துக்கொண்ட நடிகை திரிஷா இந்த விஷயத்தை அந்த நகைக்கடை உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார்.
திரிஷா இதை விளையாட்டாக கூறினாலும், பணமாக பெறுவதை விட அன்பளிப்பாக பெற்றால் வரித்துறையிடம் இருந்து எஸ்கேப்பாகி விடலாம், என்று அவர் திட்டமிடுவதாக நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மீடியா நண்பர்கள் பேசிக்கொண்டார்கள்
அப்பாவுடன் டான்ஸ் பயிற்சியில் ஈடுபடும் ஸ்ருதிஹாசன்!
தனது மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்சரா ஆகிய இருவரையும் சினிமாவில் நடிகையாக்க வேண்டும் என்று
நினைக்காதபோதும், சிறு வயதில் இருந்தே அவர்களுக்கு சினிமா நுட்பங்களை அவ்வப்போது சொல்லிக்கொடுத்து தான் வளர்த்திருக்கிறார் கமல். அதனால்தான் எதிர்பாராதவிதமாக நடிகையானபோது அவர்கள் எளிதில் நடிப்பை பற்றிக்கொண்டார்கள்.
அந்த வகையில், ஸ்ருதிஹாசன், இந்திய அளவில் ஒரு பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். தற்போது அவர் தனது அம்மா சரிகாவுடன் மும்பையில் வசித்து வருகிறார். என்றாலும், தமிழ்ப்படங்களில் நடிக்க சென்னை வரும்போது அப்பா கமலை சந்திக்கிறார்.
அப்படி அவர் வரும்போது ஏதாவது படங்களுக்காக கமல் நடன பயிற்சிகளில் ஈடுபட்டால் தானும் அதில் கலந்து கொள்கிறாராம் ஸ்ருதி. மேலும், சின்ன வயதில் இருந்தே கமலுடன் நடன பயிற்சிகளில் ஈடுபட்டு வந்த ஸ்ருதி. இப்போது அவருக்கு இணையாக நடனமாடும் அளவுக்கு தேறியிருப்பதால், அன்றைய பயிற்சிக்கு வரவேண்டிய கதாநாயகி வரவில்லையென்றால் அவர் இடத்தில் நின்று தானே நடனமாடுகிறாராம் அவர்.
தில் உள்ள நடிகை ரேஷ்மி மேனன்!
நடிகைகள் எப்போதும் தங்களைப் பதின்பருவ மங்கைகளாகவே காட்டிக்கொள்ள விரும்புவார்கள். முப்பது வயதானாலும்
கல்லூரி மாணவி, பள்ளி மாணவி வேடம் கிடைத்தால் புளகாங்கிதமாகி விடுவர். நடிக்கவுள்ள படத்தின் கதையில் பிள்ளை பெற்ற பெண்மணி, கைக்குழந்தைக்குத் தாய் என்றால் கூட பதறிப்போய் மறுத்து விடுவார்கள். அவர்களை வயதான பட்டியலில் சேர்த்து விடுவார்கள் என்கிற பதற்றம். அதனால் இந்தியில் குழந்தைக்குத் தாயான பாத்திரத்தை தமிழில் நடிக்கும் போது குழந்தை பெறாத பெண்ணாக நயன்தாராவை நீஎங்கே என் அன்பே படத்தில் மாற்றி இருப்பார்கள். இந்நிலையில் வளர்ந்து வரும் நடிகையான ரேஷ்மி மேனன் ஒரு குழந்தைக்குத் தாயாக கிருமி படத்தில் நடித்து இருக்கிறார். இதை படக்குழுவினர் மட்டுமல்ல இசை வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்த திரையுலகினர் பலரும் பாராட்டினார்கள். இப்படி நடிக்க ஒரு தில் வேணும் என்று புகழ்ந்தார்கள்.
ஹீரோயின்களைப் பற்றியும் யோசிக்கலாமே?, அனுஷ்கா வேண்டுகோள்
தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு திரையுலகத்திலும் ஹீரோயின்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் இருக்காது. எப்போதோ
ஒரு முறைதான் ஹீரோயின்களுக்கும் முக்கியத்துவம் உள்ள படங்கள் வெளிவரும். ஆனால், மலையாளத் திரையுலகத்தில் ஹீரோயின்களுக்கும் அவர்களது திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைக்கும். முன்பெல்லாம் விஜயசாந்தி நடித்த படங்கள் ஹீரோக்களின் ஆக்ஷன் படங்களுக்கு சவால் விடும் படங்களாக அமைந்து தமிழிலும், தெலுங்கிலும் நல்ல வசூலைப் பெற்றன. அதன் பின் அவருடைய இடத்தை நிரப்பும் அளவிற்கு வேறு யாரும் இதுவரை வரவில்லை.
இப்போதுதான் அனுஷ்காவிற்கு ஓரளவிற்கு அப்படி சில வாய்ப்புகள் வந்துள்ளன. 'பாகுபலி' படத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அனுஷ்காவின் நடிப்பு, ஏமாற்றத்தை அளித்தாலும், இரண்டாம் பாகத்தில் அவருக்கு முக்கியத்துவம் இருக்கும் என்கிறார்கள். அடுத்து அனுஷ்கா நடித்து வெளிவர உள்ள 'ருத்ரமாதேவி' படத்தில், அனுஷ்காவைச் சுற்றியேதான் கதையே நகர உள்ளது. இந்தப் படத்தில் அனுஷ்கா பல சாகசங்களை செய்துள்ளாராம். அதோடு தான் நடித்து வரும் மற்றொரு படமான 'இஞ்சி இடுப்பழகி' படத்தில் கதாபாத்திரத்திற்காக தன் அழகிய தோற்றத்தைக் கூட குண்டாக மாற்றிக் கொள்ளும் அளவிற்கு ஈடுபாட்டுடன் நடித்திருக்கிறார் அனுஷ்கா.
'ஹீரோயின்களுக்கும் இது மாதிரியான கதாபாத்திரங்களைக் கொடுக்கவும் இயக்குனர்கள் முன் வர வேண்டும். எங்களைப் போன்ற ஹீரோயின்களும் ஆக்ஷன் படங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிக்கத் தயாராக உள்ளோம். எங்களைப் பற்றியும் யோசித்தால் நன்றாக இருக்கும்,” என அனுஷ்கா கேட்டுக் கொண்டுள்ளாராம்.
காஜல் விடும் தூது!
தனுசுடன் முதன்முதலாக காஜல்அகர்வால் இணைந்து நடித்த படம் மாரி. இந்த படம் தனக்கு ஒரு திருப்புமுனையாக
அமையும் என்று நம்பி நடித்தார் காஜல். ஆனால் பெரிய வாய்ப்புகள் வரவில்லை. இருப்பினும், பாயும் புலி, பிரமோற்சவம், மர்ம மனிதன் என அடுத்தபடியாக மூன்று படங்கள் கைவசம் இருப்பதால் அந்த படங்கள் தனக்கு கைகொடுக்கும் என்று நம்புகிறார் காஜல். அதோடு, இந்த தருணத்தில் இந்தி, தெலுங்கு என்று கவனத்தை திருப்பினால், புதிய படங்கள் தனக்கு கிடைக்காது என்பதால், தமிழுக்கே தற்போதைக்கு முதலிடம் கொடுப்பது போல் கூறி வருகிறார்.
அதோடு, புதிதாக கமிட்டாகும் படங்களில் டம்மியான ஹீரோயினாக இல்லாமல் ஓரளவு கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் காஜல் அகர்வால், ஹீரோயினிகளுக்கு வெயிட்டான பர்பாமென்ஸ் ரோல் கொடுக்கும் டைரக்டர்களாக பட்டியலிட்டு தூது அனுப்பிக்கொண்டிருக்கிறார்.