சினிமா செய்தித் துளிகள் டாப்ஸியை துரத்தும் டெல்லி ஆண்கள்

06 Jul,2015
 

கீர்த்தி நழுவவிட்ட வாய்ப்பை கைப்பற்றினார் கேத்ரின் தெரசா ! 



 
மெட்ராஸ்’ படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்தவர் கேத்ரின் தெரசா. அதர்வா ஜோடியாக ‘கணிதன்’, சிம்பு ஜோடியாக ‘கான்’ படங்களில் நடித்து வருகிறார். அடுத்து விஷால் ஜோடியாக ‘பாயும்புலி’ படத்தில் நடிக்க உள்ளாராம். சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் விஷால் ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷை ஒப்பந்தம் செய்ய அணுகினார். வேறுபடங்களில் பிஸியாக இருப்பதால் வாய்ப்பை கைகழுவினார். கீர்த்தி நழுவவிட்ட வாய்ப்பு நேராக கேத்ரின் தெரசாவுக்கு சென்றிருக்கிறது. அவரும் ஓ.கே சொல்லி இருக்கிறாராம். திரிஷா, நயன்தாரா, அனுஷ்கா, தமன்னா, காஜல், சமந்தா, ஹன்சிகா என சீனியர் நடிகைகள் ஒருபக்கம் பிஸியாக இருந்தாலும் பெரும்பாலும் சீனியர் நடிகர்களுக்கே ஜோடியாக நடித்து வருகின்றனர்.
மெட்ராஸ்’ படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்தவர் கேத்ரின் தெரசா. அதர்வா ஜோடியாக ‘கணிதன்’, சிம்பு ஜோடியாக ‘கான்’ படங்களில் நடித்து வருகிறார். அடுத்து விஷால் ஜோடியாக ‘பாயும்புலி’ படத்தில் நடிக்க உள்ளாராம். சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் விஷால் ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷை ஒப்பந்தம் செய்ய அணுகினார். வேறுபடங்களில் பிஸியாக இருப்பதால் வாய்ப்பை கைகழுவினார். கீர்த்தி நழுவவிட்ட வாய்ப்பு நேராக கேத்ரின் தெரசாவுக்கு சென்றிருக்கிறது. அவரும் ஓ.கே சொல்லி இருக்கிறாராம். திரிஷா, நயன்தாரா, அனுஷ்கா, தமன்னா, காஜல், சமந்தா, ஹன்சிகா என சீனியர் நடிகைகள் ஒருபக்கம் பிஸியாக இருந்தாலும் பெரும்பாலும் சீனியர் நடிகர்களுக்கே ஜோடியாக நடித்து வருகின்றனர்.
    

இளம் மற்றும் வளர்ந்து வரும் ஹீரோக்கள் இளவட்ட ஹீரோயின்களுக்கே வலைவிரிக்கிறார்கள். அவர்களின் கவனத்தை தங்கள் பக்கம் ஈர்க்க இளவட்ட ஹீரோக்களுடன் ஜோடி போட தயார் என சீனியர் ஹீரோயின்கள் பகிரங்கமாக சொல்வதுடன் அதற்கான வாய்ப்பு வந்தால் அதற்கு முன்னுரிமையும் தருகிறார்கள்.
 



டாப்ஸியை துரத்தும் டெல்லி ஆண்கள்



காஞ்சனா 2’ படத்துக்கு பிறகு புதிய படங்களை எதிர்நோக்கி இருக்கிறார் டாப்ஸி. சிம்பு நடிக்கும் கான் மற்றும் இந்தியில் 2 படங்களில் நடிக்கிறார். கைவசம் கால்ஷீட் நிறைய இருப்பதால் நடிப்பு தவிர திருமண பதிவு அலுவலகம் தொடங்கி நடத்தி வருகிறார்.

அதோடு ரியல் எஸ்டேட் பிசினசிலும் குதித்திருக்கிறார். டெல்லியை சேர்ந்தவரான டாப்ஸி மும்பை நொய்டா பகுதியில் 2 வீடுகள் வாங்கி இருக்கிறார். இதுபற்றி அவர் கூறியது: டெல்லி வளர்ச்சி அடைந்த இடம். அங்கு வீடு வாங்கவேண்டுமென்றால் முதலிலேயே நிறைய முதலீடு செய்ய வேண்டும். நொய்டா பகுதி இப்போதுதான் வளர்ந்து வருகிறது. அங்கு முதலீடு செய்தால் அது பிற்காலத்தில் பெருகும். அதனால்தான் அங்கு 2 வீடு வாங்கி இருக்கிறேன்.

2 வீட்டையும் வாடகைக்கு விட எண்ணி உள்ளேன். நான் டெல்லி பெண் என்பதில் பெருமை கொள்கிறேன். பாலிவுட் சினிமா துறை முற்றிலுமாக டெல்லிக்கு மாற வேண்டும் என்று தினமும் பிரார்த்தனை செய்துவருகிறேன். டெல்லியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிறார்கள். எல்லா ஊருக்கும் மைனஸ், பிளஸ் இருக்கிறது. டெல்லியில் இப்போதுகூட நான் தனியாகத்தான் செல்வேன்.

சில ஆண்கள் காரில் என்னை பின்தொடர்ந்திருக்கிறார்கள். சிலர் கிண்டல் செய்து துரத்தியும் இருக்கிறார்கள். ஆனால் பெரிதாக தகாத சம்பவம் எதுவும் நடக்கவில்லை.இவ்வாறு டாப்ஸி கூறினார். பெண்களுக்கு பாதுகாப்புபற்றி சந்தேகம் தெரிவித்துள்ள இவரது பேட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



ஹன்சிகாவுடன் எம்.ஜி.ஆர், சிவாஜி, அஜித் கெட்டப்பில் மீண்டும் இணைந்த சிம்பு!



“வாலு” படம் நீண்ட நாட்களாக உருவாகி தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பின் போது சிம்புவுக்கும் ஹன்சிகாவும் காதல் ஏற்பட்டது. பின்னர் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

இந்நிலையில், இருவரும் காதலை வெறுத்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதனால் இப்படம் படப்பிடிப்பு தாமதமானது.
பின்னர் இப்படத்தை தயாரிக்கும் நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் சில பிரச்சனைகள் காரணமாக படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருந்தது.

ஒரு வழியாக இப்படத்தை டி.ராஜேந்தர் வாங்கி ரிலீஸ் செய்ய முடிவு செய்தார். கடைசியாக இப்படத்தை ஜூலை 17ம் திகதி வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கின்றனர்.
இப்படத்தில் ஒரு பாடல் மட்டும் படமாக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக அந்த பாடலை சென்னையில் செட் அமைத்து உருவாக்கி வருகிறார்கள்.

இந்த பாடலில் எம்.ஜி.ஆர், சிவாஜி, அஜித் போன்ற கெட்டப்பில் வருகிறார் சிம்பு. மேலும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஹன்சிகா சிம்புவுடன் இணைந்து நடனமாடியிருக்கிறார்.
காதலில் பிரிந்த இருவரும் மீண்டும் ஒன்று சேர்ந்து நடனமாடியிருப்பது படக்குழுவினர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

படத்தை எப்படியும் ஜூலை 17ம் திகதி ரிலீஸ் செய்ய வேண்டும் என்று முனைப்போடு படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.


வெளிநாடுகளில் 20 நாட்கள் படமாக்கப்பட்ட சாஹசம் பட பாடல்கள்
 




பிரசாந்த் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக தயாராகி வரும் படம் ‘சாஹசம்’. இப்படத்தில் அமண்டா என்ற புதுமுக நாயகி அறிமுகமாகியிருக்கிறார். மேலும், ஹாலிவுட் நடிகை நர்கிஸ் பக்ரி இப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

இதுதவிர, நாசர், தம்பி ராமைய்யா, சோனுசூது, எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், ரோபோ சங்கர் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளனர். அருண்ராஜ் வர்மா இயக்கத்தில் மிகவேகமாக உருவாகி வரும் இப்படத்தின் இரு பாடல்களை மலேசியா மற்றும் ஜப்பானில் படக்குழுவினர் படமாக்கியுள்ளனர்.

கடந்த 20 நாட்களாக இவ்விரு நாடுகளிலும் இப்பாடல்களை படமாக்கியுள்ளனர். மலேசியாவில் ‘சாயாங் கு’ என்ற பாடலுக்கு பிரசாந்துடன் இந்தியாவிலிருந்து சென்ற 20 நடன கலைஞர்களுடன் மலேசிய நடனக் கலைஞர்கள் இணைந்து நடனமாடியுள்ளனர்.

அதைத் தொடர்ந்து ‘ஆங்கிரி பேர்ட்’ என்ற பாடலை ஜப்பானில் 8 நாட்கள் படமாக்கியுள்ளனர். ஜப்பானில் இயற்கை எழில் கொஞ்சும் அழகுமிக்க இடங்களில் பிரசாந்த், அமண்டா இணைந்து நடனமாடும் காட்சிகளை படமாக்கியுள்ளனர். இந்த பாடலை இந்தியாவின் தலைசிறந்த பாடகரான மோஹித் சவுகான் பாடியுள்ளார்.

இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். தியாகராஜன் இப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதியதோடு மட்டுமில்லாமல், ஸ்டார் மூவிஸ் சார்பில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. விரைவில் பாடல் வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies