புதுமுகங்களுடன் ஜோடி சேர மறுக்கும் காஜல்!
நடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு படங்களில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். தமிழில், விஜய், சூர்யா, கார்த்தி போன்றோருடன் ஜோடியாக நடித்துள்ளார். தற்போது தனுஷ் ஜோடியாக ‘மாரி’ படத்திலும், விஷால் ஜோடியாக ‘பாயும்புலி’ படத்திலும் நடிக்கிறார்.
தமிழ், தெலுங்கில் தயாராகும் பிரம்மோற்சவம் படத்தில் மகேஷ்பாபு ஜோடியாக நடிக்கிறார். தமிழில் நடிகர் லாரன்ஸ் தம்பி எல்வின் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலை அணுகினர். ஆனால், அவர் மறுத்துவிட்டார்.
புதுமுகங்கள் ஜோடியாக நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டாராம். இந்த படத்தில் நடிக்க காஜல் அகர்வாலுக்கு ரூ.2 கோடி வரை சம்பளம் தர முன் வந்துள்ளனர். ஆனால், அவர் மசியவில்லை. மறுத்து விட்டார்.
முன்னணி கதாநாயகர்கள் ஜோடியாக மட்டுமே நடிப்பது என்ற முடிவில் இருக்கிறாராம்.
சமந்தா வெயிட்டிங் லிஸ்டில் சிவகார்த்திகேயன்
பட்ஜெட் படம், மீடியம் பட்ஜெட் என தவழ்ந்துகொண்டிருந்த சிவகார்த்திகேயன் திடீர் பாய்ச்சலாக மெகா பட்ஜெட்டுக்கு தாவி இருக்கிறார். சிவகார்த்திகேயன் நண்பர் ராஜா தயாரிக்கும் இப்படத்தை அட்லியின் உதவியாளர் பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார்.
ஒளிப்பதிவு பி.சி.ஸ்ரீராம். இசை அனிரூத் என பெரிய அளவிலேயே தொழில்நுட்ப கலைஞர்களையும் ஒப்பந்தம் செய்துள்ளனர். புதுமுக நடிகைகளின் ஜோடியாக நடித்து வந்த சிவகார்த்திகேயன், மான் கராத்தே படத்தில் ஹன்சிகாவுடன் ஜோடி போட்டார். இவருக்கு ஹன்சிகா ஜோடியா என்று சிலர் பொறுமியதாக சிவகார்த்திகேயனே ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
புதிய படத்தில் யாரை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்வது என்பதில் பட குழுவுக்குள் போட்டி எழுந்துள்ளது. ஹன்சிகா போன்று பிரபல ஹீரோயினை ஒப்பந்தம் செய்வதுதான் பொருத்தமாக இருக்கும் என்று யோசனை கூறி உள்ளனர். இதையடுத்து சமந்தா, காஜல் அகர்வால், எமி ஜாக்சன், ஸ்ரீ திவ்யா பெயர்களை பரிசீலனை செய்ததில் சமந்தாவையே பலரும் முன்மொழிந்தார்களாம். சிவகார்த்திகேயனும் இதையே விரும்புவதாகவும் கூறப்படுகிறது. சமந்தாவிடம் கால்ஷீட் கேட்டு அணுகியபோது தற்போது விஜய், சூர்யா படங்களுக்கு கால்ஷீட் தந்திருக்கிறேன்.
கொஞ்சம் பொருத்திருந்தால் கால்ஷீட் ஒதுக்கிதர தயார் என கூறி உள்ளார். சமந்தாவுக்காக காத்திருப்பதா? அல்லது வேறு ஹீரோயினை ஒப்பந்தம் செய்வதா? என்று தீவிர ஆலோசனையில் இருக்கிறார் இயக்குனர்.
புத்த மதத்திற்கு மாறிய ஷ்ரத்தா தாஸ் :
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஹன்சிகா புத்த மதத்தை பின்பற்றி வருவதாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். அதுபோல் தமிழில் பல்வேறு படங்களில் நடித்துள்ள பூனம் பஜ்வாவும் புத்த மதத்தை பின்பற்றி வருகிறார்.
இந்நிலையில் இந்தி, தெலுங்கு, கன்னட படங்களில் நடித்திருக்கும் ஷ்ரத்தா தாஸ் திடீரென்று புத்த மதத்துக்கு மாறினார். இவருக்கு புத்தமதத்தை அறிமுகப்படுத்தி வைத்தது பூனம் பஜ்வாதானாம்.இந்தி, தெலுங்கு படங்களில் ஷ்ரத்தா நடித்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஹிட் படம் எதுவும் அமையவில்லை. கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்டவர் ஷ்ரத்தா. சமீபத்தில் இவர் நடித்த படத்தின் படப்பிடிப்பு பாங்காக்கில் நடந்தது. படப்பிடிப்பு நடந்த பகுதியிலிருந்து சிறிது தூரத்தில் புத்த ஆலயங்கள் அமைந்திருந்தன. அந்த இடங்களுக்கு சென்றுவந்தார் ஷ்ரத்தா.
இதுபற்றி அவர் கூறும்போது,’புத்த மத மந்திரத்தை உச்சரிக்கும்போது வாழ்க்கையே அற்புதமாக தெரிகிறது. புத்த மதத்தை அறிமுகப்படுத்திய பூனம் பஜ்வாவுக்கு நன்றி’ என குறிப்பிட்டுள்ளார்.
தெலுங்கு நடிகர்கள் பற்றி விமர்சனம்: ராதிகா ஆப்தே நடிக்க தடை?
தமிழில் தோனி, அழகுராஜா படங்களில் ராதிகா ஆப்தே நடித்தார். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
ராதிகா ஆப்தேவின் ஆபாச படங்கள் சமீபத்தில் இணைய தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தின. அந்த நிர்வாண படங்களில் இருப்பது நான் அல்ல என்றும் 'மார்பிங்' செய்து வெளியிட்டுள்ளனர் என்றும் ராதிகா ஆப்தே மறுத்தார். தொடர்ந்து ஹாலிவுட் படத்தில் அவர் ஆபாசமாக நடித்த வீடியோ படமும் இணைய தளங்களில் வெளியானது. யாரோ திருட்டுத்தனமாக அந்த வீடியோவை வெளியிட்டு விட்டனர். இது ராதிகா ஆப்தேவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தெலுங்கு திரையுலகினர் பற்றி சர்ச்சை கருத்தை வெளியிட்டார். தெலுங்கு கதாநாயகர்களும், இயக்குனர்களும் ஆணாதிக்க வாதிகள். பெண்களை மதிப்பது இல்லை என்று கூறினார்.
இது தெலுங்கு பட உலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இனிமேல் தெலுங்கு படங்களில் நடிக்க ராதிகா ஆப்தேவுக்கு வாய்ப்புகள் அளிக்க கூடாது என்று இயக்குனர்களும் இணைந்து முடிவு எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.
தனுஷ் லோக்கலா இறங்கி கலக்கும்போது என்னோட கேரக்டர் அதுக்கு நேரெதிரா இருக்கும்.! - காஜல் அகர்வால்
காஜல் அகர்வாலுக்காக காத்திருக்கிற நேரம் அழகானது. ஃபெஸ்டிவல் புன்னகையும் அசத்தல் காஸ்ட்யூமுமாக பார்ப்பவரை அடிமைப்படுத்தும் அழகில் அவர் ‘‘ஸாரி’’ கேட்கும் முன்னரே மன்னித்துவிட்டோம். உதட்டுக் கூடையெங்கும் புன்னகை பொக்கேயோடு நமக்கு ‘‘ஹலோ’’ சொன்னவரை வேறு என்ன செய்வது? ‘‘நல்லாத்தானே போயிட்டு இருந்தது... திடீரென்று தெலுங்குக்கு போயிட்டீங்களே?’’‘‘என்ன... ஒரு வருஷமா இங்கே இல்லை. அவ்வளவுதான். ரெண்டு படங்கள் தெலுங்கில் ஏற்கனவே ஒப்புக்கொண்டது. பெரிய பட்ஜெட்... கொஞ்ச நாள் பிடிக்கும். என்ன செய்வது? இதோ வந்துட்டேன். அது என்னவோ தெரியலை... தமிழ் இண்டஸ்ட்ரி எனக்கு ரொம்பவே பிடிச்சுப் போச்சு. எனக்குப் பிடிச்சிருந்தா எல்லா ரோலும் பண்ணுவேன்.
காஜல் அகர்வாலுக்காக காத்திருக்கிற நேரம் அழகானது. ஃபெஸ்டிவல் புன்னகையும் அசத்தல் காஸ்ட்யூமுமாக பார்ப்பவரை அடிமைப்படுத்தும் அழகில் அவர் ‘‘ஸாரி’’ கேட்கும் முன்னரே மன்னித்துவிட்டோம். உதட்டுக் கூடையெங்கும் புன்னகை பொக்கேயோடு நமக்கு ‘‘ஹலோ’’ சொன்னவரை வேறு என்ன செய்வது? ‘‘நல்லாத்தானே போயிட்டு இருந்தது... திடீரென்று தெலுங்குக்கு போயிட்டீங்களே?’’‘‘என்ன... ஒரு வருஷமா இங்கே இல்லை. அவ்வளவுதான். ரெண்டு படங்கள் தெலுங்கில் ஏற்கனவே ஒப்புக்கொண்டது. பெரிய பட்ஜெட்... கொஞ்ச நாள் பிடிக்கும். என்ன செய்வது? இதோ வந்துட்டேன். அது என்னவோ தெரியலை... தமிழ் இண்டஸ்ட்ரி எனக்கு ரொம்பவே பிடிச்சுப் போச்சு. எனக்குப் பிடிச்சிருந்தா எல்லா ரோலும் பண்ணுவேன்.
உங்களுக்குத் தெரியுமா, நான் வீட்டிற்குப் போய் முழுசா ஒரு மாதம் உட்கார்ந்து இரண்டு வருஷமாச்சு. எனக்கு இந்த சினிமா எவ்வளவோ கொடுத்திருக்கு. இவ்வளவு ஜனங்களின் அன்பு, வரவேற்பு, கிடைச்சிருக்கிற வசதிகள் எல்லாத்துக்கும் சினிமாதான் காரணம். தமிழ், தெலுங்கு இந்த இரண்டு பக்கம்தான் அங்கே இங்கேன்னு போய்க்கிட்டு இருக்கேன்!’’‘‘முதல் தடவையாக தனுஷுடன் ‘மாரி’... எப்படியிருக்கு?’’ ‘‘அவரோட படங்கள் பார்த்திருக்கிறேன். ஆனால், நேரில் பார்க்கும்போது அவருக்கு சினிமாவில் இருக்கிற ஆர்வம், சடசடன்னு புரிஞ்சுக்கிட்டு நடிக்கிற விதம், பக்கத்தில் நடிக்கிறவங்களை ஈஸியா ஃபீல் பண்ண வைக்கிறது எல்லாமே பிடிச்சுப் போச்சு. அந்த ஆர்வம்தான் அவரை தேசிய விருது வரைக்கும் கூட்டிப் போயிருக்கு. எனக்கு இதில் மாடர்ன் கேர்ள் ரோல்.
தனுஷ் லோக்கலா இறங்கி கலக்கும்போது என்னோட கேரக்டர் அதுக்கு நேரெதிரா இருக்கும். எங்க காம்பினேஷன் நல்லாயிருக்குன்னு நானே சொன்னாலும், நீங்களும் அதையேதான் சொல்லப்போறீங்க. ப்ராமிஸ் பாஸ்! டிரெய்லர், சில சீன்ஸ் பார்த்தேன். சும்மா கலகலப்பா வந்திருக்கு. எனக்கு ‘மாரி’ மேல ரொம்ப நம்பிக்கை வந்திருக்கு!’’ ‘‘கிசுகிசுக்களில் நீங்கள் இருந்ததே இல்லையே,எப்படி?’’‘‘இப்ப சினிமாவில் எங்கே பார்த்தாலும் இருக்கிறது ஃப்ரெண்ட்ஷிப் ட்ரெண்ட்தான். யார்கிட்டயும் பொறாமை கிடையாது. ஈகோ ரொம்பவும் குறைவு. எல்லோரும் சகஜமா பழகிக்கிறோம். ஒரே இடத்தில், பல நாட்கள் ஷூட்டிங்கில் இருக்க வேண்டி இருக்கு. நடிப்பு விளையாட்டு இல்லை. பல கோடிகள் நடமாடுகிற பிஸினஸ்.
ஒரு ஆபீஸ்ல எப்படி நல்ல ஃப்ரெண்ட்ஷிப் வச்சிருக்கிறாங்களோ, அப்படித்தான் ஒரு ஹீரோயினும் சினிமாவில் நடந்துக்க வேண்டியிருக்கு. அதைத் தப்பா புரொஜெக்ட் பண்ணக் கூடாது. சாதாரணமா பேசிக்கிறது, சிரிச்சுக்கிறது, பழகிக்கிறது காதல் கிடையாது. நான் சினிமாவுல எச்சரிக்கையா இருப்பேன். என் கவனத்தை சிதற விடுறதில்லை. வேலை... வேலைன்னு திரிஞ்சுக்கிட்டு, அடுத்த ஃப்ளைட், அடுத்த ஃப்ளைட்னு போய்க்கிட்டு இருக்கும்போது வேறு எதற்கும் எனக்கு இடம் இல்லை!’’
‘‘இங்கே ஹன்சிகா, த்ரிஷா எல்லாம் திக் ஃப்ரெண்ட்ஸ்... உங்களுக்கு அப்படி யாரும் இல்லையா..?’’‘‘எல்லோரிடமும் நல்லா பழகுவேன். எங்கே பார்த்தாலும் ‘ஹாய்’ சொல்லிட்டு, அடுத்தடுத்த புராஜெக்ட் பத்திப் பேசுவோம். யார் மேலேயும் கோபம் இல்லை, வருத்தமும் இல்லை. பெரிய ஃப்ரெண்ட்ஷிப்பும் இல்லை. எல்லாத்துக்கும் டைம் இல்லைன்னுதான் முடிக்க வேண்டியிருக்கு!’’‘‘கார்த்தி, தனுஷ், விஜய், சூர்யா, விஷால்னு நடிச்சிட்டீங்க. ஒவ்வொருத்தர்கிட்டயும் என்ன பிடிக்கும்?’’
‘‘கார்த்தியோட ரெண்டு படம், அதே மாதிரி விஜய் கூடவும் ரெண்டு படம் செய்துட்டேன். கார்த்தி ஜாலியா பழகுவார். எனக்கு தமிழ் சரியா வராத நேரங்களில் அவர் கை கொடுப்பார். விஜய் சார் பெரிய மாஸ். அமைதியா இருந்து, கேமரா அவர் பக்கம் திரும்பினதும் வேற ஆளா மாறிடுவார். ‘துப்பாக்கி’ எனக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது. சூர்யா ரொம்ப அமைதி. ஸ்கிரீன்ல ப்ரெசன்ஸ் கொடுத்துட்டு, தான் உண்டு, தன் வேலை உண்டுனு இருப்பார். தனுஷ் செட்டில் ரொம்ப துறுதுறு. கலகலப்பா இயல்பா பழகுவார். விஷால் கூட இப்பதான் ‘பாயும் புலி’ பண்றேன்.
கூல் நடிகர். தயாரிப்பாளர், நடிகர்னு எல்லாத்திலும் ப்ரில்லியன்ட்!’’‘‘ ‘காக்கா முட்டை’யில் ஐஸ்வர்யா இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக நடிச்சிருக்காங்க. அப்படி ஒரு ரோல் உங்களுக்கு கிடைச்சா...’’‘‘எப்பவாவது அபூர்வமாதான் ஹீரோயின்களை மையப்படுத்தியும், குழந்தைகளை வச்சும் படங்கள் வருது. சவாலான கேரக்டர்கள் எனக்குக் கிடைச்சா... அது மனசுக்குப் பிடிச்சா... ஓகே... தாராளமா செய்வேன்!’’
‘‘காதல், கல்யாணம்... சிந்திக்கவே இல்லையா..?’’‘‘பரபரன்னு ஓடிக்கிட்டு இருக்கும்போது எப்படி..? கல்யாணம் ரொம்ப முக்கியமான விஷயம். இந்த பரபரப்பு முடிச்சிட்டு பக்குவமா பார்த்துக்கலாம். இப்போதைக்கு வேண்டாமே!’