கண்ணீருடன் விடைபெற்ற நடிகர் சிவகுமார் – வேதனையில் வெளிவந்த சிவகுமாரின் வார்த்தைகள்
முகநூலிலோ அல்லது வேறு எதிலேயோ ஒருவர் தனக்கு தெரிந்த செய்தி அல்லது தகவல் அல்லது கருத்தினை பகிர்கிறார்கள் என்றால், அது நன்றாக இருந்தால் அதை
மனமுவந்து பாராட்டுவது நமது கடமை. அதே நேரத்தில் அவர் கூறியது தவறு என்று நமது மனதில் பட்டால், அதனை நாகரீகமாகவும் ஆழமாகவும், தகுந்த ஆதாரத்துடனும் அவரது மனம் புண்படா மலும் நமது கருத்தினை தெரிவிக்க வேண்டும். அதை விடுத்து அந்த தகவல் அல்லது செய்தி அல்லது கருத்தினை சொல்லியவரின் மனதை ஈட்டியால் குத்தியதை விட ஆழமாக வார்த்தைகளால் குத்தி ரண மாக்கி அதில் சுகம் காணுவது என்பது எவ்வளவு கீழ்த்தரமான செயல். ஏற்கனவே நீயா நானா கோபிநாத் அவர்களை, தனது பெயரைக்கூட வெளியிட துணிவில் லாத ஒருவர், அங்கிரிமேன் என்ற பெயரில் யூடிப்-பில் காணொலியாக தனது கருத்தினை மிகவும் கீழ்த்தரமான முறையில் பதிவு செய்திருந்தார். (அதையும் விதை2 விருட்சம் மிகவும் நாகரீக கண்டித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க து) எதற்காக? ஏன்? இந்த கோபம், வெறி! இதையும் அதே வேகத்தோடு விதை2விருட்சம் கண்டிக்கிறது.
அந்த வரிசையில் இதோ நம்ம நடிகர் சிவகுமாரும் இணைந்துள்ளார். ஓவியராக தனது வாழ்க்கை யைத் தொடங்கிய இவர் பின் நடிகராக உருமாறி, பல்வேறு வெற்றித்திரைப்படங்களிலும் சரித்திரத் திரைப்படங்களிலும் நடித்தார். தற்போது தொலை க்காட்சிகளிலும், பொதுநிகழ்ச்சிகளிலும் கம்ப ராமாயணக் கதைகள், தன்னம்பிக்கையூட்டும் கரு த்துரைகள், மற்றும் பல்வேறு தலைப்புக்களின்கீழ் பயனுள்ள பல சொற்பொழிவுகளை நிகழ்த்தி வருகிறார். இவர் தனது பெயரிலேயே ஒரு முக நூலில் ஒரு கணக்குத் தொடங்கி அதில் முக நூலில் அவர் வரைந்த பல்வேறு சிறப்பான ஓவியங்களை பகிர்ந்தும், தனது கருத்தினை, தகவல்களை, செய்தியினை ஆழமாக பதிவு செய்து வந்த நடிகர் சிவகுகுமார் அவர்களை, யாரோ அந்த முகம் தெரியாதவர் கருத்துச் சொல்கிறேன் என்ற பெயரில் அநாகரீக மாக தனது கருத்தினை வெளிப்படுத்திய தால், நடிகர் சிவகுமார் மிகுந்த மனவேத னையுடன் முகநூலில் வேதனையுடன் வெளியிட்ட வரிகள் இவைஸ (இதை படித்த பிறகாவது அந்தமுகம் தெரியாத நபர் உணர்வாரா? )
சமீபத்தில் முன்னாள்ஹீரோயின் ஜெயப்பிரதாவின் மகன் மற்றும் ஹன்சி கா நடித்த உயிரே உயிரே படத்தின்
இசைவெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. இவ் விழாவில் பேசிய பாடலாசிரியர் விவேகா, ” நித்யா மேனனை நினைத்து எழுதாதீங்க.. ஹன்சிகாவை நினைத்து பாட்டெழுதுங்க”, என இயக்குநர் கூறியதை நினைவுபடுத்தி, ” இதுவரை பிறந்ததிலே இவள்தான் அழகி. உலகத்தின் மலர்களுக்கு இவள்தான் தலைவி,” என எழுதினேன் என கூறி னார்.
உடனே மைக்கை பிடித்து வெகுண்டு எழுந்துவிட்டார் ஸ்ரீ ப்ரியா ‘அதெப்படி நித்யா மேனனை அழகில்லை என்று நீங்கள் கூறலாம். நித்யாமேனன், ஹன்சிகாவுக்கு நிகரான அழகி அவர், இணையற்ற திறமைசாலியும் கூட, மேலும், அந்த காலத்தில் தயாரிப்பாளர்கள் எங்களுக்கு குடை பிடித்திருந்தால் இப்படி கருத்திருக்க மாட் டோம்’ என கூறினார்.
இதனை கேட்டதும் பாடலாசிரியர் விவேகா, சற்று அதிர்ச்சி அடைந்தார். மேலும் இதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சிரித்துக் கொண்டே சமாளித்தார்.