சமந்தா, எமி, நைனிகா ஆகியோருடன் ‘மூன்று முகம்’ விஜய்!சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள படம் ‘புலி’. இப்படத்தின் பர்ஸ்ட்லுக், டீஸர் வெளியாகி டிரெண்ட் ஆகியுள்ளது. தற்போது இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்படத்தின் இசை விழா பிரம்மாண்ட முறையில் சென்னையில் நடைபெறவுள்ளது.இதனை தொடர்ந்து அட்லி இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய். கடந்த வாரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கேரளா ஹவுஸில் இப்படத்தின் பூஜை நடைபெற்றது. எனவே, இன்றுமுதல் இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு துவங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வெவ்வேறு இடங்களில் 140 நாட்கள் இதன் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.விஜய்க்கு ஜோடியாக இரு நாயகிகள் நடிக்கிறார்கள். சமந்தா, எமி ஜாக்சன் ஜோடியாக நடிக்கின்றனர். முதன்முறையாக குழுந்தை நட்சத்திரமாக இப்படத்தில் நடிகை மீனாவின் மகள் நைனிகா நடிக்கின்றார். முக்கிய கதாபாத்திரத்தில் பிரபு மற்றும் ராதிகா நடிக்கவுள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.இதுவரை இப்படத்தின் தலைப்பை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. விஜய் இப்படத்தில் மூன்றுவித கெட்டப்பில் நடிப்பதால் ‘மூன்று முகம்’ தலைப்பே மிக பொருத்தமாக இருக்கும் என படக்குழுவினர் கூறியுள்ளனர். தொடர்ந்து இப்பெயரே ஆலோசனையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.ஹாலிவுட் ரேஞ்சுக்கு மாறிய அஜித்: பயத்தில் ஷாலினிநடிகர் அஜித், ரசிகர்களால் செல்லமாக ‘தல’ என்று அழைக்கப்படுபவர். இவர் பெரும்பாலும் பொது விழாக்களில் கலந்துகொள்வதில்லை. ஆனால், இவருக்கென்று மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அதேபோல், நல்ல நற்குணங்களும், உதவும் மனப்பான்மையும் இவரிடம் அதிகமாகவே இருக்கிறது. இதனால், இவரது முகத்தை பார்க்க முடியாவிட்டாலும், இவருக்கென்று வெறித்தனமான ரசிகர்கள் கூட்டம் உண்டு.இவர் தற்போது ‘சிறுத்தை’ சிவா இயக்கும் பெயரிடப்படாத ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் பின்னி மில்லில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது, இவரைப் பார்க்க காலையில் இருந்தே அங்கு ஒரு பெரிய ரசிகர்கள் கூட்டம் கூடிவிட்டதாம். அவரது முகத்தை பார்க்க முடியாவிட்டாலும், அவர் வரும் காரையாவது பார்த்துவிட வேண்டும் என்று ரசிகர்கள் அலை மோதினார்களாம்.அதேபோல், இந்த படத்தில் டான்ஸ் மாஸ்டர் ஷோபியின் நடன அமைப்பில் அமைந்துள்ள ஒரு பாடலுக்கு அஜித், செமத்தியான குத்தாட்டம் போட்டுள்ளாராம். அவருடைய ஆட்டத்தை பார்த்து படக்குழுவினரே அசந்து போய்விட்டார்களாம். இதேபோல், மற்றொரு பாடலையும் ஷோபி மாஸ்டரின் நடன அமைப்பில் வெளிநாட்டில் படமாக்கவுள்ளார்களாம். அந்த பாடலை வித்தியாசமான நடனங்களுடன் படமாக்கவுள்ளார்களாம். அது எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும், அதை சிறப்பாக செய்துகொடுக்க அஜித்தும் முனைப்பாக இருப்பதாக கூறப்படுகிறது.அஜித், இப்போதெல்லாம் தோற்றத்தில் ஹாலிவுட் நடிகர்களை போன்று ஹை லுக்கில் இருக்கிறாராம். அவரைப் பார்ப்பவர்களெல்லாம், அவரிடம் தங்களை பார்க்கும்போது ஹாலிவுட் நடிகர் போன்று தோற்றமளிக்கிறீர்கள் என்று கூறினால், சின்னதாக ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு, என்னுடைய மனைவியும் இதேதான் கூறுகிறார். ஆனால், நான் அப்படி இருப்பது அவருக்கு பயத்தை கொடுத்திருக்கிறது. என்னை ஹாலிவுட்டுக்கு கொண்டு சென்றுவிடுவார்களோ என்ற பயம்தான் என்று சொல்லி, சிரிக்கிறாராம்.எவ்வளவு சீரியசான விஷயத்தையும் ஜாலியாகவும், எளிதாகவும் எடுத்துக் கொள்வது அஜித்துக்கே உரித்தானது என்றால் அது மிகையல்ல என்பதற்கு இதுவே சான்று. அன்பின் காரணமாகத் தான் ஒருவரைத் திருமணம் செய்ய வேண்டும்! – த்ரிஷாநடிகை த்ரிஷாவுக்கும், படஅதிபர் வருண்மணியனுக்கும் இடையே நடப்பதாக இருந்த திருமணம் எதிர்பாராதவிதமாக ரத்தானது. அதன்பிறகு நடிப்பில் பிஸியாகிவிட்டார் த்ரிஷா. கைவசம் ஏராளமான படங்கள்.கவலைகளை மறந்து நடிப்பில் மும்முரமானது எப்படி? திருமணம் ரத்தானது ஏன் போன்ற கேள்விகளுக்கு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பதிலளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:திருமணம் ரத்து போன்ற ஒரு நிலை ஏற்பட்டால் பலரும் வருத்தத்தில் இருப்பார்கள். ஆனால் நான் அவ்வளவு சுலபமாகப் பாதிக்கப்பட மாட்டேன். நான் நேர்மறை எண்ணங்களுடன் வாழ்பவள். மனதும் மூளையும் என்ன சொல்கிறதோ அதன்படி முடிவுகளை எடுப்பவள்.என் திருமணம் ரத்தானது குறித்து வந்த வதந்திகளை நான் கண்டுகொள்ளவில்லை. என் அம்மா மட்டுமே என் வாழ்க்கையின் முக்கியமான நபர். வேறு யாருக்கும் நான் பதில் சொல்லத் தேவையில்லை. ஒருநாள் நிச்சயம் செய்துவிட்டு அடுத்தநாள் அது ரத்தானதால் மக்கள் குழப்பமடைந்து பலவற்றையும் ஊகிக்கத்தான் செய்வார்கள்.என்னால் இந்தப் பிரிவைப் பற்றி நிறைய சொல்லமுடியும். அதைப் பற்றி பேசவேண்டாம் என்றும் நினைக்கவில்லை. ஆனால் இதில் பலர் சம்பந்தப்பட்டுள்ளார்கள். அவர்களை இந்தப் பிரச்னைக்குள் இழுக்க விரும்பவில்லை. இப்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். கடந்தகாலத்தை நினைக்க விரும்பவில்லை.இப்போதும் திருமணத்தின் மீது எனக்கு நம்பிக்கை உண்டு. சமூகத் தேவைக்காக திருமணம் செய்யவேண்டும் என்பதில்தான் உடன்பாடு இல்லை. சமூகத்துக்காக யாரும் திருமணம் செய்யக்கூடாது, அதனால் பலர் அவதிப்படுவதை நான் பார்த்துள்ளேன். அன்பின் காரணமாகத்தான் ஒருவரைத் திருமணம் செய்யவேண்டும். வேறு காரணங்களுக்காக அல்ல. எனக்கேற்ற துணையை 25 வயதில் சந்தித்திருந்தால் அப்போதே திருமணம் செய்திருப்பேன் என்றார்.ஓய் சன்னி லியோன், இந்தியாவை விட்டு மரியாதையா ஓடிப்போய்விடு: ராக்கி சாவந்த்மோட்டார்வாய்ராக்கி சாவந்த் உளறித் தள்ளுவதால் தான் அவரை பாலிவுட்காரர்கள் மோட்டார்வாய் என்று கிண்டல் செய்கிறார்கள். ஆனால் அவர் அதை எல்லாம் கண்டுகொள்வதே இல்லை.கச்சிதக் காக்கியைக் குறி வைத்து கிக்கோடு திரியும் நாயகிகள்!பிள்ளையார் சுழி காஜல் அகர்வால்ஜில்லா படத்தில் முதன்முதலில் காக்கி உடை அணிந்து இந்த ட்ரெண்டை உருவாக்கி வைத்தவர் காஜல் அகர்வால் தான், அம்மணி காட்டிய வழியில் அடுத்தடுத்த நடிகைகளும் படு ஜோராகப் பயணிக்கத் தொடங்கி இருக்கின்றனர். நட்பை விரும்பும் காஜல்காஜல்ஹன்சிகா, திரிஷா எல்லாம் நெருங்கிய கூட்டாளிகள். உங்களுக்கு அப்படி யாரும் இல்லையா என்இறு நம்ம காஜலிஇடம்இ கேட்டஇதற்இகு, “எல்லோரிடமும் நல்லா பழகுவேன். எங்கே பார்த்தாலும் ‘ஹாய்’ சொல்லிட்டு, அடுத்தடுத்த படங்கள் பற்றிப் பேசுவோம். யார் மேலேயும் கோபம் இல்லை, வருத்தமும் இல்லை, பெரிய நட்பும் இல்லை. எல்லாத்துக் கும் நேரமின்மைதான் காரணம்.” கார்த்தி, தனுஷ், விஜய், சூர்யா, விஷால்னு நடிச்சிட்டீங்க. இவர்களிடம் என்ன பிடிக்கும்?’’“கார்த்தி ஜாலியாகப் பழகுவார். எனக்கு தமிழ் சரியாக வராத நேரங்களில் அவர் கை கொடுப்பார். விஜய் சார் பெரிய மாஸ். அமைதியாக இருந்து, கேமரா அவர் பக்கம் திரும்பினதும் வேற ஆளாக மாறிடுவார். ‘துப்பாக்கி’ எனக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது. சூர்யா ரொம்ப அமைதி. நடித்து முடித்தவுடன் தான் உண்டு, தன் வேலை உண்டுனு இருப்பார். தனுஷ் செட்டில் ரொம்ப துறுதுறு. கலகலப்பாக இயல்பாகப் பழகுவார். விஷால்கூட இப்பொழுதுதான் ‘பாயும் புலி’ இபஇடத்தில்இ நடிக்கிஇஇறேன்இ,” என்கிறார் காஜல். தூங்காவனத்தில் த்ரிஷாகமலுடன் இணைந்து தூங்கா வனத்தில் நடிக்கும் த்ரிஷா, இந்தப் படத்தில் காக்கி உடை அணிந்து கம்பீரமாக நடித்துக் கொண்டிருக்கிறாராம்.தனி ஒருவனில் நயன்தாராநயன்தாரா மட்டும் சும்மா இருப்பாரா தனி ஒருவனில் காக்கி உடை அணிந்து போலீசாக நடித்துக் கொண்டிருக்கிறார்.கான் படத்தில் டாப்ஸிசிம்புவுடன் கான் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் டாப்ஸி பன்னு, இந்தப் படத்தில் லேடி போலீசாக நடித்துக் கொண்டிருக்கிறார்.போலீசாக நடித்து காமெடி செய்கிறார்களா இல்லை கடமையைச் செய்கிறார்களா என்று பார்க்கலாம்.