இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடிக்க என்னாலும் முடியுமே!!! – ஆனால்???
காக்கா முட்டை மாதிரி கதை அமைந்தால் தானும் இரண்டு குழந்தைக்குத் தாயாக நடிக்க தயங்கமாட்டேன் என்கிறார் காஜல் அகர்வால். முன்னணி நடிகையான காஜல் அகர்வால், தனுஷ் ஜோடியாக மாரி படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் விளம்பரத்துக்காக செய்தியாளர்களை நேற்று சென்னையில் சந்தித்தார்.
அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவற்றுக்கு காஜல் சொன்ன பதில்களும்ஸ
2 குழந்தைக்குஸ கேள்வி: உங்களைவிட இளம் ஹீரோயின் ஐஸ்வர்யா 2 குழந்தைக்கு தாயா நடிச்சாங்க. அந்த மாதிரி நீங்க நடிப்பீங்களாஸ பதில்: அப்படி ஒரு கனமான கதாபாத்திரம் எனக்கு கிடைத்தால், நிச்சயமாக நானும் 2 குழந்தைகளுக்கு தாயாக நடிக்க தயாராக இருக்கிறேன்.
2 கோடி வேணுமா? கேள்வி: எக்குத்தப்பா சம்பளம் கேக்கறீங்களாமே.. அதுவும் ரூ 2 கோடி வேண்டும் என கட்டாயப்படுத்துகிறீர்களாமே! பதில்: என் திறமைக்கேத்த சம்பளத்தை கேட்டு வாங்கறேன். இதில் தவறென்ன? (உடனிருந்த தயாரிப்பாளர் ராதிகா, தான் அந்த அளவு சம்பளம் தரவில்லை என்றார்!)
ஹீரோக்களுக்கு விருந்து கேள்வி: ஹீரோக்களுக்கு விருந்து கொடுத்து பட வாய்ப்புகளைப் பிடிப்பதாகச் சொல்கிறார்களே? பதில்: அதெல்லாம் வதந்தி. பட வாய்ப்புக்காக அப்படி யாராவது விருந்து கொடுப்பார்களா என்ன?
தமிழே தெரியாம தமிழ்ல நடிக்கிறீங்களே? கேள்வி: தமிழ் படங்களில் நடிக்கிறீர்கள்ஸஆனால், உங்களுக்கு தமிழ் பேச தெரியவில்லையே? பதில்: இப்போதுதான் தமிழ் கற்றுக்கொள்ள ஆரம்பித்து இருக்கிறேன். கொஞ்சம் கொஞ்சம் தமிழ் பேச முடியும்.
பிடிச்ச ஹீரோ கேள்வி: உங்களுக்கு பிடித்த கதாநாயகன் யார்? பதில்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
காதலா? கேள்வி: ஆந்திராவை சேர்ந்த ஒரு தொழில் அதிபரை நீங்கள் காதலிப்பதாக கிசுகிசுக்கப்படுகிறதே? பதில்: எனக்கு காதலிப்பதற்கு நேரமில்லை. அப்படி யாரையாவது காதலித்தால், துணிச்சலாக வெளியில் சொல்வேன். இப்போ சினிமாவில் நான் ரொம்ப பிஸி.
வருங்கால கணவர்.. கேள்வி: வருங்கால கணவர் பத்தி ஏதாவது ஐடியா இருக்குமே? பதில்: அப்படியெல்லாம் எதுவுமே இல்லை எனக்கு. குறிப்பிட்ட ஊரைச் சேர்ந்தவரைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூட நினைக்கவில்லை. இந்தியாவின் எந்த பகுதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஓகே. ஆனா, நேர்மையா, என்னைப் புரிந்து கொண்டு துணையா இருப்பவராக இருந்தால் போதும்!
மர்ம மனிதனிலிருந்து வெளியேறினார் ப்ரியா ஆனந்த்!
ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்துக்கு மர்ம மனிதன் என்று பெயர் வைத்துள்ளனர். பெயருக்கேற்ப படப்பிடிப்பு தொடங்கும் முன்பே சில மர்ம நடவடிக்கைகள்.
இதில் ப்ரியா ஆனந்த்தான் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனந்த் சங்கரின் முதல் படம் அரிமா நம்பியிலும் அவர்தான் நாயகி. இப்போது திடீரென்று அவர் வாக் அவுட் செய்துள்ளார். விக்ரம் ரசிகர்களிடம் சாரி கேட்டிருப்பவர், கால்ஷீட் பிரச்சனை காரணமாக படத்திலிருந்து வெளியேறியதாக குறிப்பிட்டுள்ளார்.
ப்ரியா ஆனந்துக்குப் பதில் தற்போது பிந்து மாதவியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
படமே இல்லாத ப்ரியா ஆனந்துக்கு கால்ஷீட் பிரச்சனையா? எங்கேயோ இடிக்குதே பாஸ்.
தங்கைக்கு போட்டியாக சினி உலகிற்குள் காலடி எடுத்து வைத்த அக்கா!!!
ஊதா கலரு ரிப்பன் என்ற ஒரே பாடலின் மூலம் தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் பரவலாக அறியப்பட்ட நடிகை ஸ்ரீதிவ்யாவைத் தொடர்ந்து அவரது அக்காவும் நடிகையாகியுள்ளார்.
தொடர்ந்து தாவணி பாவாடையிலேயே நடிக்க இளைஞர்கள் ஸ்ரீதிவ்யாவைத் தங்கள் கனவுக் கன்னியாக ஏற்றுக் கொண்டனர். தற்போது ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கும் ஸ்ரீதிவ்யாவுக்கு போட்டியாக அவரது வீட்டில் இருந்தே சத்தமில்லாமல், இன்னொரு நடிகை உருவாகி விட்டார் அவருக்கு தங்கை கிடையாதே என்று நினைக்காதீர்கள்.
அக்கா இருக்கிறார் என்னது அக்காவா ன்னு ஜெர்க் ஆகாதீங்கப்பா, அக்காதான் நடிக்க வரப்போகிறார். அவரின் பெயர் ஸ்ரீரம்யா. இவரின் முதல் படம் 1940லோ ஒக கிராமம் என்ற தெலுங்குப் படம். இதில் நடித்தற்காக நந்தி விருது பெற்றிருக்கிறார்.
தமிழில் யமுனா என்ற படத்திலும் நடித்திருக்கிறார், தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருக்கும் ஸ்ரீரம்யா தங்கை ஸ்ரீதிவ்யாவை ஒருபோதும் போட்டியாக நினைத்தது இல்லையாம் (பாசம்). சக்கரவாக்கம் என்ற தெலுங்கு சீரியலில் இருவரும் பாசமான அக்கா, தங்கையாக நடித்திருக்கிறோம் என்று கூறும் ஸ்ரீரம்யா இரண்டு ஹீரோயின் சப்ஜெக்ட் என்றால் தங்கை ஸ்ரீதிவ்யாவுடன் சேர்ந்து நடிப்பதற்கும் தயாராக இருக்கிறாராம் (நல்லது).
ஆட்டோவில் வந்த அதிர்ஷ்ட லட்சுமி! – லட்சுமி மேனனின் முதல் நாள் கல்லூரி அனுபவம்
ஒரு வழியாக பள்ளிப் படிப்பை முடித்து, கல்லூரி வாசலில் அடியெடுத்து வைத்துவிட்டார் கோலிவுட்டின் அதிர்ஷ்டலட்சுமியான லட்சுமி மேனன். கேரளாவில் கொச்சியில் உள்ள பிரபல தூய நெஞ்சக் கல்லூரி (சேக்ரட் ஹார்ட் காலேஜ்)யில் தகவல் தொடர்பு ஆங்கிலம் சேர்ந்திருக்கிறார் லட்சுமி.
இந்த கோர்ஸ் அவருக்கு ரொம்பவே பிடிக்குமாம். இந்தப் படிப்பில் நான் நிச்சயம் அதிக மதிப்பெண்கள் வாங்கி சாதித்துக் காட்டுவேன் என்று கூறும் லட்சுமி மேனனின் முதல் நாள் கல்லூரி அனுபவம் எப்படி இருந்தது? கோடிகளில் சம்பாதித்து, விதவிதமாகக் கார்கள் வைத்திருந்தாலும், முதல் நாள் எல்லா மாணவர்களையும் போல ஆட்டோவில் சாதாரணமாகப் போயிருக்கிறார் லட்சுமி மேனன். அடுத்த நடந்ததை அவரே சொல்கிறார்: “இந்த நாளுக்காகத்தான் நான் காத்திருந்தேன். ரொம்ப ஆர்வமாக இருந்தது கல்லூரி செல்ல.
கேரளாவின் மிக உயர்ந்த அந்தஸ்து கொண்ட தூய நெஞ்சக் கல்லூரியில் முதல் நாள் முதல் வகுப்பு மிக இனியாக அமைந்தது. நான் சாதாரணமாக, மற்ற மாணவர்களுடன் சகஜமாகப் பழகவே விரும்புகிறேன்.
ஆனால் ஒரு நடிகை என்ற அடையாளத்தை மறைக்க முடியாதேஸ சக மாணவர்கள் என்னை ஆச்சர்யத்துடன்தான் பார்க்கிறார்கள். இன்னும் சில நாட்களில் எல்லாம் சகஜமாகிவிடும்,” என்கிறார். லட்சுமி மேனன் சினிமாவில் நடிக்க தடையாக இல்லாத வகையில் அவருக்கு சலுகைகள் அளித்திருக்கிறது, கண்டிப்புக்கு பெயர் பெற்ற இந்தக் கல்லூரி என்பது இன்னொரு விசேஷம்.
காமெடி நடிகருடன் நடிகை ரேஷ்மி காதல்
ரேஷ்மி கவுதம் தமிழில் கண்டேன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். மாப்பிள்ளை விநாயகர், பிரியமுடன் பிரியா, தவ்லத் போன்ற தமிழ் படங்களிலும் நடிக்கிறார். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.
ரேஷ்மி கவுதமும் தெலுங்கு படங்களில் காமெடி வேடங்களில் நடிக்கும் சுதீருக்கும் நெருக்கமான நட்பு ஏற்பட்டது. தற்போது அது காதலாக மலர்ந்துள்ளது.
இருவரும் ரகசியமாக சந்தித்து வருகிறார்கள். இவர்கள் கட்டிப்பிடித்தபடி நெருக்கமாக இருக்கும் படங்கள் இணையதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இப்படங்கள் வந்த பிறகே இருவரும் காதலிப்பது அம்பலமானது. இவர்கள் படங்களில் சேர்ந்து நடிக்கவில்லை. ஆனாலும் படப்பிடிப்புக்கு வெளியே இவர்களுக்குள் காதல் பற்றிக் கொண்டு உள்ளது.