திருமண ஏற்பாடுகள் நடப்பதான செய்திகு காஜல் அகர்வால் மறுப்பு!
காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கில் பிசியாக நடிக்கிறார். தனுசுடன் 'மாரி' படத்திலும் விஷாலுடன் 'பாயும் புலி' படத்திலும் நடிக்கிறார். இந்தி பட மொன்றிலும் ஒப்பந்தமாகியுள்ளார். காஜல் அகர்வாலுக்கு திருமண ஏற்பாடுகள் நடப்பதாகவும் செய்திகள் பரவி உள்ளன. தொழில் அதிபர் ஒருவரை நிச்சயம் செய்துள்ளதாகவும் கூறப்பட்டது. இதனை காஜல் அகர்வால் மறுத்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,
காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கில் பிசியாக நடிக்கிறார். தனுசுடன் 'மாரி' படத்திலும் விஷாலுடன் 'பாயும் புலி' படத்திலும் நடிக்கிறார். இந்தி பட மொன்றிலும் ஒப்பந்தமாகியுள்ளார். காஜல் அகர்வாலுக்கு திருமண ஏற்பாடுகள் நடப்பதாகவும் செய்திகள் பரவி உள்ளன. தொழில் அதிபர் ஒருவரை நிச்சயம் செய்துள்ளதாகவும் கூறப்பட்டது. இதனை காஜல் அகர்வால் மறுத்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "நான் திருமணத்துக்கு அவசரப்படமாட்டேன். இப்போதைக்கு என் திருமணம் நடக்காது. அதற்கு நிறைய காலம் உள்ளது. ஒவ்வொரு விஷயமும் அதற்குரிய நேரத்தில் நடக்க வேண்டும். அது போல் என் திருமணமும் அதற்கான நேரம் வரும் போது நடக்கும்.
சினிமாவில் பெயர் சம்பாதிக்கவும், பணம் சம்பாதிக்கவும் தான் நடித்துக் கொண்டு இருக்கிறேன். என் முடிவுகளை நானே சுயமாக எடுக்கிறேன். பெரும்பாலான வீடுகளில் பெண்கள் அவர்களின் அம்மாக்களிடம் ஆலோசனை கேட்டு அதன்படி நடக்கிறார்கள். நான் அப்படி இல்லை. என் தாயை தொந்தரவு செய்ய மாட்டேன். நானே சொந்தமாக முடிவுகள் எடுக்கிறேன்" என்றார்.
நான் சமந்தாவின் தீவிர ரசிகை: எமி ஜாக்சன்
சமந்தாவும் எமி ஜாக்சனும் இணைந்து தனுஷுக்கு ஜோடியாக ‘வேலையில்லா பட்டதாரி’ இரண்டாம் பாகத்தில் நடித்து வந்தார்கள். இப்படத்தில் இருந்து இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வருகின்றனர். விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. தற்போது படத்திற்கான இறுதிக்கட்ட வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இப்படத்தையடுத்து சமந்தாவும், எமிஜாக்சனும் மீண்டும் இணைந்து விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்கள். மீண்டும் சமந்தாவுடன் இணைந்து நடிப்பது குறித்து எமி ஜாக்சன் கூறும்போது, நான் சமந்தாவின் தீவிர ரசிகை. இருவரும் மீண்டும் இணைந்து விஜய் படத்தில் நடிக்க இருக்கிறோம். எங்கள் இருவரின் கூட்டணி இரண்டு படங்களிலும் சிறப்பாக இருக்கும். நான் சமந்தா மீது அதிக மரியாதை வைத்துள்ளேன். அவர் சிறந்த நடிகை. என்னிடம் நிறைய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார் என்றார்.
விஜய்யுடன் சமந்தா எமிஜாக்சன் இணைந்து நடிக்கும் படத்தை அட்லி இயக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புக்கான பூஜை ஜூன் 26-ம் தேதி நடக்க இருக்கிறது. ஜூலை 1-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.
ஹன்சிகா - ஸ்ருதி.. யாருக்கும் முக்கியத்துவம்? - சம பங்கு அளித்த சிம்புதேவன்!
சிம்புதேவன் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள
சிம்புதேவன் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள "புலி" படத்தில் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இப்படத்தில் 28 ஆண்டுகளுக்கு பிறகு நேரடி தமிழ் படத்தில் நடித்திருக்கிறார் ஸ்ரீதேவி கபூர். மேலும், "நான் ஈ" சுதீப்பும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் இருப்பதால் யாருக்கும் முக்கியத்துவம் இருக்கும் என்று அனைவருக்கும் ஒரு கேள்வி எழுந்தது. அதற்கு இயக்குனர் சிம்புதேவன் பதில் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது...
"புலி படத்தில் ஸ்ருதியும், ஹன்சிகாவும் விஜய்க்கு ஜோடியாக சமமாக நடித்துள்ளனர். நான் அவர்களுக்கு இந்த படத்தின் கதையை கூறியபோது, அவர்களுடைய கதாபாத்திரங்களை புரிந்துகொண்டு உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டனர். மேலும் நந்திதாவும் இப்படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார்." என்றார். அத்துடன், ஸ்ரீதேவி கதாபாத்திரம் குறித்து அவர் கூறும்போது... ஸ்ரீதேவி இந்த படத்தில் மகாராணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் கிட்டத்தட்ட 28 வருடங்களுக்கு பிறகு நேரடி தமிழ் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் அவருக்கு மிகப்பெரிய மாற்றத்தை தரும். மேலும், இந்த படம் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்தாக இருக்கும்" எனவும் அவர் தெரிவித்தார்.
அழகான கவர்ச்சியான வில்லியாக வருகிறாராம் அஞ்சலி!
தமிழ் ஹீரோக்கள் பத்து பேரை ஒற்றை ஆளாக அடிப்பதை விமர்சிக்கிறோம். தெலுங்கில் ஒருவர் இருக்கிறார். பாலகிருஷ்ணா. ஐம்பதுக்குமேல் வயதாகிறது. தோட்டாவை பல்லால் பிடிப்பார், தொடையை தட்டி ரயிலை கவிழ்ப்பார். சுமோவில் வரும் ஆள்களை கைக்கொன்றாக பிடித்து சுற்றுவதைத்தானே பார்த்திருக்கிறீர்கள். இவர் சுமோவையே கையால் பிடித்து சுழற்றி வீசுவார். விஜயகாந்த், சரத்குமாருடன் நடிக்க மாட்டேன் என்று சொல்லும் த்ரிஷா, நயன்தாரா எல்லாம் பாலகிருஷ்ணாவுடன் ஜோடியாக டூயட் பாடியிருக்கிறார்கள்.
தமிழ் ஹீரோக்கள் பத்து பேரை ஒற்றை ஆளாக அடிப்பதை விமர்சிக்கிறோம். தெலுங்கில் ஒருவர் இருக்கிறார். பாலகிருஷ்ணா. ஐம்பதுக்குமேல் வயதாகிறது. தோட்டாவை பல்லால் பிடிப்பார், தொடையை தட்டி ரயிலை கவிழ்ப்பார். சுமோவில் வரும் ஆள்களை கைக்கொன்றாக பிடித்து சுற்றுவதைத்தானே பார்த்திருக்கிறீர்கள். இவர் சுமோவையே கையால் பிடித்து சுழற்றி வீசுவார். விஜயகாந்த், சரத்குமாருடன் நடிக்க மாட்டேன் என்று சொல்லும் த்ரிஷா, நயன்தாரா எல்லாம் பாலகிருஷ்ணாவுடன் ஜோடியாக டூயட் பாடியிருக்கிறார்கள்.
சென்ற வருடம்கூட த்ரிஷா அவருடன் நடித்தார். அவர் கேட்டு முடியாது என்றால் தெலுங்குப் படவுலகில் காலம் தள்ள முடியாது. அவரது புதிய படத்தில் அஞ்சலி நடிக்கிறார். ஹீரோயினா என்று தோன்றும். இல்லை, வில்லி. அழகான கவர்ச்சியான வில்லியாக வருகிறாராம். ஹைதராபாத்திலிருந்து வரும் தகவல்களை கேட்டால், அதிரிபுதிரியான கவர்ச்சி காட்டப் போகிறாராம் அஞ்சலி.