சினிமா செய்தித் துளிகள் கன்னடத்து நாயகியை வாகாவில் வளைத்துப் போட்ட விக்ரம் பிரபு

18 Jun,2015
 


கன்னடத்து நாயகியை வாகாவில் வளைத்துப் போட்ட

விக்ரம் பிரபு


              


விக்ரம் பிரபு, தற்போது விஜய் இயக்கத்தில் ‘இது என்ன மாயம்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதுதவிர, ஹரிதாஸ் படத்தை இயக்கிய ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கும் ‘வாகா’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கன்னட திரையுலகை சேர்ந்த ரன்யா ராவ் என்பவரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

ரன்யா ராவ் கன்னடத்தில் 'மனிக்கியா' என்ற படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சுதீப்புடன் இணைந்து நடித்துள்ளார். இவர் ‘வாகா’ படத்தின் மூலம் தமிழுக்கு என்ட்ரியாகியுள்ளார். தற்போது, ரன்யா ராவும், விக்ரம் பிரபுவும் இணைந்து நடிக்கும் முக்கியமான காட்சிகளை ஊட்டியில் படக்குழுவினர் படமாக்கி வருகின்றனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு லடாக்கிலும் விக்ரம் பிரபு-ரன்யா ராவ் சம்பந்தப்பட்ட காட்சிகளை படக்குழுவினர் படமாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார்.




போலீஸ் வேடத்தில் நடிக்கும் திரிஷா?



திரிஷா தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் ‘அரண்மனை 2’, கமலுடன் 'தூங்காவனம்' ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதில், கமலுடன் இவர் இணைந்து நடிக்கும் ‘தூங்காவனம்’ படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இது படக்குழு தரப்பிலிருந்து உறுதிபட கூறவில்லை.

எனினும், ஏற்கெனவே திரிஷா ‘தூங்காவனம்’ படத்தில் இதுவரை நான் நடித்திராத கதாபாத்திரம் என்று கூறியிருந்தார். அதை வைத்து பார்க்கும்போது, அவர் இதுவரை நடித்திராத போலீஸ் வேடத்தில் இந்த படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை கமலின் உதவியாளர் ராஜேஷ் இயக்கி வருகிறார்.

கமல், திரிஷாவுடன் பிரகாஷ் ராஜ், கிஷோர், சம்பத், மதுஷாலினி, யூகி சேது ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பை சென்னையில் அடுத்த வாரம் தொடங்கவுள்ளனர்.


தனுஷுடன் கிரிக்கெட் விளையாடிய சிவகார்த்திகேயன்



தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர். இவருடைய படங்கள் அனைத்துமே வெற்றிப்பட வரிசையில் வந்து கொண்டிருக்கிறது. இவருடைய இவ்வளவு பெரிய வளர்ச்சிக்கு தனுஷ்தான் முக்கிய காரணம். தன்னுடைய படத்தில் அவரை அறிமுகம் செய்து வைத்ததோடு மட்டுமல்லாமல், தன்னுடைய தயாரிப்பில் அவரை நடிக்கவும் வைத்து அழகு பார்த்தவர் தனுஷ்.

அப்படியிருக்கையில், சமீபகாலமாக சிவகார்த்திகேயனுக்கும், தனுஷூக்கும் மோதல் போக்கு நிலவுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. சிவகார்த்திகேயனுக்கு உதவ தனுஷ் விரும்பவில்லை என்றும் கூறப்பட்டது. அதனாலேயே சினிமாவில் சிவகார்த்திகேயனுக்கு சக போட்டியாளராக கருதும் விஜய் சேதுபதியை வைத்து தனுஷ் படம் தயாரிக்கிறார் என்றும் கூறப்பட்டது.

ஆனால், இவற்றையெல்லாம் சிவகார்த்திகேயன் தற்போது மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, தனுஷ் எனக்கு முக்கியமான காலகட்டத்தில் எல்லாம் நிறைய உதவிகள் செய்துள்ளார். அதையெல்லாம் நான் மறக்கமுடியாது. அவர் எப்போதும் என் இதயத்தில் குடியிருக்கிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புகூட, நாங்கள் இருவரும் கிரிக்கெட் விளையாடினோம். அவர்மீது நான் எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறேன் என்று அவருக்கு தெரியும். அதேபோல், நான் யாரிடமும் எதையும் எதிர்பார்க்கமாட்டேன் என்பதும் அவருக்கு தெரியும் என்று கூறியுள்ளார்.


நயன்தாரா திருநாள் படப்பிடிப்பில் கலந்து கொண்டதும் பரபரப்பு!



நீண்ட நாட்களாய் காத்திருந்து, தற்பொழுது நயன்தாரா எண்ட்ரியானதும் சூடு பிடித்திருக்கிறது திருநாள் பட ஷூட்டிங். ஈ படத்திற்குப் பிறகு நயன்தாரா – ஜீவா இணைந்து நடித்துவரும் படம் திருநாள்.

படப்பிடிப்பு கும்பகோணம் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில் நடந்துவருகிறது. ஆரம்பத்தில் ஜீவா சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டும் படமாக்கிகொண்டிருந்தார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பில் ஜூன் முதல்வாரம் நயன்தாரா கலந்துகொள்வதாகச் சொல்லப்பட்டது. ஆனால் சொன்ன தேதியில் அவர் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லை.

ஏனெனில் போடா போடி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கிவரும் நானும் ரவுடி தான் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்ததால் நயன்தாரா இப்படத்திற்கான படப்பிடிப்பிற்கு வர தாமதமானது.
தற்பொழுது நயன்தாரா திருநாள் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்துவருகிறார். நயன்தாரா படப்பிடிப்பிற்கு வந்ததும் ரசிகர்கள் கூட்டமாக குவிய ஆரம்பித்தனர். இதனால் படப்பிடிப்பு சுற்றிய பகுதிகளில் பரபரப்பு நிலவின.

இப்படத்தை எஸ்.பி.ராம்நாத் இயக்கிவருகிறார். நயன்தாரா கிராமத்துப் பெண்ணாக நடிக்கிறார். முரட்டுத்தனமான கிராமத்து இளைஞனாக ஜீவா நடித்துவருகிறார். காமெடி, ஆக்‌ஷன், காதல் கலந்த கதையாக உருவாகிவருகிறது திருநாள்.



புலி படத்தில் இரண்டு விஜய்! - கதையை வெளியிட்ட நந்திதா!



 
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம் புலி. இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. ஃபேண்டஸி அட்வென்ச்சர் எனும் வித்தியாசமான ஜானரில் உருவாகி வருவதால் இப்படம் குறித்த எந்தவொரு தகவலையும் வெளியிடாமல் படக்குழு ரகசியம் காத்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த நடிகை நந்திதா, புலி படத்தில் இரண்டு விஜய் என்றும் அதில் பிளாஷ் பேக்கில் வரும் விஜய்க்கு நான் தான் ஜோடி எனவும் கூறியுள்ளார்.
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம் புலி. இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. ஃபேண்டஸி அட்வென்ச்சர் எனும் வித்தியாசமான ஜானரில் உருவாகி வருவதால் இப்படம் குறித்த எந்தவொரு தகவலையும் வெளியிடாமல் படக்குழு ரகசியம் காத்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த நடிகை நந்திதா, புலி படத்தில் இரண்டு விஜய் என்றும் அதில் பிளாஷ் பேக்கில் வரும் விஜய்க்கு நான் தான் ஜோடி எனவும் கூறியுள்ளார்.    
 

இதன்மூலம் புலி படத்தில் இரண்டு விஜய் என்பது உறுதியாகிவிட்டது. மேலும் பிளாஷ் பேக்கில் இளவரசியாக வரும் ஹன்சிகா விஜய்க்கு ஜோடி இல்லை என்பதும் உறுதியாகிவிட்டது. வேலாயுதம் படத்தைத் தொடர்ந்து புலி படத்திலும் விஜய்யுடன் தனக்கு அதிக காட்சிகள் கிடைக்கவில்லை என நடிகை ஹன்சிகா சமீபத்தில் வருத்தம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் மற்றொரு நாயகியான ஸ்ருதி ஹாசன் இதில் நிகழ்கால விஜய்க்கு ஜோடியாக வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 


  



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies