இன்று வெற்றியின் உச்சத்திற்கு சென்றிருக்கும் அஜித் பற்றி நாம் மறந்த சில தகவல்கள்....
என்னை நடிகனாக உருவாக்கி, பல்வேறு கஷ்டங்களில் உதவியவர் மதுரைக்காரர் என்று அஜித் பங்கேற்ற பெரும்பாலான பேட்டிகளில் கூறியுள்ளார்.
அவர் யார் என்றால் காய்கறி வியாபாரி சுப்பையா... அஜித்திற்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது, அஜித் அந்த மதுரைக்காரருக்கு போன் செய்து, சார்.. என்னை ஹீரோவாக்கி பாக்கணுன்னு ஆசைப்பட்டீங்க... ஆனா நான் இப்படி கிடக்குறேன். திரும்ப நான் ஹீரோவா வந்திடுவேனா என கண்கலங்கி வருத்ததுடன் பேசிய அஜித்திற்கு, சுப்பையா, எம்.ஜி.ஆர். சிவாஜி மாறி நீயும் பெரிய ஆளா வருவ... முதல்ல உடம்ப கவனி, அப்பறம் நடிப்பா பாக்கலாம் என்று கூறி செலவிற்கு பணத்தையும் கொடுத்து அஜித்துடன் இருந்து அவரை பார்த்துக்கொண்டவர் காய்கறி வியாபாரி சுப்பையா.
அஜித் ஹீரோவாக அறிமுகபடுத்திய தயாரிப்பாளர் தான் இந்த சுப்பையா. வெண்ணிலா படத்தில் முதன் முதலில் அஜித்தை ஹீரோவாக நடிக்க வைத்தார். பிறகு இவருக்கு வந்த பைனான்ஸ் பிரச்சனையால் படம் பாதியில் நின்றது குறிப்பிடத்தக்கது.
ஃபில்டர் காஃபிக்காக லட்சுமி மேனன் பாடிய பாடல்
நாகேஷ்வரராவ் தயாரிப்பில் ‘ஹோலி ஹவ் ட்ரீ’’ பட நிறுவனம் சார்பில் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கப்படுகிறது ‘ஃபில்டர் காஃபி’’ திரைப்படம்.
படம் பற்றி இயக்குநர் ராகவிடம் கேட்டபோது, “தமிழ் பாரம்பரியத்தில் ஃபில்டர் காஃபி தவிர்க்கமுடியாத ஒன்று. எல்லாவித விருந்துகளிலும், விருந்தோம்பல்களிலும் ஃபில்டர் காஃபிக்கு முக்கிய இடமுண்டு. அதைப்போலவே நான் இயக்கப்போகும் ஃபில்டர் காஃபி திரைப்படமும், தமிழ் திரைப்பட வரலாற்றில் முக்கிய இடம்பெறும்” என்றவரிடம் படத்தின் கதை பற்றி கேட்டபோது, “ஒருவரை உபசரிப்பது, வரவேற்பது மட்டுமல்லாமல் பொழுதுபோக்கும் நிகழ்விற்கும்கூட காஃபி அவசியமாகிவிட்டது. அதுவும் ஃபில்டர் காஃபி என்றால், அதன் மகத்துவமே தனி. வாழ்க்கையின் சந்தோஷமான தருணங்களை காஃபியோடு கொண்டாதுவதுபோல், இந்தப் படத்தின் கதாபாத்திரங்கள் வேறு ஒரு நிகழ்வைக் கொண்டாடுகிறார்கள். அநது எம்மாதிரியான நிகழ்வு என்பதை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறோம். அதுதான் திரைக்கதையின் பலம்.
“இந்தப் படத்தின் இயக்குநர் ராகவ்,அது மட்டும் அல்லாது ஒளிப்பதிவாளர் பனியும் இயக்குனரே மேற்கொண்டு இருக்கிறார் மற்றும்இசையமைப்பாளர் ராமசுப்பிரமணியன் மூவருமே 20 வயதுக்கு உட்பட்ட துறு துறு இளைஞர்கள் என்பதால், படம் இளமைத் துள்ளலோடு இருக்கும்” என்கிறார் தயாரிப்பாளர் நாகேஷ்வர ராவ்.
இசையமைப்பாளர் ராமசுப்பிரமணியனோடு பேசுகையில், “படத்தின் பாடல்களை ராகவ், ராஜ்குமார் மற்றும் ஷேஸா கோ மூவரும் எழுதியிருக்கின்றனர். முக்கியமாக, படத்தின் ப்ரமோ பாடலாக வரும் ‘ஓ காபி பெண்ணே’ பாடலை நடிகை லஷ்மி மேனன், தன் காந்தக் குரலால் பாடி அசத்தியிருக்கிறார். இந்தப் படத்தின் பாடல்கள் மட்டுமல்லாது பின்னணி இசையும் வெற்றிக்கு பக்கபலமாக விளங்கும். இதற்காக புதுவிதமான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறேன். ‘ஃபில்டர் காஃபி’ எனக்கு முதல் படம் என்றாலும், முத்தாய்ப்பான படமாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை” என்றார்.
இயக்குநர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் மட்டுமல்ல, இந்தப் படத்தின் நாயகர்கள் நரேன் பாலாஜி, தமீன் அன்சாரி, கார்த்திக் மற்றும் நாயகி சங்கீதா உட்பட பிரதான கதை மாந்தர்கள் அனைவரும் புது முகங்களே. முற்றிலும் புது முகங்களோடு, அறிமுக இளைஞர் பட்டாளமாக களமிறங்கும் ‘ஃபில்டர் காஃபி’ சூடு பறக்க தமிழ்ச் சினிமாவில் புதிய வரலாற்றை உருவாக்கும்போல் தெரிகிறது.
நீண்ட இடைவேளைக்கு பிறகு மோதல்-வெல்வது அஜித்தா? விஜய்யா?
தமிழ் சினிமாவில் எப்போதும் விஜய், அஜித் இருவருக்கும் தான் முதல் இடத்திற்கான போட்டி மாறி மாறி நடந்து வருகின்றது. இந்நிலையில் இம்முறை நீண்ட நாட்களுக்கு பிறகு ப்லிம் பேர் விருது விழாவில் சிறந்த நடிகர் பிரிவில் இருவரும் போட்டியிடுகின்றனர்.அஜித் வீரம் படத்திற்கும், விஜய் கத்தி படத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலும் நடிகர் விஜய் கத்தி படத்திற்கு தான் விருதை வெல்வார் என கூறப்படுகின்றது.
அஜித் இதற்கு முன் வில்லன், வாலி, வரலாறு படத்திற்காக இவ்விருதை வெல்ல, இந்த முறையும் ’வ’வரிசையில் வீரம் பெயர் இருப்பதால் செண்டிமெண்டாக அஜித் வெல்வார் என ரசிகர்கள் சிலர் கூறி வருகின்றனர். ஆனால், சத்தமே இல்லாமல் காவியத்தலைவன் படத்திற்காக சித்தார்த், வேலையில்லா பட்டதாரி படத்திற்காக தனுஷ் வென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
கவர்ச்சிதான் ஒரே வழி; களத்தில் இறங்கிய நடிகை
ஒல்லி பிச்சான் நடிகருக்கு ஜோடியாக லவ் கொண்டேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் சோனி நடிகை. அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்து வந்தவர் செகண்ட் வேர்ல்ட் இயக்குநரை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலானார். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு செகண்ட் வேர்ல்ட் இயக்குநரிடம் இருந்து விவாகரத்து பெற்றார். திருமணத்துக்கு பிறகும் ஒரு சில படங்களில் நடித்தார்.
எந்த படமும் அவர் இழந்த இடத்தை பெற்றுக் கொடுக்கவில்லை. தற்போது கருத்து காமெடி நடிகருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதில் குடும்ப பெண்ணாக நடித்தாலும் படு கவர்ச்சியாக நடித்து வருகிறார். மீண்டும் சினிமாவில் ஒரு நல்ல இடத்தை பிடிக்க கவர்ச்சிதான் ஒரே வழி என்று தீர்மானித்திருக்கிறார்.இதனால் விட்ட இடத்தை பிடிக்க துணியை அவிழ்க்கவும் தயக்கமில்லை என்கிறாராம் சோனி நடிகை.
தனுஷுக்கும் விஜய் டிவிக்கும் என்ன தொடர்பு?
தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இருவரது கூட்டுத் தயாரிப்பில் உருவாகி நேற்று முன்தினம் வெளியான காக்கா முட்டை படம் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை விஜய் டிவி வாங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. படம் வெளியான முதல் நாள் தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாயை வசூலித்துள்ளது. எந்த ஒரு பிரபல நடிகரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்காமல், சிறுவர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தச் சிறிய படத்துக்கு இந்த வசூல் கிடைத்திருப்பது பெரிய சாதனை என்றுதான் சொல்லவேண்டும். காக்கா முட்டையின் இசை வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பின்போது பேசிய தனுஷ், இப்படம் ஏற்கனவே லாபம் சம்பாதித்துக் கொடுத்துவிட்டது. முதல் நாள் வசூல் வந்தாலே எனக்கு லாபம் தான் என்று சொன்னது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் 109 திரையரங்குகளில் வெளியான (இந்தியாவில் 170 திரையரங்குகள்) இந்தப் படத்துக்கு சாதகமான அம்சங்கள் உருவாகியுள்ளன. பல திரையரங்குகளில் காட்சிகளின் எண்ணிக்கை அதிகமாக்கப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டுமல்லாமல் சென்னைப் புறநகர்களிலும் இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மாயாஜாலில் முதல்நாளில் 20 காட்சிகள் ஓடிய காக்கா முட்டை, அடுத்தநாளே 30 காட்சிகளுக்கு அதிகமாக்கப்பட்டுள்ளது. இதுபோல பெரும்பாலான மல்டிபிளெக்ஸ்களிலும் காட்சிகள் அதிகமாக்கப்பட்டுள்ளன. குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கில் படம் வெளியான அடுத்த நாளே 2 காட்சிகளில் இருந்து 3 காட்சிகளாக மாற்றப்பட்டுள்ளது. திங்கள் முதல் நான்கு காட்சிகளாக வெளியிடப்படும் என திரையரங்குத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டரில் உள்ள சினிமா விமரிசகர்கள், ரசிகர்கள் என எல்லோருமே ஒரே குரலுடன் படத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளார்கள். இன்னும் சொல்லப் போனால் இதுவரை படத்துக்கு ஒரு நெகடிவ் விமர்சனம் கூட வரவில்லை! படம் வெளியான முதல்நாளே படத்தைக் கிழித்துத் தோரணம் கட்டுகிறார்கள் என்று இணையத்தள விமர்சனங்கள் மீது கோபப்படும் தமிழ் சினிமாவுக்கு இந்தப் படம் ஒரு பாடமாகவே உள்ளது. படம் தரமாக இருந்தால் ஒருவர் விடாமல் பாராட்டித் தள்ளுவார்கள், படத்தின் வசூலை அதிகரிப்பார்கள் என்பதற்குக் காக்கா முட்டை நல்ல உதாரணம். சமீபகாலமாகவே விஜய் டிவி தனுஷுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவது அனைவரும் அறிந்த விசயமே. நடந்து முடிந்த விஜய் அவார்ட்ஸ் விருது வழக்கும் நிகழ்ச்சிக்கு கூட தயாரிப்பு சங்கத்தில் இருந்து திரையுலகத்திற்கு பல தடைகள் போடப்பட்டும் முண்ணனி நடிகர் வரிசையில் இருக்கும் தனுஷ் அதில் கலந்து கொண்டார். இதுபோக விஜய் டிவி நடத்தும் நிகழ்ச்சிகளில் பெரும்பாலான நிகழ்ச்சிகளுக்கு தனுஷ் சிறப்பு விருந்தினராக அழைத்துவரப்படுகிறார்.
இந்நிலையில், விஜய் டிவியின் தலைமை நிர்வாகி, கே. ஸ்ரீராம், காக்கா முட்டை படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை விஜய் டிவி வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளார். விஜய் டிவி தனுஷுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கான காரணம் என்ன..? இதன் பின்னணியில் ஏதாவது உள்ளதா..? என்பது புரியாத புதிராகவே உள்ளது.
நடிகை ஸ்ரீ வித்யாவின் சொத்துக்களை தவறான முறையில் பயன்படுத்தும் அமைச்சர்
கேரள முன்னாள் அமைச்சர் கணேஷ்குமார் என்பவர் நடிகை ஸ்ரீ வித்யாவின் சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்துவதாக எழுந்த புகாரை அடுத்து குற்றப்பிரிவு பொலிசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். நடிகை ஸ்ரீ வித்யா, கடந்த 2006ம் ஆண்டு புற்றுநோய் காரணமாக திருவனந்தபுரத்தில் தனியார் மருத்துவமனையில் மரணமடைந்தார்.
அவர் இறப்பதற்கு முன் தனக்கு சென்னை, திருவனந்தபுரம் உள்பட சில இடங்களில் உள்ள சொத்துக்களை நிர்வகிக்க முன்னாள் அமைச்சரும் நடிகரும், தற்போதைய எம்.எல்.ஏ.வுமான கணேஷ்குமாரின் பெயரில் எழுதி வைத்தததாக கூறப்படுகிறது.
தற்போது ஸ்ரீ வித்யாவின் சகோதரரான சங்கர்ராமன், கேரள முதல்வர் உம்மன்சாண்டிக்கும், உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலாவிடமும் ஒரு புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், ஸ்ரீ வித்யாவின் சொத்துக்களை கணேஷ்குமார் முறைகேடாக பயன்படுத்துகிறார் என்றும் எனவே அவரிடம் இருந்து சொத்துகளை மீட்டு தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த புகாரை பரிசீலித்த உள்துறை அமைச்சர் சென்னித்தலா இதுதொடர்பாக குற்றப்பிரிவு போலிஸார் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.