டிமான்ட்டி காலனி’ – அடுத்த பேய் ஹிட்ஸ
ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர் அஜய் ஞானமுத்து இயக்குனராக அறிமுகமாகும் படம் ‘டிமான்ட்டி காலனி’.
இந்தப் படத்தில் அருள்நிதி நாயகனாக நடிக்க மற்றும் ‘சூது கவ்வும்’ ரமேஷ் திலக், பின்லாந்து நடிகர் அன்டில் ஜாஸ்கெலினன், சனத், அபிஷேக் உட்பட பலர் நடித்துள்ளனர்.
படம் பற்றி இயக்குனர் அஜய் ஞானமுத்து கூறியதாவது,
“இந்தப் படத்தை ஒரு ஹாரர் படம்னு சொல்றத விட ஒரு த்ரில்லர் படம்னு சொல்லலாம். படத்துல எங்கயுமே அடுத்து இதுதான் நடிக்கப் போகுதுன்னு யூகிக்கவே முடியாது.
இப்படி ஒரு படம் பண்ணணும்னு முதல்ல நினைக்கலை. கதை டிஸ்கஸ் பண்ணும் போது இந்தப் படத்தைப் பத்தின ஒரு விஷயம் வந்துது. இப்ப இருக்கிற டிரென்ட்டுல இந்த படம் பண்ணணும்னு பண்ணலை.
அருள்நிதி சார் ஒரு இயக்குனரோட நடிகர். இந்தப் படத்துல நடிக்கும் போது இப்படித்தான் வேணும்னு கேட்டால் அப்படியே செய்வாரு. ஒரு டெடிகேஷனான நடிகர் அவர். இந்தப் படத்தைப் பார்த்த பலரும் அவருடைய நடிப்பை அந்த அளவிற்குப் பாராட்டியிருக்காங்க.
இந்தப் படத்துல வில்லனா பின்லாந்துல நாடக நடிகரா இருக்கிற ‘அன்டில் ஜாஸ்கெலினன்’ நடிச்சிருக்காரு. 6 அடி 9 இன்ச் இருக்கிற அவரோட உயரமே அந்த கேரக்டருக்கு மிகப் பெரிய சப்போர்ட்டா அமைஞ்சிருக்கு.
த்ரில்லர் படம்கறதையும் மீறி இந்தப் படம் ஒரு புதுமையான அனுபவமா கண்டிப்பா இருக்கும்,” என்கிறார் இயக்குனர் அஜய் ஞானமுத்து.
இப்படத்தை மோகனா மூவீஸ் தயாரிக்க ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது. தொடர்ந்து “அரண்மனை, பிசாசு, காஞ்சனா 2” ஆகிய பேய்ப் படங்களை வெளியிட்டு மாபெரும் வெற்றி பெற்ற தேனான்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அடுத்த ‘பேய் ஹிட்’டுக்குத் தயாராகிவிட்டது.
தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் ‘வட சென்னை’ஸ
“பொல்லாதவன், ஆடுகளம்” ஆகிய படங்களுக்குப் பிறகு தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி மீண்டும் ‘வட சென்னை’ படம் மூலம் இணைய உள்ளது.
வெற்றிமாறன் கடைசியாக இயக்கிய ‘ஆடுகளம்’ படம் 2011ம் ஆண்டு வெளிவந்தது. இப்போதுதான் ‘விசாரணை’ என்ற ஒரு மினி படத்தை இயக்கி உள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளாக வேறு எந்தப் படத்தையும் அவர் இயக்கவில்லை.
இப்போது தனுஷ் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள ‘வட சென்னை’ படத்தில் முதலில் சிம்பு நடிப்பதாகப் பேசப்பட்டது. அது அப்படியே பேச்சு வார்த்தையுடன் நின்றுவிட்டது.
சற்று முன்னர் தனுஷ் ‘வட சென்னை’ பற்றி அவருடைய டிவிட்டர் வலைத்தளத்தில் அதிகாரப்பூவர்மாக அறிவித்துள்ளார்.
“விஐபி குழுவினரின் பெயர் அறிவிக்கப்படாத படத்திற்கடுத்து என்னுடைய அடுத்த படம் வெற்றி மாறன் இயக்கும் ‘வட சென்னை’. இந்தப் படத்தின் கதையை அவர் ‘பொல்லாதவன்’ சமயத்திலேயே சொல்லியிருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் முதல் ஆரம்பமாக உள்ளது. சமந்தா கதாநாயகியாக நடிக்க உள்ளார். 2016ம் ஆண்டில் இந்தப் படம் வெளியாகும், மற்ற விவரங்கள் தொடரும்ஸ” என அவர் பதிவிட்டுள்ளார்.
இதன் மூலம் மூன்றாவது முறையாக தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி இணைகிறது.
ரஜினி முருகன்’ – ஜுன் 7ல் மதுரையில் இசை வெளியீடு
சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி மற்றும் பலர் நடிக்க பொன்ராம் இயக்கத்தில் இமான் இசையமைப்பில் உருவாகி வரும் படம் ‘ரஜினி முருகன்’.
இந்தப் படத்தின் முதல் பார்வையை ஏப்ரல் 25ம் தேதியும், இசை வெளியீட்டை ஜுன் 7ம் தேதியும், பட வெளியீட்டை ஜுலை 17ம் தேதியும் நடத்தப் போவதாக படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே மார்ச் மாதத்தில் அறிவித்தனர்.
அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 25ம் தேதி இப்படத்தின் முதல் பார்வையை வெளியிட்டார்கள். அடுத்து இசை வெளியீட்டை ஜுன் 7ம் தேதி நடத்த உள்ளார்கள்.
பொதுவாக எந்த திரைப்பட விழாவாக இருந்தாலும் சென்னையில் நடத்துவதுதான் வழக்கம். ஆனால், வித்தியாசமாக ‘ரஜினி முருகன்’ படத்தின் இசை வெளியீட்டை மதுரையில் ரசிகர்கள் முன்னிலையில் நடத்த உள்ளார்களாம்.
இதற்கான ஏற்பாடுகளை இப்போதே ஆரம்பித்து விட்டார்கள். மதுரையில் நடக்கும் விழாவில் படக் குழுவினர் அனைவரும் கலந்து கொள்ள உள்ளார்கள். விரைவில் இது பற்றிய முறையான அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
பெரிய தியேட்டர்களில் ’36 வயதினிலே’ஸ
ஜோதிகா 8 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடித்து கடந்த வாரம் திரைக்கு வந்த படம் ’36 வயதினிலே’. இந்தப் படத்திற்கு பெண் ரசிகைகள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளதையடுத்து நாளை முதல் பெரிய தியேட்டர்களுக்கு மாற்றப்படுகிறது.
இது குறித்து ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “36 வயதினிலே’ படத்தை தமிழ்நாடு முழுவதும் 210 தியேட்டர்களில் வெளியிட்டோம். இதுவரை 7 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது. இப்படியே தொடரும் பட்சத்தில் சுமார் 18 முதல் 20 கோடி வரை வசூலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு தியேட்டர்களில் குடும்பம் குடும்பமாக வந்த இந்தப் படத்தைப் பார்க்கிறார்கள் என்பது மகிழ்ச்சியாக உள்ளது. நாளை முதல் இந்தப் படம் பல ஊர்களில் பெரிய தியேட்டர்களுக்கு மாற்றப்படுகிறது,” என்று தெரிவித்துள்ளனர்.
பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு தாய்மார்கள் ஆதரவு கிடைத்திருப்பது தமிழ்த் திரையுலகத்திற்கு பெரிய திருப்பு முனை என திரையுலகத்தினரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
சிபிராஜ் நடிக்கும் ‘ஜாக்சன் துரை’ ஆரம்பம்ஸ
ஸ்ரீ கிரீன் புரொடக்சன்ஸ் எம்.எஸ்.சரவணன் அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரித்து வழங்கும் படம் ‘ஜாக்சன் துரை’. தமிழின் முதல் பழைய கால கட்ட பேய்ப் படமாக இப்படம் உருவாகிறது.
இப்படத்தின் கதை, திரைக்கதை 1940 – ல் நடப்பதுபோல் அமைக்கப்பட்டுள்ளதால் மிகுந்த பொருட் செலவில் பிரம்மமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
சிபிராஜ், பிந்துமாதவி, சத்யராஜ், கருணாகரன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ஆகியோருடன் முக்கிய வேடத்தில், தமிழில் முதன் முறையாக ஹாலிவுட் நடிகர் ஸாசெரி அறிமுகமாகிறார்.
ஹாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘கன்ஜுரிங்’ படத்தின் ஒப்பனைத் தொழில் நுட்பம் இப்படத்தில் பயன்படுத்தப்படுகிறது.
தரணிதரன் இத்திரைப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார்.
திகிலும், நகைச்சுவையும் கலந்த படமாக இப்படம் உருவாகிறது.
தொழில்நுட்பக் கலைஞர்கள்
ஒளிப்பதிவு – யுவராஜ்
இசை – சித்தார்த் விபின்
படத் தொகுப்பு- விவேக் ஹர்ஷன்
கலை – T.N. கபிலன்
நிர்வாகத் தயாரிப்பு – அருண் புருசோத்தமன், T. ரகுநாதன்,
புரொடக்ஷன் கன்ட்ரோலர் – M.பூமதி
லைன் புரொடியூசர் – செல்வா
தயாரிப்பு மேலாளர் – C.பாலமுருகன்
மக்கள் தொடர்பு – நிகில்
மலையாளப் பக்கம் சென்ற பரத்ஸ
‘பாய்ஸ்’ படத்தில் ஐந்து ஹீரோக்களில் ஒரு ஹீரோவாக அறிமுகமானாலும், அந்த ஐந்து பேரில் தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடித்து வந்த ஒரே ஹீரோவாக இருந்தவர் பரத் மட்டுமே.
‘காதல்’ படம் வந்து ஹிட் ஆன பிறகு பரத் தமிழில் ஓரளவிற்கு வெற்றிகரமான நாயகனாக வலம் வந்தார். தொடர்ந்து சில வெற்றிப் படங்களில் நடித்தார். இருந்தாலும் அவரால் தமிழில் ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க முடியவில்லை.
தமிழில் அவர் நடித்து கடைசியாக வெளிவந்த ‘555, ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’ ஆகிய படங்கள் வெற்றி பெறாமல் போனதால் அவருக்குத் தமிழில் வாய்ப்புகள் இல்லாமல் போனது.
இப்போது மலையாளத்தில் ‘லார்டு லிவிங்ஸ்டன் 7000 கான்டி’ என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்திருக்கிறது. இளம் இயக்குனரான அனில் ராதாகிருஷ்ண மேனன் இயக்கும் இந்தப் படம் காடு அழிப்புக்கு எதிரான படமாக உருவாக்கப்படுகிறது. இந்தப் படத்தில் தமிழ் பேசும் ஒரு கதாபாத்திரத்தில்தான் பரத் நடிக்கப் போகிறாராம்.
தமிழிலும் சில படங்களில் நடிக்கப் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறாராம் பரத்.
தெலுங்கில் 20 கோடி வசூலித்த ‘காஞ்சனா 2’ஸ
ராகவா லாரன்ஸ் இயக்கம், நடிப்பில் கடந்த மாதம் 17ம் தேதி வெளிவந்த படம் ‘காஞ்சனா 2’.
தமிழில் மாபெரும் வெற்றி பெற்று சுமார் 50 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்த இந்தப் படம் தெலுங்கிலும் புதிய வசூல் சாதனையைப் படைத்துள்ளது.
‘கங்கா’ என்ற பெயரில் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு கடந்த 1ம் தேதியன்று ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இப்படம் வெளியானது. கடந்த 20 நாட்களாக அமோக வரவேற்புடன் ஓடி வரும் இந்தப் படம் இதுவரை 20 கோடி ரூபாய் அளவிற்கு வசூல் செய்துள்ளதாம்.
சமீப காலத்தில் ஒரு டப்பிங் படம் இந்த அளவிற்கு வசூல் செய்த்து இதுவே முதல் முறை என்கிறார்கள்.
“லிங்கா, உத்தம வில்லன், ஓ காதல் கண்மணி” ஆகிய பெரிய படங்கள் தெலுங்கில் அதிகமாக வசூல் செய்ய முடியாமல் தவிக்கும் போது ‘காஞ்சனா 2’ படம் இந்த அளவிற்கு வசூல் செய்துள்ளது மிகப் பெரிய விஷயம் என தெலுங்குத் திரையுலக வட்டாரத்தில் ஆச்சரிப்படுகிறார்கள்.