சினிமா செய்தித்துளிகள் விஜய்யுடன் ஸ்ருதிஹாசன் - ஹன்சிகா டூயட்!

04 May,2015
 

விஜய்யுடன் ஸ்ருதிஹாசன் 


சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புலி படத்தின் வசன காட்சிகள் முடிவடைந்து விட்டது. அதனால் தற்போது

 பாடல் காட்சிகளை படமாக்கும் இறுதிகட்ட பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது. மேலும், இதில் நாயகிகளாக நடிக்கும் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா இரண்டு பேருடனும் விஜய்க்கு டூயட் பாடல் உள்ளதாம். அந்த பாடல்களை சீனாவில் படமாக்க ஏற்கனவே திட்டமிட்டிருந்தார் சிம்புதேவன்.

ஆனால், தற்போது லொகேசனை கம்போடியா நாட்டுக்கு மாற்றியிருக்கிறார். காரணம் புலி சரித்திர பின்னணி கொண்ட கதையில் உருவாவதால், பல காட்சிகளை கோயில் லொகேசன்களில் படமாக்கி வந்த அவர், பாடல் காட்சிகளையும் உலக பிரசித்தி பெற்ற கோயில்களில் படமாக்குகிறாராம்.

அதனால் கம்போடியாவில் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அங்கோர்வாட் என்ற விஷ்ணு கோயிலில் இரண்டு பாடல்களை படமாக்குகிறாராம். முன்னதாக, ஒரு வாரத்துக்கு முன்பே யூனிட் நபர்கள் அங்கு சென்று படப்பிடிப்புக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து வைக்கப்போகிறார்களாம். ஆக, இந்த இரண்டு பாடல்களும் படமாக்கப்பட்டு விட்டால், புலிக்கு பூசணிக்காய் உடைத்து விடுவார்கள் என்று தெரிகிறது


 சிவகார்த்திகேயனுடன் இணையும் சமந்தா!


ஓவியா, ஸ்ரீதிவ்யா, ப்ரியாஆனந்த் என பெரிய அளவில் பிரபலமில்லாத ஹீரோயினிகளை தனக்கு ஜோடியாக்கி வந்த

 சிவகார்த்திகேயன், தன்னையும் முன்னணி ஹீரோவாக உயர்த்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக மான்கராத்தே படத்தில் ஹன்சிகாவுடன் ஜோடி சேர்ந்தார். ஆனால், அந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடிக்க அழைத்தபோது முதலில் தயங்கினார் ஹன்சிகா. அதையடுத்து, அவருக்கு வழக்கத்தைவிட கூடுதலான சம்பளத்தைக் கொடுத்து நடிக்க வைத்தனர். பின்னர், தனது புதிய படத்தில் நயன்தாராவுடன் இணைய ஆசைப்பட்டார் சிவகார்த்திகேயன். ஆனால், அவர் இவரைவிட அதிக மெச்சூரிட்டியாக இருப்பார் என்று சிலர் சொன்னபோது அதை ஏற்றுக்கொண்டு மீண்டும் ஸ்ரீதிவ்யாவுடன் இணைந்தார். இந்நிலையில், தற்போது புதிய பட நிறுவனம் தொடங்கியிருக்கும் சிவகார்த்திகேயன், அதில் தான் நடிக்கும் படத்தில் கண்டிப்பாக சமந்தா நடிக்க வேண்டும் என்று அவருக்கு அழைப்பு விடுத்தார். அதற்கு சமந்தா உடனே ஓகே சொல்லிவிட்டாராம். ஆக, சூர்யா, விஜய், விக்ரமுடன் நடித்து விட்டு, தற்போது மீண்டும் சூர்யா மற்றும் தனுசுடன் நடிக்கும் சமந்தா, அதற்கடுத்து சிவகார்த்திகேயனுடன் இணைகிறார்


 நல்ல பெயரை சம்பாதித்த நயன்தாரா!


தற்போதைய நிலவரப்படி அதிக படங்களில் நடிக்கும் நடிகை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் நயன்தாரா. அதேசமயம் அப்படி தான் நடிக்கும் எல்லா படங்களுமே முன்னணி ஹீரோக்களின் படங்கள்

என்பதால் கால்சீட் விசயத்தில் ரொம்பவே கவனமாக இருக்கிறார் அவர். மேலும், சில படங்களுக்கு கால்சீட் திருத்தம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டால், மற்ற படங்களுக்கு கொடுத்த கால்சீட் தேதியிலும் மாற்றம் ஏற்படும் என்பதால், இரண்டு தரப்பிலும் தானே முன்நின்று பேசி பிரச்னை ஏற்படாத வகையில் கால்சீட்களை கொடுக்கிறார்.

 

இதனால் நயன்தாராவைப் பொறுத்தவரை சம்பள விசயத்தில் தூக்கலாக இருக்கிறார் என்றாலும், கால்சீட்டில் குளறுபடி செய்யாத நல்ல நடிகை என்றொரு பெயர் தயாரிப்பாளர்கள் மத்தியில் உள்ளது. மேலும், காட்சிகளில் நடிப்பதிலும் அதிக டேக்குகளை வாங்காமல் ஓரிரு டேக்குகளை ஓகே செய்து கொடுத்து விடுகிறாராம். இதனால், இயக்குனர்கள் மத்தியில் பர்பாமென்ஸ் நடிகை என்கிற நல்ல பெயரும் நயன்தாராவுக்கு இருந்து வருகிறது



பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய ராணாவை சைக்கோ என்று சொல்லிய திரிஷா


திரிஷா தனது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தமிழ் சினிமாவின் பல்வேறு நட்சத்திரங்களும் டுவிட்டர் பக்கத்தில் கூறி வருகின்றனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் திரிஷா தனது நன்றியையும் தெரிவித்து வருகிறார்.

அந்த வரிசையில், நடிகர்கள் விஷால், ஜெயம் ரவி, மாதவன், வைபவ் ஆகியோரும் நடிகைகளில் ஹன்சிகா, சமந்தா, குஷ்பு, ராதிகா சரத்குமார், தன்ஷிகா, ஸ்ரேயா ரெட்டி, பிரியா மணி, நிகிஷா பட்டேல், கார்த்திகா நாயர், ஆகியோரும் இயக்குனர்கள் செல்வராகவன், கீதா செல்வராகவன், திரு, ஐஸ்வர்யா தனுஷ் ஆகியோரும், தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி, பாடகி சின்மயி உள்ளிட்ட பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளனர். அனைவருக்கும் திரிஷா தனது நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இவரது முன்னாள் காதலரான ராணா டகுபதியும் திரிஷாவுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவருக்கு திரிஷா நன்றி சைக்கோ என்று குறிப்பிட்டுள்ளார்.

சைக்கோ என்பது ராணாவுக்கு திரிஷா வைத்த செல்லப் பெயரா? அல்லது சமீபத்தில் வருண்மணியன்-திரிஷா பிரிவுக்கு ராணாதான் காரணம் என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. அதை மனதில் வைத்து  திரிஷா அப்படி கூறினாரா? என்று தெரியவில்லை. மேலும், வருண்மணியன் திரிஷாவுக்கு இதுவரை பிறந்தநாள் வாழ்த்துக் கூறாதது குறிப்பிடத்தக்கது.


ரூ.5 கோடி கொடுத்தால் நிர்வாணமாக நடிப்பேன்: சன்னி லியோன்



தமிழில் வடகறி படத்தில் ஜெய்யுடன் குத்தாட்டம் ஆடியவர் சன்னி லியோன். இந்தி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் செக்ஸ் நடிகை ஆவார். வெளிநாடுகளில் தயாரான நீலப்படங்களில் நடித்து இருக்கிறார். இந்திய படமொன்றில் சன்னி லியோனை எல்லா காட்சிகளிலும் நிர்வாணமாக நடிக்க வைக்க தயாரிப்பாளர் ஏக்தா விரும்பினார். இதற்காக அவரை அணுகி கால்சீட் கேட்டார்.

சன்னி லியோனும் நிர்வாண காட்சிகளில் நடிக்க சம்மதம் தெரிவித்தார். அதோடு நிர்வாணமாக நடிக்க ரூ.5 கோடி சம்பளம் வேண்டும் என்று கேட்டாராம். சம்பள தொகையை கேட்டதும் தயாரிப்பாளர் ஆடிப்போனார்.

தொகையை குறைக்கும்படி கேட்டுக் கொண்டார். ஆனால் சன்னி லியோன் கேட்கவில்லை. ரூ.5 கோடி தந்தால் மட்டுமே நடிப்பேன் என்று பிடிவாதமாக கூறி விட்டாராம். இதனால் தயாரிப்பாளர் வேறு நடிகையை தேடுகிறார்.



திருமணத்துக்கு பிறகு நஸ்ரியா மீண்டும் நடிக்கிறார்



தமிழில் நேரம், ராஜாராணி, வாயைமூடி பேசவும், திருமணம் எனும் நிக்கா படங்களில் நடித்து பிரபலமானவர் நஸ்ரியா. மலையாள படத்திலும் முன்னணி நடிகையாக இருந்தார்.

இவருக்கும் மலையாள நடிகர் பகத்பாசிலுக்கும் காதல் மலர்ந்தது. இருவருக்கும் கடந்த வருடம் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு நஸ்ரியா சினிமாவை விட்டு விலகிவிட்டார். கணவர் வீட்டாரும் சினிமாவில் நடிக்க கூடாது என்று தடை விதித்து இருந்தார்களாம்.

ஆனாலும் நஸ்ரியாவுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்து வந்துள்ளது. தற்போது மீண்டும் நடிக்க கணவர் சம்மதம் தெரிவித்து விட்டார். நஸ்ரியா விரைவில் கேமரா முன் தோன்றுவார் என்று பகத்பாசில் தெரிவித்தார்.

நஸ்ரியா கடைசியாக மலையாளத்தில் பெங்களூர் டேஸ் என்ற படத்தில் நடித்தார். இப்படம் வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்தது. தற்போது அப்படம் தமிழ், தெலுங்கில் ரீமேக் ஆகி வருகிறது.



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies