என்னை சன்னியோடு போய் ஒப்பிடாதீர்கள்: நடிகை பூனம் பாண்டே ஆவேசம்
தன்னை சன்னி லியோனோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம் என நடிகை பூனம் பாண்டே கேட்டுக் கொண்டுள்ளார். தன்னை ஒரு மாடல், நடிகை என்று கூறிக் கொள்ளும் பூனம் பாண்டே அவ்வப்போது தன்னுடைய நிர்வாணம் மற்றும் அரை நிர்வாண புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார். எப்படியெல்லாம் கண்ட்றாவி புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவது என்று ரூம் போட்டு யோசிப்பார் போன்று.
சன்னி லியோன்
பூனம் பாண்டேவும் சரி, சன்னி லியோனும் சரி மிக குறைந்த அளவு ஆடை அணிந்து நடிக்கின்றனர். இதனால் பூனம் பாண்டேவை சன்னி லியோனுடன் மக்கள் ஒப்பிட்டுப் பார்க்கத் துவங்கினர்.
பூனம்
சன்னி லியோன் நல்ல நடிகை. அவர் சிறப்பாக நடித்து வருகிறார். ஆனால் அவருடன் என்னை யாரும் ஒப்பிட வேண்டாம் என்று பூனம் பாண்டே கேட்டுக் கொண்டுள்ளார்.
கவர்ச்சி
பூனம் பாண்டேவும் திரை உலகினரின் கவனத்தை ஈர்க்க பல வகை போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிடுகிறார். ஆனாலும் யாரும் அவரை கண்டுகொள்வதாக இல்லை. சன்னி லியோன் வரவால் பூனம் பாண்டே மார்க்கெட் படுத்துவிட்டது என்று கூறப்படுகிறது.
ராக்கி சாவந்த்
சன்னி லியோன் போன்ற ஆபாச பட நடிகயுடன் என்னை ஒப்பிடாதீர்கள் என்று முன்பு நடிகை ராக்கி சாவந்த் தெரிவித்திருந்தார். சன்னி ஆடை அணிந்து நாகரீகமாக நடிக்க நாம் அவருக்கு சம்பளம் தருகிறோம் என்று தாக்கிப் பேசினார் ராக்கி.
மார்க்கெட்
சன்னி லியோனை எத்தனை பேர் கழுவிக் கழுவி ஊத்தினாலும் அவரது மார்க்கெட் நன்றாகத் தான் உள்ளது. பிரச்சனை செய்யாமல் கொடுக்கும் குறைவான உடைகளை அணிந்து நடிப்பதால் மிக கவர்ச்சியான படம் எடுப்பவர்களுக்கு பிடித்த நடிகையாக அவர் உள்ளார்.
மறுபடியும் மனீஷா!
‘பம்பாய்’ அழகி மனீஷா கொய்ராலாவை மறக்க முடியுமா? “கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை...” என்று அவர் குலுங்குக் குலுங்கி வரும் அழகு இன்னும் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. காலம் செய்த கோலம் அந்த அழகு மயிலை புற்று நோய் எனும் சுனாமி சூறையாடப் பார்த்தது. ஆனால் அந்த சுனாமியையும் வென்று இன்று ஒரு மெல்லிய கோடு போட்டுக் கொண்டிருக்கிறார்.
ஆம்... ‘குப்பி’, ‘வனயுத்தம்’ படங்களை இயக்கிய ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்கும் ‘ஒரு மெல்லிய கோடு’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். உடன் நடிப்பவர் ‘முதல்வன்’ படத்தில் வாய் டூ வாய் வெற்றிலை மாற்றிய அர்ஜுன். ‘எப்போ மனீஷா வர்றாங்க?’ என்று ஆர்வமுடன் இயக்குனர் ரமேஷிடம் விசாரித்தால், “அவுங்க வந்து நான்கு நாளாச்சு, இங்கதான் இருக்கறாங்க. பூந்தமல்லி பக்கம் உள்ள தனியார் பொழுதுபோக்குப் பூங்காவில் ஷூட் போயிட்டிருக்கு. வர்றீங்களா?” என்றார். அடுத்த நாளே அங்கு போய் நின்றோம்.
‘தலைமை தடய அறிவியல் துறை அலுவலகம், இந்திய அரசு’ என்ற போர்டு நம்மை வரவேற்றது. உள்ளே போனால், ஒருபுறம் நவீன அலுவலகம், மறுபுறம் நாம் இதுவரை பார்த்திராத ஒரு ஆய்வுக்கூட செட். வித்தியாசமா இருக்கே என்று யோசித்தபடியே பார்த்துக் கொண்டிருந்தபோதே இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் வந்தார். “செட் புதுசா இருக்கேன்னு பார்க்குறீங்களா? இந்திய சினிமாவுலேயே இதுமாதிரி செட் போட்டிருக்க மாட்டாங்க. தடயஅறிவியல் துறை செட் இதுவரை யாரும் போட்டதில்ல. காரணம் அந்த துறைய கதைக்களமாக வச்சு ஒரு தமிழ்ப்படமும் வந்ததில்லை. முதன் முறையா நாங்க பண்றோம்” என்றார்.
செட்டை சுற்றிக் காட்டியபடி பேசிக்கொண்டே வந்தார். ‘அப்படி என்ன சார் கதை?’ என்றோம். “இது மர்டர் மிஸ்ட்ரி. கதையை மட்டும் கேக்காதீங்க பாஸ்! வேணா அவுட்லைன் சொல்றேன். நாட்டில் சில கொலைகள் கண்டுபிடிக்கப் படாமலேயே போயிருக்கிறது. அது கொலை செய்தவனின் திறமையா, போலீசின் திறமையின்மையா என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது.
அப்படி யாராலும் கண்டுபிடிக்க முடியாத ஒரு விவிஐபி கொலையை துப்பறிந்து சொல்கிற படம். அதில் தடய அறிவியல் ஆய்வுத்துறை முக்கிய பங்கு வகிக்குது. சீனுக்கு சீன் திகில், திருப்பம்னு சீட்டு நுனியில் உட்கார்ந்து படம் பார்க்குற மாதிரி ஸ்கிரீன் ப்ளே பண்ணியிருக்கோம்” என்றார்.
‘அப்படீன்னா... அர்ஜுன் தடய அறிவியல் துறை அதிகாரி. ஷாம் போலீஸ் அதிகாரி. சரி தானே?’ என்றோம். “யார் யார் என்ன கேரக்டர்ல நடிக்கிறாங்கன்னு இப்பவே சொல்லிட்டா இதுதான் கதைன்னு ஆளாளுக்கு எழுத ஆரம்பிச்சிடுவாங்க. அர்ஜுனும், ஷாமும் நேர் எதிர் கேரக்டர்கள். மனீஷா முக்கியமான கேரக்டர். இதுதான் இப்போதைக்கு சொல்ல முடியும். ‘மனீஷா கொய்ராலாவை பார்க்கணுமே’ என்றதும் அழைத்துப்போனார்.
புற்று நோய் அந்த தேவதையின் அழகை கொஞ்சம் அபகரித்திருந்தாலும் அதே புன்னகை, அதே தங்க நிற தேகம் என மறுஜென்மம் எடுத்து நின்றுகொண்டிருந்தார். அறிமுகப்படுத்திக் கொண்டு கைகொடுத்தபோது, “வண்ணத்திரைன்னா கலர்புல் ஸ்கிரீன்! சரியா?... எனக்கு ஞாபகம் இருக்கு. ‘பம்பாய்’ படத்துல என்னோட நடிப்பை ரொம்ப பாராட்டியிருந்தீங்க. ஆனா ‘மாப்பிள்ளை’ படத்துல அப்படி பாராட்டல.
சரியா?’’ என்று சொல்லி கலகலவென சிரித்தார். அவரது நினைவாற்றலைக் கண்டு ஆச்சர்யப்பட்டோம். அதன் பிறகு அர்ஜுன் அங்கு வந்து சேர இருவரும் ‘முதல்வன்’ கால நினைவுகளைப் பேசிப்் பகிர்ந்து கொண்டார்கள். ‘ஷாட் ரெடி’ என்றதும், மனீஷா போட்டிருந்த பெரிய நைட் கோட்டை கழற்றிவிட்டு மெலிதான வெள்ளை ஆடையுடன் அங்குள்ள இரும்புக் கட்டிலில் படுத்தார். அவரது உடலைக் காட்டி அர்ஜுன் மற்றவர்களிடம் பேசும் காட்சி படமானது. நமக்கு விஷயம் தெளிவானது.
காட்சியை முடித்து விட்டுத் திரும்பிய இயக்குனரிடம், ‘படத்தில் கொலையாகும் விவிஐபி மனீஷா. அவரது டெட் பாடியை ஆய்வு பண்ணுகிற சீன் எடுக்குறீங்க, சரிதானே?’ என்றோம். “ஆமாம். கடந்த 4 நாட்களா அவர் டெட் பாடியாத்தான் நடிச்சிட்டிருக்கிறார். 100 படங்கள்ல நடிச்ச இந்தி நடிகை. நம்பர் ஒன் இடத்தில் இருந்தவர்.
மரணத்தை வென்றவர். பிரேதமா நடிக்கிறது எவ்ளோ பெரிய விஷயம். நடிப்பு மேல வெறி இருந்தால்தான் இப்படி நடிக்க முடியும்” என்றவர் திடீர்னு நினைவு வந்தவராக “மனீஷா கேரக்டர் என்னன்னு எழுதிடாதீங்க” என்றார். அதெப்படி முடியும். நமக்கு தெரிஞ்ச செய்தி ஒன்றை எப்படி வண்ணத்திரை வாசகனுக்கு சொல்லாமல் இருக்க முடியும் என்று சொல்லிவிட்டு வந்தோம்
திருமணம் என்பதே சிக்கலானது...எனக்கு அதில் நம்பிக்கை இல்லை! ஸ்ருதிஹாஸன் பேட்டி
திருமண முறையே சிக்கலானது
காரணம் திருமண முறையே சிக்கலானது. இதற்காக திருமண முறைக்கு நான் எதிர்ப்பு என எடுத்துக்கொள்ள கூடாது. என் நண்பர்கள் சிலர் அழகான திருமண வாழ்க்கையை வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
என்னைப் பொருத்தவரை திருமணம் என்பது கூடையில் இருக்கும் பூக்கள் போன்றது என் மனதை கேட்டால் அந்த பூக்கள் வேண்டாம். கூடையில் இருக்கும் உலர் பழங்கள் மற்றும் நட்ஸ்களை எடுத்துக்கொள் என்றுதான் சொல்லும்.
சாம்பார் சாதம் மாதிரி வேணும்...
திருமணத்தை ஏன் சிக்கலானதாக பார்க்கிறீர்கள்?
என் கவனம் எல்லாம் இப்போது சினிமாவில் தான் இருக்கிறது. என் வாழ்க்கையில் சில நல்ல விஷயங்கள் இருக்கின்றன. சில நல்ல நண்பர்களும் இருக்கிறார்கள். இருபது வயதைத் தாண்டிவிட்ட என் வாழ்க்கையில் சாம்பார் சாதம் இதுவரை பிடித்த உணவாக இருந்திருக்கிறது. எனக்கு கணவராக வருகிறவர் நான் விரும்பிச் சாப்பிடும் சாம்பார் சாதம் போல் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பிரச்சனைகள்தான் ஏற்படும். எனவே அப்படி பிடித்தமானவர் கணவராக அமையாவிட்டால் திருமணம் செய்து கொள்ளவே மாட்டேன்.
சினிமாக்காரரா?
சினிமாவில் இருப்பவரை மணப்பீர்களா?
ஆமாம், திருமணம் பற்றி முடிவு எடுத்தால் சினிமாவில் இருப்பவரை தேர்வு செய்வேன். அதில் சில பிரச்சனைகள் இருந்தாலும் நிறைய நன்மைகள் இருக்கிறது. என் தாய், தந்தை சினிமாவில் இருந்து வந்தவர்கள். எனவே திரையுலகில் இருப்பவரை மணப்பது புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்.
இன்னும் சந்திக்கவில்லை
அப்படிப்பட்டவரை திரையுலகில் சந்தித்து விட்டீர்களா?
'இதுவரை சந்திக்கவில்லை.'
இடுப்பை தாராளமா கிள்ளிக்கலாம்
விவேக் ஹீரோவாக நடிக்கும் படம் ‘பாலக்காட்டு மாதவன்’. சோனியா அகர்வால் ஹீரோயின். எம்.சந்திரமோகன் இயக்கம். எஸ்.சஜீவ் தயாரிப்பு. ஸ்ரீகாந்த்தேவா இசை. இதன் ஆடியோவை அனிரூத் வெளியிட சிவகார்த்திகேயன் பெற்றார். பிறகு விவேக் பேசியது:காமெடி நடிகருடன் நடிக்க எல்லா ஹீரோயின்களும் தயங்குகிறார்கள். சாக்குபோக்கு சொல்லி தட்டிகழித்துவிடுவார்கள். தங்கள் வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என்று ஹீரோயின்களிடம் கேட்டால் நகைச்சுவை உணர்வு உள்ளவராக இருக்க வேண்டும் என்பார்கள். ஆனால் காமெடி நடிகருக்கு கால்ஷீட் மட்டும் தரமாட்டார்கள். ஆனால் சோனியா அகர்வால் என்னுடன் ஜோடியாக நடித்துள்ளார். அவரது இடுப்பை கிள்ளும் காட்சியில் நடிக்க தயங்கினேன். உடனே அவர், ‘நடிப்புதானே கூச்சப்பட வேண்டாம். இனி இது உங்க ஏரியா தாராளமா கிள்ளுங்க’ என்றார். பிறகு புகுந்துவிளையாடிவிட்டேன். இதன் படப்பிடிப்பு மலேசியாவில் நடந்தது. இலவசமாக எடுக்கலாம் என்று சொல்லி அழைத்துச் சென்ற இடங்களில்கூட காசு வசூலித்துவிட்டார்கள். விலை உயர்ந்த கார்கள் பயன்படுத்தியதால் அதற்கு அதிக வாடகையும் கொடுத்தோம். படத்தின் பட்ஜெட் எகிறிவிட்டது. இவ்வாறு விவேக் பேசினார்.
அல்போன்சாவிடம் இருந்து கணவரை மீட்டுத் தர புகார்!
ரா.. ரா.. ராமைய்யாஸ என்ற பாட்ஷா படப் பாடலில் சூப்பர் ஸ்டாருடன் நடனம் ஆடியவர் அல்போன்சா. தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு அதிரடி திருப்புமுனையை ஏற்படுத்தியது அப்படம். தனது முதல் படத்திலேயே சூப்பர்ஸ்டாருடன் இணைந்ததால் தமிழகத்தின் மூலை முடுக்கெடுல்லாம் பிரபலமானார் இவர்.
இப்படத்தினை தொடர்ந்து தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 40க்கும் மேற்பட்ட படங்களில் குத்து பாட்டுக்கு நடனம் ஆடி ரசிகர்களை மகிழ்வித்தவர். இவர் நடிகரும் டான்ஸ் மாஸ்டருமான ராபர்ட்டின் சகோதரி என்பது தாங்கள் அறிந்ததே. நடிகை அல்போன்சா ஏற்கனவே திருமணம் ஆனவர். இவரது கணவர் தற்கொலை செய்து கொண்டார். அதன் பின்னர் அல்போன்சாவும் கடந்த 2012ஆம் ஆண்டு தற்கொலை செய்ய முயற்சித்தார்.
இந்நிலையில் மயிலாடுதுறையை சேர்ந்த சுஜாதா என்பவர் அல்போன்சா மீது பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் தெரிவித்திருப்பதாவதுஸ
“நான் 8 வருடமாக ஜெய்சங்கர் என்பவரை காதலித்து பல பிரச்சினைகளின் நடுவே திருமணம் செய்து கொண்டேன். எங்கள் திருமண விழாவிற்கு நடிகை அல்போன்சாவும் வந்திருந்தார். அதன்பின்னர் என் கணவர் வெளிநாடு சென்றுவிட்டார். பின்னர் என்னை தொடர்பு கொள்ளவில்லை. தற்போது எனது கணவரை மயக்கி சூழ்ச்சி வலைக்குள் விழ வைத்துள்ளார் அல்போன்சா. எனது கணவரை அபகரித்து வைத்து கொண்டு எனக்கு கொலை மிரட்டல் விடுதது வருகிறார். என் காதல் நிஜமானது. என் கணவரை எனக்கு மீட்டுத் தாருங்கள்” என புகாரில் தெரிவித்துள்ளார்.
இவை மட்டுமில்லாமல் இவரது கணவரும் நடிகை அல்போன்சா இருவரும் ஒன்றாக இருக்கும் போட்டோ மற்றும் வீடியோ ஆதாரங்களை போலீசாரிடம் கொடுத்துள்ளார்
அதிரடி இலக்கு! அக்ஷரா ஹாசன்
அம்மாவுடன் மும்பையில் வசிக்கும் அக்ஷரா ஹாசன், அமிதாப், தனுஷ் நடித்த ‘ஷமிதாப்’ படத்தில் அறிமுகமானார். இயக்குநர் ஆவதுதான் லட்சியம் என்று உதவி இயக்குநராக வேலை செய்தவர் திடீரென நடிக்க வந்தார். ஆனால் ஷமிதாப் படத்துக்குப் பிறகு அவர் படங்கள் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை.
போனி கபூர் தயாரிப்பில் தேவி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் இந்திப் படத்தில், அவருடைய வளர்ப்பு மகளாக நடிக்க இருக்கிறார் என்று வெளியான செய்தியை அக்ஷரா இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
ஆனால் தன் அக்கா அக்கா ஸ்ருதி ஹாசன் வழியில் நடிப்பைத் தொடர்வது என்று முடிவு செய்துவிட்டாராம். வணிகப் படங்களின் கதாநாயகியாக உயர, நடை, உடை, பாவனைகளை மாற்றிக்கொள்ளும்படி அக்கா கொடுத்த அறிவுரைகளை ஏற்று முதலில் அவற்றைக் கடைப்பிடிக்க முடிவு செய்திருக்கிறாராம். அதற்கு அடையாளமாகக் கனிகா என்ற டிசைனர் வடிவமைத்த ஆடைகளை அணிந்து முதல் முறையாக ஆடை அணிவகுப்பு ஒன்றில் பங்கேற்று ரேம்ப் வாக் செய்திருக்கிறார்.
தற்போது உணவு, உடற்பயிற்சி, சிகை அலங்காரம் அழகு ஆகியவற்றுக்குத் தனித் தனி நிபுணர்களை அக்ஷராவுக்காக ஒப்பந்தம் செய்து கொடுத்திருக்கிறாராம் அவருடைய அம்மா. அடுத்த படத்தை ஒப்புக்கொள்ளும் முன் கவர்ச்சிகரமான தோற்றத்துக்கு மாறிவிட வேண்டும் என்பது மட்டும்தான் அக்ஷராவின் தற்போதைய அதிரடி இலக்கு என்கின்றன பாலிவுட் வட்டாரங்கள்.
ரஜினியை இயக்குகிறேனா? ஐஸ்வர்யா தனுஷ் சிறப்பு பேட்டி
அப்பா சூப்பர் ஸ்டார், கணவர் நாடறிந்த நடிகர். ஆனால் பேச்சில் பந்தா காட்டுவதில்லை ஐஸ்வர்யா தனுஷ். ‘வை ராஜா வை’ படத்தை இயக்கி முடித்திருக்கும் நிலையில் நம்மிடம் பேசியதிலிருந்து...
இம்முறை கெளதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் ஆகியோருடன் இணைந்திருக்கிறீர்களே...
‘3’ படம் மாதிரியே ‘வை ராஜா வை’ எடுத்திருப்பேன் என்று எதிர்பார்த்தீர்கள் என்றால் ஏமாற்றமே மிஞ்சும். முழுக்கக் காதலைச் சுற்றியே ‘3’ இருந்தது. ‘வை ராஜா வை’ முழுக்க ஒரு கமர்ஷியல் படம். இப்படம் பார்க்க வரும்போது ‘3’ படத்தை நினைப்பில் இருந்து எடுத்துவிட்டு வாருங்கள்.
நான் எழுதியிருக்கும் கதைக்கு யார் பொருத்தமாக இருப்பார்களோ, அவர்களை வைத்துப் படம் பண்ணுவதுதான் எனக்குப் பிடிக்கும். அந்த வகையில் இப்படத்துக்குக் கெளதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் பொருத்தமாக இருந்தார்கள்.
பிறந்த வீடு புகுந்த வீடு என எல்லோரும் சினிமா பின்னணி கொண்டவர்கள். படம் இயக்கும் முன் ஆலோசனை கேட்பீர்களா?
குடும்பத்தில் இருக்கும் அனைவருமே திரையுலகைச் சார்ந்தவர்கள் என்பதால் தான் என்னுடைய வேலை எளிமையாக இருக்கிறது. ஒரு கதை எழுதினேன் என்றால் குடும்பத்தில் இருக்கும் இயக்குநர்களிடம் ஆலோசனை கேட்பதில் தவறில்லை என்பது என் கருத்து.
உங்கள் வளர்ச்சியில் அம்மாவுக்குப் பங்கு உண்டா?
நான் படப்பிடிப்புக்குச் சென்றால் குழந்தைகளை அம்மாதான் பார்த்துக் கொள்கிறார். அம்மாவிடம் விட்டுச் செல்வதால்தான் என்னால் எந்தப் பயமும் இன்றி படத்தை இயக்க முடிகிறது. என்னுடைய குழந்தைகள் நாள் முழுவதும் பாட்டியுடன் விளையாடியபடி ஜாலியாக இருப்பார்கள்.
குழந்தைகளோடு இருக்கும் நேரம் எவ்வளவு?
‘3’ முழுக்கச் சென்னையில் தான் படப்பிடிப்பு நடத்தினோம். அதனால் குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது பெரிய விஷயமாகத் தெரியவில்லை. ஆனால், ‘வை ராஜா வை’ படத்துக்குக் கஷ்டப்பட்டேன். நிறையப் பயணம் செய்து படப்பிடிப்பு நடத்த