எனக்குள் ஒருவன் – திரை விமர்சனம்
சென்னையில் ஒரு பழமை வாய்ந்த திரையரங்கு ஒன்றை நடத்தி வருகிறார் ஆடுகளம் நரேன். இந்த தியேட்டரில் வேலை செய்பவராக நாயகன் சித்தார்த். இந்த தியேட்டர் மீது ஏராளமான கடன் இருப்பதால் மிகவும் சிரமப்பட்டு நடத்தி வருகிறார் நரேன்.
இந்நிலையில் நண்பர்களுடன் தங்கியிருக்கும் சித்தார்த் இரவில் தூக்கம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார். இரவில் டீக்கடைக்கு செல்லும் சித்தார்த்திற்கு ஒருவருடன் பழக்கம் ஏற்படுகிறது. அவர் ஜான் விஜய்யை அறிமுகம் செய்து வைக்கிறார். ஜான் விஜய் சித்தார்த்தின் தூக்கத்தை போக்க மருந்து ஒன்றை தருகிறார்.
‘அந்த மருந்தை சாப்பிட்டால் தூக்கத்தோடு கனவு வரும். அந்த கனவு நிஜத்தில் நீ எப்படி வாழ நினைக்கிறாயோ அதை காண்பிக்கும். விடிந்த பிறகு அந்த கனவு மறைந்து, பின்னர் மறுபடியும் தூங்கும் போது அந்த கனவு விட்ட இடத்தில் இருந்து தொடரும்’ என்று ஜான் விஜய், சித்தார்த்திடம் கூறுகிறார்.
மருந்தை சாப்பிட்ட சித்தார்த் கனவு உலகத்திற்கு செல்கிறார். பெரிய ஹீரோவாக மாறுகிறார். நிஜத்தில் பார்ப்பவர்கள் அனைவரும் கனவிலும் வருகிறார்கள். நிஜத்தில் கிடைக்காத விஷயங்கள் எல்லாம் சித்தார்த்திற்கு கனவில் கிடைக்கிறது.
கனவில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வரும் சித்தார்த், நிஜ உலகிற்கு திரும்பினாரா? கனவிலும் நிஜத்திலும் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டன? என்பதை வித்தியாசமான கிளைமாக்ஸுடன் எடுத்திருக்கிறார்.
படத்தில் நாயகன் சித்தார்த் இரண்டு வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று சிறப்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக தியேட்டரில் வேலை செய்யும் கதாபாத்திரத்தில் நடிப்பு தீனி போட்டிருக்கிறார்.
இரண்டு கெட்-அப்களிலும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சித்தார்த்திற்கு பேர் சொல்லும் படமாக இப்படம் அமைந்திருக்கிறது. நடிப்பால் இந்த படத்தில் மீண்டும் கைதட்டல் வாங்கியுள்ளார்.
நாயகியாக தீபா சன்னதி அழகாக வந்து அற்புதமாக நடித்திருக்கிறார். மற்றொரு நாயகியாக வரும் சிருஸ்டி துறுதுறு நடிப்பால் ரசிகர்களை கவர்கிறார். நொடிந்துப்போன தியேட்டர் அதிபராக வரும் ஆடுகளம் நரேன் நடிப்பால் மனதில் பதிகிறார்.
கன்னடத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான லூசியா படத்தின் தமிழ் பதிப்பாக எடுத்திருக்கிறார் இயக்குனர் பிரசாத் ராமர். படத்தில் எந்த ஒரு இடத்திலும் சலிப்பு தட்டாத அளவுக்கு காட்சிகளை கச்சிதமாக கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர்.
திரைக்கதையும் கிளைமாக்ஸ் திருப்புமுனையும் படத்திற்கு பெரும் பலம். நீண்ட காலத்திற்குப் பிறகு திரையில் கருப்பு வெள்ளை படத்தை காண்பித்திருக்கிறார்கள்.
வழக்கம்போல் சந்தோஷ் நாராயணின் கலக்கலான இசையும் பாடல்களும் ரசிக்க வைக்கிறது. கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. கருப்பு வெள்ளையிலும், கலர்ப்புல்லிலும் ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘எனக்குள் ஒருவன்’ சிறப்பானவன்.
தொப்பி’
தேனி மாவட்டம் மலைக் கிராமத்தில் பழங்குடி இனத்தை சேர்ந்தவராக நாயகன் முரளிராம். இந்த கிராமத்தில் உள்ள அனைவரும் திருட்டுத் தொழிலை பாரம்பரியமாக செய்து வருகின்றனர்.
ஆனால், முரளிராம் மட்டும் அதிலிருந்து மாறுபட்டு நன்கு படித்து டிகிரி பட்டம் வாங்கி, போலீசில் சேரவேண்டும் என்ற கனவோடு இருந்து வருகிறார்.
இந்நிலையில், அந்த ஊருக்கு புதிய இன்ஸ்பெக்டராக அருள்தாஸ் வருகிறார். அவர் இந்த கிராமத்தில் நடக்கும் திருட்டுத்தனத்தை ஒழிக்க பாடுபடுகிறார்.
ஆனால், அருள்தாஸ் மீதே கிராமத்தில் உள்ளவர்கள் மறைமுகமாக தாக்குதல் நடத்துவதால் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார்.
அப்பொழுது, முரளிராம் பற்றிய விவரம் அருள்தாசுக்கு தெரிய வருகிறது. அவனை வைத்து கிராமத்தில் உள்ளவர்கள் திருடிக் கொண்டுவந்த பொருளை மீட்க நினைக்கிறார். முரளிராமும் போலீசுக்கு உதவிகள் செய்கிறார்.
இதனால் போலீஸ் உயரதிகாரிகள் மத்தியில் முரளிராமுக்கு நல்ல பெயர் கிடைக்கிறது. இது அருள்தாசுக்கு பிடிக்கவில்லை. ஒருநாள் அமைச்சரின் வீட்டிலிருந்து ஒரு பொருளை கிராமத்தில் உள்ளவர்கள் திருடிக் கொண்டு வந்துவிடுகிறார்கள்.
அதை மீட்க அருள்தாஸ் மீண்டும் முரளிராமின் உதவியை நாடுகிறார். அதைத் தேடிக் கண்டுபிடித்து கொடுக்கும் முரளிராம், அதற்குள் ரைஸ் புல்லிங் கலசம் இருப்பதை அறிகிறார். அதை அருள்தாசிடம் ஒப்படைக்காமல் அவரைவிட உயரதிகாரியிடம் ஒப்படைக்கிறார்.
தன்னுடைய பொருள் கைநழுவிப் போனதே என்ற வருத்தத்தில் இருக்கும் அமைச்சர், அருள்தாசிடம் முரளிராமை கொல்ல உத்தரவிடுகிறார்.
முரளிராமின் வளர்ச்சி பிடிக்காத அருள்தாசும் அவனைக் கொல்ல காத்திருக்கிறார். இறுதியில், முரளிராமை அருள்தாஸ் கொலை செய்தாரா? அல்லது அருள்தாசின் திட்டத்தை முரளிராம் முறியடித்தாரா? என்பதே மீதிக்கதை.
முரளிராம் தன்னுடைய முதல் படத்திலேயே ஹீரோயிசம் இல்லாமல் ரொம்பவும் எதார்த்தமாக நடித்திருக்கிறார். மலைக்கிராமத்து பையனாக மனதில் எளிதாக பதிகிறார்.
அதேபோல், நாயகி ரக்சனா ராஜூவும் மலைவாழ் பெண்ணாக அழகாக நடித்திருக்கிறார். அதிக மேக்கப் இல்லையென்றாலும் திரையில் பார்க்க அழகாக தெரிகிறார். முகபாவனையில் மனதை கொல்கிறார்.
சுருட்டு சாமியாக வரும் ஜி.எம்.குமார் வரும் காட்சிகள் கலகலக்க வைக்கிறது. போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் அருள்தாஸ் காமெடியிலும், வில்லத்தனத்திலும் கலக்கியிருக்கிறார். மலைவாழ் மக்களின் வாழ்க்கையை அழகாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர் யுரேகா.
அளவான கதாபாத்திரங்களை தேர்வு செய்து அழகுபட சொல்லியிருக்கிறார். எம்.சுகுமாரின் ஒளிப்பதிவு மலை கிராமத்தை அழகாக படமாக்கியிருக்கிறது.
ஒவ்வொரு காட்சிகளையும் சிரத்தை எடுத்து பதிவு செய்திருக்கிறார். ராம்பிரசாத் சுந்தரின் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசையும் பரவாயில்லை.
மொத்தத்தில் ‘தொப்பி’ மகுடம்.
என் வழி தனி வழி – திரை விமர்சனம்
மத்திய குற்றப்பிரிவில் அசிஸ்டெண்ட் கமிஷனராக பணிபுரிந்து வருகிறார் ஆர்.கே., இவருடைய குழுவில் தலைவாசல் விஜய், இளவரசு, மீனாட்சி தீட்சித் ஆகியோரும் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் இணைந்து ரவுடிகளை என்கவுண்டர் செய்யும் பணியை செய்து வருகின்றனர். அதில், நிறைய ரவுடிகளை என்கவுண்டரும் செய்கிறார்கள்.
அரசியலில் இருக்கும் முன்னாள் ரவுடிகளும் இவர்களது என்கவுண்டருக்கு தப்புவதில்லை. இந்நிலையில், ஒருநாள் ரோஜாவின் கணவரை ஆர்.கே. குழு என்கவுண்டர் செய்கிறது.
ரோஜாவின் கணவர் அரசியல்வாதி என்பதால், அவர் இறந்த பிறகு ரோஜா அரசியலில் குதிக்கிறார். தனது கணவரை கொன்ற ஆர்.கே.வை பழிவாங்க துடிக்கிறார்.
இந்நிலையில், தனது மகனான ஆர்.கே.வுக்கு நேரம் சரியில்லாததால், அவருக்கு சில பரிகாரங்கள் செய்யவேண்டும் என அவரது அம்மா சீதா, ஆர்.கேவை சொந்த ஊருக்கு வரச் சொல்கிறார்.
சொந்த ஊரில் ஆர்.கே.வின் முறைப்பெண்ணான பூனம்கவுர் ஆர்.கே.வை திருமணம் செய்ய காத்துக் கொண்டிருக்கிறாள்.
சொந்த ஊருக்கு செல்லும் ஆர்.கே., தனது அம்மாவின் அறிவுரைப்படி சில பரிகாரங்களை செய்கிறார். அப்போது, அவரது அம்மாவை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிடுகிறார்.
தனது அம்மாவை கொன்றது யார் என்ற விசாரணையில் இறங்குகிறார் ஆர்.கே., அப்போது தனது அம்மா கொலையில் எம்.பி. ஒருத்தரின் தலையீடு இருப்பதாக அறிந்து அவரை நேரில் சந்தித்து மிரட்டல் விடுகிறார்.
எம்.பி.யோ தனக்கு தெரிந்த உயரதிகாரிகளிடம் ஆர்.கே. மிரட்டல் விடுத்த செய்தியை தெரிவிக்கிறார். மறுநாள் அந்த எம்.பி. மர்மமான முறையில் இறக்கிறார்.
அவரது கொலைக்கு ஆர்.கே.தான் காரணம் என்று சொல்லி, அவர் இருந்த பதவிக்கு ஆசிஷ் வித்யார்த்தியை பணியமர்த்துகிறார் உயரதிகாரியான ராதாரவி. பதவியில் அமர்ந்ததும் ஆசிஷ் வித்யார்த்தி ஆர்.கே.வை என்கவுண்டர் செய்ய முடிவெடுக்கிறார்.
இந்த விஷயங்கள் எல்லாம் அறிந்ததும் ஆர்.கே. தலைமறைவாகிறார். பின்னர் ஒருநாள் அவரே நேரடியாக வந்து கோர்ட்டில் சரணடைகிறார். அதன்பின்னர், தங்களது வேலையில் இருக்கும் சிரமங்களை நீதிபதி முன் எடுத்து வைக்கிறார்.
இறுதியில், ஆர்.கே.வின் கோரிக்கைகளை நீதிமன்றம் ஏற்று அவரை நிரபராதி என்று தீர்ப்பளித்ததா? தனது தாயின் சாவுக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து ஆர்.கே. பழிவாங்கினாரா? என்பதே மீதிக்கதை.
ஆர்.கே. பொறுப்பான காவல்துறை அதிகாரியாக அழுத்தமாக பதிந்திருக்கிறார். கதாபாத்திரத்திற்கு ஏற்றார்போல் காதல் காட்சிகளில் கவனம் செலுத்தாமல் கடமையே கண்ணாக இருந்திருக்கிறார்.
தன் தாயை இழந்து பரிதவிக்கும் காட்சிகளில் சிறப்பான நடிப்பு. ஆர்.கே.வின் முறைப்பெண்ணாக வரும் பூனம் கவுருக்கு குறைவான காட்சிகளே. இருப்பினும் அவற்றை நிறைவாக செய்திருக்கிறார். திரையில் பார்க்க அழகாகவும் இருக்கிறார். நாயகனுடன் இணைந்து ஒரு பாடல் காட்சியிலும் நடித்துள்ளார்.
காவல் துறை அதிகாரியாக வரும் மீனாட்சி தீட்ஷித் அழகு பதுமையாக இல்லாமல், துப்பாக்கி ஏந்தி மிரட்டியிருக்கிறார். கமிஷனராக வரும் ராதாரவி, மத்திய அமைச்சராக வரும் ரோஜா இருவரும் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்கள்.
பெரும்பாலும் ஆர்.கே.வை சுற்றியே கதை நகர்வதால், மற்ற கதாபாத்திரங்கள் எதுவும் மனதில் பதியவில்லை. தம்பி ராமையா, சிங்கமுத்து இருவரும் கதைக்கு எந்த தொடர்பும் இல்லாமல் தனியாக காமெடி செய்ய முயற்சித்திருக்கிறார்கள். இவர்களது காமெடி சுத்தமாக எடுபடவில்லை.
இயக்குனர் ஷாஜி கைலாஷ் இப்படத்தில் என்கவுண்டர் செய்யக்கூடிய அதிகாரிகளுக்கு வரக்கூடிய பிரச்சினைகள், அவர்கள் அதை எதிர்கொள்வதற்குண்டான வழிகளை எவ்வாறு ஏற்படுத்த வேண்டும், இராணுவத்தை நாட்டின் வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்று பல கருத்துக்களை படம் மூலம் கூறியிருக்கிறார்கள்.
படத்திற்கு மிகப்பெரிய பலமே வசனங்கள்தான். நீதிமன்றத்தில் ஆர்.கே. பேசும் வசனங்கள் எல்லாம் கைதட்ட வைக்கிறது. ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசை மிரட்டலாக இருக்கிறது. ராஜரத்தினம் ஒளிப்பதிவில் காட்சிகள் எல்லாம் அருமை.
மொத்தத்தில் ‘என் வழி தனி வழி’ முள்பாதை.
சேர்ந்து போலாமா – திரை விமர்சனம்
வினய்யும், மதுரிமாவும் சிறு வயதிலிருந்தே நெருங்கிய நண்பர்கள். இவர்கள் வளர்ந்து பெரியவர்களாகிறார்கள். வினய், ப்ரீத்தி கிறிஸ்டியனா பாலை காதலிக்கிறார். அவளும் வினய்யை காதலித்து வருகிறாள்.
ஒருநாள் ப்ரீத்தி வினய்யை விட்டு பிரிந்து செல்கிறாள். அவளது பிரிவை தாங்க முடியாத வினய் சோகத்தில் இருக்கிறார். அவளை எப்படியாவது தேடிக் கண்டுபிடித்து, அவளுடன் சேரவேண்டும் என்று ஆசைப்படுகிறார். அவளை தேடுவதற்காக புறப்படுகிறார். அவனுடன் மதுரிமாவும் இணைந்து கொள்கிறாள்.
இரண்டு பேரும் சேர்ந்து அவளைத் தேடிச் செல்லும்போது ஒரு மர்மக் கும்பல் வினய்யை கொலை செய்யப் பார்க்கிறது. அந்த சண்டையில் குண்டடிபடும் வினய்யை காப்பாற்றி, ஆஸ்பத்திரியில் சேர்க்கிறாள் மதுரிமா.
ஆனால், மதுரிமாவும் வினய்யை கொலை செய்வதற்காகத்தான் அவன்கூடவே பயணித்திருக்கிறார். தனது தம்பியை கொலை செய்தது வினய்தான் என்று தவறாக புரிந்துகொண்டதால் அவனை கொலை செய்ய முயற்சிக்கிறாள்.
ஒருகட்டத்தில் தன்னுடைய தம்பியின் கொலைக்கு காரணம் வினய் இல்லை என்பது தெரிய வந்ததும் அவன்மீது காதல் கொள்கிறாள்.
இதற்கிடையில், வினய், காதலித்த ப்ரீத்தியை இருவரும் தேடிக் கண்டுபிடிக்கிறார்கள். அவள் பணத்துக்காக வேறு ஒருவனை திருமணம் செய்துகொண்டதை அறிந்ததும் அவளை வெறுத்து ஒதுக்குகிறார் வினய்.
மதுரிமாவின் காதலை புரிந்துகொண்ட வினய், அவளை காதலிக்க ஆரம்பிக்கிறார். இருவரும் சேர்ந்து மதுரிமாவின் தம்பியை கொலை செய்தவர்களை பழிவாங்க தயாராகுகிறார்கள்.
இறுதியில், மதுரிமா தம்பியை கொலை செய்தவர்களை தேடிக் கண்டுபிடித்து அவர்களை பழி வாங்கினார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
ழுக்க முழுக்க நியூசிலாந்தில் எடுக்கப்பட்ட படம். நாயகன் வினய், வழக்கம்போல் ரொம்பவும் அலட்டல் இல்லாமல், எளிமையான தோற்றத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தொடர்ந்து படங்களில் ஒரே மாதிரியான நடிப்பை வெளிப்படுத்துவதால் அவரை ரசிக்க சற்று தயக்கமாக இருக்கிறது.
நாயகியாக மதுரிமா படம் முழுக்க கவர்ச்சியான உடையில் கவனிக்க வைக்கிறார். தம்பியை கொன்றவனை பழிவாங்க துடிப்பதில் நீலாம்பரியாக தெரிகிறார். இன்னொரு நாயகியாக வரும் ப்ரீத்தி கிறிஸ்டியனா பால் ஒருசில காட்சிகளே வருகிறார். படத்தில் இவருடைய நடிப்பு பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
தம்பி ராமையாவின் நகைச்சுவை ரசிக்கும்படியாக இல்லை. நகைச்சுவை என்ற பெயரில் கருத்தை சொல்ல நினைத்தாலும், அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தலைவாசல் விஜய் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.
இயக்குனர் அணில்குமார், நண்பர்களுக்குள் ஏற்படும் பிரச்சினையை மையப்படுத்தி ஒரு கதையாக உருவாக்கியிருக்கிறார். அதில் காதலும் கலந்து சொல்லியிருக்கிறார்.
நியூசிலாந்தில் அழகான இடங்களை தேர்வு செய்து ஒவ்வொரு காட்சியையும் அழகாக படமாக்கியிருப்பது பாராட்டப்பட வேண்டியது. இடங்களின் தேர்வில் இருந்த கவனம் கதையில் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
சஞ்சீவ் சங்கரின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சிகளும் அருமையாக வந்திருக்கிறது. அருவியின் கீழ் எடுக்கப்பட்ட அந்த பாடல் கண்களுக்கு குளிர்ச்சியை கொடுத்துள்ளது.
விஷ்ணு மோகன் சித்தாராவின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். பின்னணி இசையிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
மொத்தத்தில் ‘சேர்ந்து போலாமா’ சேர்ந்து போலாம்’
மகா மகா – திரை விமர்சனம்
தமிழ் நாட்டில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு வேலைக்கு செல்கிறார் நாயகன் மதிவாணன். அங்கு ஒரு சூப்பர் மார்க்கெட்டில் அனுஸ்ரீ என்னும் பெண்ணை சந்திக்கிறார். இவருடன் நட்புடன் பழகுகிறார் மதிவாணன்.
ஒருநாள் அவர் தங்கியிருக்கும் வீட்டிற்கு வந்த போலீஸ், ஒரு பெண்ணை காணவில்லை என்று கூறி அவரிடம் விசாரிக்கிறார்கள். அப்போது, இந்த வீட்டுக்கு புதியதாக வந்திருப்பதாக கூறிய மதிவாணன், தனக்கு எந்த பெண்ணையும் தெரியாது என்று கூறி போலீஸ்காரர்களை அனுப்பி வைக்கிறார்.
இதுஒருபுறமிருக்க, மதிவாணன் தன் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் நாயகி மெலிசாவை பார்த்தவுடனே காதல் வயப்படுகிறார். இருவரும் காதலை வெளிப்படுத்தி காதலிக்கவும் ஆரம்பிக்கின்றனர்.
இந்நிலையில், அனுஸ்ரீயை மீண்டும் சந்திக்கிறார் மதிவாணன். அப்போது மதிவாணன் ஒரு பெண்ணை காதலிப்பதாக கூறி தனது காதலியான மெலிசாவின் புகைப