சினிமா செய்தித் துளிகள் சிவகார்த்திக்கேயனின் வெற்றியை தள்ளி நின்று பார்க்கிறார் தனுஷ்: அனிருத்
26 Feb,2015
கமல்-தனுஷ்-ஸ்ருதி இணையும் புதிய படம் விரைவில்!
துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமானவர் நடிகர் தனுஷ். அதன்பிறகு செல்வராகவன் இயக்கத்தில் சோனியா அகர்வாலுடன் காதல் கொண்டேன் படத்தில் நடித்தார். இப்படத்தில் தனுஷின் நடிப்பை பார்த்த கமல், ரஜினி போன்ற பிரபலங்கள், மிகப்பெரிய ஆளாக வருவார் என பாராட்டி வாழ்த்தினர்.
அவர்கள் சொன்னதைப் போலவே, இன்று நடிகராக, பாடல் ஆசிரியராக, பாடகராக, தயாரிப்பாளராக வலம் வந்துக் கொண்டிருக்கிறார். நடிகர் தனுஷை போலவே, தயாரிப்பாளர் தனுஷும் வெற்றி கண்டு வருகிறார். தமிழ் சினிமாவையும் தாண்டி இந்தி திரையுலகிலும் நுழைந்து இரண்டு வெற்றி முத்திரைகளை பதித்து விட்டு திரும்பியிருக்கிறார்.
விழாவில் பாராட்டிய ரஜினியின் மகளை ஐஸ்வர்யாவை கரம்பிடித்து ரஜினியின் மருமகனாகவே வந்து விட்டார் தனுஷ். அதேபோல் அன்று பாராட்டிய கமல்ஹாசனுடன் இன்று ஒரு புதிய படத்தில் இணையவிருக்கிறார்.
இந்த வாரம் இவரது தயாரிப்பில் உருவாகியுள்ள காக்கி சட்டை வெளியாகவுள்ள நிலையில், இவரது அடுத்த தயாரிப்பு குறித்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இவர் தயாரிப்பில் அடுத்து வரவிருக்கும் படம் மிகப்பெரிய படமாக இருக்கும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.
உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க ஒரு படத்தை தனுஷ் தயாரிக்க போவதாகவும், படத்தின் இயக்குனரை கமல்ஹாசனே தேர்ந்தெடுக்கட்டும் என்று கூறியதாகவும் தெரிகிறது. மேலும், இப்படத்தில் தனுஷும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் தனுஷுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் அல்லது அக்ஷராஹாசன் நடிப்பதாக தெரிகிறது.
சிம்புவுக்கு பரபரப்பு கொடுக்க வரும் மார்ச் மாதம்
சிம்பு நடித்த படங்கள் கடந்த இரண்டு வருடங்களாக வெளிவராமல் உள்ளன. ‘வாலு’, ‘இது நம்ம ஆளு’ ஆகிய படங்கள் முடிவடைந்தும் ரிலீசாகமல் உள்ளது. மேலும், கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கும் புதிய படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், மார்ச் மாதத்தில் இப்படத்தின் அனைத்து வேலைகளையும் பரபரப்புடன் முடிக்கவுள்ளதாக சிம்பு கூறியுள்ளார். இதுகுறித்து சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடும்போது, ‘இது நம்ம ஆளு’ படத்தின் டப்பிங் பணி அதைத் தொடர்ந்து கவுதம் மேனன் படத்தின் படப்பிடிப்பு,
உத்தம வில்லன் ஆடியோ வெளியீட்டை தொகுத்து வழங்கும் பார்த்திபன்
கமல் நடிப்பில் உருவாகியிருக்கும் உத்தம வில்லன் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வரும் மார்ச் 1-ந் தேதி பிரம்மாண்டமாக நடத்தவுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர், நடிகையர்கள் கலந்துகொள்ளவிருக்கின்றனர். ரசிகர்கள் முன்னிலையில் இந்த ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்தவிருப்பதால், கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.
ஆஸ்கார் விருதை வென்ற உத்தம வில்லன் கலைஞன் !
உலக நாயகன் உத்தம வில்லன் படத்தில் ஒலிவடிவமைப்பாளராக பணிபுரிந்த கிரேக் மேன்றிக் ஆஸ்கார் விருதை வென்றார் .
இவர் வ்ஹிப்லாஷ் என்ற படத்துக்காக விருதை வென்றுள்ளார். கமல்ஹாசன் எப்போதுமே உலகம் தரம் வாய்ந்த தொழில்நுட்ப கலைஞர்களை நாடுபவர் ,அதிலும் இந்த தடவை ஆஸ்கார் விருதை வென்ற என்ற புகழ் உத்தம வில்லனுக்கு கூடுதல் வலு சேர்த்துள்ளது .
அனுதாபத்தால் அல்ல- திறமையால் மட்டுமே ஜெயித்தார் ஈழத்து பெண் ஜெசிக்கா
நடிகர் சல்மான்கான் மான் வேட்டையாடிய வழக்கு தீர்ப்பு அடுத்த மாதம் 3-ந்தேதிக்கு...
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கடந்த 1998-ம் ஆண்டு ’ஹம் சாத் சாத் ஹெய்ன்’ என்ற படத்தின் சூட்டிங் நடந்தது. இதில் நடிகர்கள் சல்மான் கான், சயீப் அலிகான் நடிகை கள் தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
படப்பிடிப்பு ஓய்வு நேரத் தில் நடிகர் சல்மான்கான் ஜோத்பூர் அருகில் உள்ள கன்கனி வனப்பகுதிக்கு சென்று மான் வேட்டையில் ஈடுபட்டார். அவர் துப்பாக்கி யால் சுட்டதில் அரிய வகை மான் இனமான சின்காராஸ் மற்றும் பிளாக்பக்ஸ் என்ற வகைளைச் சேர்ந்த 3 அரிய மான்கள் கொல்லப்பட்டன.
இதையடுத்து நடிகர் சல்மான்கான் மீது வன விலங்கு வேட்டையாடுதல் தடை சட்டத்தின் கீழ் ஜோத்பூர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதில் நடிகர் சல்மான்கான் சட்ட விரோத ஆயுதங்களை பயன்படுத்தி மான்வேட்டை நடத்தியதாக கூறப்பட்டது.
ஜோத்பூர் கோர்ட்டு விசாரணை நடத்தி கடந்த 2006-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. சல்மான்கானுக்கு 5 ஆண்டு கள் ஜெயில் தண்டனை விதித்தது.இதை எதிர்த்து சல்மான் கான் சுப்ரீம் கோர்ட்டில் ’அப்பீல்’ செய்தார். அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ராஜஸ்தான் கீழ் கோர்ட்டு வழங்கிய தடையை நிறுத்தி வைத்தது. அதே சமயம் சல்மான்கான் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட் டது.
இதற்கிடையே நடிகர் சல்மான்கான் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன் பேரில் ஜோத்பூர் கோர்ட்டில் சல்மான்கான் மீதான மான் வேட்டை வழக்கு நடந்தது. சமீபத்தில் இந்த வழக்கு விசாரணை முடிந்தது. இதைத் தொடர்ந்து 16 ஆண்டுகளுக்கு பிறகு இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
சல்மான்கானுக்கு இன்று வழங்கப்படும் தீர்ப்பில் 5 ஆண்டுகள் வரை தண்டனை கொடுக்கப்படலாம் என்று கூறப்பட்டது. ஆனால் தீர்ப்பு அறிவிக்கப்படுவதை திடீரென ஜோத்பூர் கோர்ட்டு ஒத்திவைத்தது.அடுத்த மாதம் (மார்ச்) 3-ந்தேதி சல்மான்கான் வழக்கில் தீர்ப்பு வெளியிடப் படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகார்த்திக்கேயனின் வெற்றியை தள்ளி நின்று பார்க்கிறார் தனுஷ்: அனிருத்
காக்கிச் சட்டை
"தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து நான் இசையமைத்த 'காக்கி சட்டை' படம் வெளியாக இருக்கிறது. அப்புறம் எப்படி சண்டை இருக்கும்?
எதிர்நீச்சல் நேரத்தில்
'எதிர் நீச்சல்' நேரத்திலேயே இப்படியான வதந்திகள் வரும் என்று நினைத்தோம். சிவகார்த்திகேயனுக்கு 2 படங்கள் வெளியானதற்கு பிறகு இந்தப் பிரச்சினை தொடங்கி இருக்கிறது.
வளர்ச்சியில் சந்தோசம்
உண்மையாகவே அப்படி ஒரு பிரச்சினையே கிடையாது. ஒருவருடைய வளர்ச்சி இன்னொருத்தருக்கு சந்தோஷத்தைதான் கொடுத்திருக்கிறது.
இப்போது தேவையில்லை
தனுஷ் சார் வராமல் இருந்தது, ஏற்கெனவே பேசி வைத்து நடந்ததுதான். இப்போது சிவகார்த்திகேயனும் ஒரு முக்கிய ஸ்டார். அவருக்கு யாருடைய உறுதுணையும் இப்போது தேவையில்லை.
சிவகார்த்திக்கேயனுக்கு பாதிப்பு
தனுஷ் சார் இப்போது வந்து பேசினார் என்றால், அது சிவாவின் வளர்ச்சியைதான் குறைவாக்கும். சிவகார்த்திகேயனின் வளர்ச்சிக்காக தோள் கொடுத்தவர், இப்போது வளர்ந்த பிறகு சற்றே தள்ளி நின்று மகிழ்கிறார்.
நட்பின் முதிர்ச்சி
தனுஷின் இந்த அணுகுமுறை உண்மையில் சிவாவுக்கு நெகிழ்வான ஒன்றுதான். இருவரது நட்பிலும் தெளிவாகத் தெரிவது முதிர்ச்சிதானே தவிர விரிசல் அல்ல" என்று கூறியுள்ளார் அனிருத்.
ஆடியோ நிறுவனம் தொடங்கியது ஸ்டுடியோ கிரீன்.. முதல் ரிலீஸ் கொம்பன்!
தொடர்ந்து வெற்றிப் படங்களாகத் தயாரித்து வரும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம், இப்போது ஆடியோ நிறுவனம் தொடங்கி, சிடிக்களையும் வெளியிட ஆரம்பித்துள்ளது.
2006ம் ஆண்டும் சூர்யா-ஜோதிகா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் சில்லுனு ஒரு காதல். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மூலம் ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். இந்த நிறுவனத்தின் முதல் படம் இது.
சூர்யா, கார்த்தி நடித்து வரும் பெரும்பாலான படங்களை ஸ்டுடியோ கிரீன் நிறுவனமே தயாரித்து வருகிறது. இந்நிறுவனம் தயாரிப்பது மட்டுமல்லாமல் படங்களை வாங்கி விநியோகமும் செய்து வருகிறது.
இப்போது இந்நிறுவனம் ஆடியோ நிறுவனத்தையும் தொடங்கவுள்ளது. கார்த்தி-லட்சுமி மேனன் நடிப்பில் உருவாகியுள்ள கொம்பன் படம் மூலம் தனது ஆடியோ கம்பெனியான கிரீன் ஆடியோவை அறிமுகம் செய்யவுள்ளது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 5ம் தேதி நடக்கவுள்ளது. இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘மாஸ்' படத்தின் ஆடியோவையும் கிரீன் ஆடியோ நிறுவனமே வெளியிடுகிறது.