புலி படத்தில் விஜய்க்கு 3 வேடமா? செய்தித் துளிகள்
16 Feb,2015
புலி படத்தில் விஜய்க்கு 3 வேடமா?
கத்தி’ படத்திற்கு பிறகு விஜய், சிம்பு தேவன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு புலி என்று பெயர் வைத்திருக்கின்றனர். விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மொத்வானி ஆகியோர் நடிக்கின்றனர். ஸ்ரீதேவி கபூர், நான் ஈ சுதீப் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
இப்படத்தில் விஜய் இரண்டு வேடத்தில் நடிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால், தற்போது இப்படத்தில் விஜய் மூன்று வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சரித்திர கால திரைப்படமாக உருவாகிவரும் இதில் விஜய், தளபதி மற்றும் கார்ட்டூனிஸ்ட் என இரு வேறு கெட்டப்புகளில் நடிக்கிறார் என்றும், மூன்றாவது கெட்டப்பை படக்குழுவினர் ரகசியமாக வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
சில வாரங்களுக்கு முன்பு ‘புலி’ படத்தின் படப்பிடிப்பை தலக்கோணம் பகுதியில் படமாக்கினர். தற்போது, மீண்டும் இப்பகுதியில் சண்டைக் காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளனர். தொடர்ந்து 10 நாட்கள் அந்த பகுதியில் சண்டை காட்சிகளை படமாக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
கார்த்திக் சுப்பாராஜின் இறைவியில் நடிக்கும் விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா
ஜிகிர்தண்டாவுக்குப் பிறகு கார்த்திக் சுப்பாராஜ் இயக்கும் படத்தை அவரது முதல் படம் பீட்சாவை தயாரித்த திருக்குமரன் என்டர்டெய்ன்மெண்ட் சி.வி.குமாரே தயாரிக்கிறார்.
இறைவி என பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் ஒரு நடிகர் இவர்களுடன் இணைந்துகொள்ளவிருக்கிறார். அவர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.
நான்கு நபர்களின் வாழ்க்கையை பின்னணியாக வைத்து இந்தப் படம் தயாராகிறது என கூறப்படுகிறது. படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.