அனேகன் 3 நாளில் ரூ.30 கோடி வசூல்: மகிழ்ச்சியில் தனுஷ்
தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் ‘அனேகன்’. இப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியிருந்தார். அமைரா தஸ்தூர், கார்த்திக், ஆஷிஷ் வித்யார்த்தி உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இப்படம் கடந்த 3 நாட்களில் ரூ.30 கோடி வசூலித்துள்ளதாக தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ‘அனேகன்’ 3 நாட்களில் ரூ.30கோடியை வசூலித்துள்ளது. இந்த வசூல் தெலுங்கு பதிப்பை தவிர்த்து கணக்கிடப்பட்டுள்ளது.
நன்றிஸ நன்றிஸ நன்றிஸ வருகிற 20-ந் தேதி ‘அனேகன்’ தெலுங்கு பதிப்பான ‘அனேகடு’ வெளியாகவிருக்கிறது. மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
தனுஷ் நடிப்பில் கடந்த 6-ந் தேதி வெளியான ‘ஷமிதாப்’ படமும் வசூலில் சாதனை படைத்து வருகிறது. தற்போது ‘அனேகன்’ படமும் வசூலில் முன்னணியில் வருவதால் தனுஷ் இரட்டை சந்தோஷத்தில் இருக்கிறார்.
தற்போது, இவரது அடுத்த வெளியீடாக ‘காக்கிச்சட்டை’ படம் பிப்.27-ந் தேதி வெளியாகவிருக்கிறது. தற்போது ‘மாரி’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
ஞ தமிழ் சினிமா ஞ ஜெயம் ரவியுடன் மீண்டும் இணைந்த விவேக்
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘அப்பாடக்கர்’. இப்படத்தை சுராஜ் இயக்குகிறார். திரிஷா, அஞ்சலி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இப்போது இந்த கூட்டணியில் காமெடி நடிகர் விவேக்கும் இணைந்துள்ளார். இதை ஜெயம் ரவி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ படத்திற்கு பிறகு ‘அப்பாடக்கர்’ படம் மூலமாக மீண்டும் விவேக்குடன் நடிக்கிறேன். இவர் இருந்தால் படப்பிடிப்பே கலகலப்பாக இருக்கும். அவரை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் பொள்ளாச்சியில் நடக்கவிருக்கிறது. இதில் ஜெயம் ரவி, திரிஷா, அஞ்சலி உள்ளிட்டோர் கலந்துகொள்ளவிருக்கின்றனர். இந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு பாடல் காட்சிகளுக்காக வெளிநாடு செல்லவிருக்கின்றனர்.
இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.
ஹரிதாஸ் இயக்குனரின் படத்தில் நடிக்கும் விக்ரம் பிரபு
விக்ரம் பிரபு தற்போது ‘இது என்ன மாயம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதை இயக்குனர் விஜய் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது இறுதிக்கப்பட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ‘வாகா’ என்ற புதிய படத்தில் நடிக்க விக்ரம் பிரபு ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்குகிறார். இவர் ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘ஹரிதாஸ்’ ஆகிய படங்களை இயக்கியவர்.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று காரைக்குடியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 10 நாட்கள் அங்கு படப்பிடிப்பை நடத்தவுள்ளனர். இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.
‘வெள்ளக்காரதுரை படத்திற்கு பிறகு மீண்டும் விக்ரம் பிரபு படத்திற்கு இசையமைக்கிறார் டி.இமான். இப்படத்தை விஜய் பார்கவி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.