ஐஸ்வர்யாராய் பாதுகாப்புக்கு மாதம் ரூ.40 லட்சம் செலவு
ஐஸ்வர்யாராய் குழந்தை பெற்ற பிறகு ஐந்து ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் இருந்தார். தற்போது இந்தி பட அதிபர் சஞ்சய்குப்தா தயாரிக்கும் படம் மூலம் மீண்டும் சினிமாவில் மறுபிரவேசம் எடுத்துள்ளார். இந்த படத்தில் ஐஸ்வர்யாராயுடன் இர்பான் கான், ஷபனா ஆஸ்மி போன்றோரும் நடிக்கின்றனர்.
ஐஸ்வர்யாராய் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிப்பதால் அவரை காண ரசிகர்கள் கூட்டம் கூட்டமாய் திரள்கிறார்கள். படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் ஐஸ்வர்யாவை காண முண்டியடிக்கின்றனர். அவரிடம் தொட்டு பேசவும் விரும்புகின்றனர்.
இதையடுத்து ஐஸ்வர்யா ராய்க்கு பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அடிதடி தெரிந்த 12 பாதுகாவலர்கள் ஐஸ்வர்யாராய் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்கள் தினமும் காலையில் ஐஸ்வர்யாராயை வீட்டில் இருந்து அழைத்து வருகிறார்கள் படப்பிடிப்பு முடிந்ததும் வீட்டில் விட்டு விடுகின்றனர். ரசிகர்கள் யாரையும் ஐஸ்வர்யாராய் பக்கத்தில் இவர்கள் நெருங்கவிடுவது இல்லை.
இந்த 12 பாதுகாவலர்களுக்கும் சம்பளம் சாப்பாட்டு செலவுகள் பெட்ரோல் தங்கும் இட வசதி என மாதம் ரூ.40 லட்சம் செலவு ஆகிறதாம். இந்த செலவு முழுவதையும் தயாரிப்பாளர் தலையிலேயே கட்டி விடுகிறாராம். பாதுகாவலர்களுக்கு ஆகும் செலவு ஐஸ்வர்யாராயின் சம்பளத்தை மிஞ்சும் என்கின்றனர்.
இது தவிர மகள் ஆரத்யாவையும் படப்பிடிப்புக்கு அவ்வப்போது அழைத்து வருகிறார். மகள் விளையாடுவதற்காக தயாரிப்பாளர் செலவில் தனி கேரவனும் நிறுத்தப்பட்டு உள்ளது.
மீண்டும் நூறாவது நாள் படத்தை உருவாக்கும் மணிவண்ணனின் மகன்
சத்யராஜ் நடிப்பில் 1984-ம் வருடம் வெளியான சூப்பர் ஹிட் படம் நூறாவது நாள். இப்படத்தை மணிவண்ணன் இயக்கியிருந்தார்.
இப்படத்தில் சத்யராஜ் மொட்டை அடித்து வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருடன் விஜயகாந்த், நளினி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இதில் சத்யராஜின் வில்லன் தோற்றம் அதிகம் பேசப்பட்டது.
தற்போது இப்படத்தை புது வடிவில் இயக்கவுள்ளார் மணிவண்ணனின் மகன் ரகு மணிவண்ணன். இப்படத்தை எ.டி.எம். புரொடக்ஷன் தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மட்டும் வெளியிட்டுள்ளனர். மேலும் இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய முழு விவரத்தை விரைவில் வெளியிடவுள்ளனர்.
விஜயகாந்தை இனி கிண்டல் செய்தால்ஸ கமிஷனரிடம் புகார்
இணையத்தில் புழங்குகிறவர்களுக்கு எளிய இலக்காக இருப்பவர் விஜயகாந்த். அவரது படத்தைப் போட்டு கிண்டல் கேலி என்று வெளுத்து வாங்குகிறார்கள்.
இந்த கிண்டல் பேர்வழிகளுக்கு தோதாக விஜயகாந்தின் பேச்சும், நடத்தையும், பேசுகிற விதமும் இருப்பது வேறு விஷயம்.
இந்த கேலியும் கிண்டலும் விஜயகாந்தைவிட அவரது கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் ரொம்வே காயப்படுத்துகிறது. அவர்களின் வேண்டுகோளின் படி போலீஸ் கமிஷனர் ஜார்ஜிடம் புகார் தரப்பட்டிருக்கிறது.
தேமுதிக சார்பில் தரப்பட்டிருக்கும் அந்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:-
எங்கள் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களை உண்மைக்கு புறம்பாகவும், சமூகத்தில் அவரது நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையிலும் கேலிச்சித்திரங்கள், படங்கள், துணுக்குகண், தரக்குறைவான விமர்சனங்கள் போன்றவை முகநூலிலும், வாட்ஸ் அப்பிலும், ட்விட்டர் டெலிகிராம் ஆகியவற்றில் வெளியிடுகிறவர்கள் மீது தகவல் தொடர்பு சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டம் மூலம் குற்ற வழக்குகள் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுத்து தண்டிக்குமாறு கேட்டுக் கொள்கிறேnம்.