சினிமா செய்தித் துளிகள் கத்ரீனாவின் உண்மை முகம் : அதிர்ச்சியில் மக்கள்
12 Feb,2015
ஃபைட் பண்ணுவது எப்படி? தமன்னாவுக்கு பிரபாஸ் அட்வைஸ்
தமன்னா சினிமாவுக்கு வந்து 10 வருடங்கள் ஆகிவிட்டது. இதுபற்றி அவர் கூறியதாவது:சினிமாவுக்கு நேற்று வந்தது மாதிரி இருக்கிறது. அதற்குள் இத்தனை வருடங்கள் ஓடிவிட்டன.
பத்து வருடங்களில் தெலுங்கில் ஹேப்பிடேஸ், தமிழில் பையா, கல்லூரி படங்கள் எனக்கு பெரிய திருப்புமுனையை தந்தவை. இப்போது ‘பாஹுபாலி’ படத்தில் நடிக்கிறேன். இதில் வாள் சண்டை போட்டிருக்கிறேன். முதலில் பயமாக இருந்தது.
ஹீரோ பிரபாஸ், ‘உங்களுக்கு நடனம் ஆட தெரிந்தால் நீங்கள் நிச்சயம் நன்றாக சண்டை போடலாம்’ என்றார். அதன்படியே செய்தேன். நன்றாக வந்திருக்கிறது.
இவர் இப்படித்தான்ஸ எல்லாத்தையும் வீடியோ எடுப்பாங்க
கிம் கர்தாஷியன் தெரியாமல் இருக்க மாட்டீர்கள். திருமணமாகி இரண்டு குழந்தைக்கு அம்மா ஆன பின்பும் இந்த ஆயா போடும் ஆட்டம் அதிகம் தான்.
சமீபகாலமாக நிர்வாண போஸ் கொடுத்து பரபரப்பாக பேசப்பட்டு வரும் கிம்மிடம். பிரபல பத்திரிக்கை ஒன்று வித்தியாசமான கேள்வி கேட்டுள்ளது. அதாவது, ’நீங்களும் உங்கள் கணவரும் உங்கள் அந்தரங்க நேரத்தில் வீடியோ எடுத்துக் கொள்கின்றீர்களாமே ??’ என்பதுதான் அது.
அதற்கு கிம், ‘எங்களின் பர்சனல் விஷயங்கள் குறித்து நான் பேச விரும்பவில்லை’ என்று மழுப்பலாக பதிலளித்தது. ஒரு நெருடலாகவே இருக்கின்றது.
’கேள்வி பட்ட விஷயம் உண்மையாக இருக்குமோ’ என்று தற்போது அந்த வீடியோவுக்காக இணையத்தை அலசி வருகின்றனர் பல விஷமிகள்.
காதலர் தினத்தில் கோடிகளை அள்ளும் தமன்னா ,சானியா
தமிழ், மற்றும் இந்தி மொழிகளில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ‘நீங்களும் வெல்லலாம் கோடீஸ்வரர்’ நிகழ்ச்சி மிகவும் பிரபலம் தொடர்ந்து போல, தற்போது “மீலோ எவரு கோடீஸ்வருடு’ என்ற தெலுங்கு நிகழ்ச்சி ஒன்று தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியின் சமீபத்தில் அனேகன் படக்குழுவினர் கலந்து கொண்டதாக வந்த செய்தியை அடுத்து தற்போது பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா மற்றும் நடிகை தமன்னா ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இவர்களுடன் நடிகர் ராம்சரண் தேஜாவும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார்.
காதலர் தினத்தன்று ஒளிபரப்பாக உள்ள சிறப்பு கோடீஸ்வரர் நிகழ்ச்சியில்தான் இந்த மூவரும் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. திரைத்துரை மற்றும் விளையாட்டு துறையில் பல வெற்றிகளை பெற்ற இவர்கள் இந்த நிகழ்ச்சியின் மூலம் கோடிகளை குவிப்பார்களா? என்பதை காதலர் தினத்தில் அறிந்து கொள்ளலாம்.
இந்தியில் அமிதாப்பச்சன், தமிழில் சூர்யா, பிரகாஷ்ராஜ் ஆகியோர்களை தொடர்ந்து தற்போது நாகார்ஜூனா தெலுங்கில் இந்த நிகழ்ச்சியை தனக்கே உரிய பாணியில் நகைச்சுவையுடன் நடத்தி வருகிறார். நாகார்ஜுனன் கேட்கும் கோடி ரூபாய் கேள்விகளுக்கு தமன்னாவும் சானியா மிர்சாவும் கூறப்போகும் பதிலை கேட்க அனைவரும் பெரும் ஆவலுடன் காதலர் தினத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
காதலிக்க நேரமில்லை: விரக்தியில் தமன்னா
கதாநாயகிகளின் காதல் பற்றி கிசுகிசுக்கள் வருகின்றன. ஆனால் தமன்னா மட்டும் இதுபோன்ற எந்த கிசுகிசுவிலும் சிக்கவில்லை. சக நடிகர்கள் மீது காதல் வயப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வரவில்லை.
இதுகுறித்து தமன்னாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–
காதலிப்பதற்கு எனக்கு நேரமே இல்லை. மற்றவர்கள் பற்றி எனக்கு தெரியாது. ஒரு நடிகை என்ற முறையில் எனக்கு சினிமாவுக்கு சம்மந்தம் இல்லாத வெளி ஆட்களை சந்திப்பதற்கு நேரமே இல்லை. திரையுலகில் என்னை சுற்றி எப்போதும் சினிமா சம்மந்தப்பட்ட ஆட்கள் இருக்கிறார்கள். சினிமாவை பற்றியே எப்போதும் சிந்திக்கவும் பேசவும் முடிகிறது.
சினிமா என்னை நிறைய மாற்றி உள்ளது. இது எனக்கு புதிய அனுபவமாக இருக்கிறது. பிரபலமாக இருப்பது கஷ்டமானது. ஆனாலும் என்னைப் பற்றி பெரிய புகார் எதுவும் இதுவரை வந்தது இல்லை.
இவ்வாறு தமன்னா கூறினார்.
என்னது பாவனாவிற்கு 9 வயதில் பையனா? அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள்
தலைப்பை படித்ததும் பாவனாவிற்கு 9 வயதில் பையனா என்று கேள்வி கேட்க ஆரம்பித்துவிடாதீர்கள்.. இது படத்தில்.. நடிகை பாவனா எங்கு இருக்கிறார், என்ன செய்துக்கொண்டிருக்கிறார் என்று அப்போ அப்போ ஏதாவது ஒரு செய்தி வந்து எட்டிபார்க்கும்.
அப்படிதான் தற்போது ஒரு செய்தி வந்திருக்கிறது. சித்திரம் பேசுதடி படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான பாவனா அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்தாலும் எந்த படமும் அவருக்கு வெற்றிப்படமாக அமையவில்லை. இதனால் தமிழில் அவருக்கு வாய்ப்புகள் குறைய தொடங்கியது. ஆனால் மலையாளத்தில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
கடந்த 2௦13ல் பாவனா நடித்த ‘ஹனி பீ’ படம் 3 கோடியில் உருவாகி, 12 கோடியைத்தாண்டி வசூலித்தது. அதேபோல் போன வருடம் வெளியான ‘ஆங்ரி பேபீஸ் இன் லவ்’ படம் வெற்றிகரமாக ஐம்பது நாட்களை தொட்டது. இதனால் மலையாளத்தில் ஒரு நல்ல இடத்தை பிடித்துவிட்டார் பாவனா. தற்போது ‘ஸ்வப்னத்தேக்கால் சுந்தரம்’ என்ற படத்தில் நடித்து வரும் பாவனா ஒன்பது வயது பையனுக்கும் அம்மாவாக நடிக்கிறாராம். பொதுவாக இளம் நடிகைகள் அம்மாவாக நடிக்க யோசிப்பார்கள். அப்படி மீறியும் நடிப்பவர்கள் ஒரு சிலர் மட்டுமே. அதில் பாவனாவும் ஒருவர்.
கிருஷ்ணா பூஜப்புரா இயக்கும் இந்த படத்தின் கதை என்னவென்றால்,தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு நகரத்தில் அடியெடுத்துவைக்கும் கிராமத்துப்பெண் ஒருத்தி, ஆரம்ப காலகட்டத்தில் திருமண பந்தத்தில் சந்திக்கும் பிரச்சனைகளும், பின்னர் ஒரு குடும்பத்தலைவியாக மாறி எப்படி வாழ்க்கையை எதிர்கொள்கிறார் என்பதும் தான் மையக்கதை..
இந்தப்படத்தில் கிராமத்துப்பெண்ணாக நடித்திருக்கிறார் பாவனா.. அதுமட்டுமல்ல ஒன்பது வயது பையனுக்கு அம்மாவாகவும் நடித்திருக்கிறார். ஹீரோ வேறு யாருமல்ல, அவருடன் ஏற்கனவே ‘கிழக்கு கடற்கரை சாலை’ படத்தில் இணைந்து நடித்த நம்ம ஸ்ரீகாந்த் தான்.. இது மலையாளத்தில் இவர் நடிக்கும் நான்காவது படம்.
சமந்தா ’ஜிம்’ல என்னம்மா ஒர்கவுட் பண்றாங்க பாருங்க
பொதுவாக நடிகர்கள் தான் தன் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளவும், அழகாக வைத்துகொள்ளவும் ஜிம்மிற்கு செல்லுவார்கள். ஆனால் இப்போதெல்லாம் நடிகைகளே ஜிம்மிற்கு செல்ல ஆரம்பித்துவிட்டனர்.
அந்தகாலத்து நடிகைகள் எல்லாம் எப்படி இருந்தாலும் சரி நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்தார்கள். அதை ரசிகர்களும் ரசித்தார்கள். ஆனால் தற்போது இருக்கும் நடிகைகள் எல்லாம் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்பதாலும், ரசிகர்கள் தன் அழகை பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காகவும் ஜிம்மிற்கு சென்று உடலை கட்டுக்கோப்பாக வைத்துகொள்ள எண்ணுகின்றனர்.
அதில் ஒருவர் தான் நடிகை சமந்தா.. தமிழிலும், தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா ஜிம்மில் ஒர்கவுட் செய்யும்படி உள்ள ஒரு வீடியோ இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.
கத்ரீனாவின் உண்மை முகம் : அதிர்ச்சியில் மக்கள்
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் கத்ரீனா கைஃப். பாலிவுட்டின் செக்ஸியான நடிகை என்று வர்ணிக்கப்படும் இவர் மாஸ் ஹீரோயினாக இருந்தாலும் எந்த விதமான அலட்டலும் இல்லாதவராம்.
இவரிடம் சென்று யாராவது நீங்க பெரிய ஸ்டார் என்று சொன்னால் நான் அப்படிலாம் இல்லை, மக்களுக்கு பிடிச்ச மாறி இருக்கனும்னு நினைச்சேன் அவ்வளவுதான் என்று கூறுகிறார்.
பொதுவாக நடிகைகள் என்றால் ஒரு படத்தில் நடித்தாலே போதும் சொல்லத்தேவையில்.. அதிலும் பாலிவுட் ஹீரோயின் என்றால் சொல்லவா வேண்டும். ஆனால் அவர்களில் இருந்து முற்றிலும் மாறுப்பட்டிருக்கிறாராம் கத்ரீனாஸ.
இது குறித்து அவர் கூறுகையில், என்னை எல்லோரும் பெரிய ஸ்டார் அந்தஸ்தில் வைத்துப் பேசுறாங்க. நான் அப்படியெல்லாம் திட்டமிட்டு வரலை. மக்களுக்குப் பிடித்த, புகழ்பெற்ற ஒரு பெண்ணாக இருக்கணும்னு நினைச்சேன். நான் எந்த அளவுக்கு புகழ் பெற்றிருக்கேன்னு எனக்குத் தெரியல. ஆனா ஹேமாமாலினி மாதிரி புகழ் பெறணும்கிற ஆசை இருக்கிறது என்று அடக்கத்துடன் சொல்கிறார்.
நிஜத்தில் காதலும், கல்யாண மூடுமாக இருக்கும் கத்ரீனா பிற ஹீரோக்களுடன் நெருங்கி நடிக்கவும் தயங்குவதில்லை. நிஜ வாழ்க்கையோடு அதை சம்பந்தப்படுத்தாம, இரு கேரக்டர்களின் ஈர்ப்பு கெமிஸ்ட்ரியாகத்தான் அதைப்பார்கணும் என்றும் சொல்கிறார்.
அஜித்துக்கு வலை விரிக்கும் பிந்து மாதவி
சேரன் இயக்கிய ‘பொக்கிஷம்’ படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த பிந்துமாதவி, ‘வெப்பம்’ படத்தில் இருநாயகிகளில் ஒருவராக நடித்து கதாநாயகியாக உருவெடுத்தார். பின்னர் ‘கழுகு’ படத்தின் மூலம் இவரது நடிப்பு பரவலாக பேசப்பட்டது.
தொடந்து ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘சட்டம் ஒரு இருட்டறை’, ‘தேசிங்கு ராஜா’, ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் ஆகிய படங்கள் இவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது.
இந்நிலையில், தற்போது ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகர்களாக நகுல், ‘அட்டக்கத்தி’ தினேஷ் ஆகியோரும் நடித்து வருகிறார்கள். புதுமுக இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கி வருகிறார். வருகிற பிப்ரவரி 20-ந் தேதி இப்படத்தை வெளியிடவிருக்கின்றனர்.
இந்நிலையில் இப்படக்குழுவினர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து படம் குறித்த சுவாரஸ்யங்களை பகிர்ந்து கொண்டனர். அப்போது பிந்து மாதவி தன்னுடைய ஆசைகளை மாலைமலர்.காம் வாசகர்களுக்காக பிரத்யேகமாக தெரிவித்தார்.
அவர் கூறும்போது,
இந்த படத்தில் நடித்தது எனக்கு நல்ல அனுபவமாக இருந்தது. எனக்கு அம்மன் கெட்டப்பில் நடிக்கவேண்டும் என்று நீண்டநாளாக ஆசை. சினிமாவை விட்டு விலகுவதற்குள் ஒரு படத்திலாவது அஜித்துக்கு ஜோடியாக நடித்துவிட வேண்டும். எனக்கு அஜித் என்றால் ரொம்பவும் பிடிக்கும்.
தமிழ் சினிமா நடிகர்களில் மிகவும் அழகானவர் அஜித்தான் என்று கூறினார். மேலும் அவர் கூறும்போது, 20 வயதிற்குள் யாரும் ஹீரோயினாக தமிழ் சினிமாவிற்குள் நுழையக்கூடாது. இந்த வயதுக்குள் என்னுடைய உறவினர்கள், நண்பர்கள் யாரும் சினிமாவில் நுழைய விருப்பம் தெரிவித்தால் அவர்களை வரவேற்க மாட்டேன். எனக்கு யாருடனும் இப்போது காதல் இல்லை. நான் சிங்கிளாகத்தான் இருக்கிறேன் என்று கூறினார்.