வாட்ஸ்ஆப்பில் தீயா பரவிய கார்த்தி ஹீரோயினின் நிர்வாண போட்டோ
11 Feb,2015
: வாட்ஸ்ஆப்பில் தீயாக பரவியுள்ள நிர்வாண போட்டோக்களில் இருப்பது தான் அல்ல என நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.டோணி படம் மூலம் கோலிவுட் வந்தவர் நடிகை ராதிகா ஆப்தே. ஆல் இன் ஆல் அழகுராஜாவில் கார்த்தி ஜோடியாக நடித்திருந்தார். இங்கிலாந்தைச் சேர்ந்த இசைக் கலைஞரை திருமணம் செய்து கொண்ட அவர் தற்போது இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்துள்ள 3 இந்தி படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.இந்நிலையில் வாட்ஸ்ஆப்பில் ராதிகாவின் நிர்வாண போட்டோக்கள் தீயாக பரவியுள்ளது. இதை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த நிர்வாண போட்டோக்களில் இருப்பது தான் அல்ல என்று ராதிகா தெரிவித்துள்ளார்.இது குறித்து ராதிகா ட்விட்டரில் கூறியிருப்பதாவது, யாராவது ஒருவரை பிடித்து நிர்வாண போஸ் கொடுக்க வைத்து அதை நான் என்று கூற விரும்பினால் முதலில் அந்த பெண் பார்க்க என்னை போன்று இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.