கத்தி’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்து விட்ட சென்னைப் பெண்ணான சமந்தா, ஒரு உள்ளாடை விளம்பரத்தில் நடிக்கப் போவதாக சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியானது.
ஆனால், அப்படிப்பட்ட விளம்பரம் எதிலும் நடிக்கவில்லை என சமந்தா அந்தச் செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே, சமந்தா, சித்தார்த் இருவரது காதலைப் பற்றியும், அவர்களின் பிரிவைப் பற்றியும் பரவலான செய்திகள் கிசுகிசுக்களும், செய்திகளும் வெளிவந்தன.
தற்போது, சமந்தாவைப் பற்றிய மேலும் ஒரு செய்தியாக வெளிவந்த இந்தச் செய்திக்கு சமந்தா மறுப்பு தெரிவித்துள்ளார்.
தமிழில் இந்த ஆண்டு அதிகப் படங்களில் சமந்தா நடிக்கப் போகிறார் என்பது கூடுதல் தகவல்.
ரஜினிகாந்த் – மகேஷ்பாபு இணைகிறார்களாஸ?
லிங்கா’ படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் படம் என்ன என்பது சஸ்பென்சாகவே உள்ளது. அவர் மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் ‘எந்திரன் 2’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கப் போவதாக ஏற்கெனவே பல செய்திகள் வெளிவந்தன.
தற்போது தெலுங்கில் மகேஷ் பாபு நடிக்கப் போகும் ஒரு புதிய படத்தில் ரஜினிகாந்த் நடிக்கப் போகிறார் என்ற செய்திகள் பரவி வருகின்றன.
மகேஷ்பாபு, வெங்டேஷ், சமந்தா, அஞ்சலி நடித்து தெலுங்கில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ‘சீதம்மா வாகிட்லோ சிறுமல்லி சேட்டு’ படத்தை இயக்கிய ஸ்ரீகாந்த் அடலா தான் இந்தப் புதிய படத்தை இயக்க உள்ளார். ‘பிரம்மமோற்சவம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார் என தெலுங்கு மீடியாக்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
ரஜினிகாந்த் அடுத்து எந்தப் படத்தில் நடிக்கப் போகிறேன் என்பதை அவரே அறிவித்தால்தான் உண்டு. ‘லிங்கா’ பிரச்சனையை ஒரு வழியாக முடிவுக்குக் கொண்டு வந்த பிறகுதான் அவர் அடுத்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என்கிறார்கள்.
‘எலி’யாக வருகிறார் வடிவேலுஸ
‘வந்துட்டான்யாஸவந்துட்டான்யாஸ’ என்ற வரவேற்கும் வார்த்தையையே வித்தியாசமாக ஒலிக்க வைத்தவர் வடிவேலு. இன்றைக்கும் காமெடி சேனல்கள் மூலம் மார்க்கெட்டில் இருந்து கொண்டிருக்கிறார்.
இடைவெளிவிட்டு ‘தெனாலிராமன்’ மூலம் திரையுலக மார்கெட்டையும் கைப்பற்றி விடலாம் என நினைத்தார். எங்களுக்கு இந்த வடிவேலு வேணாம், ‘அந்த’ வடிவேலுதான் வேண்டுமென ‘கைப்புள்ள’யை கைவிட்டார்கள் ரசிகர்கள்.
இருந்தாலும் மீண்டும் ‘தெனாலிராமன்’ படத்தை இயக்கிய யுவராஜ் தயாளன், இந்த ‘எலி’யில் அவர் யுவராஜ், மூலம் களம் இறங்குகிறார்.
படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகிவிட்டது, இன்று படத்தின் முதல் பார்வையை வெளியிட்டார்கள். விரைவில் எலியாக, வந்து ‘புலி’ப் பாய்ச்சல் பாய்வாரா என்று பார்ப்போம்
ரஜினிகாந்த் – மகேஷ்பாபு இணைகிறார்களாஸ?
லிங்கா’ படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் படம் என்ன என்பது சஸ்பென்சாகவே உள்ளது. அவர் மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் ‘எந்திரன் 2’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கப் போவதாக ஏற்கெனவே பல செய்திகள் வெளிவந்தன.
தற்போது தெலுங்கில் மகேஷ் பாபு நடிக்கப் போகும் ஒரு புதிய படத்தில் ரஜினிகாந்த் நடிக்கப் போகிறார் என்ற செய்திகள் பரவி வருகின்றன.
மகேஷ்பாபு, வெங்டேஷ், சமந்தா, அஞ்சலி நடித்து தெலுங்கில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ‘சீதம்மா வாகிட்லோ சிறுமல்லி சேட்டு’ படத்தை இயக்கிய ஸ்ரீகாந்த் அடலா தான் இந்தப் புதிய படத்தை இயக்க உள்ளார். ‘பிரம்மமோற்சவம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார் என தெலுங்கு மீடியாக்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
ரஜினிகாந்த் அடுத்து எந்தப் படத்தில் நடிக்கப் போகிறேன் என்பதை அவரே அறிவித்தால்தான் உண்டு. ‘லிங்கா’ பிரச்சனையை ஒரு வழியாக முடிவுக்குக் கொண்டு வந்த பிறகுதான் அவர் அடுத்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என்கிறார்கள்