மார்ச்சில் வருகிறது ‘வாலு’ஸ
நிக் ஆர்ட்ஸ் தயாரிப்பில் விஜய் சந்தர் இயக்கத்தில் தமன் இசையமைப்பில் சிம்பு, ஹன்சிகா, சந்தானம் மற்றும் பலர் நடித்துள்ள ‘வாலு’ படம் மார்ச் மாதம் 27ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘வாலு’ படத்தின் புதிய டீசர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. “நயன்தாராவும் வேணாம்ஸஅந்த ஆன்ட்ரியாவும் வேணாம்ஸ” என்ற பாடலின் டீசர் அது.
டீசரின் முடிவில் மார்ச் 27ம் தேதி படம் வெளியாகும் என அறிவித்துள்ளார்கள். இதற்கு முன் டிசம்பர் 24ம் தேதியன்று படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அடுத்த சில நாட்களில் பிப்ரவரி 3 வெளியாகும் என்று தேதியை மாற்றி வைத்துள்ளார்கள்.
முன்னர் அறிவித்தபடி இன்று வெளியாகாமல் தற்போது ‘மார்ச் 27ம்’ தேதி வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள்.
மார்ச் மாதத்திலாவது மிடுக்குடன் வந்து விடுமா ‘வாலு’ என்பது அப்போதுதான் தெரிய வரும்ஸ
‘புறம்போக்கு’ டிரைலர் இந்த வாரம்ஸ
purampokku trailer newsயு டிவி தயாரிப்பில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் வர்ஷன் இசையமைப்பில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா நாயர் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘புறம்போக்கு’ படத்தின் டிரைலர் இந்த வாரம் வெளியிடப்பட உள்ளது.
தமிழ்த் திரையுலகில் அபூர்வமாகக் காணப்படும் ‘மல்டி ஸ்டார்’ படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு குலுமனாலியில் ஆரம்பமாகி தொடர்ந்து ஹிமாச்சல் பிரதேசம், ராஜஸ்தான், சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது.
‘பேராண்மை’ படத்திற்குப் பிறகு ஜனநாதன் இயக்கியிருக்கும் இந்தப் படம் இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாகவும் அமைந்துள்ளது.
கோடை விடுமுறையில் படம் திரைக்கு வருகிறது.
இரு ஏமாற்றங்களுக்குப் பிறகு கௌதம் மேனன்ஸ
கௌதம் மேனன், ‘மின்னலே’ படத்தின் மூலம் ஹாரிஸ் ஜெயராஜை அறிமுகப்படுத்தி சூப்பர் ஹிட் பாடல்ளுடன் ரசிகர்களை வசீகரப்படுத்தியவர்.
தொடர்ந்து “காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம், விண்ணைத் தாண்டி வருவாயா” என தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க சில படங்களைக் கொடுத்தவர்.
அடுத்து “நடு நிசி நாய்கள், நீதானே என் பொன்வசந்தம்” ஆகிய படங்கள் அவருடைய பெரையக் கொஞ்சம் உரசிப் பார்த்தன.
அந்த இரண்டு படங்களின் தோல்விகளுக்குப் பிறகு இரண்டு ஹீரோக்களால் கௌதம் மேனனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஒன்று விஜய் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட ‘யோஹன் அத்தியாயம் ஒன்று’, மற்றொன்று சூர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்ட ‘துருவ நட்சத்திரம்’.
விஜய் படம் விளம்பரத்துடன் நின்று போனது, சூர்யா படம் பூஜை வரை வந்து நின்று போனது. இருந்தாலும் அந்த இரண்டு ஏமாற்றங்களால் அவர் துவண்டு விடாமல், அஜித்தால் ‘என்னை அறிந்தால்’ படம் மூலம் எழுந்து வந்திருக்கிறார்.
தோல்விக்குப் பிறகு கிடைக்கப் போகும் வெற்றியை ருசிப்பதில்தான் ஆனந்தம் அதிகம்ஸ.அது கௌதம் மேனனுக்குக் கிடைக்கட்டும்.
‘உத்தம வில்லன்’ மார்ச் 1 இசை வெளியீடுஸ
ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் ஜிப்ரான் இசையமைப்பில் கமல்ஹாசன், ஆன்ட்ரியா, பூஜா குமார் மற்றும் பலர் நடித்துள்ள ‘உத்தம வில்லன்’ படத்தின் இசை மார்ச் 1ம் தேதி வெளியிடப்படுகிறது.
கமல்ஹாசன் தற்போது இந்தப் படத்துடன் சேர்த்து ‘பாபநாசம்’ படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். ‘விஸ்வரூபம் 2’ படத்திற்காக இன்னும் சில காட்சிகள் படமாக்கப்பட வேண்டியுள்ளதாம்.
அதனால் முதலில் ‘உத்தம வில்லன்’ படம்தான் திரைக்கு வர உள்ளது. அநேகமாக ஏப்ரல் 2ம் தேதி படம் திரைக்கு வரும் என்று சொல்லப்படுகிறது. மே மாதம் அல்லது ஜுன் மாதத்தில் ‘பாபநாசம்’ படம் திரைக்கு வரலாம்.
ரமேஷ் அரவிந்த் தமிழில் இயக்குனராக அறிமுகமாகும் ‘உத்தம வில்லன்’ படம் வித்தியாசமான படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘என்னை அறிந்தால்’ – 1000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீஸ்ஸ
அஜித், அனுஷ்கா, த்ரிஷா நடித்துள்ள ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் பிப்ரவரி 5ம் தேதியன்று 1000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
தமிழகம் முழுவதும் சுமார் 500 திரையரங்குகளிலும், கேரளாவில் 200 திரையரங்குகளிலும் அமரிக்காவில் 100 திரையரங்குகளிலும், கர்நாடகா, மற்றும் இதர நாடுகளில் 200 க்கும் மேற்பட்ட திரையரங்குகிளலும் வெளியகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் மட்டும் ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் 40க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது.
அஜித்தின் முந்தைய படங்களான ‘வீரம், ஆரம்பம்’ ஆகிய படங்களை விட இந்தப் படத்திற்கு அதிக வரவேற்பும், எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது.
தற்போதைக்கு 1000 திரையரங்குகள் என்று சொல்லப்பட்டாலும், மேலும் 100 அல்லது 200 திரையரங்குகள் அதிகமாகவும் வாய்ப்பிருக்கிறது.
கௌதம் மேனன் – அஜித் முதன் முறையாக இணையும் படம் என்பது படத்திற்கு பிளஸ் பாயின்டாக அமைந்துள்ளது.
‘பெங்களூர் டேய்ஸ்’ ரீமேக், சித்தார்த் – சமந்தா விலகல்ஸ
மலையாளத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படமான ‘பெங்களூர் டேய்ஸ’ படத்தின் ரீமேக் பற்றி கடந்த சில மாதங்களாகவே இவர் நடிக்கிறார், அவர் நடிக்கிறார் என்ற ரீதியில் பல செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த செய்தியும் வெளியாகவில்லை.
இந்தப் படத்தில் ஆர்யா, சித்தார்த், சமந்தா ஆகியோர் நடிப்பதாகச் சொன்னார்கள். இப்போது, சித்தார்த், சமந்தா இருவருமே இந்த ரீமேக்கில் நடிக்கவில்லை என அறிவித்து விட்டார்கள். தமிழ், தெலுங்கில் உருவாகப் போகும் இந்தப் படத்தில் நடிக்க இரு மொழிகளுக்கும் பொதுவாக நட்சத்திரங்களைத் தேர்வு செய்து நடிக்க வைக்கும் திட்டத்தை வைத்திருந்தார்கள்.
தெலுங்கில் ‘பொம்மரிலு’ படத்தை இயக்கிய பாஸ்கர்தான் இப்படத்தை இயக்கப் போகிறார். ஆனால், இதுவரை நட்சத்திரத் தேர்வு முடியாமலேதான் இருக்கிறது. மலையாளத்தில் பகத் பாசில், துல்கர் சல்மான், நிவின் பாலி, நஸ்ரியா நசிம், இஷா தல்வார், பார்வதி மேனன், நித்யா மேனன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இரு மொழிகளில் இப்படம் ரீமேக்காகும் போது இத்தனை நட்சத்திரங்ககளுக்கும் மாற்றாக பொருத்தமான நட்சத்திரங்களைத் தேடிப் பிடிப்பது அவ்வளவு சாதாரண விஷயமில்லை. மலையாளத்தில் எந்த ஈகோவும் பார்க்காமல் இளம் நட்சத்திரங்கள் நடிக்க ஒப்புக் கொள்வார்கள். ஆனால், தமிழ், தெலுங்கில் அவ்வளவு சீக்கிரம் சம்மதிக்க மாட்டார்கள்.
‘3 இடியட்ஸ்’ படத்தை தமிழில் ‘நண்பன்’ படமாக ஷங்கர் ரீமேக் செய்யும் போது முக்கிய மூன்று கதாபாத்திரங்களில் நடிகர்களை ஒப்பந்தம் செய்வதற்கே திணறிப் போனார். அவருக்கே அப்படி என்றால் ‘பெங்களூர் டேய்ஸ்’ தமிழில் ரீமேக்காகும் போது எவ்வளவு பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்குமோஸ?