தரணி – விமர்சனம்
திரைப்படம் என்பது நிஜ வாழ்க்கையின் கற்பனை கலந்த பிரதிபலிப்பு என்பார்கள். ஆனால், இன்று வரும் பெரும்பாலான படங்ள் கமர்ஷியல் சினிமாவாகத்தான் இருக்கின்றன. ஒரு சில படங்கள்தான் நம் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் படமாக அமைகின்றன.
இந்த தரணியை ஆள வேண்டும் என்றுதான் ஒவ்வொருவரும் நினைக்கிறார்கள். ஆனால், நாம் நினைக்கும் ஒவ்வொன்றும் நடந்து விடுகிறதா என்னஸ? எதிர்பாராமல் என்னென்னவோ நடக்கிறது. அதுதான் விதியின் விளையாட்டு. இந்த ‘தரணி’யில் இந்த விதியின் விளையாட்டை தடம் பதிக்கும் அளவிற்குக் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் குகன் சம்பந்தம்.
ஆரி, குமரவேல், கர்ணா மூவரும் நண்பர்கள். ஆரி, அப்பா நடத்தும் ஹோட்டலை அவருடன் சேர்ந்து கவனித்துக் கொள்கிறார். குமரவேல், சினிமாவில் ஜுனியர் ஆர்ட்டிஸ்ட்டாக இருக்கிறார், அவருக்கு நடிகராக ஜெயிக்க வேண்டும் என்பது லட்சியம். கர்ணா, வேலையில்லாமல் கஷ்டப்பட்டு, பின்னர் மல்டி லெவல் மார்க்கெட்டிங் கம்பெனி ஒன்றில் விற்பனைப் பிரதிநிதியாகச் சேர்கிறார்.
குமரவேலுக்கு, நடிக்க வாய்ப்புகள் அதிகம் கிடைக்காத சூழ்நிலையில் சென்னையை விட்டு சொந்த ஊருக்கே திரும்பி விடுகிறார். மகாநதி சங்கரிடம், அப்பா வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத சூழ்நிலையில், ஆரி, ஒரு சந்தர்ப்பத்தில் அப்பாவைக் கடத்தி வைத்து விட்டார் என்பதற்காக சங்கரையே அடித்துத் துவைத்து விடுகிறார். கர்ணா, வேலையில் சாதிக்க முடியாத விரக்தியில் குடி போதையில் சிக்கித் தவிக்க, நண்பன் ஒருவர் அவருக்கு ரியல் எஸ்டேட் பிசினசில் இறக்கி விடுகிறார். இதன் பின் இவர்கள் மூவருடைய வாழ்க்கையும் எப்படி தடம் மாறுகின்றன என்பதுதான் படத்தின் கதை.
அப்பாவித் தனமான தோற்றத்தில் இருக்கும் ஆரி, ஆச்சரியப்பட வைத்தாலும், அடுத்து ரவுடியான பின்னும் அமர்க்களப்படுத்துகிறார்.
குடும்பத் தொழிலான கூத்து கட்டுலை விட்டு சினிமாவிற்கு நடிக்கப் போய் திரும்பி வந்த குமரவேலுவை, அவருடைய தாய் மாமன் உனக்கு கூத்தைப் பற்றி என்ன தெரியும் என்ற விதத்தில் கேட்க, வெகுண்டெழுந்து ஒரு ‘கட்டை’ கட்டாமலே ஒரு அவதாரத்தைக் காட்டும் குமரவேல் புல்லரிக்க வைத்து விடுகிறார். ரியல் எஸ்டேட் பிசினஸில் வெள்ளையும், சள்ளையுமாக தோற்றமளித்தாலும் ‘ஃபிராட்’ செய்வதில் மொத்த உருவமாக மாறிவிடுகிறார் கர்ணா.
படத்தில் நாயகியாக சான்ட்ரா. முறைமாமன் குமரவேல் மீது ஆசைப்பட்டாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாத கிராமத்துப் பெண். கிராமங்களில் நமக்கே ஆச்சரியமாக இருப்பார்கள் இப்படி செக்கச் செவந்த சில பெண்கள். நைஸ் வில்லேஜ் கேர்ள்ஸ.
புரிசை கண்ணப்ப சம்பந்தம் நாயகி சான்ட்ராவின் அப்பாவாக நடித்திருக்கிறார், யதார்த்த நடிப்பு.
படத்தை சினிமாத்தனமில்லாத விதத்தில் எடுத்திருக்கிறார்கள், அதுதான் படத்திற்கு பலம், பலவீனமும் அதுவே.
இசை – விமர்சனம்
எஸ்.ஜே.சூர்யா இயக்கி, இசையமைத்து, நாயகனாக நடித்துள்ள படம். சுமார் 10 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு இயக்கி, நடித்திருந்தாலும், இன்னும் அதே ரசனையுடனும், நேர்த்தியுடனும் படத்தைக் கொடுத்திருக்கிறார்.
இந்தப் படத்தின் கதை இரண்டு மிகப் பெரும் இசையமைப்பாளர்களைப் பற்றிய கற்பனைக் கதைதான். வாழ்க்கையில் சாதித்த எல்லோருக்குமே ஒரு சந்தர்ப்பத்தில் வீழ்ச்சி என்பது வரும். அந்த வீழ்ச்சியை அவர்கள் எப்படி எதிர் கொள்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.
இப்போதிருக்கும் சில இசையமைப்பாளர்களை இந்தப் படத்துடன் ஒப்பிட்டுப் பேசுவதும் கூட தேவையில்லாததுதான் என்று தோன்றுகிறது.
நமக்குத் தெரிந்த வரையில் தமிழ்த் திரையுலக இசையுலகில் எம்.எஸ். விஸ்வநாதனுக்குப் பிறகு இளையராஜா, இளையராஜாவிற்குப் பிறகு ஏ.ஆர்.ரகுமான், ரகுமானுக்குப் பிறகு யார் வேண்டுமானாலும் வரலாம். தலைமுறை இடைவெளியிலும், அறிவியல் வளர்ச்சியுடனும் நாம் இணையா விட்டால் நமது கிரியேட்டிவிட்டி தேங்கிப் போய்விடும். இதை படத்திலேயே சில காட்சிகளில் தெளிவாகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
ஒரு காலத்தில் ரெக்கார்ட் பிளேயரில் பாட்டு கேட்பார்கள். அதை வசதியுள்ளவர்களால் மட்டுமே செய்ய முடிந்தது. அதன் பின் டேப் ரிக்கார்டர் வந்தது, நடுத்தர மக்களும் வாங்க ஆரம்பித்தார்கள். இப்போது சிடி பிளேயர்கள் வந்துவிட்டது, மொபைல் போனில் பாட்டு கேட்கும் வசதி வந்துவிட்டது. அதனால், ஏழை, எளிய மக்களும் அவர்களுக்குப் பிடித்தப் பாடல்களைக் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.
இதை ஏற்றுக் கொள்பவர்கள், அவரவர் தொழிலில் ஏற்படும் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். சரி, படத்தின் கதைக்கு வருவோம்.
சத்யராஜ் தமிழ்த் திரையுலகில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இசையமைப்பாளராக இருப்பவர். அவரிடம் உதவியாளராக இருப்பவர் எஸ்.ஜே.சூர்யா. ஒரு சந்தர்ப்பத்தில் திரைப்பட இயக்குனரான அழகம் பெருமாளுக்கும், இசையமைப்பாளரான சத்யராஜுக்கும் மோதல் வருகிறது. அதனால், அழகம் பெருமாள், சத்யராஜின் உதவியாளரான எஸ்.ஜே.சூர்யாவை அவருடைய படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தம் செய்து விடுகிறார். முதல் படத்திலேயே தனது திறமையை வெளிப்படுத்திய சூர்யா, முன்னணி இசையமைப்பாளராக வளர்ந்துவிடுகிறார். அதனால், சத்யராஜுக்கு படங்களே இல்லாமல், ஊரை விட்டு ஒதுங்கி, தோட்டத்தில் தனிமையில் இருக்கச் சென்று விடுகிறார். இருந்தாலும், சூர்யாவின் திறமையை அழித்து, அவரை இசையமைப்பதை விட்டே ஓட வைக்க, பல சதித் திட்டங்களைத் தீட்டுகிறார். அதனால், சூர்யா பாதிக்கப்பட்டாரா, சத்யராஜின் எண்ணம் மாறியதா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
இயக்கம், இசை, நடிப்பு என முக்கியமான மூன்றில் பயணித்தாலும் ஒவ்வொன்றிலும் தன்னுடைய தனித் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. அதிலும் படத்தின் ஆரம்பத்தில் காட்டிற்கு நடுவில், பறவைகள், பூச்சியினங்கள், இயற்கை ஒலிகள் ஆகியவற்றுடன் அவர் இசையமைக்கும் காட்சியை காட்சிப்படுத்தியிருக்கும் விதமும், அதற்கான இசையும் அழகான கற்பனையின் உச்சம். வழக்கம் போல கொஞ்சிக் குழைந்து பேசுவதிலும், நாயகி சாவித்ரியை பேசி மயக்குவதிலும் அதே பழைய சூர்யாவைப் பார்க்க முடிகிறது. ரொமான்ஸ் காட்சிகளில் நெருக்கமோ நெருக்கம். டி.ஆர். மாதிரி தள்ளி நின்று காதலிக்காமல் அதற்கு நேர்மாறாக நெருங்கி, நெருங்கி காதலிக்கிறார். ஆனாலும், மனைவிக்கு கருக்கலைப்பு நடக்கும் காட்சியில், வயிற்றுக்குள் இருக்கும் கருவிடம் கண் கலங்கி, பாச மழை பொழியும் காட்சியில் கலங்க வைத்து விடுகிறார். அப்படியும் காட்சிகளை வைத்துள்ளார், இப்படியும் காட்சிகளை வைத்துள்ளார். அவை இளைஞர்களுக்கு, இவை பெண்களுக்குஸ
அழகான, அதிலும் நடிக்கத் தெரிந்த கதாநாயகிகளை எங்கிருந்துதான் கண்டு பிடிப்பாரோ சூர்யாஸசாவித்ரிக்கு இது முதல் படமாம். நம்பவே முடியாத அளவிற்கு நடித்திருக்கிறார். ஆரம்பக் காட்சிகளில் காதலியாக, கண்ணை மட்டும் பறிக்காமல் மனதையும் சேர்த்துப் பறித்து விடுகிறார். மனைவியான பின் குடும்பக் குத்து விளக்காக மாறி விடுகிறார். கிளைமாக்சுக்கு முன்பாக, அவரா இவர் என ஆச்சரியப்படுத்தி விடுகிறார். நயன்தாரா, ஹன்சிகா, சமந்தா ஆகியோருக்கு ‘சபாஷ் சரியான போட்டி’யாக வந்து விட்டார் சாவித்ரி.
அடடாஸசத்யராஜ் கிட்ட இப்படி ஒரு வில்லத்தனத்தைப் பார்த்து எவ்வளவு நாளாச்சி. இன்னும் அதே ‘ஃபுல் ஃபார்ம்’ல இருக்காரு சத்யராஜ். நடிப்புல ஊதித் தள்ளிட்டாரு, ஆனால், படத்துல அவர் வர்ற எல்லா காட்சியிலயும் சுருட்டை ஊதித் தள்ளுவதை குறைத்திருக்கலாம். அந்த ஒரு வீட்டுக்குள்ளேயே இருந்து இப்படி ஒரு வில்லத்தனம் பண்ண முடியுமா என ஆச்சரியப்பட வைத்திருக்கிறார். தென்னிந்தியாவின் அமிதாப், கண்டிப்பாக சத்யராஜ் தான்ஸ
‘பருத்தி வீரன், சுப்பிரமணியபுரம், களவாணி’ ஆகிய ஒரு சில குறிப்பிட்ட படங்களுக்குப் பிறகு கஞ்சா கருப்பு சிறப்பாக நடித்திருக்கும் படம் இது. நக்கல் மன்னனான சத்யராஜுக்கே இவர் நக்கல் விடுகிறார்.
இயக்குனராக நடித்திருக்கும் அழகம் பெருமாள், சத்தமாக பேசித் தள்ளும் தம்பி ராமையா, நாயகியின் அப்பா ராஜா என மற்ற கதாபாத்திரங்களில் சிலர் மட்டுமே தெரிந்த முகங்கள்.
சூர்யாவின் இசையில், ‘இசை வீசிஸ’ பாடல் அடிக்கடி கேட்க வைக்கும். சௌந்தர் ராஜனின் ஒளிப்பதிவு மலைப் பிரதேசங்களிலும், மற்ற பிரதேசங்களிலும் அழகை அப்படியே அள்ளிக் கொட்டுகிறது. மலையில் அமைக்கப்பட்டுள்ள அந்த வீட்டுக்காகவே கலை இயக்குனர் மிலனை தனியாகப் பாராட்ட வேண்டும்.
சூர்யாவுக்கும், சாவித்ரிக்கும் இடையிலான மிக நெருக்கமான காட்சிகள் நெருடலாக அமைந்துள்ளது. சத்யராஜின் பழி வாங்கலில் சினிமாத்தனம் நிறையவே அமைந்துள்ளது. இவற்றைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் ‘இசை’ எஸ்.ஜே. சூர்யாவுக்கு மற்றுமொரு “வாலி, குஷி