சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்கும் சுந்தர்.சி?
விஷால் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான ‘ஆம்பள’ படத்தை சுந்தர்.சி இயக்கியிருந்தார். இப்படத்தை தொடர்ந்து ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தைப் போன்று ஒரு படத்தை இயக்கப்போவதாக ‘ஆம்பள’ படத்தின் வெற்றி விழாவில் சுந்தர்.சி கூறியிருந்தார்.
ஆனால், இப்போது சிவகார்த்திகேயனை வைத்து சுந்தர்.சி படம் இயக்கப் போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சுந்தர்.சி, மசாலா, பொழுதுபோக்கு, ஆக்ஷன், காமெடி என எந்த வகை திரைப்படங்களிலும் தனது திறமையை அழகாக வெளிப்படுத்தக்கூடியவர்.
அதேபோல், சிவகார்த்திகேயனும் காமெடியை பிரதானமாக வைத்து உருவாகும் படங்களில் நடித்து வருகிறார். இவ்விருவரும் இணைவது ரசிகர்களை ரொம்பவுமே சந்தோஷப்படுத்தும் என நம்பப்படுகிறது.
சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கத்தில் ‘ரஜினி முருகன்’ படத்தில் நடித்தது வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் முடிவடைகிறது.
சுந்தர்.சியும் தனது அடுத்தப் படத்திற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார். இவற்றை எல்லாம் முடித்துவிட்டு இருவரும் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சங்கர் படத்தில் நடிக்க ஆசைப்படும் நீதுசந்திரா
தமிழில் ‘யாவரும் நலம்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நீதுசந்திரா. இதில் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
அதன்பிறகு விஷால் நடிப்பில் வெளியான ‘தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் நடித்தார். மேலும் ‘யுத்தம் செய்’ படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடியுள்ளார்.
இவர் கடைசியாக அமீரின் ஆதி பகவான் படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து வில்லத்தனத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.
தமிழ் மொழிப்படங்களைத் தவிர கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் சங்கர் படத்தில் நடிக்க விருப்பம் இருப்பதாக கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, நான் சமீபத்தில் சங்கர் இயக்கிய ‘ஐ’ படத்தை பார்த்தேன். அவருடைய படங்கள் அனைத்தும் பாக்ஸ் ஆபீஸ் லிஸ்ட்டில் இடம் பெரும். அந்த வகையில் இப்படமும் வணிக ரீதியாக வெற்றிப்பெற்று வருகிறது.
இவருடைய படங்களை பார்த்து வியந்திருக்கிறேன். இவருடைய ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை இருக்கிறது. அவருடைய படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவது என்றாலும் அதை நான் விரும்பி ஏற்றுக்கொள்வேன் என்று கூறினார்.
இது நம்ம ஆளு டீசருக்கு கிடைத்த வரவேற்பால் உற்சாகத்தில் திளைக்கும் சிம்பு
சிம்பு தற்போது ‘இது நம்ம ஆளு’ படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். பாண்டிராஜ் இப்படத்தை இயக்கி வருகிறார். குறளரசன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
சிம்பு நடிப்பில் கடந்த மூன்று வருடங்களுக்கு எந்தப் படமும் வெளிவர வில்லை. ஆனாலும் சமீபத்தில் வெளியான ‘இது நம்ம ஆளு’ படத்தின் டீசர் வெளி வந்த சில நாட்களிலேயே பெரிய அளவில் எல்லோருடைய கவனத்தையும் ஈர்ந்து முத்திரைப் பதித்திருக்கிறது.
இளம் ரசிக ரசிகைகளின் இதய துடிப்பை துல்லியமாக கணித்து வைத்து இருக்கும் எஸ்.டி.ஆருக்கு இந்த வருடம் தொடர்ச்சியாக மூன்று படங்கள் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வருடம் அவரது திரை பயணத்தில் முக்கியமானது எனக் கருதப்படுகிறது.
தன் மனதில் பட்டதை சரி என்று பட்டென உடைத்திடும் எஸ்.டி.ஆருக்கு அந்த குணத்துக்காக கூடிடும் ரசிகர் கூட்டம் ஏராளம். அந்த வகையில் ‘இது நம்ம ஆளு’ டீசரில் வரும் எஸ்.டி.ஆரின் வசனங்களுக்கும், அவரை குறித்த வசனங்களுக்கும் ஏராளமான வரவேற்புக் கிட்டியது.
‘என் படத்துக்கு ரசிகர்கள் இடையே கிடைத்து உள்ள இந்த வரவேற்பு மகத்தானது. என் ரசிகர்களுக்கு மட்டுமின்றி எல்லோருக்கும் பிடித்த வகையில் இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி.
இவ்வளவு இடைவெளிக்கு பிறகும் எனக்கும் என் படங்களுக்கும் இந்த அளவுக்கு வரவேற்பு கொடுத்து இருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.
எனக்கும் அவர்களுக்கும் உள்ள பந்தத்தை பலபடுத்தி அவர்களுக்காகவே மேலும் நல்ல படங்கள் தர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்’ என்று தன்னம்பிக்கை மிளிர சிம்பு கூறுகிறார்.