உதயநிதி ஸ்டாலின்-எமிஜாக்சன் இணையும் படம் இன்று தொடக்கம்
23 Jan,2015
உதயநிதி ஸ்டாலின்-எமிஜாக்சன் இணையும் படம் இன்று தொடக்கம்
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள நண்பேன்டா படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாகவிருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து, ‘மான்கராத்தே’ படத்தை இயக்கிய திருக்குமரன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இப்படத்தில் நாயகியாக எமி ஜாக்சன் நடிக்கவுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பிக்க உள்ளதாக உதயநிதி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். எமி ஜாக்சனுடன் இணைந்து நடிப்பது ஆச்சரியமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இப்படத்திற்கு இசையமைக்க முதலில் அனிருத் தேர்வாகியிருந்தார். ஆனால், சில காரணங்களால் அனிருத் இந்த படத்திலிருந்து விலகிவிட்டார். தற்போது, இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.
ஒரு தந்தைக்கும் மகனுக்கும் உள்ள உறவை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் உதயநிதிக்கு அப்பாவாக சத்யராஜ் நடிக்கிறார். இப்படத்தில் எமி ஜாக்சன் மடிசார் புடவை கட்டி நடிப்பதாக கூறப்படுகிறது. உதயநிதி தனது சொந்த நிறுவனமான ரெட்ஜெயன்ட் மூவிஸ் மூலம் தயாரிக்கிறார்.